search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காங்கோ"

    • கனமழை வெள்ளத்தால், வீடுகள், சாலைகள் தண்ணீரால் சூழப்பட்டன
    • தேசிய நெடுஞ்சாலை 4 நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிப்பு.

     கின்ஷாசா:

    காங்கோ நாட்டின் தலைநகர் கின்ஷாசாவில் கனமழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகள் மற்றும் சாலைகள் தண்ணீரால் சூழப்பட்டன. சாலையில் மிகப் பெரிய பள்ளம் ஏற்பட்டது குறித்து காங்கோ அரசு செய்தித் தொடர்பாளர் பேட்ரிக் ட்விட்டரில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

    இதனால் அங்குள்ள தேசிய நெடுஞ்சாலை 4 நாட்களுக்கு மூடப்படும் என்று அந்நாட்டு பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 120 பேர் வரை உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக காங்கோவின் கின்ஷாசா நகரம் அடிக்கடி வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. 

    • காங்கோ நாட்டில் பணியில் ஈடுபட்டுள்ள ஐ.நா.படையில் பி.எஸ்.எப்.வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.
    • இந்திய வீரர்கள் உயிரிழப்புக்கு வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இரங்கல்.

    காங்கோ நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அங்கு அமைதியை ஏற்படுத்தும் பணிகளுக்காக ஐ.நா. படை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்த படையில் இந்தியாவை சேர்ந்த எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.

    இந்நிலையில் நேற்று அந்நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள புடெம்போ நகரில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. போராட்டக்கார்கள் தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணியில் இருந்த இந்திய பிஎஸ்எப் படை வீரர்கள் இருந்த பகுதியை சுற்றி வைத்த போராட்டகாரர்கள் தாக்குதல் நடத்தினர்.

    இதில் இரண்டு இந்திய வீரர்கள் படுகாயம் அடைந்த நிலையில் உயிரிழந்தனர். இதற்கு காங்கோ அரசு வருத்தம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்திய வீரர்கள் உயிரிழப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், இந்த மூர்க்கத்தனமான தாக்குதல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். காங்கோவில் இந்திய வீரர்கள் உயிரிழப்புக்கு ஐ.நா.வுக்கான இந்திய பிரதிநிதி திருமூர்த்தி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். 

    ×