என் மலர்
நீங்கள் தேடியது "ஒப்பந்தம் கையெழுத்து"
- காங்கோ அதிபர் பெலிக்ஸ் ஷிசெ கெடி, ருவாண்டா அதிபர் பால் ககாமே ஆகியோர் கையெழுத்திட்டனர்.
- உலகம் முழுவதும் நாங்கள் அமைதியை நிலை நாட்டுகிறோம்.
ஆப்பிரிக்க நாடுகளான காங்கோ, ருவாண்டா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வந்தது. இதற்கிடையே இந்த இரு நாடுகளின் மோதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் மத்தியஸ்தம் செய்தார்.
இதில் காங்கோ, ருவாண்டா இடையே உடன்பாடு ஏற்பட்டது. இரு நாடுகளும் மோதலை கைவிட்டு அமைதிக்கு திரும்ப ஒப்புக்கொண்டன.
இதையடுத்து வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில் காங்கோ, ருவாண்டா இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் காங்கோ அதிபர் பெலிக்ஸ் ஷிசெ கெடி, ருவாண்டா அதிபர் பால் ககாமே ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்த அமைதி ஒப்பந்தத்தை தொடர்ந்து காங்கோவில் உள்ள கனிம வளங்களை அமெரிக்க நிறுவனங்கள் வெட்டி எடுக்க ஒப்பந்தமும் கையெழுத்தானது.
இது ஆப்பிரிக்காவிற்கு ஒரு சிறந்த நாள், உலகிற்கு ஒரு சிறந்த நாள். இன்று, பலர் தோல்வியடைந்த இடத்தில் நாம் வெற்றி பெற்று இருக்கிறோம். உலகம் முழுவதும் நாங்கள் அமைதியை நிலை நாட்டுகிறோம்.
இதுவரை யாரும் கண்டிராத அளவில் போர்களை நாங்கள் தீர்த்து வருகிறோம். இதுவரை 8 போர்களை தீர்த்துவிட்டேன். மேலும் இன்னொரு போரை தீர்க்க முயற்சி நடக்கிறது. அது ரஷியா- உக்ரைன் போர். அதனை நிறுத்த நாங்கள் மிகவும் கடினமாக உழைத்து வருகிறோம்.
கனிமங்களை வெட்டி எடுக்க மிகப்பெரிய அமெரிக்க நிறுவனங்களில் சிலவற்றை இரு நாடுகளுக்கும் அனுப்புவதில் நாங்கள் ஈடுபடுவோம். அனைவரும் நிறைய பணம் சம்பாதிக்கப் போகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அனைவரும் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
- 32 மெட்ரோ ரெயில் நிலையங்களில் தணிக்கையை மேற்கொண்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கட்டம் II-ல் 15 மெட்ரோ நிலையங்களுக்கான வடிவமைப்பை மதிப்பாய்வு செய்து அனைவரும் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இது மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து பயணிகளும் எளிதாக அணுகக்கூடியவகையில் வசதிகளை மேம்படுத்துவதை உறுதி செய்கிறது.
இந்தியாவின் சீரான வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப நிலைய வடிவமைப்புகளை மேம்படுத்துவதற்காக, இந்த ஒப்பந்தம் M/s v-shesh Learning Services Private Limited நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் பிப்ரவரி 18, 2025 அன்று வழங்கப்பட்ட ஏற்பு கடிதத்திலிருந்து 180 நாட்களுக்குள் முடிக்கப்பட உள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் சார்பாக தலைமை பொது மேலாளர் ரேகாபிரகாஷ், (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), மற்றும் M/s v-shesh Learning Services Private நிறுவனத்தின் சார்பாக இயக்குநர் மற்றும் இணை நிறுவனர் P.ராஜசேகரன் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் எளிதாக அணுகக்கூடிய போக்குவரத்து அமைப்பை உருவாக்க உறுதி பூண்டுள்ளது. இந்த தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் நிலையங்கள் அனைவரும் அணுகக்கூடிய வகையில் சீரான வழிகாட்டுதல்கள் மற்றும் தரங்களுக்கு ஏற்ப நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
கட்டம் II-ல் 15 மெட்ரோ ரெயில் நிலையங்களில் வடிவமைப்பை மதிப்பாய்வு செய்வதற்காக M/s v-shesh Learning Services Private ஆலோசனை நிறுவனம், கட்டம்-I-ல் செயல்பாட்டில் உள்ள 32 மெட்ரோ ரெயில் நிலையங்களில் தணிக்கையை மேற்கொண்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இருநாடுகளில் உள்ள இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி பட்டப்படிப்புகள் சமமாகக் கருதப்படும்.
- சுகாதாரப் பணி கட்டமைப்பு தொடர்பாக இருநாடுகளுக்கிடையே ஒப்பந்தம்.
இந்தியா-இங்கிலாந்து இடையே கடல்சார் கல்வி உள்ளிட்ட கல்வி தகுதிகளை இருநாடுகளும் அங்கீகரித்தல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் தலைநகர் டெல்லியில் நேற்று கையெழுத்தாகி உள்ளது. இங்கிலாந்து வர்த்தகத் துறையின் செயலாளர் ஜேம்ஸ் பவுலர் மற்றும் மத்திய உயர்கல்வி அமைச்சகத்தின் செயலாளர் கே.சஞ்சய் மூர்த்தி ஆகியோர் இதில் கையெழுத்திட்டனர்.
இதன்படி, மேல்நிலை பள்ளிக் கல்வி மற்றும் பல்கலைக்கழக படிப்பிற்கு முந்தைய கல்வி சான்றிதழ்கள் இங்கிலாந்தில் உயர்கல்வி படிப்பதற்கு தகுதியாக எடுத்துக் கொள்ளப்படும். இருநாடுகளில் உள்ள இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி பட்டப்படிப்புகள் சமமாகக் கருதப்படும்.
மேலும் சுகாதாரப் பணி கட்டமைப்பு ஆகியவற்றில் இருநாடுகளுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வர்த்தகத்துறை செயலாளர் பி ஆர் சுப்பிரமணியம், இந்தியா-இங்கிலாந்து இடையேயான வர்த்தகத்தை மேம்படுத்துவது தொடர்பான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
இந்தியா-இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் நிறைவடையும் என்றும், இரண்டு நாடுகளும் ஒப்புதல் அளித்த பிறகு, ஒப்பந்தத்தில் இருநாட்டு தலைவர்களும் கையெழுத்திடுவார்கள் என்றும் அவர் கூறினார்.






