search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "t20 cricket"

    ஹேமில்டனில் நடைபெற்று வரும் 3-வது டி20 போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு 213 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து. #NZvIND
    நியூசிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹேமில்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    இதையடுத்து, நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிம் செய்பெர்ட், காலின் முன்ரோ களமிறங்கினர். இருவரும் முதலில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் அணியின் ரன் விகிதம் ஒரு ஓவருக்கு 10 ரன்களுக்கு குறையாமல் வந்தது.



    அணியின் எண்ணிக்கை 80 ஆக இருக்கும்போது குல்தீப் யாதவ் இந்த ஜோடியை பிரித்தார். செய்பெர்ட் 25 பந்தில் 43 ரன் எடுத்து அவுட்டானார்.

    அதிரடியாக ஆடிய முன்ரோ 40 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்து குல்தீப் பந்தில் வெளியேறினார். அடுத்து இறங்கிய கேப்டன் வில்லியம்சன் 27 ரன்னில் ஆட்டமிழந்தார். கிராண்ட்ஹோம் 30 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்துள்ளது. மிச்செல் 19 ரன்னுடனும், டெய்லர் 14 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    இதனால் இந்தியாவிற்கு 213 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், கலீல் அகமது, புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். #NZvIND
    நியூசிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய பெண்கள் அணி தோல்வி அடைந்தது. #NZvIND #WomenCricket
    ஆக்லாந்து:

    இந்தியா-நியூசிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் 53 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 72 ரன்னும், மந்தனா 27 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 36 ரன்னும் எடுத்து கேட்ச் ஆனார்கள். மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை.

    தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை பெற்றது. சுசி பேட்ஸ் 62 ரன்கள் (52 பந்து, 5 பவுண்டரி) விளாசி வெற்றிக்கு வித்திட்டார்.

    கடைசி ஓவரில் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. இறுதி ஓவரை இந்திய வேகப்பந்து வீச்சாளர் மான்சி ஜோஷி வீசினார். அதில் முதல் பந்தை கேட்டி மார்ட்டின் பவுண்டரிக்கு விரட்டினார். 2-வது பந்தில் அவர் ஆட்டம் இழந்தார். இதனால் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அடுத்து களம் கண்ட ஹன்னா ரோவ் 3-வது பந்தில் 2 ரன்னும், 4-வது பந்தில் ஒரு ரன்னும் எடுத்தார். காஸ்பெரெக் 5-வது பந்தில் ஒரு ரன் எடுத்தார். இதன் பின்னர் கடைசி பந்தில் ஹன்னா ரோவ் ஒரு ரன் எடுத்து தங்கள் அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.

    இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதலாவது ஆட்டத்திலும் நியூசிலாந்து வெற்றி பெற்றிருந்தது. இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி ஹாமில்டனில் நாளை நடக்கிறது.

    தோல்வி குறித்து இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கூறும் போது ‘எங்கள் பந்து வீச்சாளர்களை பாராட்ட தான் வேண்டும். நாங்கள் நல்ல ஸ்கோர் எடுக்கவில்லை. 20 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். நியூசிலாந்து அணியினர் எங்களை விட சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். நாங்கள் தவறில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும்’ என்றார்.

    நியூசிலாந்து அணியின் கேப்டன் சட்டர்த்வெய்ட் அளித்த பேட்டியில், ‘நாங்கள் இன்னும் எளிதாக வெற்றி பெற்று இருக்க வேண்டும். இருப்பினும் தொடரை வென்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று குறிப்பிட்டார். #NZvIND #WomenCricket

    டி20 கிரிக்கெட் தொடரில், தொடர் வெற்றிகளை குவித்து வந்த பாகிஸ்தான் அணிக்கு தென்ஆப்பிரிக்கா முற்றுப்புள்ளி வைத்துள்ளது. #SAvPAK
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி டி20 கிரிக்கெட்டில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தொடர்ந்து தொடர்களை கைப்பற்றி வந்த அந்த அணி, ஐசிசி டி20 கிரிக்கெட் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளது.

    பாகிஸ்தான் அணி கடந்த 10 தொடர்களில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் (இரண்டு முறை), உலக லெவன் அணி, இலங்கை, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக வெற்றி வாகை சூடியிருந்தது. இது உலக சாதனையாகும்.

    இந்நிலையில்தான் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. கடந்த மூன்று வருடங்களாக சேஸிங்கில் தோல்வியை சந்திக்காக பாகிஸ்தான், கேப் டவுனில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தது.



    நேற்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 189 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணியால் 181 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை 0-2 என இழந்துள்ளது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி தொடர்ந்து டி20 தொடரை கைப்பற்றி சாதனைப்படைத்து வந்ததற்கு தென்ஆப்பிரிக்கா முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ரோகித்சர்மா புதிய சாதனை படைக்கும் ஆர்வத்தில் உள்ளார். #AUSvIND #RohitSharma
    பிரிஸ்பேன்:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டி, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் பிரிஸ்பேனில் இன்று பிற்பகல் நடக்கிறது.

    இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா புதிய சாதனை படைப்பாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    20 ஓவர் சர்வதேச போட்டியில் நியூசிலாந்து வீரர் மார்ட்டின் குப்தில் 73 இன்னிங்சில் 2271 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக ரோகித்சர்மா 80 இன்னிங்சில் 2207 ரன் எடுத்து 2-வது இடத்தில் உள்ளார்.

    குப்தில் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைக்க ரோகித்சர்மாவுக்கு 65 ரன்களே தேவை. இன்றைய ஆட்டம் அல்லது இந்த தொடரில் குப்திலை முந்த அவருக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது.

    ரோகித்சர்மா வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் அதிரடியாக ஆடினார். 2-வது போட்டியில் சதம் அடித்து முத்திரை பதித்து இருந்தார்.

    இதேபோல இந்திய அணி கேப்டன் விராட்கோலியும் ரன்களை குவித்தால் புதிய சாதனை படைப்பார். அவர் 58 இன்னிங்சில் 2102 ரன் எடுத்து 5-வது இடத்தில் உள்ளார்.



    வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான தொடரில் ஆடாததால் அவரை ரோகித்சர்மா முந்தினார். 4-வது இடத்தில் இருக்கும் மேக்குல்லம்மை (நியூசிலாந்து) முந்த கோலிக்கு 39 ரன்களே தேவை.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ரோகித்சர்மா, விராட்கோலி ஆகியோர் புதிய சாதனை படைக்கும் ஆர்வத்தில் உள்ளனர். #AUSvIND #RohitSharma
    டி20 அணியில் டோனி இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு என்று பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா கவலை தெரிவித்துள்ளார். #MSDhoni #RohitSharma
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது. நேற்று சென்னையில் நடைபெற்ற 3-வது மற்றும் கடைசி போட்டியில் இந்தியா வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது.

    இந்த தொடரில் எம்எஸ் டோனி பங்கேற்கவில்லை. டி20 போட்டியில் இந்தியா அறிமுகமான காலத்தில் இருந்து விளையாடி வந்த டோனி முதன்முறையாக இந்திய அணியில் இடம்பெறவில்லை.



    நேற்றைய போட்டியில் கோப்பையை கைப்பற்றியதும் டோனி அணியில் இல்லாதது மிகப்பெரிய இழப்பு என்று ரோகித் சர்மா தெரிவித்தார்.

    இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘இலங்கையில் நடைபெற்ற நிதாஹாஸ் தொடரிலும் பங்கேற்கவில்லை. எம்எஸ் டோனி இல்லாதது எந்தவொரு அணிக்கும் மிகப்பெரிய இழப்பு. அவர் அணியில் இருப்பது எனக்கு மட்டுமல்ல ஏராளமான வீரர்களுக்கு பூஸ்ட் ஆக இருக்கும். குறிப்பாக இளம் வீரர்களுக்கு’’ என்றார்.
    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2-வது டி20 போட்டியில் சதம் அடித்ததன் மூலம் சர்வதேச அளவில் நான்கு சதங்கள் விளாசிய முதல் வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார். #RohitSharma
    இந்தியா -  வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிகாரி வாஜ்பாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 197 ரன்கள் குவித்தது. இதற்கு முக்கிய காரணம் ரோகித் சர்மா. அவர் 58 பந்தில் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 111 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.



    இந்த சதம் மூலம் டி20 போட்டியில் நான்கு சதங்கள் விளாசிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். நியூசிலாந்து வீரர் கொலின் முன்றோ மூன்று சதங்களுடன் 2-வது இடத்திலும், கிறிஸ் கெய்ல் மற்றும் மார்ட்டின் கப்தில் இரண்டு சதங்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

    ரோகித் சர்மா 86 டி20 போட்டியில் 4 சதம், 15 அரைசதங்களுடன் 2203 ரன்கள் குவித்துள்ளார்.
    20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி ரோகித் சர்மா முதலிடம் பிடித்தார். #RohitSharma #ViratKohli
    லக்னோ:

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி லக்னோவில் எகனா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில், ரோகித் சர்மா 17 ரன்களை எட்டும் போது, சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்களை அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பெற்றார்.

    விராட் கோலி 62 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி 2102 ரன்கள் எடுத்துள்ளார். ரோகித் சர்மா தனது 86-வது போட்டியில், விராட் கோலியை முந்தியுள்ளார்.

    20 ஓவர்கள் போட்டியில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில், ரோகித் சர்மா முதலிடத்திலும் விராட் கோலி இரண்டாம் இடத்திலும் உள்ளனர். அடுத்தடுத்த இடங்களில் முறையே சுரேஷ் ரெய்னா (1604 ரன்கள்) , தோனி (1487 ரன்கள்) , யுவராஜ் சிங் (1,177 ரன்கள்) ஆகியோர் உள்ளனர். #RohitSharma #ViratKohli
    நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தின்போது 48 ரன்கள் அடித்தபோது பாபர் ஆசம் அதிவேகமாக 1000 ரன்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார். #PAKvNZ #BabarAzam
    பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி துபாயில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் பாபர் ஆசம் 58 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 79 ரன்கள் குவித்தார்.

    48 ரன்னைத்தொடும்போது டி20 போட்டியில் 26 இன்னிங்சில் 1000 ரன்னைத் தொட்டார். இதன்மூலம் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 27 இன்னிங்சில் 1000 ரன்கள் அடித்திருந்தார். தற்போது பாபர் ஆசம் விராட் கோலி சாதனையை முறியடித்துள்ளார்.

    பாபர் ஆசம் 26 போட்டியில் 26 இன்னிங்சிலும் பேட்டிங் செய்து 1031 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 54.26 ஆகும். 8 முறை அரைசதம் அடித்துள்ளார்.

    62 டி20 போட்டியில் 58 இன்னிங்சில் பேட்டிங் செய்துள்ள விராட் கோலி 2102 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 48.88 ஆகும். 18 முறை அரைசதம் அடித்துள்ளார்.
    நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 கிரிக்கெட் போட்டியிலும் பாகிஸ்தான் 47 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒயிட் வாஷ் செய்தது. #PAKvNZ
    நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 கிரிக்கெட் போட்டியிலும் பாகிஸ்தான் 47 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒயிட் வாஷ் செய்தது. #PAKvNZ

    பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி துபாயில் நேற்று பகல்-இரவாக நடந்தது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் குவித்தது. பாபர் ஆசம் 58 பந்தில் 79 ரன்னும் (7 பவுண்டரி, 2 சிக்சர்) முகமது ஹபீஸ் 34 பந்தில் 53 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய நியூசிலாந்து 16.5 ஓவரில் 119 ரன்னில் சுருண்டது. இதனால் பாகிஸ்தான் 47 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல் 2 ஆட்டத்தில் அந்த அணி வெற்றி பெற்று இருந்தது. தற்போது ஹாட்ரிக் வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.



    நியூசிலாந்து அணியில் கேப்டன் வில்லியம்சன் அதிகபட்சமாக 38 பந்தில் 60 ரன் (8 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். சதாப் கான் 3 விக்கெட்டும் இமாத் வாசிம், வகாஸ் மசூத் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர். நியூசிலாந்து அணி இந்த தொடரில் 3 போட்டியிலும் தோற்று ஏமாற்றம் அடைந்தது.
    இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழந்த எம்எஸ் டோனி இல்லாமல் இந்தியா முதன்முறையாக டி20 போட்டியில் களம் இறங்கி விளையாடியுள்ளது. #MSDhoni
    டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்குப்பின் இந்தியா முதல் முறையாக கடந்த 2006-ம் ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி டி20 போட்டியில் அறிமுகம் ஆனது. ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்திய 20 அணியில் எம்எஸ் டோனி இடம்பிடித்திருந்தார்.

    அதன்பின் இன்றைய போட்டிக்கு முன் வரை இந்தியா 93 போட்டிகளில் விளையாடிள்ளது. இந்த 93 ஆட்டத்திலும் டோனி இடம்பிடித்திருந்தார். முதன்முறையாக டோனி இன்றைய கொல்கத்தா ஆட்டத்தில் களம் இறங்கியுள்ளது. 93 ஆட்டத்தில் டோனி இரண்டு அரைசதங்களுடன் 1487 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 37.17 ஆகும். அவரது ஸ்கோரில் 47 சிக்ஸ், 107 பண்டரி அடங்கும்.
    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. குருணால் பாண்டியா, கலீல் அஹமது அறிமுகம். #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிந்துள்ள நிலையில் இன்று மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் இன்று கொல்கத்தாவில் தொடங்குகிறது.

    இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டிக்கான டாஸ் 6.30 மணிக்கு சுண்டப்பட்டது. இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்து வீச்சு தெர்வு செய்துள்ளார். இந்திய அணியில் குருணால் பாண்டியா, கலீல் அஹமது அறிமுகமாகியுள்ளனர். புவனேஸ்வர் குமார் அணியில் இடம்பெறவில்லை.

    இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ரோகித் (கேப்டன்), 2. ஷிகர் தவான், 3. கேஎல் ராகுல், 4. ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), 5. மணிஷ் பாண்டே, 6. தினேஷ் கார்த்திக், 7. குருணால் பாண்டியா, 8. குல்தீப் யாதவ், 9. உமேஷ் யாதவ் 10. பும்ரா, 11. கலீல் அஹமது.
    டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மா புதிய சாதனைப் படைக்க வாய்ப்புள்ளது. #INDvWI #RohitSharma
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணி ஏற்கனவே டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கிலும் கைப்பற்றி இருந்தது.

    இதேபோல் 20 ஓவர் தொடரையும் இந்திய அணி கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால் ரோகித் சர்மா அணியை வழி நடத்துகிறார். டோனி நீக்கப்பட்டதால் அவர் இடத்தில் ரிசப்பண்ட் விளையாடுவார்.

    3 போட்டிக்கொண்ட இந்த 20 ஓவர் தொடரில் ரோகித் சர்மா புதிய சாதனை படைப்பாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    20 ஓவர் சர்வதேச போட்டியில் அதிக ரன் எடுத்துள்ளவர் மார்டின் கப்தில். நியூசிலாந்தை சேர்ந்த அவர் 73 இன்னிங்சில் 2271 ரன் எடுத்துள்ளார். சராசரி 34.40 ஆகும். இரண்டு சதமும், 14 அரை சதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 105 ரன் எடுத்துள்ளார்.

    ரோகித் சர்மா 77 இன்னிங்சில் 2086 ரன் எடுத்து 5-வது இடத்தில் உள்ளார். சராசரி 32.59 ஆகும். 3 சதமும், 15 அரை சதமும் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 118 ரன் குவித்துள்ளார்.



    கப்திலின் சாதனையை முறியடித்து புதிய சாதனை நிகழ்த்த ரோகித் சர்மாவுக்கு 186 ரன்களே தேவை. தொடக்க வீரரான அவர் தற்போது நல்ல நிலையில் இருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் ரோகித் சர்மா 389 ரன்கள் குவித்து 2-வது இடத்தை பிடித்தார்.

    மேலும் வீராட் கோலி 20 ஓவர் தொடரில் ஆடாததால் அவருக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. கோலி 20 ஓவர் ஆட்டத்தில் 2102 ரன் எடுத்து 4-வது இடத்தில் உள்ளார். அவரை முந்த ரோகித் சர்மாவுக்கு 17 ரன்களே தேவை. இன்றைய ஆட்டத்திலேயே அவர் கோலியை முந்தி அதிக ரன் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார். கப்திலையும் முந்தி அதிக ரன் எடுத்த வீரர் என்ற சாதனையையும் படைக்க ரோகித்சர்மாவுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
    ×