search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "son arrested"

    • வருவாய்த் துறை அதிகாரிகள் அரசு இடத்தை ஆக்கிரமிக்க முயன்றது குறித்து பெண்ணிடம் விசாரித்தனர்.
    • அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம், விளாம்பட்டியைச் சேர்ந்த ராணி(62). நிலக்கோட்டையில் பத்திர எழுத்தராக உள்ளார். இவர் அணைப்பட்டி - நிலக்கோட்டை சாலையில் திரவியம் நகர் பகுதியில் உள்ள அரசு இடத்தை கடந்த சில தினங்களாக சுத்தம் செய்து, கம்பி வேலி போட முயற்சி செய்து கொண்டிருந்தார்.

    இதை அறிந்த நிலக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் ராணியிடம் சென்று அரசு இடத்தை ஆக்கிரமிக்க முயன்றது குறித்து விசாரித்தனர்.

    அப்போது ராணி அவரது மகன் விஜயபாஸ்கர் ஆகியோர் கிராம நிர்வாக அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜிடம் கொடுத்த புகாரின்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தயாநிதி வழக்குப்பதிவு செய்து ராணி மற்றும் விஜயபாஸ்கர் 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கள்ளக்குறிச்சி அருகே தந்தையை கொலை செய்த பட்டதாரி மகன் கைது செய்யப்பட்டார்.
    • தனது தந்தை பழனிவேலை இரும்பு பைப்பால் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே க.மாமனந்தல் கிராமத்தைசேர்ந்தவர் கலியன் மகன் பழனிவேல் (50). விவசாயி, இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பழனிவேல் அவரது மனைவி சின்ன பொண்ணு, 2 வது மகன் பால கிருஷ்ணன் (27) ஆகியோர் வீட்டில் சாப்பிட்டுக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது பாலகிருஷ்ணன் சாப்பிட்ட தட்டை கழுவி தண்ணீரை வெளியேஊற்றுவதில் தந்தை மகனுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆத்திரமுற்ற பாலகிருஷ்ணன் தனது தந்தை பழனிவேலை இரும்பு பைப்பால் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த பழனிவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்குசென்று பழனிவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகிருஷ்ணனை கைது செய்தனர். பாலகிருஷ்ணன் பி.காம். படித்து முடித்த பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.

    • தனக்கு சொத்தை பிரித்து தருமாறு கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
    • இந்த சம்பவம் குறித்து பொங்கியண்ணன் புஞ்சை புளியம்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் நம்பி யூர் அருகே உள்ள வெள்ளக் கோவில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பொங்கி யண்ணன் (வயது 70). இவரது மகன் நாகராஜ் (42). விவசாயி. இவருக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை.

    நாகராஜ் தனது தந்தை யிடம் தனக்கு சொத்தை பிரித்து தருமாறு கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பொங்கி யண்ணன் புஞ்சை புளிய ம்பட்டி அடுத்த காரப்பாடி யில் உள்ள அவரது மகள் வீட்டுக்கு சென்று அவருடன் தங்கி இருந்தார்.

    ஆனாலும் நாகராஜ் அங்கு சென்று தொடர்ந்து தகராறு செய்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று நாகராஜ் மீண்டும் காரப்பாடிக்கு சென்று அவரது தந்தை பொங்கியண்ணனை தாக்கி சொத்தை பிரித்து தருமாறு தகராறு செய்தார்.

    இது குறித்து பொங்கிய ண்ணன் புஞ்சைபுளியம்பட்டி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ் பெக்டர்கள் செந்தில்குமார், செல்வம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து நாகராஜை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • தந்தைக்கும், மகனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது
    • இதில் பலத்த காயமடைந்த தந்தை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்


    திண்டுக்கல் :

    திண்டுக்கல் அருகே தந்தையை பாட்டிலால் குத்திய மகனை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல்லை அடுத்துள்ள மாலைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(56). இவரது மகன் ெஜகன் (25), இருவரும் பெயிண்டராக பணிபுரிந்து வருகின்றனர்.

    தந்தைக்கும், மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜெகன் திடீரென அருகில் கிடந்த பாட்டிலை உடைத்து சுப்பிரமணியை குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெகனை கைது செய்தனர்.

    ஜெயங்கொண்டத்தில் மது போதையில் தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்த மகன் கைது செய்யப்பட்டார்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அண்ணா நகரை சேர்ந்தவர் முருகேசன்(50). கூலிதொழிலாளி. இவரது மகன் ராம்குமார்(20) படித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். ராம்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்நிலையில் கடந்த 20-ஆம் தேதி முருகேசன் வேலைக்கு சென்று விட்டு வீட்டில் இருந்தார்.

    அப்போது குடிபோதையில் வந்த ராம்குமார் தந்தை முருகேசனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குபதிவு செய்து ராம்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    செங்கல்பட்டு அருகே தாயை பெட்ரோல் உற்றி எரித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செங்கல்பட்டு:

    வண்டலூரை அடுத்த ஊனமாஞ்சேரி இருளர் நகரை சேர்ந்தவர் வைரமணி. இவருடைய மனைவி சாந்தி (46). இவர்கள் மகன் ஆனந்தராஜ் (26).

    வைரமணி இறந்து விட்டார். எனவே சாந்தி மகன் ஆனந்தராஜுடன் வசித்து வந்தார். இவருக்கு தனது தாய் வேறு ஆண்களுடன் பழகுவதாக சந்தேகம் இருந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் ஆனந்தராஜ் வேலைக்கு சென்றுவிட்டு மதுபோதையில் வீடு திரும்பினார். அப்போது அவருடைய தாய் சாந்தி வீட்டின் வெளியே ஒரு ஆணுடன் பேசிக்கொண்டு இருந்தார். இதனால் ஆனந்த ராஜின் சந்தேகம் மேலும் அதிகரித்தது.

    எனவே ஆத்திரம் அடைந்த அவர் தன் தாயை உருட்டுக்கட்டையால் தாக்கினார். இதில் சாந்தி சுருண்டு விழுந்தார். அவர் இறந்துவிட்டதாக கருதி ஆனந்தராஜ் தாயை அருகில் உள்ள ஏரிக்கு கொண்டு சென்றார். அங்கு சாந்தி உடலில் பெட்ரோல் ஊற்றி எரித்தார். அப்போது அங்கு வந்த சாந்தியின் சகோதரர் மணிகண்டன் இதை பார்த்து விட்டார். தன்னை காட்டிக் கொடுத்துவிடுவார் என்று பயந்த ஆனந்தராஜ் தனது தாய்மாமா மணிகண்டன் மீதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடி விட்டார்.

    தீக்காயம் அடைந்த மணி கண்டன் கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    இந்தநிலையில் ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி இன்று ஆனந்தராஜை கைது செய்தார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
    அறந்தாங்கி அருகே குடிபோதையில் தகராறு செய்த தந்தையை அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா நாகுடி பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் தினமும் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து, அவருடைய மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். அதேபோல் அவர் கடந்த 14-ந் தேதி வீட்டில் மனைவி மற்றும் மகள்களிடம் தகராறு செய்துள்ளார்.

    மேலும் அவர்களை, அவர் அடித்து விரட்டியதாக கூறப்படுகிறது. அப்போது வீட்டிற்கு வந்த அவருடைய 17 வயது மகன், எதற்காக எனது தங்கைகள் மற்றும் தாயை அடித்து விரட்டுகிறீர்கள் என்று தந்தையிடம் கேட்டுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த அவர் வீட்டில் கிடந்த ஒரு கட்டையை எடுத்து, மகனை அடிக்க பாய்ந்தார். அப்போது மகன் கட்டையை பறித்து, தந்தையின் தலையில் அடித்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலை செய்யப்பட்டவரின் மகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் தகராறு செய்த தந்தையை, மகன் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தண்டராம்பட்டில் விவசாயியை அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள கீழ்ராவந்தவாடி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராமன் (வயது 55), விவசாயி. இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு விக்னேஷ் (20) என்ற மகனும், கவுசல்யா, லாவண்யா என்ற 2 மகள்களும் உள்ளனர். கவுசல்யாவுக்கு திருமணமாகி விட்டது. நேற்று முன்தினம் வழக்கம் போல் சுந்தர்ராமன் அருகில் உள்ள அவருக்கு சொந்தமான நிலத்திற்கு சென்றார்.

    நள்ளிரவாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த விஜயா நிலத்துக்கு சென்று பார்த்து உள்ளார். அப்போது சுந்தர்ராமன் கழுத்து, கால் உள்ளிட்ட இடங்களில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த விஜயா அலறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர் ஓடி வந்து பார்த்தனர். பின்னர் தண்டராம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதையடுத்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.

    இறந்த சுந்தர்ராமனின் மகன் விக்னேஷ் டிப்ளமோ படித்து விட்டு வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்து உள்ளார். இவர் அடிக்கடி அவரது தந்தை சுந்தர்ராமனிடம் செலவுக்கு பணம் கேட்டு தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் விக்னேஷ் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அந்த பெண்ணை திருமணம் செய்யக் கூடாது என சுந்தரராமன் மறுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    எனவே, விக்னேஷ் தான் தந்தையை கொலை செய்து இருக்க வேண்டும் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேசை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் தந்தையை எந்த காரணத்திற்காக கொலை செய்தார். எப்படி கொலை சம்பவம் நடந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நங்கவள்ளியில் நள்ளிரவில் தாயை அடித்து கொன்ற மகனை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நங்கவள்ளி:

    சேலம் மாவட்டம் நங்கவள்ளி கே.எம்.பி.நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். மீன் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி வைடூரியம் (வயது 58). இவர்களது மகன் செந்தில்குமார் (35).

    செந்தில்குமாருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மூலக்காட்டை சேர்ந்த பரமேஸ்வரி (26) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. அவருடன் அடிக்கடி செந்தில்குமார் தகராறில் ஈடுபட்டதால் அவரும் கடந்த 2 மாதத்திற்கு முன்பு பிரிந்து சென்று விட்டார்.

    இந்த நிலையில் வைடூரியத்திற்கும், மகன் செந்தில்குமாருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்றிரவு மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

    தகராறு முற்றியதும் ஆத்திரம் அடைந்த செந்தில்குமார் வீட்டின் அருகில் கிடந்த அரிவாள் மற்றும் உருட்டு கட்டையால் தாயை சரமாரியாக தாக்கினார். அதனை தடுக்க வந்த தந்தை வெங்கடேசனையும் அவர் கட்டையால் தாக்கினார்.

    இதில் நிலைகுலைந்த 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் வைடூரியத்தை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை 1.45 மணியளவில் வைடூரியம் பரிதாபமாக உயிரிழந்தார். வெங்கடேசனுக்கு மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே செந்தில்குமார் தப்பியோடி விட்டார்.

    தகவல் அறிந்த நங்கவள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது செந்தில்குமாருக்கு சற்று மனநிலை பாதிப்பு உள்ளதும், அமாவாசை மற்றும் பவுர்ணமி காலங்களில் அது அதிகரிப்பதும், பவுர்ணமியான நேற்று அதிகரித்ததால் தாயுடன் தகராறில் ஈடுபட்டு வெறித்தனமாக அவரை அடித்து கொலை செய்ததும் தெரிய வந்தது.

    இதற்கிடையே அந்த பகுதியில் தலைமறைவாக இருந்த செந்தில்குமாரை பிடித்து நங்கவள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.



    குடியாத்தம் அருகே நிலத்தை தனது பெயருக்கு மாற்றி எழுதி கொடுக்காததால் தந்தையின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த கல்லப்பாடி அருகேயுள்ள கதிர்குளம் கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் கோபால் (வயது 75), விவசாயி. இவருடைய மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு கீதா என்ற மகளும், பாலு என்கிற பாலசந்தர் (45) என்ற மகனும் உள்ளனர்.

    கீதா திருமணமாகி கணவருடன் ஆந்திராவில் வசித்து வருகிறார். ஆட்டோ டிரைவரான பாலு அதே பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    கோபாலுக்கு சொந்தமான விவசாய நிலத்தை தனது பெயருக்கு மாற்றி எழுதி தரும்படி கடந்த சில நாட்களுக்கு முன்பாக பாலு கேட்டுள்ளார். அதற்கு அவர் எழுதி கொடுக்க மறுத்துள்ளார். ஆனாலும் பாலு தொடர்ந்து நிலத்தை மாற்றி தரும்படி வலியுறுத்தி வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று காலை பாலு தனது தந்தையிடம் சென்று ‘உங்களுக்கு வயதாகி விட்டதால் நிலத்தை எனது பெயருக்கு மாற்றிக் கொடுங்கள்’ என்று கேட்டார் அப்போதும் கோபால் மறுத்துள்ளார்.

    அதனால் ஆத்திரம் அடைந்த பாலு சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

    பிற்பகல் 3 மணியளவில் கோபால், தனது வீட்டின் எதிரேயுள்ள மரத்தடியில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாலு அருகே கிடந்த பாறாங்கல்லை எடுத்து கோபாலின் தலையில் போட்டார். இதில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, பரதராமி சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருபாகரன், சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக பரதராமி போலீசார் வழக்குப்பதிந்து பாலுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வயதான தாயாரை அடித்து துன்புறுத்திய மகனை கைது செய்த போலீசாரிடம் மகனை மன்னித்து விடுமாறு தாய் கெஞ்சி உள்ளார்.
    கொல்கத்தா:

    மேற்குவங்க மாநிலத்தில் 82 வயது மூதாட்டியை தினமும் அவரது இளைய மகன் அடித்து துன்புறுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் சாந்திபிரவா தேவி, இவருக்கு வயது 82. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கணவர் அரசு பணியில் இருக்கும்போதே மரணமடைந்துவிட்டார். அவரது பணி இவரது மூத்த மகன் விகாஷ்க்கு கிடைத்துள்ளது. பணி கிடைக்கவும், தனது தாயைப் பிரிந்து மனைவி, குழந்தைகளுடன் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு துத்தபுகுருக்கு விகாஷ் சென்றுவிட்டார். இதனால் தனது இளைய மகன் புலு பிரசாத் தேப்புடன் மூதாட்டி சாந்திபிரவா வசித்து வந்தார்.

    இந்த நிலையில் தினமும் தனது தாயை புலு கொடுமைப்படுத்தி வந்துள்ளார். அனைத்து வேலைகளையும் அவரையே செய்யச் சொல்லியுள்ளார். காலால் எட்டி மிதித்துள்ளர். இதை பக்கத்து வீட்டில் வசிக்கும் பிரத்யஸா ராய் சவுத்ரி வீடியோவில் பதிவு செய்து தனது பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.

    இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியுள்ளது. இதையடுத்து போலீசார் புலுவை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து மூதாட்டி சாந்திபிரவாவை வடக்கு தும்தும் நகராட்சி பராமரித்து வருகிறது. மகனிடம் அடி வாங்கியும், தனது மகனை மன்னித்து விடுமாறு சாந்திபிரவா கெஞ்சியுள்ளார்.
    ×