search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sankarankovil"

    • விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியை மணிமேகலை தலைமை தாங்கினார்.
    • நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை மணிமேகலை தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

    இதில் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பெரியதுரை, சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் கார்த்தி, ஜெயக்குமார், காவல்கிளி, ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • விழா நாட்களில் சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
    • முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் 9-ம் திருநாளான வருகிற 29-ந் தேதி (சனிக்கிழமை) காலை நடைபெறுகிறது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயணசாமி கோவில் தென் தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சிவா லயலங்களில் ஒன்று.

    ஆடித்தவசு திருவிழா

    சிவன் வேறு விஷ்ணு வேறு என்று பிளவுபடுத்துவது தவறு என்பதை பக்தர்களுக்கு உணர்த்தும் பொருட்டு சிவபெருமாள் கோமதி அம்பாளுக்கு சங்கர நாராயணராகவும், சங்கரலிங்க மூர்த்தி யாகவும் காட்சி கொடுத்தார். இத்தகைய அரிய நிகழ்ச்சியை ஆடித்தவசு திருவிழாவாக பக்தர்களால் கொண்டா டப்பட்டு வருகிறது.

    ஆடித்தவசு திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம். விழா நாட்களில் சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். மேலும் கோவில் உள்மண்டபத்தில் உள்ள கலையரங்கத்தில் பக்தி இன்னிசை கச்சேரி, சொற்பொழிவு, வழக்காடு மன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான ஆடித்தவசு திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6.15 மணிக்கு கோமதி அம்மன் சன்னதி முன்பு அமைந்துள்ள கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் 9-ம் திருநாளான வருகிற 29-ந் தேதி (சனிக்கிழமை) காலை நடைபெறுகிறது.

    சிகர நிகழ்ச்சியான ஆடித்தவசு திருவிழா 11-ம் திருநாளான வருகிற 31-ந்தேதி மாலை நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை நெல்லை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, சங்கரநாராயண சாமி கோவில் துணை ஆணை யர் ஜான்சிராணி மற்றும் மண்டகப் படித்தாரர்கள் செய்து வருகின்றனர்.

    • ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு கடந்த 2 மாதமாக சம்பளம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
    • இதனை கண்டித்து நேற்று, சங்கரன்கோவில் மாதாங்கோவில் தெருவில் உள்ள ஒப்பந்த தூய்மை பணியாளர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சங்கரன்கோவில் :

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி யில் 90-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த 2 மாதமாக சம்பளம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

    தூய்மை பணியாளர்கள்

    இதனை கண்டித்து நேற்று, சங்கரன்கோவில் மாதாங்கோ வில் தெருவில் உள்ள ஒப்பந்த தூய்மை பணியாளர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் சங்கரன்கோ வில் நகராட்சி சுகாதார அலுவலர் பாலச்சந்தர், சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தை சேர்ந்த மாணிக்கம் செல்வின், சின்னத்துரை ஆகியோரிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட னர்.

    முடிவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் பேரில் தர்ணா போராட்டத்தை கைவிட்டு தங்கள் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கூறியபடி நேற்று மாலை சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.

    2-வது நாளாக போராட்டம்

    இதனை கண்டித்து 2-வது நாளாக இன்று காலை வேலை நிறுத்த போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • கூட்டத்தில் ராஜா எம்.எல்.ஏ. இளைஞர் அணி நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி பேசினார்.
    • பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தீவிரமாக களப்பணி ஆற்ற வேண்டும் என்று ராஜா எம்.எல்.ஏ. கூறினார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலில் வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் ராஜபாளையம் சாலையில் உள்ள ஒரு தனியார் அரங்கில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் யூ.எஸ்.டி. சீனிவாசன், பரமகுரு, மாவட்ட அவைத் தலைவர் பத்மநாதன், மாநில மருத்துவர் அணி துணை செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், மாவட்ட துணை செயலாளர்கள் புனிதா, மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. இளைஞர் அணிக்கு மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முகேஷ், துணை அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள ராஜராஜன், கார்த்தி, மணிகண்டன், அன்சாரி, ராஜ் ஆகியோரை அறிமுகப்படுத்தி பேசினார்.

    தொடர்ந்து செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் ராஜா எம்.எல்.ஏ. பேசுகையில், வரும் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தீவிரமாக களப்பணி ஆற்ற வேண்டும். தி.மு.க. அரசின் 2 ஆண்டுகால சாதனைகளை பொதுமக்கள் அறியும் வகையில் தெருமுனை கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் நடத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

    இதில் ஒன்றிய செயலாளர்கள் லாலா சங்கரபாண்டியன், கடற்கரை, பெரியதுரை, பொன் முத்தையா பாண்டி யன், பூசைபாண்டியன், மதிமாரிமுத்து, சேர்மதுரை, ராமச்சந்திரன், கிறிஸ்டோபர் வெற்றிவிஜயன், நகர செயலாளர்கள் பிரகாஷ், அந்தோணிசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் தேவா என்ற தேவதாஸ், மகேஸ்வரி, பொறியாளர் அணி பசுபதிபாண்டியன் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • முன்னாள் ஆளுநர் டாக்டர் தங்கப்பழம் புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
    • இதில் நலிவுற்றவர்களுக்கு அரிசி, சேலை, வேட்டி, பெட்சீட் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் கிளாசிக் அரிமா சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா சங்கரன்கோவில் மேல ரத வீதியில் உள்ள கோகுலம் மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் கிளாசிக் அரிமா சங்கத் தலைவர், தொழிலதிபர் அரிமா திவ்யா ரெங்கன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியை சாந்தி செல்வகுமார் தொகுத்து வழங்கினார்.

    துணைத்தலைவர் சுனைக்குமார் வருட செயல் அறிக்கை வாசித்தார். முன்னாள் ஆளுநர் டாக்டர் தங்கப்பழம் புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    இதில் தலைவராக ரமேஷ் பாபு, செயலாளராக திருப்பதி வெங்கட சுப்பிரமணியன், பொருளாளராக ஸ்ரீதர் ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர். தொடர்ந்து மற்ற நிர்வாகிகளும் பதவி ஏற்று கொண்டனர். இதில் நலிவுற்றவர்களுக்கு அரிசி, சேலை, வேட்டி, பெட்சீட் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விழாவில் நகர சுழற்கழகம், சங்கரன்கோவில் முத்துக்கள் அரிமா சங்கம், சாத்தூர், நெல்லை கிரின், நெல்லை சிட்டி, ஆலங்குளம், கோவை அண்ணாநகர் ஆகிய ஊர்களில் உள்ள அரிமா சங்க நிர்வாகிகள், தாமரைகழகம், நகர வியாபாரிகள் சங்கம், ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம், நகர நகைக்கடை வியாபாரிகள் சங்கம் மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

    • தனியாக சமையல் கலைஞர்கள் மற்றும் பணியாளர்களை நியமித்து சமையல் செய்து சுகாதாரமான முறையில் பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கி வருகின்றார்.
    • 750 நாட்கள் முடிந்ததை முன்னிட்டு பொதுமக்களுக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. உணவு வழங்கினார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில், சட்டமன்ற உறுப்பினராக தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தேர்ந் தெடுக்கப்பட்டது முதல் மதியம் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கி வருகிறார்.

    இதற்காக தனியாக சமையல் கலைஞர்கள் மற்றும் பணியாளர்களை நியமித்து சமையல் செய்து சுகாதாரமான முறையில் பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கி வருகின்றார்.

    இந்நிலையில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினராக ராஜா எம்.எல்.ஏ. பதவி ஏற்றது முதல் வழங்கி வரும் இந்த உணவானது 750 நாட்களை அடைந்துள்ளது.

    சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மதிய உணவு கண்டிப்பாக கிடைக்கும் என்று நம்பிக் கையில் பலர் உணவை பெற்று செல்கின்றனர். 750 நாட்கள் முடிந்ததை முன்னிட்டு பொது மக்களுக்கு வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. உணவு வழங்கினார்.

    இதில் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • விழாவில் லயன்ஸ் மாவட்ட முதலாம் துணை ஆளுநர் அய்யாதுரை புதிய லயன்ஸ் உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து வைத்தார்.
    • சங்கரன்கோவில் லயன்ஸ் கிளப் சார்பாக சங்கரன்கோவில் ஏழை,எளிய மாணவர்களுக்கு ரூ.2 லட்சத்து 30 ஆயிரத்திற்கான கல்வி உதவித்தொகை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அரிமா சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஸ்ரீ கிருஷ்ணா மகாலில் நடைபெற்றது. தலைவராக முருகன், செயலாளராக ஹரிராம சந்திர வேலாயுதம், பொருளாளராக சேதுராஜ் ஆகியோருக்கு லயன்ஸ் கூட்டு மாவட்ட தலைவர் முத்தையா பதவி பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் லயன்ஸ் மாவட்ட முதலாம் துணை ஆளுநர் அய்யாதுரை புதிய லயன்ஸ் உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து வைத்தார். விழாவில் சங்கரன்கோவில் லயன்ஸ் கிளப் சார்பாக சங்கரன்கோவில் ஏழை,எளிய மாணவர்களுக்கு ரூ.2 லட்சத்து 30 ஆயிரத்திற்கான கல்வி உதவித்தொகை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் கூட்டு மாவட்ட தலைவர் கே.ஜி.பிரகாஷ், முன்னாள் மாவட்ட ஆளுநர் சந்தானராஜா, சங்கரன்கோவில் லயன்ஸ் கிளப் அட்மின் எஸ்.ஆர்.எல். வேணுகோபால் என்ற கண்ணன் மற்றும் சங்கரன்கோவில் கிளப் முன்னாள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறையினர் ஆலோசனை கூட்டம் சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது.
    • தபசு நடக்கும் தெற்கு ரத வீதியில் சுவாமி- அம்பாள் சப்பரம் வரும் இடத்தை ஆய்வு செய்து மீதமுள்ள இடத்தை பக்தர்கள் சிறப்பாக தரிசனம் செய்யும் வகையில் அதிக இடங்கள் விட்டு தடுப்புகள் அமைக்க வேண்டும்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும்.

    ஆடித்தபசு திருவிழா

    இங்கு அரியும், சிவனும் ஒன்று என்பதை கோமதி அம்மனுக்கு உணர்த்தும் வகையில் ஆடி மாதம் உத்திராடம் நட்சத்திரம் அன்று சிவபெருமான் சங்கர நாராயணராக கோமதி அம்மனுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்வாகும்.

    இந்த நிகழ்ச்சியை காண இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சங்கரன் கோவி லுக்கு வருவது வழக்கம். இந்த ஆண்டு ஆடித்தபசு திருவிழா வருகிற 21-நதேதி கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது.

    சங்கரநாராயணராக காட்சி

    இந்த ஆடித்தபசு திருநாள் 12 நாட்கள் விமர்சையாக நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சி யான கோமதி அம்மனுக்கு சிவ பெருமான் சங்கரநாரா யணராக காட்சி கொடுக்கும் வைபவம் வருகிற 31-தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.

    ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரி க்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை யினர் ஆலோசனை கூட்டம் சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது.

    பாதுகாப்புத்துறை சான்றிதழ்

    கூட்டத்திற்கு ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சங்கரன்கோ வில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், நகரா ட்சி கமிஷனர் சபா நாயகம், கோவில் துணை ஆணையர் ஜான்சிராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சேர்மன் உமா மகேஸ்வரி பேசிய தாவது:-

    ஆடித்தபசு அன்று குடிநீர் பந்தல் அமைக்கும் தொண்டு அமைப்புகளுக்கு நகராட்சி மூலம் குடிநீர் வழங்கப்படும். அன்னதானம் செய்பவர்கள் முன்கூட்டியே தகவல் தெரிவித்தால் நகராட்சி மூலம் குடிநீர் வழங்கப்படும். அன்னதானம் செய்பவர்கள் உணவு பாதுகாப்புத்துறை சான்றிதழ் கண்டிப்பாக வாங்கி இருக்க வேண்டும். வணிக நிறுவனங்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும். உணவகங்கள் மற்றும் டீக்கடைகளில் உணவு பொருட்களை மூடி வைத்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். இதனை நகராட்சி சுகாதாரதுறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    லட்சக்கணக்கான பக்தர்கள்

    தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    ஆடித்தபசு திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். இதில் முக்கியமாக தடையில்லா மின்சாரம், தடையில்லா குடிநீர், பொதுமக்களுக்கு பாதுகாப்பு ஆகியன முக்கிய அம்சமாகும். எனவே மின்வாரிய அதிகாரிகள், காவல்துறை யினர், குடிநீர் வடிகால் வாரியத்தினர் அனைவரும் நகராட்சியுடன் இணைந்து செயல்பட வேண்டும். ஆடித்தபசு திருவிழாவை அனைத்து அரசு துறையினர் இணைந்து சிறப்பாக நடத்த வேண்டும்.

    மேலும் தபசு நடக்கும் தெற்கு ரத வீதியில் சுவாமி- அம்பாள் சப்பரம் வரும் இடத்தை ஆய்வு செய்து மீதமுள்ள இடத்தை பக்தர்கள் சிறப்பாக தரிசனம் செய்யும் வகையில் அதிக இடங்கள் விட்டு தடுப்புகள் அமைக்க வேண்டும். உணவகங்கள் மற்றும் அன்னதானங்கள் நடக்கும் இடங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து உணவுகள் தரமான முறை யில் உள்ளதா? என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

    சம்பந்தப்பட்ட துறையினர் அனைவரும் ஒத்துழைப்பு அளித்து பொது மக்களுக்கும், வியாபாரி களுக்கு, பக்தர்களு க்கும் எந்தவித பாதிப்பும், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பக்த ர்கள் ஆடித் தபசுக்கு வந்து சிறப்பாக தரிசனம் செய்து விட்டு செல்ல அனைத்து நட வடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

    தீயணைப்பு வாகனங்கள் அவசரக்கால ஊர்திகள் தயார் நிலையில் வைப்ப தற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். நகர் பகுதியில் சுழலும் சி.சி.டி.வி. காமிரா க்கள் அமைத்து அதற்கான கட்டுப்பாட்டு அறையை அமைத்து அதனை முறையாக கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் நகராட்சி துணை சேர்மன் கண்ணன், இன்ஸ்பெக்டர் சகாயசாந்தி, மருத்துவ அலுவலர் டாக்டர் மகாலட்சுமி, நெடுஞ்சாலைதுறை திருமலைச்சாமி, பலவேசம், மின்வாரிய உதவி பொறியாளர்கள் கணேச ராம கிருஷ்ணன், தங்க மாரிமுத்து, தீயணைப்பு துறை சார்பில் சரவணன் மற்றும் போக்கு வரத்து காவல்துறையினர், நகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ராஜா எம்.எல்.ஏ. மற்றும் சங்கரன்கோவில் ஆர்.டி.ஓ. சுப்புலட்சுமி ஆகியோர் வாழ்த்தி பேசினார்.
    • திறன் மேம்பாடு உதவி இயக்குனர் ஜார்ஜ் பிராங்ளின் மாணவர்களுக்கான உயர்கல்வி குறித்து பேசினார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 2022-2023-ம் கல்வியாண்டில் மேல்நிலைத்தேர்வில் தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேராத மாணவ, மாணவிகளுக்கான உயர்வுக்கு படி என்ற நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அலுவலர் முத்தையா வரவேற்றார். இதில் ராஜா எம்.எல்.ஏ. மற்றும் சங்கரன்கோவில் ஆர்.டி.ஓ. சுப்புலட்சுமி ஆகியோர் வாழ்த்தி பேசினார்.

    தொடர்ந்து தென்காசி துணை கலெக்டர் கவிதா, மாவட்ட சமூக நல அலுவலர் மதிவதனா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சங்கரநாராயணன், மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர் நடராஜன் ஆகியோர் விளக்கவுரை ஆற்றினர். திறன் மேம்பாடு உதவி இயக்குனர் ஜார்ஜ் பிராங்ளின் மாணவர்களுக்கான உயர்கல்வி குறித்து பேசினார். சங்கரன்கோவில் ஐ.ஓ.பி. வங்கி மேலாளர் அமலி ஜென்சி வங்கி கடன் குறித்து விளக்க உரையாற்றினார்.

    தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு வெளியிட்டுள்ள வேலை வாய்ப்பு மற்றும் உயர் கல்வி சம்பந்தமான தகவல்கள் அடங்கிய புதுமைப் பெண் புத்தகம் , நான் முதல்வன் ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.

    இதில் தென்காசி மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களை சேர்ந்த வர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட கல்வி அலுவலர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.

    • கலந்தாய்வு கூட்டம் சேர்மன் உமா மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.
    • வீடுகள், கடைகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனியாக பிரித்து வாங்கும் படியும் அறிவுறுத்தப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தில் சேர்மன் உமா மகேஸ்வரி தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் நகராட்சி பகுதிகளில் வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து வாங்கும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனியாக பிரித்து வாங்கும் படியும், வார்டுகளில் வாறுகால் சுத்தம் செய்யும்படியும் சேர்மன் உமா மகேஸ்வரி, தூய்மை பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இதில் நகராட்சி கமிஷனர் சபாநாயகம், நகராட்சி சுகாதார அலுவலர் பாலச்சந்தர், சுகாதார ஆய்வாளர்கள் வெங்கட்ராமன், மாரிசாமி மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • முகாமில், 336 பசுக்கள், 3396 செம்மறியாடுகள், 245 வெள்ளாடுகள், 199 கோழிகள், 49 நாய்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
    • சிறந்த கால்நடை வளர்ப்போர் மற்றும் கால்நடை மேலாண்மைக்கான பரிசுகள், சிறந்த கிடேரி கன்றுகளுக்கான பரிசுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் ஒன்றியம் கோ.மருதப்புரம் ஊராட்சி நவநீதகிருஷ்ணபுரத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசின் கால்நடை பராமரி ப்புத் துறை, பால்வளத்துறை மற்றும் ஆராய்ச்சிநிலையம் இணைந்து நடத்திய கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. நெல்லை கால்நடை பராமரிப்புத்துறை கோட்ட உதவி இயக்குநர் கலையரசி மற்றும் தென்காசி கோட்ட உதவி இயக்குநர் மகேஸ்வரி ஆகியோர் வரவேற்று பேசினர். சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. ராஜா முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரை யாற்றினார்.

    சங்கரன்கோவில் ஆர்.டி.ஓ. சுப்புலட்சுமி, எட்வின் மற்றும் ஆவின் சிறப்பு மேலாளர் சுந்தரம் வாழ்த்துரை வழங்கி னா ர்கள்.கோ.மருதப்புரம் ஊராட்சி மன்றத்தலைவர் வீரம்மாள் கடற்கரை முன்னி லை வகித்தார்.முகாமில் கால்நடை மருத்து வர்கள் ரமேஷ், நாகராஜன், சுருளிராஜ், அந்தோணி, செல்வக்குத்தா லிங்கம், சந்திரலேகா, வசந்தா, ராமசெல்வம், சர்மதி, கார்த்திக், கவிநிலவன், மாரியப்பன், ஆவின் கால்நடை மருத்துவர்கள் காயத்திரி, சுனில், கால்நடை ஆயவா ளர்கள் ரமேஷ், ஹரி கிருஷ்ணன், கோபால் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் முத்துமாடத்தி, செல்வமணி, முத்து மாரியப்பன், கருப்ப சாமி, அனிதா, நம்பியார், வெங்க டேஷ், சுடலை ஆகியோர் கொண்ட மருத்துவக்குழு 336 பசுக்கள், 3396 செம்மறியாடுகள், 245 வெள்ளாடுகள், 199 கோழிகள், 49 நாய்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

    முகாமில் கால்நடைகளுக்கு குடற்புழுநீக்கம், சிகிச்சை, ஆண்மைநீக்கம், செயற்கைமுறை கருவூட்டல், சினை பார்த்தல், ஸ்கேன் செய்தல், ரத்தத்தில் எடுத்தல் போன்ற மருத்துவ பணிகள் நடைபெற்றன. நெல்லை மண்டல நோய்புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் ஜான்சுபாஷ், சங்கர ன்கோவில் உதவி இயக்குநர் திருநாவுக்கரசு, நடமாடும் கால்நடை மருத்துவபிரிவு மரு.சந்திரசேகரன் ஆகியோர் தொழில்நுட்ப அறிவுரை வழங்கினர். சிறந்த கால்நடை வளர்ப்போர் மற்றும் கால்நடை மேலாண்மை க்கான பரிசுகள், சிறந்த கிடேரி கன்றுகளுக்கான பரிசுகள், கோ-4 ரக புல்த ரைகள் மற்றும் தாதுஉப்பு கலவை விவசாயி களுக்கு வழ ங்கப்பட்டது.சிறந்த நாட்டின நாய் வளர்ப்போ ர்க்கான பரிசுகள் வழங்க ப்பட்டது.

    சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. ராஜா, மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் கால்நடை விவசாயிகள், பொது மக்கள் முகாமில் அமைக்கப்பட்ட பல்வேறு உப கரணங்கள், நவீன தொழில் நுட்பங்களை விளக்கும் அரங்குகளை பார்வை யிட்டு பயன்பெற்ற னர். விழா ஏற்பாடுகளை குருக்கள்பட்டி கால்நடை மருத்துவர் நாகராஜன் செய்திருந்தனர்.

    • தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் படம் நேற்று வெளியானது.
    • தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு இனிப்புகள் மற்றும் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் படம் நேற்று வெளியானது. சங்கரன்கோவில் கீதாலாயா திரையரங்கில் மாவட்ட இளைஞரணி சார்பில் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் படம் வெளியானதை முன்னிட்டு தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு இனிப்புகள் மற்றும் டிக்கெட்டுகள் வழங்கபட்டது.

    இதில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், மாவட்ட துணை செயலாளர் புனிதா, ஒன்றிய செயலாளர் பெரிய துரை, நகர செயலாளர் பிரகாஷ், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற தலைவர் ஆர்.தலைவர், செயலாளர் சாமுவேல் முத்தையா, மாவட்ட இளைஞரணி சரவணன், நகர அவை தலைவர் முப்பிடாதி, நகர துணைச் செயலாளர்கள் மாரியப்பன், முத்துக்குமார், முன்னாள் பொது குழு உறுப்பினர் ராஜா என்ற ராசையா, கவுன்சிலர்கள் அலமேலு, செல்வராஜ், வார்டு செயலாளர்கள் வாழைக்காய் துரைப்பாண்டியன், தங்கவேல், வீரா, வீரமணி, சிவா, கோமதிநாயகம், மாணவரணி கார்த்தி, சிவாஜி, ஜெயக்குமார், பிரகாஷ், வக்கீல் சதிஷ், பால் குட்டி, வீமராஜ், பசுபதி பாண்டியன், ஜான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×