search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இந்தியா-இங்கிலாந்து இடையே  கடல்சார் கல்வி தகுதிகளை அங்கீகரிப்பது தொடர்பாக ஒப்பந்தம்
    X

     பி ஆர் சுப்பிரமணியம்   இந்தியா-இங்கிலாந்து இடையே ஒப்பந்தம்

    இந்தியா-இங்கிலாந்து இடையே கடல்சார் கல்வி தகுதிகளை அங்கீகரிப்பது தொடர்பாக ஒப்பந்தம்

    • இருநாடுகளில் உள்ள இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி பட்டப்படிப்புகள் சமமாகக் கருதப்படும்.
    • சுகாதாரப் பணி கட்டமைப்பு தொடர்பாக இருநாடுகளுக்கிடையே ஒப்பந்தம்.

    இந்தியா-இங்கிலாந்து இடையே கடல்சார் கல்வி உள்ளிட்ட கல்வி தகுதிகளை இருநாடுகளும் அங்கீகரித்தல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் தலைநகர் டெல்லியில் நேற்று கையெழுத்தாகி உள்ளது. இங்கிலாந்து வர்த்தகத் துறையின் செயலாளர் ஜேம்ஸ் பவுலர் மற்றும் மத்திய உயர்கல்வி அமைச்சகத்தின் செயலாளர் கே.சஞ்சய் மூர்த்தி ஆகியோர் இதில் கையெழுத்திட்டனர்.

    இதன்படி, மேல்நிலை பள்ளிக் கல்வி மற்றும் பல்கலைக்கழக படிப்பிற்கு முந்தைய கல்வி சான்றிதழ்கள் இங்கிலாந்தில் உயர்கல்வி படிப்பதற்கு தகுதியாக எடுத்துக் கொள்ளப்படும். இருநாடுகளில் உள்ள இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி பட்டப்படிப்புகள் சமமாகக் கருதப்படும்.

    மேலும் சுகாதாரப் பணி கட்டமைப்பு ஆகியவற்றில் இருநாடுகளுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வர்த்தகத்துறை செயலாளர் பி ஆர் சுப்பிரமணியம், இந்தியா-இங்கிலாந்து இடையேயான வர்த்தகத்தை மேம்படுத்துவது தொடர்பான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

    இந்தியா-இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் நிறைவடையும் என்றும், இரண்டு நாடுகளும் ஒப்புதல் அளித்த பிறகு, ஒப்பந்தத்தில் இருநாட்டு தலைவர்களும் கையெழுத்திடுவார்கள் என்றும் அவர் கூறினார்.

    Next Story
    ×