சங்கரன்கோவில் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

விழாவில் லயன்ஸ் மாவட்ட முதலாம் துணை ஆளுநர் அய்யாதுரை புதிய லயன்ஸ் உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து வைத்தார்.சங்கரன்கோவில் லயன்ஸ் கிளப் சார்பாக சங்கரன்கோவில் ஏழை,எளிய மாணவர்களுக்கு ரூ.2 லட்சத்து 30 ஆயிரத்திற்கான கல்வி உதவித்தொகை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
சங்கரன்கோவில் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய காட்சி.
சங்கரன்கோவில் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய காட்சி.
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அரிமா சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஸ்ரீ கிருஷ்ணா மகாலில் நடைபெற்றது. தலைவராக முருகன், செயலாளராக ஹரிராம சந்திர வேலாயுதம், பொருளாளராக சேதுராஜ் ஆகியோருக்கு லயன்ஸ் கூட்டு மாவட்ட தலைவர் முத்தையா பதவி பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் லயன்ஸ் மாவட்ட முதலாம் துணை ஆளுநர் அய்யாதுரை புதிய லயன்ஸ் உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து வைத்தார். விழாவில் சங்கரன்கோவில் லயன்ஸ் கிளப் சார்பாக சங்கரன்கோவில் ஏழை,எளிய மாணவர்களுக்கு ரூ.2 லட்சத்து 30 ஆயிரத்திற்கான கல்வி உதவித்தொகை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் கூட்டு மாவட்ட தலைவர் கே.ஜி.பிரகாஷ், முன்னாள் மாவட்ட ஆளுநர் சந்தானராஜா, சங்கரன்கோவில் லயன்ஸ் கிளப் அட்மின் எஸ்.ஆர்.எல். வேணுகோபால் என்ற கண்ணன் மற்றும் சங்கரன்கோவில் கிளப் முன்னாள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com