search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Business Man Diviyarengan"

    • முன்னாள் ஆளுநர் டாக்டர் தங்கப்பழம் புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
    • இதில் நலிவுற்றவர்களுக்கு அரிசி, சேலை, வேட்டி, பெட்சீட் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் கிளாசிக் அரிமா சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா சங்கரன்கோவில் மேல ரத வீதியில் உள்ள கோகுலம் மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் கிளாசிக் அரிமா சங்கத் தலைவர், தொழிலதிபர் அரிமா திவ்யா ரெங்கன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியை சாந்தி செல்வகுமார் தொகுத்து வழங்கினார்.

    துணைத்தலைவர் சுனைக்குமார் வருட செயல் அறிக்கை வாசித்தார். முன்னாள் ஆளுநர் டாக்டர் தங்கப்பழம் புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    இதில் தலைவராக ரமேஷ் பாபு, செயலாளராக திருப்பதி வெங்கட சுப்பிரமணியன், பொருளாளராக ஸ்ரீதர் ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர். தொடர்ந்து மற்ற நிர்வாகிகளும் பதவி ஏற்று கொண்டனர். இதில் நலிவுற்றவர்களுக்கு அரிசி, சேலை, வேட்டி, பெட்சீட் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விழாவில் நகர சுழற்கழகம், சங்கரன்கோவில் முத்துக்கள் அரிமா சங்கம், சாத்தூர், நெல்லை கிரின், நெல்லை சிட்டி, ஆலங்குளம், கோவை அண்ணாநகர் ஆகிய ஊர்களில் உள்ள அரிமா சங்க நிர்வாகிகள், தாமரைகழகம், நகர வியாபாரிகள் சங்கம், ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம், நகர நகைக்கடை வியாபாரிகள் சங்கம் மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

    ×