search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Speaker Appavu"

    • தமிழக சட்டசபைக் கூட்டம் வரும் 12-ம் தேதி தொடங்குகிறது.
    • பிப்ரவரி 19-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

    சென்னை:

    தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தமிழக சட்டசபைக் கூட்டம் வரும் 12-ம் தேதி தொடங்குகிறது.

    பிப்ரவரி 19-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

    பிப்ரவரி 20-ம் தேதி மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.

    நடப்பு ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் காலை 10 மணிக்கு பேரவை கூடுகிறது.

    சட்டப் பேரவையில் யாரை, எங்கு அமரவைக்க வேண்டும் என முடிவெடுக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு உண்டு.

    சட்டசபை நிகழ்வுகளை நேரலையாக காண்பிக்க வேண்டும் என்பதே அரசின் திட்டம்.

    வேறு எந்த மாநிலத்திலும் தமிழகத்தைப் போல நேரலையில் காட்டப்படுவதில்லை. அரசிடம் எந்த ஒளிவு மறைவும் இல்லை என தெரிவித்தார்.

    • பாபநாசம், மணிமுத்தாறு அணையில் இருந்து உபரிநீர் செல்லும் வரை வெள்ளநீர் கால்வாயில் தண்ணீர் செல்லும்.
    • குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகள் மத்திய அரசால் வழங்கப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையில் இருந்து பிசான சாகுபடிக்காக இன்று தண்ணீரை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சர் உத்தரவுப்படி மணிமுத்தாறு அணையில் இருந்து பெருங்கால் பாசன பிசான சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இன்று முதல் 445 கனஅடிக்கு குறையாமல் தண்ணீர் திறக்கப்படுகிறது.

    இதன் மூலம் அம்பாசமுத்திரம் வட்டம், பாளை, நாங்குநேரி, திசையன்விளை, தூத்துக்குடி மாவட்ட வட்டங்களில் உள்ள சுமார் 23 ஆயிரத்து 152 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.

    கடந்த டிசம்பர் 17-ந்தேதி வெள்ளநீர் கால்வாயில் பரிசோதனை அடிப்படையில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கொழுமடை குளம் உடைக்கப்பட்டதாக கூறப்பட்டது. அன்றைய தினம் அதிக கனமழையால் உடைப்பு ஏற்பட்டது. இந்த கால்வாய் திறக்கப்பட்டதாலேயே அந்த ஊர் பாதுகாக்கப்பட்டதாக கலெக்டர், நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வுக்கு பின் தெரிவித்து உள்ளனர்.

    தற்போது அந்த உடைப்பு சரிசெய்யப்பட்டு வெள்ளநீர் கால்வாயில் நேற்று முன்தினம் முதல் 1,200 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பல விமர்சனங்கள் வந்தாலும் வெள்ளநீர் கால்வாய் மூலம் நாங்குநேரி, ராதாபுரம், திசையன்விளை, திருச்செந்தூர், சாத்தான் குளம் ஆகிய பகுதிகள் பயன்பெறும்.

    பாபநாசம், மணிமுத்தாறு அணையில் இருந்து உபரிநீர் செல்லும் வரை வெள்ளநீர் கால்வாயில் தண்ணீர் செல்லும்.

    முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தமிழகத்தை விட உத்தரபிரதேசத்தில் அதிக முதலீடு வந்துள்ளது என கூறியுள்ளார். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் உத்தரப்பிரதேசம், குஜராத்தில் முதலீடு செய்கிறது. இதன் காரணமாக தமிழகத்தை விட அங்கு முதலீடுகள் அதிகமாக உள்ளது. அந்த மாநில அரசுகள் செலுத்தும் வரியில் அவர்களுக்கு 2 ரூபாய் 19 பைசா திருப்பி அளிக்கப்படுகிறது. நமது மாநிலத்திற்கு அப்படி திருப்பி அளிக்கப்படுவதில்லை.

    குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகள் மத்திய அரசால் வழங்கப்படுகிறது. தமிழகத்தை சேர்ந்த தொழில் அதிபர்களுக்கு இதுபோன்று நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இதுவே அங்கு அதிக முதலீடுகள் செல்ல காரணம்.

    கடும் நிதி நெருக்கடியில் மத்திய அரசு ஒரு ரூபாய் கூட தராத நிலையிலும் மிச்சாங் புயல், தென் தமிழகத்தில் வெள்ளப்பெருக்கு உள்ளிட்டவைகளை தமிழக அரசு திறமையாக கையாண்டுள்ளது.

    தமிழக அரசின் நடவடிக்கைகளால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குறை சொல்வது நிவாரண பணிகளில் ஈடுபட்ட பல ஆயிரம் தொழிலாளர்களை கொச்சைப்படுத்துவது போன்றதாகும்.
    • பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசால் எவ்வளவு உதவிகள் செய்ய முடியுமோ, அத்தனையும் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.

    கோவை:

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலைக்கல்லூரியில் இன்று கருத்தரங்கம் நடந்தது. இந்த கருத்தரங்கில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார்.

    இதற்காக கோவை வந்த அப்பாவு, விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் கலைஞர் கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. கோவையில் இன்று பள்ளி, கல்லூரி என 2 இடங்களில் கருத்தரங்கம் நடக்கிறது.

    சென்னையில் நடந்த மழை வெள்ள நிவாரண பணிகளை பொதுமக்கள் பாராட்டி உள்ளனர். நேற்று பாதிக்கப்பட்ட இடங்களை மத்தியக்குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அவர்களும் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி பாராட்டி உள்ளனர்.

    இதனால் குறை சொல்பவர்கள் அதனை நிறுத்திக்கொள்ள வேண்டும். குறை சொல்வது நிவாரண பணிகளில் ஈடுபட்ட பல ஆயிரம் தொழிலாளர்களை கொச்சைப்படுத்துவது போன்றதாகும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசால் எவ்வளவு உதவிகள் செய்ய முடியுமோ, அத்தனையும் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.

    தமிழகத்தைச் சேர்ந்த மத்திய மந்திரி, விரைவில் நிவாரண நிதியை தமிழகத்துக்கு பெற்றுத்தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உள்ளூர் மற்றும் வெளியூர் பணியாளர்கள் தீவிரமாக பணி செய்து வருகின்றனர்.
    • ரூ.4 ஆயிரம் கோடி பணத்தினை செலவு செய்ததால் தான் மழையால் சேர்ந்த நீர் உடனடியாக வடிந்துள்ளது.

    நெல்லை:

    நெல்லையில் சபாநாயகர் அப்பாவு இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னை சகஜ நிலைக்கு திரும்ப இன்னும் ஓரிரு வாரங்கள் தேவைப்படும். உள்ளூர் மற்றும் வெளியூர் பணியாளர்கள் தீவிரமாக பணி செய்து வருகின்றனர். முதலமைச்சர் ஒரு மாத சம்பளத்தை கொடுப்பதாக சொன்னால் அனைத்து எம்.எல்.ஏக்களும் கொடுத்து விடுவார்கள்.

    நானும் எனது ஒரு மாத சம்பளத்தை கொடுக்கிறேன். பொத்தாம் பொதுவாக ரூ.4 ஆயிரம் கோடி செலவு செய்ததாக சொல்லக்கூடாது. மக்களையும் வெள்ள நிவாரண பணிகளுக்கு உதவிக்கு அழைத்ததில் தவறில்லை.

    அரசை வெள்ள தடுப்பு பணிகளில் செய்த செயலை விமர்சனம் செய்தால் அங்கு பணி செய்யும் அதிகாரிகளின் பணிகளை கொச்சைப்படுத்துவதைபோல் உள்ளது. ரூ.4 ஆயிரம் கோடி பணத்தினை செலவு செய்ததால் தான் மழையால் சேர்ந்த நீர் உடனடியாக வடிந்துள்ளதை பார்க்க முடிகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பா.ஜ.க. அல்லாத மாநிலங்களில் தொழிலதிபர்களை குறி வைத்து அமலாக்கத்துறையினர் மிரட்டுகின்றனர்.
    • ஒரு மசோதாவை நிறைவேற்றினால் 6 வாரங்களுக்குள் அனுமதி தர வேண்டும் என அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது.

    நெல்லை:

    சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் இடைத்தரகர்கள் மூலம் என்னை மிரட்டின.

    * ஊரை விட்டு எல்லாம் போக சொன்னார்கள், செல்போன் நம்பரை மாற்ற சொன்னார்கள்.

    * 3 மாதமாக இடைத்தரகர்கள் பலர் என்னிடம் பேசினார்கள்.

    * பா.ஜ.க. அல்லாத மாநிலங்களில் தொழிலதிபர்களை குறி வைத்து அமலாக்கத்துறையினர் மிரட்டுகின்றனர்.

    * என்னைப்போன்று எல்லோருக்கும் மத்திய அரசின் புலனாய்வு நிறுவனங்கள் இடைத்தரகர்கள் மூலமாக மிரட்டல் விடுக்கின்றன.

    * பண பேரம் பேசி படியவில்லை என்றால் நோட்டீஸ் அனுப்பி அமலாக்கத்துறை எச்சரிக்கிறது.

    * நான் சரியாக இருக்கிறேன் என்ன வந்தாலும் மேலே இருப்பவர் பார்த்துக்கொள்வார் என்றேன்.

    * ஒரு மசோதாவை நிறைவேற்றினால் 6 வாரங்களுக்குள் அனுமதி தர வேண்டும் என அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது.

    * ஆனால் எவ்வளவு காலம் முடியுமோ அவ்வளவு காலம் மசோதாக்களை கவர்னர் கிடப்பில் போடுகிறார்.

    * கவர்னர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

    * அரசியல் அமைப்பு சட்டத்தை மீறி மதசார்புடைய நாடு இந்தியா என கவர்னர் பேசி வருகிறார் என்று அவர் கூறினார்.

    • எவ்வளவு போராட்டம், எவ்வளவு எதிர்நீச்சல், எவ்வளவு எதிர்வினைகளை தாண்டிதான் நாம் இங்கே எல்லோரும் நிற்கின்றோம்.
    • ஓரிரு நாட்கள் கழித்து என்னிடம் இந்த 40 பேர்களையும் நம்பி நாம் ஆட்சி அமைக்கலாம் என்று நினைக்கிறீர்களா ஒரு போதும் தேவையில்லை.

    சென்னை:

    புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி ஒன்றில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-

    இப்போது நாமெல்லாம் நிமிர்ந்து நிற்கின்றோம். அதற்கு காரணமானவர் நிமிர்ந்து நிற்கிறார். எவ்வாறு அவர் (மு.க.ஸ்டாலின்) நிமிர்ந்த பார்வையோடு நிற்கிறார் என்று சொன்னால் எளிதாக இது கிடைத்து விடவில்லை.

    எவ்வளவு போராட்டம், எவ்வளவு எதிர்நீச்சல், எவ்வளவு எதிர்வினைகளை தாண்டிதான் நாம் இங்கே எல்லோரும் நிற்கின்றோம்.

    கலைஞர் வருகிறார் என்று சொன்னால் கலைஞர் எவ்வளவு பெரிய தாக்குதல்களை எல்லாம் தாங்கி இருக்கிறார் என்பது உங்கள் எல்லோருக்கு தெரிந்திருக்கும்.

    நான் ஒரு உண்மையை சொல்ல விரும்புகிறேன். அம்மையார் ஜெயலலிதா மறைந்த போது 18 எம்.எல்.ஏ.க்கள் கவர்னரிடம் புகார் கொடுத்த காரணத்தால் நீக்கப்பட்டார்கள்.

    2017-ம் ஆண்டு அ.தி.மு.க. பல பிரிவுகளாகி 18 எம்.எல்.ஏ.க்கள் தனி அணியாக சென்ற போது அவர்கள் நீக்கப்பட்டனர். அதற்கு துணையாக இருந்தவர் டி.டி.வி. தினகரன்.

    அன்று காலையிலேயே ஒரு நண்பர் என்னை அழைக்கின்றார். இன்றைய முதலமைச்சரான மு.க. ஸ்டாலினிடம் ஒரு தகவலை சொல்லுங்கள். 40 அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தி.மு.க.வுக்கு வர தயாராக இருக்கிறார்கள். நான் அழைத்து வந்து விடுகிறேன். அவர்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

    இப்போது எதிர்க்கட்சி தலைவராக இருக்கிற எடப்பாடி பழனிசாமி அப்போது முதலமைச்சராக பொறுப்பேற்று இருந்தாலும் அடுத்த நிலைக்கு எவ்வாறு செல்வது என்று தெரியாத நிலையில், டி.டி.வி. தினகரன் திகார் சிறைக்கு சென்ற அந்த நாளில் 40 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தி.மு.க. வுக்கு வர தயாராக இருந்த தகவலை என்னிடம் அந்த நண்பர் தெரிவித்தார்.

    அப்போது 4 ஆண்டு காலம் இன்னும் ஆட்சி இருக்கிறது என்பதால் தி.மு.க. ஆட்சி அமைத்தால் வந்தவுடனே பஞ்சாயத்து தேர்தலை வைத்தால் 2 கோடி பேருக்கு பதவி கொடுத்து விடலாம். கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேருக்கு கூட்டுறவு துறையில் பதவி போட்டுக் கொடுத்து விடலாம் என்றெல்லாம் நினைப்பு வந்தது.

    10 வருடம் தி.மு.க. ஆட்சி இல்லாமல் இருக்கிறது. நிச்சயமாக இந்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் என்ற நம்பிக்கையோடு நான் முதல்வருடைய வீட்டிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவசரமாக பார்க்க வேண்டும் என்று சொன்னேன்.

    இன்றைய முதல்வர் மதிய உணவுக்காக வந்திருந்த சமயம். இந்த தகவல் சென்றதும் என்ன விசயம் அப்பாவு என்று கேட்டார்.

    நான் அப்போது டி.வி. விவாதங்களில் சென்று பேசுவது வழக்கம். அது தொடர்பாகதான் பேசுகிறாரோ என்று நினைத்தேன். அப்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் விசயங்கள் பற்றி அவரது கவனத்திற்கு கொண்டு சென்றேன். அதற்கு அவர், நான் அப்புறம் சொல்கிறேன் அப்பாவு என்று தொலைபேசியில் முடித்துக் கொண்டார்.

    அதன் பிறகு ஓரிரு நாட்கள் கழித்து என்னிடம் இந்த 40 பேர்களையும் நம்பி நாம் ஆட்சி அமைக்கலாம் என்று நினைக்கிறீர்களா ஒரு போதும் தேவையில்லை. மக்களிடம் செல்வோம். மக்கள் நமக்கு அந்த அதிகாரத்தை தந்தால் நாம் ஆட்சி செய்வோமே தவிர அதற்கு முன்பாக தேவையில்லை என்று சொன்னவர் இன்றைய முதல்வர். அந்த அளவுக்கு முதலமைச்சர் மு.கஸ்டாலின் கொள்கையோடு இருந்தவர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று காலை தொடங்கியது.
    • மறைந்த முக்கிய பிரமுகர்களுக்கு சபாநாயகர் இரங்கல் தீர்மானம் வாசித்தார்.

    சென்னை:

    தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. சபை கூடியதும் சபாநாயகர் அப்பாவு, மறைந்த முக்கிய பிரமுகர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசித்தார்.

    தமிழக சட்டசபை கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கும்மிடிப்பூண்டி கி.வேணு, வெங்கடசாமி, பா.வேல்துரை ஆகியோரது மறைவுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டது.

    அதன்பிறகு மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா மறைவுக்கு இரங்கல் தீர்மானங்களை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.

    இதைத் தொடர்ந்து மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்று மவுனம் கடைபிடித்தனர்.

    • சட்டமன்றம், அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில் இறையாண்மை உள்ளது என்பதை கவர்னர் புரிந்து கொள்ள வேண்டும்.
    • மக்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து தான் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 52.25 அடி கொள்ளளவு கொண்ட கொடு முடியாறு அணை உள்ளது. இந்த அணையில் தற்போது நீர் இருப்பு 50.50 அடி உள்ளது.

    இந்த அணையில் இருந்து பிசான சாகுபடிக்காக தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டார்.

    இதையடுத்து இன்று அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு கலெக்டர் கார்த்திகேயன் முன்னிலையில் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார். பின்னர் சபாநாயகர் அப்பாவு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    முதலமைச்சர் உத்தரவுபடி கொடுமுடியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாங்குநேரி மற்றும் ராதாபுரம் வட்டங்களில் உள்ள வள்ளியூரான் கால், படலையார்கால், ஆத்துக்கால் ஆகியவற்றின் மூலம் 5,780 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும்.

    இன்று முதல் மார்ச் 31-ந் தேதி வரை 150 நாட்களுக்கு 100 கன அடி வீதம் நீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறக்கப்படும். மேலும் விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது, கவர்னர் மீது ஆளும் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடுத்திருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு சபாநாயகர் அப்பாவு பதில் அளித்து கூறியதாவது:-

    தமிழக சட்டமன்றம், அமைச்சரவை கூட்டங்களில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு கவர்னர் உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும். ஆனால் நமது கவர்னர் அதனை படித்து பார்ப்பது கூட கிடையாது. இதனால் மசோதாக்கள் கிடப்பில் போடப்படுகிறது.

    சட்டமன்றம், அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில் இறையாண்மை உள்ளது என்பதை கவர்னர் புரிந்து கொள்ள வேண்டும்.

    மக்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து தான் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்படுகிறது.

    சிம்லாவில் நடைபெற்ற சபாநாயகர் மாநாட்டில் இதுபோன்று கவர்னருக்கு அனுப்பப்படும் சட்ட மசோதாக்களுக்கு கால நிர்ணயம் செய்ய வேண்டும் என அதாவது குறிப்பாக ஒரு மாத காலம் காலக்கெடு கொடுக்க வேண்டும் என பேசி உள்ளேன்.

    இதுவரை அவர்கள் எந்த முடிவும் எடுக்காத நிலையில் நமது முதலமைச்சர், சுப்ரீம் கோர்ட்டை நாடி உள்ளார். இதுபோன்று அண்டை மாநிலமான கேரளாவும் நீதிமன்றம் சென்றுள்ளது. இப்படி செயல்படும் கவர்னர்களை தற்போது ஒன்றிய அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பது விநோதமாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காவிரி பிரச்சனைக்காக அரசினர் தனித் தீர்மானமும் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.
    • 3 நாட்கள் நடைபெற்ற கூட்டத்தொடரில் மொத்தம் 13 சட்ட மசோதாக்கள் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டன.

    சென்னை:

    தமிழக சட்டசபை கூட்டம் கடந்த திங்கட்கிழமை (9-ந்தேதி) தொடங்கியது. இது மழைக்கால கூட்டத்தொடர் என்பதால் குறுகிய காலமே நடைபெற்றது.

    இந்த கூட்டத்தொடரில் மிகை செலவுக்கான மானிய கோரிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார். அதன்மீது எம்.எல்.ஏ.க்கள் பேசினார்கள்.

    இந்த கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110-வது விதியின் கீழ் வணிகர்களுக்கு வரி வட்டியை தள்ளுபடி செய்து அறிவிப்பு வெளியிட்டதுடன் மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள வேளாண்மை கல்லூரி-ஆராய்ச்சி நிலையத்துக்கு அவரது பெயரை சூட்டியதுடன் வேளாண் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆண்டு தோறும் அவரது பெயரில் விருது வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

    இந்த கூட்டத் தொடரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் காவிரி பிரச்சனைக்காக நேருக்கு நேர் சவால் விட்டும் விவாதித்தனர். காவிரி பிரச்சனைக்காக அரசினர் தனித் தீர்மானமும் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.

    3 நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தொடரில் மொத்தம் 13 சட்ட மசோதாக்கள் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டன.

    இதைத்தொடர்ந்து இன்றுடன் சட்டசபை கூட்டம் முடிவடைந்தது. இதையடுத்து சட்டசபையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்தி வைத்தார்.

    • எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக 10 முறை சட்டப் பேரவை தலைவருக்கு கடிதம் அளித்தும் நடவடிக்கை இல்லை.
    • பன்னீர் செல்வம் உள்ளிட்ட 3 பேரை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் செய்தது செல்லும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவு நகலும் அளிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை குறித்து பலமுறை கடிதம் கொடுத்தும், தெளிவுபடுத்தியும் தீர்வு காணவில்லை. சபாநாயகர் தனக்கான மரபை கடைபிடிக்கவில்லை. நீதிமன்ற தீர்ப்பின் நகலை சபாநாயகரிடம் கொடுத்தும் ஏற்கவில்லை. புனிதமான இருக்கையில் உள்ள அவர் நடுநிலைமையோடு செயல்பட வேண்டும்.

    மக்கள் பிரச்சனைகளுக்கு அ.தி.மு.க. உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அமைச்சர் பதில் தருவதற்கு முன்பே சபாநாயகரே பதில் சொல்கிறார். அமைச்சர்கள் பதில் அளிப்பது இல்லை.

    சட்டசபையில் ஜனநாயகம் பின்பற்றப்படவில்லை. சபாநாயகர் தனது மரபை மீறி செயல்படுகிறார். சட்டமன்ற பேரவை மரபின்படி ஒவ்வொரு கட்சிக்கும் எதிர்க்கட்சி தலைவர், துணை தலைவர் இருப்பது மரபு. எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக 10 முறை சட்டப் பேரவை தலைவருக்கு கடிதம் அளித்தும் நடவடிக்கை இல்லை. உயர்நீதிமன்ற உத்தரவு, தேர்தல் ஆணைய அங்கீகாரம் உள்ளிட்ட ஆதாரங்கள், ஆவணங்களை அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

    கடந்த காலங்களில் எதிர்க்கட்சி தலைவர் இருக்கையின் அருகிலேயே துணைத் தலைவர் இருக்கை இருப்பது பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. பன்னீர் செல்வம் உள்ளிட்ட 3 பேரை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் செய்தது செல்லும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவு நகலும் அளிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி ஆதரவுடன் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முடிவு.
    • கூடுதல் செலவினங்கள் தொடர்பான மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் 2023-24ம் ஆண்டுக்கான கூடுதல் செலவினங்கள் தொடர்பான மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும் காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி ஆதரவுடன் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி தமிழ்நாட்டுக்கு நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழக சட்டசபையின் கூட்டத்தை அக்டோபர் மாதம் 9-ந்தேதி காலை 10 மணிக்கு சபாநாயகர் கூட்டியுள்ளார்.
    • சபை எத்தனை நாட்கள் நடத்துவது என்று அலுவல் ஆய்வு குழு முடிவு செய்யும்.

    சென்னை:

    சபாநாயகர் அப்பாவு இன்று மதியம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக சட்டசபை கூட்டம் அடுத்த மாதம் (அக்டோபர்) 9-ந்தேதி கூடுகிறது. சபை எத்தனை நாட்கள் நடத்துவது என்று அலுவல் ஆய்வு குழு முடிவு செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிலையில் சட்டசபை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழக சட்டசபையின் அடுத்த கூட்டத்தை அக்டோபர் மாதம் 9-ந்தேதி காலை 10 மணிக்கு சபாநாயகர் கூட்டியுள்ளார். அன்று 2023-2024-ம் ஆண்டுக்கான கூடுதல் செலவு தொடர்பான மானியக் கோரிக்கைகள் பேரவைக்கு அளிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×