search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shatrughan Sinha"

    கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பா.ஜ.க. எம்.பி. சத்ருகன் சின்ஹா தன்னை கட்சியில் நீக்கினால் கவலை இல்லை என தெரிவித்தார். #ShatrughanSinha #MamataBanerjee
    கொல்கத்தா:

    கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பயிற்சி திடலில் மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் 22 எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்ற பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் பா.ஜ.க.வில் உள்ள மோடி அதிருப்தியாளர்களான வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் முன்னாள் நிதி மந்திரியாக பணியாற்றிய யஷ்வந்த் சின்ஹா, முன்னாள் சுகாதாரத்துறை மந்திரியாக பணியாற்றிய சத்ருகன் சின்ஹா ஆகியோர் பங்கேற்று பேசினர்.

    இந்த கூட்டத்தில் பேசிய சத்ருகன் சின்ஹா கூறியதாவது:-

    நான் பாரதிய ஜனதா கட்சியில் தான் இருக்கிறேன். ஆனால், எல்லாவற்றுக்கும் மேலாக பாரதத்தின் ஜனநாயகத்துக்காக இங்கு வந்திருக்கிறேன்.

    மத்தியில் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் மக்களுக்கான அரசு அமைந்திருந்தது. தற்போது சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. ரபேல் போர் விமான கொள்முதல் விவகாரத்தில் நீங்கள் உண்மையை மறைக்க இந்த நாட்டின் காவலாளி திருடனாக மாறிவிட்டதாகதான் மக்கள் பேசுவார்கள்.



    நான் சித்தாந்தங்களுடன் சமரசம் செய்துகொள்ளாவிட்டாலும், உண்மையின் பக்கம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

    இங்கு வந்துள்ள எனது மூத்த சகோதரர் யஷ்வந்த் சின்ஹா, இந்த கூட்டத்தில் பங்கேற்றதற்காக என்னை நிச்சயமாக பா.ஜ.க.வில் இருந்து நீக்கி விடுவார்கள் என்று குறிப்பிட்டார். அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை என்று நான் அவரிடம் தெரிவித்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி.முறை வரிவிதிப்பு போன்றவற்றை சத்ருகன் சின்ஹா தொடர்ந்து எதிர்த்தும், வெளிப்படையாக கருத்து தெரிவித்தும் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #ShatrughanSinha 
    பாரதிய ஜனதாவில் தனி மனித ஆதிக்கத்தை எதிர்ப்பதாக நடிகர் சத்ருகன்சின்கா பேசினார். #ShatrughanSinha #Modi #BJP
    திருவனந்தபுரம்:

    காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், பிரதமர் மோடியை பற்றி தனியாக புத்தகம் ஒன்று எழுதி இருந்தார்.

    ‘முரண்பாடான பிரதமர். மோடியும் அவரது இந்தியாவும்’ என்ற தலைப்பில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

    இதன் வெளியீட்டு விழா திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில், பாரதிய ஜனதா எம்.பி.யும், அதிருப்தி தலைவருமான நடிகர் சத்ருகன்சின்கா கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.

    நான் சுயநலத்துக்காக செயல்படுபவன் அல்ல. நான் என் சார்பிலோ அல்லது எனது நலனுக்காகவோ யாரிடமும் எதுவும் கேட்பதுமில்லை. விரும்புவதுமில்லை.

    என்னை பொறுத்த வரை தனிப்பட்ட நபரை விட கட்சி முக்கியம். கட்சியின் நலனை விட நாட்டின் நலன் முக்கியம்.

    பாரதிய ஜனதாவை பொறுத்த வரை இப்போது தனி மனித ஆதிக்கம் நடந்து கொண்டு இருக்கிறது. 2 பேர் கொண்ட படை மட்டும் செயல்படுகிறது. அங்கு ஜனநாயகம் செயல்படவில்லை.

    தனி மனிதரின் ஆதிக்கமும், 2 பேர் படையும்தான் நாட்டை நடத்தி கொண்டு இருக்கிறது. இது, என்ன வகையான காட்சி என்று தெரியவில்லை.

    தனிப்பட்ட முறையில் நான் மோடியை எதிர்க்கவில்லை. இந்த செயல்பாட்டைத்தான் எதிர்க்கிறேன்.

    மோடி ரூ.15 லட்சம் தருவதாக வாக்குறுதி அளித்ததை பற்றி மட்டும் நான் பேசவில்லை. மக்கள் வெற்று வாக்குறுதிகளை விரும்பவில்லை. வேலை வாய்ப்பு, இப்போது இருப்பதை விட சிறப்பான வசதி வாய்ப்புகள் ஆகியவற்றைத்தான் விரும்புகிறார்கள்.

    இவ்வாறு சத்ருகன்சின்கா பேசினார்.

    விழாவில் பேசிய சசிதரூர், சத்ருகன்சின்கா போன்ற ஹீரோக்கள் காங்கிரசுக்கு வர வேண்டும். அவர்களுக்கு நல்ல இடம் காத்திருக்கிறது என்று கூறினார். #ShatrughanSinha #Modi #BJP
    வருகிற 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிப்பதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று சத்ருகன்சின்கா பேசினார். #BJP #ShatrughanSinha
    முசாபர்நகர்:

    நடிகர் சத்ருகன்சின்கா பாட்னா தொகுதியில் பா.ஜனதா சார்பில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். பிரதமராக மோடி பதவி ஏற்றது முதல் அவ்வப்போது அவருக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

    பீகார் சட்டசபை தேர்தலில் தன்னை முதல்- மந்திரி வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். அவரது கோரிக்கை ஏற்கப்படாததால் அதிருப்தியில் இருந்து வருகிறார்.

    மோடியை தாக்கிப் பேசி வந்த சத்ருகன்சின்கா இப்போது பா.ஜனதாவையே வீழ்த்த வேண்டும் என்று பேசியிருக்கிறார். உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகர் அருகில் உள்ள தாவ்லி கிராமத்தில் நடந்த விவசாயிகள் கூட்டத்தில் சத்ருகன் சின்கா பேசியதாவது:-

    ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் இந்தியாவைச் சேர்ந்த தொழில் அதிபர் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது. மத்திய அரசு வற்புறுத்தலால்தான் ரிலையன்ஸ் நிறுவனம் சேர்த்துக்கொள்ளப்பட்டதாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹோலண்ட் கூறியதாக பிரான்ஸ் நாட்டு பத்திரிகையில் தகவல் வெளியாகியுள்ளது.

    பொதுத்துறை நிறுவனமான எச்.ஏ.எல்.-ஐ புறக்கணித்து விட்டு ரிலையன்ஸ் ஏன் சேர்த்துக் கொள்ளப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.

    வருகிற 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிப்பதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினர்.

    இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த்சின்காவும் கலந்து கொண்டார். அவரும் பிரதமர் மோடியையும் பா. ஜனதாவையும் தாக்கிப் பேசி வந்ததால் பா.ஜனதாவில் இருந்து ஓரங்கப்பட்டப்பட்டு பின்னர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் அவர் புதிய அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார். #BJP #ShatrughanSinha #ParliamentElection
    வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக மிகவும் வலுவான வேட்பாளரை களம் இறக்க சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் ஆய்வு செய்து வருகிறார். #ShatrughanSinha #bjp #pmmodi

    வாரணாசி:

    பாராளுமன்றத்துக்கு கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல் நடந்த போது உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி மற்றும் குஜராத்தில் உள்ள வதேதரா ஆகிய இரு தொகுதிகளில் மோடி போட்டியிட்டார்.

    இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற அவர் வாரணாசி தொகுதி பதவியை வைத்துக் கொண்டு, வதேதரா தொகுதி பதவியை ராஜினாமா செய்தார்.

    வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிட மோடி திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. இதை கருத்தில் கொண்டே அவர் வாரணாசி தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி அமல்படுத்தி வருகிறார்.

    வாரணாசி தொகுதி பாரம்பரியமாக பா.ஜ.க. வின் கோட்டையாக திகழ்வதால் அங்கு மீண்டும் களம் இறங்குவதே பாதுகாப்பானது என்று மோடி கருதுகிறார். ஆனால் சமீபத்தில் குஜராத்தில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக வாரணாசியில் மோடிக்கு திடீர் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    வாரணாசி தொகுதியில் பல இடங்களில் பிரதமர் மோடிக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள சமாஜ்வாடி கட்சி திட்டமிட்டுள்ளது.


    வாரணாசியில் மோடிக்கு எதிராக மிகவும் வலுவான வேட்பாளரை களம் இறக்க சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் ஆய்வு செய்து வருகிறார். அவரது ஆய்வில் பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சத்ருகன் சின்காவை வரும் தேர்தலில் மோடியை எதிர்த்து களம் இறக்கலாம் என்று முடிவு செய்துள்ளார்.

    மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்தே பிரதமர் மோடிக்கும் சத்ருகன் சின்காவுக்கும் பெரிய அளவில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. சத்ருகன் சின்கா உத்தர பிரதேச மாநில முதல்-மந்திரி பதவியை எதிர்பார்த்தார். அது கிடைக்காததால் அவர் மோடியின் ஒவ்வொரு திட்டத்தையும் மிக, மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

    விரைவில் அவர் பா.ஜ.க. வில் இருந்து விலகுவார் என்று கூறப்படுகிறது. அவர் சமாஜ்வாடி கட்சியில் சேர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு (2019) பாராளுமன்ற தேர்தலின் போது அவரை வாரணாசி தொகுதியில் சமாஜ்வாடி சார்பில் போட்டியிட வைத்தால் மோடிக்கு கடும் சவாலை உருவாக்க முடியும் என்று வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. #ShatrughanSinha #bjp #pmmodi

    மோடி மீது கடுமையான விமர்சனத்தை எப்போதும் முன்வைக்கும் பாஜக எம்.பி சத்ருகன் சின்ஹா, நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். #MonsoonSession #NoConfidenceMotion #ShatrughanSinha
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று துவங்கி நடைபெற்று வருகிறது. தெலுங்கு தேசம் கட்சி சார்பில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நாளை நடைபெற உள்ளது. இதற்கு சில கட்சிகள் ஆதரவு அளிக்க தயாராக உள்ள நிலையில், அதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் ஆதரவு அளிக்க முடியாது என தெரிவித்துள்ளன.

    இந்த நிலையில், இதுதொடர்பாக பேசிய பாஜக எம்.பி.யும் நடிகருமான சத்ருகன் சின்ஹா, எதிர்க்கட்சிகளிடமும் சில அறிவாளிகள் இருப்பதாகவும். ஆனால், அவர்கள் தாமதமாகவே வெளிப்படுகிறார்கள் எனவும் விமர்சித்துள்ளார். மேலும், பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை தகர்க்க தேவையான பெரும்பான்மை இருப்பதாகவும், எங்கள் பக்கமே நியாயம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், பல ஆண்டுகளாக தாம் பாஜகவில் இருந்து வருவதாகவும், பாஜக என்னை விட்டுவிடவும் இல்லை, நான் பாஜகவை விட்டு விலகவும் இல்லை எனவும் சத்ருகன் சின்ஹா கூறியுள்ளார்.  #MonsoonSession #NoConfidenceMotion #ShatrughanSinha
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு நடிகரும், பா.ஜனதா தலைவர்களில் ஒருவருமான சத்ருகன் சின்கா கடும் கண்டனம் தெரிவித்து டுவிட்டரில் நேற்று தொடர்ந்து பதிவுகள் வெளியிட்டார். #ShatrughanSinha
    புதுடெல்லி:

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு நடிகரும், பா.ஜனதா தலைவர்களில் ஒருவருமான சத்ருகன் சின்கா கடும் கண்டனம் தெரிவித்து டுவிட்டரில் நேற்று தொடர்ந்து பதிவுகள் வெளியிட்டார்.

    அவற்றில் அவர் கூறி இருப்பதாவது:-

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் வேதனையானது, கண்டனத்துக்கு உரியது. காட்டுமிராண்டித்தனமானது. நாம் ஜனநாயகத்தில் வாழ்கிறோமா இல்லை பாசிச (பொதுவுடைமை எதிர்ப்பு) ஆட்சியின் கீழ் இருக்கிறோமா? அமைதி வழியில் போராட்டம் நடத்திய ஒன்றுமறியாத அப்பாவி ஏழை மக்களுக்கு எச்சரிக்கை கூட விடுக்காமல் தானியங்கி துப்பாக்கிகளால் சுட்டிருக்கிறார்கள். இந்த படுகொலைக்கு உத்தரவிட்டது யார்?

    ஜனநாயகத்தில் அனைவருக்கும் தங்கள் குரலை எழுப்ப உரிமை உண்டு. பாதுகாக்க வேண்டிய அரசாங்கமே பயங்கரவாதி போல நடந்து கொண்டால், பாவம், மக்கள் எங்கே போவார்கள்?

    காஷ்மீரில் கதுவாவில் நடந்த பலாத்காரம், பெட்ரோல் விலை உயர்வு, தூத்துக்குடியில் நடந்த கருணையற்ற படுகொலைகள் என எதற்கும் கருத்து சொல்லாமல் இருப்பதா? சொல்வன்மை மிக்க சேவகரே (பிரதமர் மோடி), பேசுங்கள்.

    இவ்வாறு அதில் சத்ருகன் சின்கா கூறி உள்ளார். #ShatrughanSinha 
    தமிழகத்தில் ஸ்டாலினுக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது. அதை மீறி ரஜினி, கமலால் அரசியல் செய்ய முடியாது என்று சத்ருகன் சின்ஹா கூறி உள்ளார். #ShatrughanSinha #KamalHaasan #Rajinikanth
    சென்னை:

    இந்தி மூத்த நடிகர் சத்ருகன் சின்ஹா. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருக்கும் நண்பர். சினிமாவுக்கு பின்னர் அரசியலுக்குள் நுழைந்த சத்ருகன் சின்ஹா பா.ஜ.க. தலைமை மீது மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார்.

    தற்போது பீகார் மாநில பா.ஜ.க.வின் அதிருப்தி எம்.பி.யாக உள்ளார். மத்திய மந்திரியாகவும் இருந்தவர். ரஜினி, கமல்ஹாசன் இருவரும் அரசியலுக்குள் நுழைவதை கடுமையாக தாக்கி உள்ளார். அவர் கூறியதாவது:-



    ‘ரஜினி, கமல், இருவரும் என் நண்பர்கள். அவர்கள், தெளிவான திரைக்கதையோடு தான், அரசியல் களத்தில் குதித்திருப்பார்கள் என, நம்புகிறேன். அவர்கள் அரசியலில் இறங்குவதற்கு முன் என்னிடம் அறிவுரை கேட்கவில்லை. கேட்டிருந்தால், அரசியலுக்கு வராதீர்கள் என கூறியிருப்பேன். அதில் இருக்கும் கண்ணிவெடிகள் குறித்து அவர்களுக்கு அறிவுரை வழங்கி இருப்பேன்.

    காரணம், அவர்கள் நினைப்பதை போல அரசியல் என்பது ரோஜாக்கள் நிறைந்த படுக்கை அல்ல. தமிழகத்தில் ஸ்டாலினுக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது. அதை மீறி இவர்களால் அரசியல் செய்ய முடியாது’ .

    இவ்வாறு அவர் கூறினார்.

    சத்ருகன் சின்ஹா ரஜினிக்கு நெருக்கமான நண்பர். சத்ருகன் சின்ஹா மகள் சோனாக்‌ஷி சின்ஹா ரஜினிக்கு ஜோடியாக ‘லிங்கா’ படத்தில் நடித்தவர். இதே சத்ருகன் சின்ஹா தான் கடந்த 2017 மே மாதம் ரஜினியை அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். ஆனால் பா.ஜ.கவை ஆதரிக்க கூடாது. தனிக்கட்சி தான் தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். #ShatrughanSinha #KamalHaasan #Rajinikanth

    ×