search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "salary"

    • சம்பளம் வழங்காததை கண்டித்து ஊழியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஊராட்சி நிர்வாகம் தொடர்ந்து பணியாளர்களை ஏமாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றிய கிராம ஊராட்சியில் பணிபுரிந்து வரும் ஒ.எச்.டி. ஆபரேட்டர்கள், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட ஊராட்சி ஊழியர்களுக்கு 2022 அக்டோபர் முதல் 2023 ஏப்ரல் வரை 7 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.

    மேலும் பொங்கல் பண்டிகை தொகையான ரூ.1000-மும் வழங்காமல் திருச்சுழி ஊராட்சி நிர்வாகம் தொடர்ந்து பணியா ளர்களை ஏமாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஊழியர்களுக்கு நிலுவை சம்பளம் மற்றும் பொங்கல் தொகையை வழங்கக்கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை முறையிட்டும், மனுக்கள் அளித்தும் இதுவரை எவ்வித நடவ டிக்கையும் இல்லை.

    இந்த நிலையில் நேற்று திருச்சுழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை ஊழியர்கள் திடீரென்று முற்றுகையிட்டு ேபாராட்டம் நடத்தினர். கலெக்டர் மற்றும் யூனியன் அலுவலக உயரதிகாரிகள் திருச்சுழி ஊராட்சி நிர்வா கத்தில் தலையிட்டு ஊராட்சி நிர்வா கத்தில் சுமூகமான சூழ்நிலையை உருவாக்கி இனிவரும் காலங்க ளில் ஊராட்சி ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டு மென ஊராட்சி ஊழியர்கள் அடங்கிய ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். இந்த போராட்டத்தில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பால சுப்பிரமணியன், சி.ஐ.டி.யு. ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் மார்க்கண்டன், செல்வராஜ், விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் பெருமாள், மாற்றுத் திறனாளிகள் சங்க ஒன்றிய தலைவர் குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கடந்த 1-ந் தேதி தொழிலாளர் தினத்தன்று தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளதா?
    • 60 முரண்பாடுகள் கண்டறியப்பட்டு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை தொழிலாளர்துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) தனபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை முதன்மை செயலாளரும், தொழிலாளர்துறை ஆணையருமான அதுல்ஆனந்த் உத்தரவுப்படி திருச்சி கூடுதல் தொழிலாளர்துறை ஆணையர் ஜெயபால், இணை ஆணையர் திவ்யநாதன் ஆகியோர் அறிவுரைப்படியும்

    தஞ்சை மாவட்டத்தில் உள்ள கடைகள், நிறுவனங்கள், உணவகங்கள் மற்றும் போக்குவரத்து நிறுவனங்களில் தேசிய விடுமுறை நாளான கடந்த 1-ந் தேதி தொழிலாளர் தினத்தன்று தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு, அவர்கள் சம்மதத்துடன் இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்றுவிடுப்பு அளிக்கப்பட்டுள்ளதா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    ஆய்வின்போது சட்ட விதிகளின்படி செயல்படாத கடைகள் மற்றும் நிறுவனங்களில் 32 முரண்பாடுகளும், உணவு நிறுவனங்களில் 28 முரண்பாடுகளும் என மொத்தம் 60 முரண்பாடுகள் கண்டறியப்பட்டு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருமூர்த்தி மற்றும் அவரது தந்தை ஆறுச்சாமி ஆகியோரை இரும்புகம்பியால் தாக்கியுள்ளார்.
    • பல்லடம் அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள வேலப்பகவு ண்டம்பா ளையத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி( வயது 30). இவர் அதே ஊரைச் சேர்ந்த சதீஷ் என்பவரது பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த 2 மாதங்களாக சம்பள பாக்கி இருந்துள்ளது. எனவே சம்பள பாக்கியை கேட்பதற்காக சதீஷின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இது குறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ள்ளது. அப்ேபாது சதீஷின் உறவினரான பாலசு ப்பிரமணியம் என்பவர் திருமூர்த்தி மற்றும் அவரது தந்தை ஆறுச்சாமி ஆகி யோரை இரும்புகம்பியால் தாக்கியுள்ளார். இதில் ஆறுச்சாமியின் இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. திருமூர்த்திக்கு தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாகஅருகில் இருந்தவர்கள் காயமடைந்த இருவரையும் உடனடியாக பல்லடம் அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனை க்குஅனுப்பிவைக்க ப்பட்டனர்.இது குறித்த புகாரின் பேரில் காமநாயக்க ன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
    • காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

    முத்துப்பேட்டை:

    தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் வட்டார தலைவர் முருகையன், செயலாளர் எலிசபெத் ராணி ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவக்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    சத்துணவு திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற அனைத்து சத்துணவு ஊழியர்களுக்கும் குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும், சத்துணவு திட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பாத்திர தொழிலாளர்களின் கூலி உயர்வு ஒப்பந்தம் கடந்த டிசம்பர் 31-ந் தேதியுடன் நிறைவடைந்தது.
    • தலா 7 சதவீதம் கூலி உயர்வு வழங்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் அனுப்பர்பாளையம் பாத்திர தொழிலாளர்களின் கூலி உயர்வு ஒப்பந்தம் கடந்த டிசம்பர் 31-ந் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து புதிய கூலி உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துமாறு பாத்திர உற்பத்தியாளர்களுக்கு அனைத்து தொழிற்சங்க கூட்டு கமிட்டி அழைப்பு விடுத்தது. இதையடுத்து தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் முன்னிலையில் பலகட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதுவரை எவர்சில்வர் மற்றும் பித்தளை, செம்பு உற்பத்தியாளர் தலா 7 சதவீதம் கூலி உயர்வு வழங்க சம்மதம் தெரிவித்துள்ளனர். ஆனால் கூடுதல் சதவீதம் கூலி உயர்வு வழங்க முடியாது என்று கூறி பாத்திர உற்பத்தியாளர்கள் தொடர்ந்து மவுனம் காத்து வருகின்றனர். இந்த நிலையில் பேச்சுவார்த்தை தொடர்பான முழுவிவரங்களையும் பாத்திர தொழிலாளர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் விளக்கக்கூட்டம் அனுப்பர்பாளையம் - ஆத்துப்பாளையம் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இதில் எச்.எம்.எஸ்., சங்கத்தின் மாநில செயலாளர் ராஜாமணி கலந்து கொண்டு தொழிலாளர்களின் கூலி உயர்வு தொடர்பாக வாழ்த்தி பேசினார். மேலும் அனைத்து தொழிற்சங்க கூட்டுக்கமிட்டி தரப்பினரும் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட பெரும்பாலான தொழிலாளர்கள், வேலை நிறுத்தம் இல்லாமலேயே தொழிற்சங்கங்கள் விரைவாக பேச்சுவார்த்தை நடத்தி போதிய கூலி உயர்வு பெற்றுத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இந்த கூட்டத்தின் முடிவில் இன்று (சனிக்கிழமை) எவர்சில்வர் பாத்திர உற்பத்தியாளர்களுடனும், வரும் திங்கட்கிழமை பித்தளை, செம்பு உற்பத்தியாளர்களுடனும், வரும் செவ்வாய்கிழமை தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் முன்னிலையில் நடைபெறும் பேச்சுவார்த்தையின் முடிவில் எடுக்கப்படும் முடிவுகளை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்து தொழிற்சங்க கூட்டுக் கமிட்டி அறிவித்தது.இந்த கூட்டத்தில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பாத்திர தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

    • ஒரு நாளைக்கு ரூ. 214 ஊதியம் வழங்கப்–படுகிறது.
    • 6அடி நீளம், 2.5 அடி அகலம் என்ற அளவில் நிலத்தடி நீர் சேமிப்பு கட்டமைப்புகள்.

    திருவாரூர்:

    மத்திய அரசின் மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் கிராமப்புற மக்களுக்கு ஆண்டுதோறும் 100 நாட்கள் வேலை வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

    இத்திட்டத்தின்படி குறிப்பிட்ட அளவிலான பணிகளை முடிக்கும் நிலையில் ஒரு நாளைக்கு ரூ.214 ஊதியம் வழங்கப்படுகிறது.

    இப்பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் மூலம் நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை தேர்வு செய்கிறார்கள்.

    திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளில் வாய்க்கால் தூர்வாருவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

    ஆறுகளில் இருந்து வாய்க்கால் வழியாகவே பாசன நீர் விவசாய வயல்களுக்கு கொண்டு செல்லப்படும்.

    அதற்கேற்ற வகையில் தடையின்றி பாசனம் மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் வாய்க்கால்களை தூர்வார இப்பணியில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

    வாய்க்கால்களை தூர் வரும்போது குறிப்பிட்ட இடைவெளிகள் இரண்டடி ஆழத்திற்கு, 6அடி நீளம், 2.5 அடி அகலம் என்ற அளவில் நிலத்தடி நீர் சேமிப்பு கட்டமைப்புகள் பணியாளர்கள் மூலமாக மேற்கொள்ளப்படுகிறது.

    திருவாரூர் மாவட்டத்தில் பெரும்புகழூர், அம்மையப்பன், வண்டாம்பாளை ஆகிய 430 ஊராட்சிகளிலும் இப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    • குரான் பானளயத்திலுள்ளவர்கள் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிசெய்து வருகின்றனர்.
    • 100 நாள் வேலை செய்த தொழிலாளர்களுடன் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகத்திடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் சேஷாங்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட குரான்பாளையம் கிராமம் உள்ளது. இங்குள்ளவர்கள் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிசெய்து வருகின்றனர். அதன்படி கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் வேலை செய்த 9 நாட்களுக்கான சம்பளம் வழங்கப்படவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இதை கண்டித்தும், அனை வருக்கும் ஜாப் கார்டு வழங்க கோரியும் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் முன்பு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.

    போராட்டத்தில் ஈடுபட்டவ ர்களுடன் கண்டமங்கலம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் கண்டமங்கலம் ஒன்றிய செயலாளர் குப்புசாமி, மாவட்ட குழு உறுப்பினர் சவுந்தர்ராஜன், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேஸ்வரி மற்றும் 100 நாள் வேலை செய்த தொழிலாளர்களுடன் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகத்திடம் கோரிக்கை மனு அளித்தனர்.க

    • மயிலாடுதுறையில் அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஊராட்சிஒன்றிய அலுவலகத்தில் நடை பெற்றது.
    • புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஊராட்சிஒன்றிய அலுவலகத்தில் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத்தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயலாளர் பாலு முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர்கள் தஞ்சை ரவிச்சந்திரன், திருவாரூர் வன்னியநாதன், நாகை அருண்சடேசன், கடலூர் அமானுல்லா ஆகியோர் கலந்துகொண்டு சங்க செயல்பாடுகள் குறித்து பேசினர்.

    சங்க மாவட்ட அமைப்பு செயலாளராக விஜயபாலன் செயற்குழு உறுப்பினர்களாக சந்துரு, ரம்யா, ரவி, மாவட்ட கொள்கை பரப்பு செயலாளராக பிரபாகரன் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

    இதில் அரசுத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் என்.எம்.ஆர். முறையில் ஊதியம் பெறும் ஓட்டுனர்களுக்கு காலமுறை ஊதியத்தில் பணிநிரந்தரம் செய்ய வேண்டும், சமவேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் தரஊதியம் என்ற அடிப்படையில் தரஊதிய பிரச்னைகளுக்கு தீர்வுகார வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஓட்டுனர்களாக பணியாற்றும் படித்த இளைஞர்களுக்கு கல்விக்தகுதிக்கு ஏற்ப பதவி உயர்வு வழங்க அரசை கேட்டுக்கொள்வது, அரசுத்துறைகளில் காலியாக உள்ள ஓட்டுனர் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்பிட தமிழக அரசை கேட்டுக்கொள்வது, அரசுத்துறை ஓட்டுனர்களை முன்களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும், சென்னையில் நடத்தப்பட உள்ள பேரணியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து திரளானோர் கலந்துகொள்வது என்பன போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • தினக்கூலி முறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
    • புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட ஜாக்டோ- ஜியோ அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் பனகல் கட்டிடம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர்கள் சத்தியசீலன், இளையராஜா, ரெங்கசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    ஆர்ப்பாட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கியது போல் 1.7.2022 முதல் 4 சதவீத அகவிலைப்படியை முன்தேதியிட்டு நிலுவைத் தொகையுடன் தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டும்.

    முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பினை உடன் வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.

    தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் மற்றும் தினக்கூலி முறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

    சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்புற நூலகர்கள், எம்.ஆர்.பி. செலிவியர்கள் உள்ளிட்ட வர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்குதல் வேண்டும், அனைத்து பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று போராட்டம் நடந்தது.
    • தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், குருவிகுளம், மேலநீலிதநல்லூர், ஆலங்குளம், கீழப்பாவூர், கடையம் உள்ளிட்ட அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் இந்த சிறுவிடுப்பு போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

    தென்காசி:

    தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் திணிக்கப்படும் பணி நெருக்கடிகள், காலம் கடந்த இரவு நேர ஆய்வுகள், வாட்ஸ் அப் காணொலி ஆய்வுகள் அனைத்தையும் கைவிட வேண்டும். ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்குதல் வேண்டும், அனைத்து பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று போராட்டம் நடந்தது.

    இன்று 2-வது நாளாக நடந்த போராட்டத்தில் ஏராளமோனார் பணிகளை புறக்கணித்தனர். இதனால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், குருவிகுளம், மேலநீலிதநல்லூர், ஆலங்குளம், கீழப்பாவூர், கடையம் உள்ளிட்ட அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் இந்த சிறுவிடுப்பு போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

    • கோபிசெட்டிபாளை யத்தில் தமிழ்நாடு அரசு ரேசன் கடை பணியாளர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.
    • ரேசன் கடை பணியாளர்களுக்கு ஒரு மாத சம்பளத்தை தீபாவளி போனசாக வழங்க வேண்டும்.

    கோபி:

    கோபிசெட்டிபாளை யத்தில் தமிழ்நாடு அரசு ரேசன் கடை பணியாளர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் ராஜேந்திரன், துணைத் தலைவர் சதாசிவம் ஆகியோர் தலைமை தாங்கி னர். பெருந்துறை குமார் வரவேற்றார்.

    இதில் அரசு பணியாளர்க ளுக்கு மகப்பேறு விடுப்பு 12 மாதம் வழங்கப்படுவது போல ரேசன் கடை பெண் பணியாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவித்த செயலாளர், மாநில பதிவாளர் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

    தமிழக முதல்-அமைச்சர் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி ரேசன் கடைகளுக்கு தனித்துறை ஏற்படுத்த வேண்டும். கூடுதல் பதிவாளர் சக்தி சரவணன் அறிக்கையில் அரசாணை எண்ணில் பரிந்துரைக்கப்பட்ட பரிந்து ரைகளை அமல்படுத்த வேண்டும்.

    மாநில பதிவாளர் அறிவிக்கப்பட்ட தேர்வு நிலை சிறப்பு நிலை குறித்து கமிட்டி அறிக்கை வெளியிட வேண்டும். ரேசன் கடை பணியாளர்களுக்கு ஒரு மாத சம்பளத்தை தீபாவளி போனசாக வழங்க வேண்டும்.

    நுகர் பொருள் வாணிப கிடங்கு நுகர்வு பணியாளர், ரேசன் கடை பணியாளர்க ளுக்கு ஒரே மாதிரியான வேலை நேரம்அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    • கல்லூரியின் இடது, வலது பின்புறத்தில் ஏராளமான செடி, கொடிகள் மண்டி கிடக்கிறது.
    • கஜா புயலில் தரைமட்டமான இருசக்கர வாகன நிறுத்தகம் இதுநாள் வரை சரிசெய்யப்படாமல் உள்ளது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் 2011ம் ஆண்டு பாரதிதாசன் உறுப்பு கலைக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. இந்த கல்லூரி இப்பகுதி மாணவர்களுக்கு ஒரு வரபிரசாதமாக அமைந்தது. இந்த கல்லூரியில் தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா்.

    இக்கல்லூரி 2018ம் ஆண்டு அரசு கலைக்கல்லூரியாக மாற்றப்பட்டது. இந்த கல்லூரிக்கு சுற்றுச்சுவா் கிடையாது. கல்லூரியின் இடது, வலது பின்புறத்தில் ஏராளமான செடி, கொடிகள் மண்டி கிடக்கிறது. இதனால் ஜன்னல் வழியாக கல்லூரிக்குள் பாம்பு போன்ற விஷ ஐந்துக்கள் உள்ளே நுழைய வாய்ப்புள்ளது. கல்லூரியின் முன்புறம் உள்ள கண்ணாடிகளும் கஜா புயலில் விழுந்து அதை அப்புறப்படுத்தாமலும், புணரமைக்கலும் உள்ளது.

    எந்த நேரத்திலும் அந்த கண்ணாடிகள் விழுந்து விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் மாணவா்கள் சென்று வருகின்றனா். மாணவா்கள் வரும் இருச்சக்கர வாகன நிறுத்தகமும் கஜா புயலில் தரை மட்டமானதை இதுநாள் வரை சரிசெய்யப்படாமல் அப்படியே உள்ளது. மாணவா்கள் வரும் வாகனங்கள் வெளியிலேயே வெயில் மற்றும் மழையில் பாதுகாப்பற்ற முறையில் நிறுத்தி வைக்கப்படுகிறது.

    கல்லூரி நிர்வாகம் பேராசிரியா்களுக்கு ஊதியம் கொடுப்பதில் பல்கலை–க்கழகம் கொடுப்பதா? அரசு கொடுப்பதாக என்ற இழுபறியில் இருந்து கொண்டு மாதா மாதம் சம்பளம் கிடைக்காமல் பேராசிரியர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகிறார்கள். கல்லூரி முன்பக்கத்தில் உள்ள மேல்தளத்தில் உடைந்த கண்ணாடியும், அதை சுற்றி செடி, கொடி, மரங்கள் மண்டி உள்ளது. எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை நிலவி வருகிறது. விபத்துக்கள் ஏற்பட்டதற்கு பிறகு அரசு முனைந்து செயல்படுவதை விட்டு விட்டு விபத்து ஏற்படுவதற்கு முன்பே உரிய நடவடிக்கை எடுத்து ஆவன செய்ய வேண்டுமென மாணவர்கள். பெற்றோர்கள், பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

    ×