search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவில் ஆடித்தவசு திருவிழா  நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது - 31-ந்தேதி தவசு காட்சி நடக்கிறது
    X

    சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவில் ஆடித்தவசு திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது - 31-ந்தேதி தவசு காட்சி நடக்கிறது

    • விழா நாட்களில் சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
    • முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் 9-ம் திருநாளான வருகிற 29-ந் தேதி (சனிக்கிழமை) காலை நடைபெறுகிறது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயணசாமி கோவில் தென் தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சிவா லயலங்களில் ஒன்று.

    ஆடித்தவசு திருவிழா

    சிவன் வேறு விஷ்ணு வேறு என்று பிளவுபடுத்துவது தவறு என்பதை பக்தர்களுக்கு உணர்த்தும் பொருட்டு சிவபெருமாள் கோமதி அம்பாளுக்கு சங்கர நாராயணராகவும், சங்கரலிங்க மூர்த்தி யாகவும் காட்சி கொடுத்தார். இத்தகைய அரிய நிகழ்ச்சியை ஆடித்தவசு திருவிழாவாக பக்தர்களால் கொண்டா டப்பட்டு வருகிறது.

    ஆடித்தவசு திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம். விழா நாட்களில் சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். மேலும் கோவில் உள்மண்டபத்தில் உள்ள கலையரங்கத்தில் பக்தி இன்னிசை கச்சேரி, சொற்பொழிவு, வழக்காடு மன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான ஆடித்தவசு திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6.15 மணிக்கு கோமதி அம்மன் சன்னதி முன்பு அமைந்துள்ள கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் 9-ம் திருநாளான வருகிற 29-ந் தேதி (சனிக்கிழமை) காலை நடைபெறுகிறது.

    சிகர நிகழ்ச்சியான ஆடித்தவசு திருவிழா 11-ம் திருநாளான வருகிற 31-ந்தேதி மாலை நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை நெல்லை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, சங்கரநாராயண சாமி கோவில் துணை ஆணை யர் ஜான்சிராணி மற்றும் மண்டகப் படித்தாரர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×