என் மலர்

  செய்திகள்

  டோனி டி20 அணியில் இல்லாதது மிகப்பெரிய இழப்பு- ரோகித் சர்மா
  X

  டோனி டி20 அணியில் இல்லாதது மிகப்பெரிய இழப்பு- ரோகித் சர்மா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டி20 அணியில் டோனி இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு என்று பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா கவலை தெரிவித்துள்ளார். #MSDhoni #RohitSharma
  இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது. நேற்று சென்னையில் நடைபெற்ற 3-வது மற்றும் கடைசி போட்டியில் இந்தியா வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது.

  இந்த தொடரில் எம்எஸ் டோனி பங்கேற்கவில்லை. டி20 போட்டியில் இந்தியா அறிமுகமான காலத்தில் இருந்து விளையாடி வந்த டோனி முதன்முறையாக இந்திய அணியில் இடம்பெறவில்லை.  நேற்றைய போட்டியில் கோப்பையை கைப்பற்றியதும் டோனி அணியில் இல்லாதது மிகப்பெரிய இழப்பு என்று ரோகித் சர்மா தெரிவித்தார்.

  இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘இலங்கையில் நடைபெற்ற நிதாஹாஸ் தொடரிலும் பங்கேற்கவில்லை. எம்எஸ் டோனி இல்லாதது எந்தவொரு அணிக்கும் மிகப்பெரிய இழப்பு. அவர் அணியில் இருப்பது எனக்கு மட்டுமல்ல ஏராளமான வீரர்களுக்கு பூஸ்ட் ஆக இருக்கும். குறிப்பாக இளம் வீரர்களுக்கு’’ என்றார்.
  Next Story
  ×