search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ரன்- விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய ரோகித் சர்மா
    X

    20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ரன்- விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய ரோகித் சர்மா

    20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி ரோகித் சர்மா முதலிடம் பிடித்தார். #RohitSharma #ViratKohli
    லக்னோ:

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி லக்னோவில் எகனா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில், ரோகித் சர்மா 17 ரன்களை எட்டும் போது, சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்களை அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பெற்றார்.

    விராட் கோலி 62 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி 2102 ரன்கள் எடுத்துள்ளார். ரோகித் சர்மா தனது 86-வது போட்டியில், விராட் கோலியை முந்தியுள்ளார்.

    20 ஓவர்கள் போட்டியில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில், ரோகித் சர்மா முதலிடத்திலும் விராட் கோலி இரண்டாம் இடத்திலும் உள்ளனர். அடுத்தடுத்த இடங்களில் முறையே சுரேஷ் ரெய்னா (1604 ரன்கள்) , தோனி (1487 ரன்கள்) , யுவராஜ் சிங் (1,177 ரன்கள்) ஆகியோர் உள்ளனர். #RohitSharma #ViratKohli
    Next Story
    ×