search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Selfie"

    உத்தர பிரதேசம் மாநிலத்தில் செல்பி மோகத்தால், 14 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    மீரட்:

    உத்தர பிரதேச மாநிலம், மீரட் மாவட்டத்தில் உள்ள லிசாரி கேட் பகுதியை சேர்ந்த சிறுவன் உவைஷ் அகமத் (14). சிறுவன் நிஜ துப்பாக்கியை தனது நெற்றியில் வைத்து சுடும் வகையில் செல்பி எடுத்துக் கொண்டிருந்தான்.

    அப்போது, திடீரென துப்பாக்கி டிரிக்கரை அழுத்தியதில் புல்லட் பாய்ந்து சிறுவன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் முதற்கட்ட விசாரணைக்கு பிறகு கூறியதாவது:-

    உவைஷ் செல்பி எடுக்கும்போது தவறுதலாக தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்துள்ளார். உவைஷின் மூத்த சகோதரர் சுஹையில் திருட்டு வழக்கில் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டவன். மேலும், நிறைய வழக்குகளும் சுஹையில் மீது உள்ளன.

    அதனால், சம்பந்தப்பட்ட துப்பாக்கி சுஹையிலுக்கு சொந்தமானதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இருப்பினும் துப்பாக்கி குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம்." என்று அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்.. செல்பி மோகத்தால் பறிபோன ஐ.ஐ.டி. மாணவி உயிர்: ஆற்றில் மூழ்கி பலி
    கான்பூர் ஐ.ஐ.டி.யில் படித்து வந்த மாணவி ஆபத்தை உணராமல் செல்பி எடுக்க முயன்றபோது கால் தவறி ஆற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கான்பூர்:

    உத்தர பிரதேசம் மாநிலம் கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐ.ஐ.டி.) புவி அறிவியல் துறையில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி செஜல் ஜெயின். இவர் தனது நண்பர்களுடன் நேற்று கங்கை தடுப்பனைக்கு சென்றுள்ளார். அங்கு, செஜல் ஜெயின் செல்பி எடுக்க முயன்றபோது கால் தவறி ஆற்றுக்குள் விழுந்து உயிரிழந்துள்ளார்.

    உயிரிழந்த ஐஐடி மாணவி செஜல் ஜெயின்

    இதுகுறித்து ஐ.ஐ.டி-கே செய்தித் தொடர்பாளர் கிரீஷ் பந்த் கூறுகையில், " மாணவி உயிரிழந்தது குறித்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், செஜல் ஜெயின் உள்பட 7 பேர் கங்கை தடுப்பணைக்கு சென்றது தெரியவந்தது. இவர்கள் அங்குள்ள பாலத்தின் பாதுகாப்பு தடுப்பை கடந்து அணையின் கேட் வளைவில் நுழைந்துள்ளனர்.

    அங்கு, செஜல் ஜெயின் தனியாக நின்றபடி செல்பி எடுக்க முயன்றதாக தெரிகிறது. அப்போது திடீரென செஜல் ஜெயின் கால் தவறி ஆற்றுக்குள் விழுந்துள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் குழுவினர் ஆற்றுக்குள் சுயநினைவற்று கிடந்த செஜல் ஜெயினை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, பரிசோதித்த மருத்துவர்கள் செஜல் ஜெயின் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர் " என்றார்.

    இதையும் படியுங்கள்.. இந்தியாவிலேயே முதல் முறையாக கற்பழிப்பு வழக்கில் ஒரே நாளில் தீர்ப்பு

    மருத்துவம் படித்து அரசு மருத்துவராகப் பணியாற்றி வந்த இளம்பெண்ணின் செல்பி மோகம் அவர் உயிரையே பறித்து விட்டதால் பனாஜி நகரமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
    பனாஜி:

    கோவா அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்த ஆந்திராவைச் சேர்ந்த ரம்யா கிருஷ்ணா நேற்று முன் தினம் மாலை பனாஜி கடற்கரைக்கு சென்றார். கடலை பின்னணியாக கொண்டு அவர் தனது செல்போனில் செல்பி எடுக்க முயன்றார். அப்போது திடீரென எழுந்த ராட்சத அலை அவரை கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதை சற்றும் எதிர்பாராத அவர் தன்னை காப்பாற்றுமாறு அபயக்குரல் எழுப்பினார்.

    இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கடற்கரையில் இருந்தவர்கள் அவரை மீட்க போராடினர். சற்று நேரத்தில் ரம்யா கிருஷ்ணா கடலுக்குள் மூழ்கினார். அவரது உடலை மீனவர்களும் காவல்துறையினரும் தேடி வந்தனர். பின்னர் நீண்ட நேரம் போராடி அவரது உடலை மீட்டனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மருத்துவம் படித்து அரசு மருத்துவராகப் பணியாற்றி வந்த இளம்பெண்ணின் செல்பி மோகம் அவர் உயிரையே பறித்து விட்டதால் பனாஜி நகரமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

    சுயேட்சை வேட்பாளருக்கு வாக்களிப்பதை செல்பி எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்த பாதுகாப்பு படை வீரரின் தபால் ஓட்டை தேர்தல் கமிஷன் தள்ளுபடி செய்தது. #LSPolls #Postalvote #CRPFSoldier
    பெங்களூரு:

    பாதுகாப்பு படைகளில் பணியாற்றுபவர்கள் தேர்தல் தொடர்பான பாதுகாப்பு பணிகளுக்கு வெளியூர்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுவதால் அவரவர்களுக்கு வாக்குரிமை உள்ள தொகுதிகளில் முன்கூட்டியே அவர்கள் வாக்களித்துவிட்டு செல்வதற்கு வசதி செய்து கொடுக்கப்படுகிறது.

    தபால் ஓட்டு என்றழைக்கப்படும் இந்த வாக்குகள்தான் வாக்கு எண்ணிக்கையின் முதல்சுற்றில் எண்ணப்படும். அவ்வகையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள மண்டியாவில் இருந்து பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஒரு வீரர், சுயேட்சை வேட்பாளரும் நடிகையுமான சுமலதாவுக்கு தான் வாக்களித்த காட்சியை செல்பியாக எடுத்து  சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்திருந்தார்.

    இதற்கு சிலர் கண்டனம் தெரிவித்தனர். இவ்விவகாரம் தொடர்பாக சிலர் தேர்தல் கமிஷனில் ஆதாரத்துடன் புகார் அளித்தனர். இதனடிப்பையில் நடவடிக்கை எடுத்த தேர்தல் கமிஷன், எண்ணிக்கையின்போது அந்நபரின் வாக்கை தள்ளுபடி செய்யுமாறு தொகுதி தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது. #LSPolls #Postalvote #CRPFSoldier #CRPFSoldierPostalvote  
    காங்கோ நாட்டில் நடாகாஷி மற்றும் மடாபிஷி என்கிற 2 கொரில்லாக்கள் ‘செல்பி’க்கு போஸ் கொடுக்கிற போது மனிதர்களை போலவே விதவிதமாக முகபாவனைகளை மாற்றி ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. #Gorilla #CongoPark #Selfie
    கின்ஷாசா:

    மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் விருங்கா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு கொரில்லா வகை குரங்குகள் பாதுகாக் கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. இங்கு வனத்துறை ஊழியராக பணியாற்றும் மேத்யூ ஷவாமு, என்பவர் கொரில்லாக்கள் குட்டிகளாக இருக்கும் போதே, அவற்றுடன் விதவிதமாக ‘செல்பி’ எடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.



    அவரின் இந்த பழக்கமானது அங்குள்ள நடாகாஷி மற்றும் மடாபிஷி என்கிற 2 கொரில்லாக்களை ‘செல்பி’க்கு அடிமையாக்கிவிட்டது. மேத்யூ ஷவாமு செல்போனை தூக்கினாலே அந்த 2 கொரில்லாக்களும் வேகமாக வந்து போட்டோக்களுக்கு ‘போஸ்’ கொடுக்கின்றன.

    அது மட்டும் இன்றி அந்த 2 கொரில்லாக்களும், ‘செல்பி’க்கு போஸ் கொடுக்கிற போது மனிதர்களை போலவே விதவிதமாக முகபாவனைகளை மாற்றி ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. அந்த வகையில், மேத்யூ ஷவாமு அண்மையில் அந்த 2 கொரில்லாக்களுடன் எடுத்த ‘செல்பி’ படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.

    இதனை ஆச்சரியத்துடன் பார்க்கும் மக்கள் அதிக அளவில் இந்த படங்களை பகிர்ந்து வருகின்றனர். இதனால் இந்த படம் உலகம் முழுவதும் வேகமாக பரவிவருகிறது.   #Gorilla #CongoPark #Selfie
    உத்தரகாண்டில் நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவின்போது , வாக்குச்சாவடிக்குள் செல்பி எடுத்த பாஜக தலைவர்கள் உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #Casefiled #ModelCodeofConduct
    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்று ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணி முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவில் ஏராளமான மக்கள் தங்கள் ஜனநாயக கடமை ஆற்ற, வாக்குச்சாவடிகளில் சென்று வாக்களித்தனர். இந்த வாக்குப்பதிவில் புதிய வாக்களர்களும் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் வாக்களித்தனர்.

    தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடிகளில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறக்கூடாது எனவும், தேர்தல் விதிகளை மீறி மக்கள் செயல்படுவதை தடுக்கவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. மேலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.



    வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்துச் செல்லவும் அங்கு உள்ள ஆவணங்கள், மற்றும் வாக்கு இயந்திரங்களை புகைப்படம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று உத்தரகண்டில் பாஜக தலைவர்கள் 4 பேர் உட்பட 11 வாக்காளர்கள், வாக்குச்சாவடிக்குள் வாக்களித்துவிட்டு செல்பி எடுத்துள்ளனர்.

    இதையடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் செல்பி எடுத்தது தொடர்பாக அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. #Casefiled #ModelCodeofConduct



    தாய்லாந்தில் சுற்றுலா பயணிகள் விமான நிலையம் முன்பு ‘செல்பி’ படம் எடுத்தால் மரணதண்டனை விதிக்கப்படும் என தாய்லாந்து அரசு எச்சரித்துள்ளது. #Thailand #Tourist #Selfie #DeathPenalty
    தைபே:

    தாய்லாந்தின் பூக்கெட் மாநிலம் தலாங் மாவட்டத்தில் மாய்காவோ என்ற கடற்கரை பகுதி உள்ளது. பிரபல சுற்றுலா தலமான இந்த கடற்கரைக்கு மிக அருகில் விமான நிலையம் உள்ளது.

    இதனால் விமான நிலையத்துக்கு வரக்கூடிய மற்றும் புறப்பட்டு செல்லும் விமானங்கள் கடற்கரை பகுதியில் தரையில் இருந்து சில அடி உயரத்தில் மிகவும் தாழ்வாக பறப்பது வழக்கம்.



    இதன் காரணமாக கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் தாழ்வாக பறக்கும் விமானத்துக்கு கீழ் நின்றபடி விதவிதமாக ‘செல்பி’ படங்களை எடுக்கின்றனர்.

    இது அவர்களுக்கு ஆபத்தை விளைவிப்பதோடு, விமானிகளின் கவனத்தை திசை திருப்பி பெரும் விபத்துகளை ஏற்படுத்தவும் வாய்ப்பு இருப்பதால் விமான நிலையம் முன்பு ‘செல்பி’ படம் எடுக்க மாகாண அரசு தடைவிதித்தது.

    எனினும் சுற்றுலா பயணிகள் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து விமானங்களுடன் ‘செல்பி’ எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இந்த நிலையில், தடையை மீறி விமான நிலையம் முன்பு ‘செல்பி’ படம் எடுத்தால் அதிகபட்சமாக மரணதண்டனை விதிக்கப்படும் என தாய்லாந்து அரசு எச்சரித்துள்ளது. அரசின் இந்த முடிவு சுற்றுலாவை வெகுவாக பாதித்து, கடற்கரையை மூட வழிவகுக்கும் என்று உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  #Thailand #Tourist #Selfie #DeathPenalty
    மத்தியபிரதேசம் மாநிலத்தில் இன்று ரெயிலின் கூரைமீது ஏறி செல்பி எடுக்க முயன்ற 16 வயது சிறுவன் உயரழுத்த மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #MPteen #MPteenelectrocuted #teenelectrocuted #selfiedeath
    இந்தூர்:

    மத்தியபிரதேசம் மாநிலம், ஜபுவா மாவட்டத்துக்குட்பட்ட பேருகர் ரெயில் நிலையத்தின் அருகே நின்றிருந்த ஒரு மின்சார ரெயிலின் கூரைமீது ஏறிநின்ற ஒரு சிறுவன் தனது கைபேசியால் செல்பி எடுக்க முயன்றான்.

    அப்போது, அவனது தலை எதிர்பாராத விதமாக மேலே இருந்த உயரழுத்த மின்கம்பியில் பட்டது. இதனால், மின்சாரம் தாக்கிய அந்த சிறுவன் உடல் கருகிய நிலையில் கீழே விழுந்து உயிரிழந்தான்.

    பலியான சிறுவனின் பெயர் பங்கஜ்(16) என தெரியவந்துள்ள நிலையில், அவனது பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்த ரெயில்வே போலீசார், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #MPteen #MPteenelectrocuted #teenelectrocuted #selfiedeath
    தைவானில் நீச்சல் உடையில் மலை ஏறிய வீராங்கனை செல்பி எடுத்த போது மலையில் இருந்து தவறி விழுந்து பலியானார். #BikiniHiker #GigiWu
    தைபே:

    தைவானை சேர்ந்த மலையேறும் வீராங்கனை ஜிஜிவூ. இவர் மலைச்சி கரங்களில் நீச்சல் உடையில் ஏறி அதை செல்பி எடுத்து சமூக வலை தளங்களில் வெளியிட்டு வந்தார். அதன் மூலம் பிரபலமாக திகழ்ந்தார்.

    இந்த நிலையில் தைவானில் உள்ள யுஷான் தேசிய பூங்கா பகுதியில் உள்ள மலை சிகரத்தில் ஏறி ‘பிகினி’ நீச்சல் உடையில் எடுத்த செல்பியை வெளியிட்டார். அப்போது கால் தவறி மலையில் இருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விட்டார்.

    பலத்த காயம் அடைந்த அவர் அதை சேட்லைட் போன் மூலம் தனது ஆதரவாளர்களுக்கு தெரிவித்தார். அவரை மீட்க ஹெலிகாப்டர்கள் விரைந்தன. இருந்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை. அதற்குள் அவர் பரிதாபமாக இறந்தார். #BikiniHiker #GigiWu
    உத்தர பிரதேசத்தில் ராட்டினத்தில் இருந்து செல்பி எடுக்க முயன்றபோது தவறி விழுந்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். #SelfieDeath #UPFair
    பாலியா:

    உத்தர பிரதேச மாநிலம் பாலியா மாவட்டம் சதார் பகுதியில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. ஏராளமான கடைகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்திருப்பதால் விடுமுறை தினங்களில் பொதுமக்கள் வருகை அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், நேற்று கண்காட்சியில் ராட்சத ராட்டினம் சுற்றிக்கொண்டிருந்தபோது ஒரு பெண் திடீரென ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்தார். உடனடியாக அந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

    விசாரணையில் அந்தப் பெண் ராணி (வயது 20) என்பதும், செல்பி எடுக்கும்போது நிலைதடுமாறி ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்ததும் தெரியவந்தது. #SelfieDeath #UPFair
    கலிபோர்னியாவில் உள்ள யோசெமைட் தேசிய பூங்காவில் ஆபத்தான முறையில் செல்பி எடுக்க முயன்ற இந்திய தம்பதி, தவறி விழுந்து உயிரிழந்துள்ளனர். #California #YosemiteNationalPark #SelfieKills
    நியூயார்க்:

    உலக அளவில் செல்பி மோகத்தால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. செல்பியால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதன்மீதான மோகத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை பலரும் விளக்கி வந்தாலும் பலரும் அதன் ஆபத்தை உணரவில்லை. செல்பியின் மோகத்தினால், இந்திய தம்பதி தங்கள் உயிரையே பறிகொடுத்துள்ளனர்.

    அமெரிக்காவில் வாழும் இந்திய தம்பதிகளான விஷ்ணு விஷ்வநாத், மீனாட்சி மூர்த்தி பலதரப்பட்ட சுற்றுலாத்தளங்களுக்கும் சென்று தங்களது அனுபவங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக யோசெமைட் தேசிய பூங்காவுக்கு சுற்றுலா சென்று மலைப்பகுதியின் முகடில் ஆபத்தான நிலையில், செல்பி எடுத்துள்ளனர்.


    அப்போது எதிர்ப்பாராத விதமாக 800 அடி பள்ளத்தாக்கில் இருவரும் விழுந்து உயிரிழந்துள்ளனர். அந்த சுற்றுலா தளத்தில் தடுப்புகள் ஏதும் இல்லை என்பதும் இவர்களின் மரணத்துக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்களது உடல்களை மீட்ட மீட்புக்குழுவினர், மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #California #YosemiteNationalPark #SelfieKills

    மகாராஷ்டிராவில் உள்ள சின்ஹகட் கோட்டை அருகே ஆபத்தான முறையில் செல்பி எடுக்க முயன்று பள்ளத்தாக்கில் விழுந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #Maharashtra #SelfieKills
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள புகழ்பெற்ற சின்ஹகட் கோட்டை பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலங்களுள் ஒன்றாகும். இங்கு வரும் மக்கள் கோட்டையின் கம்பீரத்தையும், மலையின் மீது இருந்து இயற்கையின் அழகையும் ரசிப்பது வழக்கம். அதேசமயம், இங்கு ஆபத்தான முறையில் செல்பி எடுக்க முயன்று பலர் தங்கள் உயிரை பணையம் வைத்துள்ளனர்.

    அதேபோல், இந்த சின்ஹகட் கோட்டைக்கு வந்த 35 வயது மதிக்கத்தக்க ஆண் செல்பி எடுக்க முயன்றுள்ளார். கோட்டையின் விளிம்பில் சென்று ஆபத்தான முறையில் செல்பி எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.



    அப்போது எதிர்ப்பாரதவிதமாக அந்த நபர் பள்ளத்தாக்கில் விழுந்துள்ளார். இதனைக்கண்ட அருகில் இருந்தவர்கள் உடனே மீட்புப்படைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த மீட்புப்படையினர் பள்ளத்தாக்கில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அந்த நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். #Maharashtra #SelfieKills
    ×