சங்கரன்கோவில் அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள்- ராஜா எம்.எல்.ஏ. வழங்கினார்

விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியை மணிமேகலை தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை ராஜா எம்.எல்.ஏ. வழங்கிய காட்சி.
மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை ராஜா எம்.எல்.ஏ. வழங்கிய காட்சி.
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை மணிமேகலை தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

இதில் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பெரியதுரை, சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் கார்த்தி, ஜெயக்குமார், காவல்கிளி, ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com