search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "should be given"

    • திருபுவனையில் இயங்கி வந்த ஸ்பின்கோ நிறுவனம் பஞ்சு விலை உயர்வினால் கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் 8-ந்தேதி முதல் ஓராண்டு காலமாக இயங்கவில்லை.
    • இதனால் அதில் பணிபுரிந்த சுமார் 350 தொழிலாளர்களின் குடும்பங்கள் வருவாய் இன்றி வறுமையில் வாடி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை கூட்டுறவு நூற்பாலை தேசிய தொழிலாளர்கள் சங்கம் பி.எம்.சி தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளர் சிவசங்கரன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருபுவனையில் இயங்கி வந்த ஸ்பின்கோ நிறுவனம் பஞ்சு விலை உயர்வினால் கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் 8-ந்தேதி முதல் ஓராண்டு காலமாக இயங்கவில்லை. இதனால் அதில் பணிபுரிந்த சுமார் 350 தொழிலாளர்களின் குடும்பங்கள் வருவாய் இன்றி வறுமையில் வாடி வருகின்றனர்.

    ஆலையை இயக்க தொழிற்சங்கங்கள் பலகட்ட போராட்டங்கள் நடத்தியும் அரசு எவ்வித நடவடி க்கையும் எடுக்கவில்லை. கமிட்டி அமைப்பதாக கூறிய அரசு இதுவரை அமைக்கவில்லை. மேலும் ஆலையில் பணிபுரிந்த 58 வயதை பூர்த்தி அடைந்த தொழிலாளர்கள் குடும்ப ஓய்வூதியம் பெற தகுதி அடைந்தும், தொழிலா ளர்க ளின் விண்ணப்பங்களை இ.பி.எப் துறைக்கு பரிந்துரை செய்யாமல் நிர்வாகம் உள்ளது.

    இதனால் சுமார் 120 தொழிலாளர்கள் ஓய்வூதியம் நிதியை பெற முடியாமல் உள்ளனர். கூட்டுறவு நிறுவனத்தின் சார்பில் பிடித்தம் செய்து வைத்து ள்ள தொழிலாளர்களின் வைப்பு நிதியை அதிகாரிகள் திருப்பி கொடுப்பதற்கு முயற்சி செய்யாமல், தொழிலாளர்களை தவிக்க விடுகின்றனர்.

    எனவே, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை இ.பி.எப். நிறுவனத்தில் இருந்து, தொழிலாளர்கள் தங்களின் பணத்தை எடுக்க அரசு உடனடியாகத் நடவடி க்கை எடுக்க வேண்டும். நன்றாக இயங்கிக் கொண்டிருந்த கூட்டுறவு நூற்பாலையை ஏதோ சில காரணங்களை காட்டி இழுத்து மூடி உள்ளனர்.

    பணிபுரிந்த தொழிலாளருக்கு சம்பளம் வழங்கப்படவில்லை, செட்டில்மெண்ட் பணம் வழங்கப்படவில்லை, தொழிலாளர்களை ஏமாற்றும் போக்கினை நிர்வாகம் தொடர்ந்து செய்யுமானால், தொழிலா ளர்களை ஒன்று திரட்டி குடும்பத்துடன் பல்வேறு போராட்டங்களை நடத்துவோம் என்று அரசுக்கும், கூட்டுறவுத்துறை நிர்வாகத்திற்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • நெசவாளர் கூலிக்கும் அரசிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
    • மருத்துவ காப்பீட்டுத் திட்டமும் நடை முறையில் இல்லை.


    சென்னிமலை:

    ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவாளர் சம்மே ளன தலைவரும், மாவட்ட தி.மு.க. நெசவாளர் அணி அமைப்பாளருமான ராஜேந்திரன் முதல்-அமைச்சருக்கு அனுப்பி யுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

    கைத்தறி நெசவு தொழில் என்பது நூற்றாண்டு பாரம்பரிய மிக்க அரிய குடிசை தொழில். சிறு தொழிலாகும். தற்சமயம் கைத்தறி நெசவு கூட்டுறவு அமைப்பின் கீழ் அரசை நம்பி மட்டுமே நடந்து வருகிறது.

    தொழில்துறை மாற்றங்கள் மற்றும் நவீன விசைத்தறிகளின் வருகை யால் கைத்தறி நெசவை மெல்ல மெல்ல அழியும் நிலைக்கு கொண்டு சென்று உள்ளது.

    தொழில் துறை மாற்ற ங்கள் ஒருபுறம் இருந்தாலும் அவர்களது உழைப்பிற்கேற்ற ஊதியம் இன்றளவும் கிடைக்க பெறாததும் கைத்தறி நெசவின் அழி விற்கு முக்கிய காரணமாகும்.

    எனவே நெசவாளர்களது உழைப்பிற்கேற்ற ஊதியத்தை பெற்று தர வேண்டியது நம் எல்லோ ருடைய முக்கிய கடமை யாகும். நெசவாளர்களுக்கு கூலியை அரசுதான் வழங்கி வருகிறது.

    நெசவாளர் கூலிக்கும் அரசிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

    நெசவாளர் சங்கங்களில் நிதி ஆயிரத்திலிருந்து தான் கூலி வழங்கபடுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் 10 ஆண்டுகளுக்கு மட்டுமே நெசவாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

    இது மிகவும் வருந்தத்தக்க செயலாகும். நெசவாளர் ஊதியத்திற்கும், அரசிற்கும் எவ்வித தொடர்பும் இல்லாத நிலையில் எதற்காக ஊதிய உயர்வு வழங்கும் நிலையை அரசு தன்கட்டுப் பாட்டில் வைத்து கொண்டு உள்ளது.

    ஊதிய உயர்வை வழங்கும் நிலையை அரசு தன் கட்பாட்டிலிருந்து மாற்றி கூட்டுறவு சங்கங் களின் மண்டல அல்லது சரக அளவில் முடிவு செய்து கொள்ள உரிய அனுமதியை உடனடியாக வழங்கிட தங்களை அன் போடு கேட்டுக் கொள்கிறோம்.

    இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கை கூட்டத் தொடரில் கைத்தறி நெசவா ளர்களுக்கு 20 சதவீத கூலி உயர்வை வழங்க அரசானை வெளியிட ஆவண செய்ய வேண்டும்.

    தற்சமயம் தமிழக கைத்தறி நெசவாளர்களுக்கு எவ்வித மருத்துவ காப்பீட்டுத் திட்டமும் நடை முறையில் இல்லை.

    கடந்த காலங்களில் மாநில அரசின் பங்களிப்போடு மத்திய அரசின் மூலம் ஆண்டு ஒன்றிக்கு ரூ.30 ஆயிரம் வரை மருத்துவ காப்பீட்டுத் திட்டம் நடைமுறையில் இருந்தது.

    தற்சமயம் கைத்தறி நெசவில் ஈடுபட்டு உள்ளவர்கள் 60 வயதை நெருங்கியவர்களும் அதனை தாண்டியவர்களும் உள்ளனர்.

    மருத்துவ செலவினங்களுக்காக மாதம் ஒன்றுக்கு குறைந்தது ரூ.300 வரை செலவு செய்ய வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்.

    இதை அறிந்து தான் தமிழக அரசே நெசவாளர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த நடைமுறை படுத்த கடந்த ஆண்டே அறிவிப்பு வழங்கி இருந்தது.

    எனவே இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரிலாவது புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தி அரசைமட்டும் நம்பி வாழும் தமிழக கைத்தறி நெசவா ளர்கள் குடும்பங் களை காப்பாற்ற வேண்டுகி–றோம்.

    இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.

    • வங்கியாளர்கள் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த கூட்டம் நடைபெற்றது.
    • பண பரிவர்த்தனைக்கு பிரத்யேக கவுண்டர்களை திறப்பதற்கும் முன்னுரிமை அடிப்படையில் சேவை வழங்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக வங்கியாளர்கள் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்ததாவது:

    இந்திய தேர்தல் ஆணை யத்தின் அறிவிப்பின்படி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் வருகின்ற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி நடைபெற உள்ளது.

    இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட தேர்தல் செலவினங்கள் குறித்த தொகுப்பில் வங்கி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகளான தேர்தல் நோக்கத்திற்காக வங்கி கணக்குகளை தொடங்குவதற்காக வங்கிகள் உடனடி சேவையை வழங்கவும்,

    பண பரிவர்த்தனைக்கு பிரத்யேக கவுண்டர்களை திறப்பதற்கும் முன்னுரிமை அடிப்படையில் சேவை வழங்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    வங்கிகளால் அவுட்சோ ர்சிங் செய்யப்பட்ட ஏஜென்சிகள் ஏ.டி.எம்களில் பணம் நிரப்புவதற்கு செல்லும் போது வங்கிகளால் வழங்கப்பட்ட கடிதங்கள்,

    ஆவணங்கள் எடுத்துச் செல்லவும், அவுட்சோர்சிங் பணியாள ர்கள் அந்தந்த ஏெஜன்சி களால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை எடுத்துச் செல்லவும்,

    பணமதிப்பு விபரங்கள் அடங்கிய தொகுப்பினையும் எடுத்துச்செல்லவும் தேர்தல் நடைமுறை விதிகளை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் தேர்தல் நடைமுறை விதிகள் அமுலில் உள்ள நேரத்தில் வழக்கத்திற்கு மாறான, சந்தேகத்திற்கிடமான பண பரிவர்த்தனைகள் வங்கிகள் மூலமாக நடைபெற்றாலோ,

    பல நபர்களின் வங்கி கணக்குகளுக்கு ஆர்.டி.ஜி.எஸ். மூலம் பணப்பரி மாற்றம் நடைபெற்றாலோ, வேட்பாளர்கள் அல்லது அவர்களது மனைவி அல்லது அவரை சார்ந்த வர்களின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்திற்கு அதிகமான ரொக்க டெபாசிட் அல்லது ரொக்கத்தை திரும்ப பெறுதல் போன்ற பண பரிவர்த்தனைகள் இருந்தாலோ,

    வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப் படுவ தற்கான சந்தேகத் திற்கிட மான பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப் பட்டா லோ மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தகவல் அளிக்க அனைத்து வங்கி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் ரூ.10 லட்சத்திற்கு மேலான பணப்பரி வர்த்தனை மேற்கொள்ள ப்படும் போது வருமான வரித்துறை தேர்தல் மேற்பார்வை அலுவலருக்கு தகவல் தெரிவிக்கவும் வங்கி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) கணேஷ், குருநாதன் (கணக்குகள்), தேர்தல் தாசில்தார் சிவகாமி, விஜயகுமார் (தாசில்தார், பேரிடர் மேலாண்மை), வங்கியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கோபிசெட்டிபாளை யத்தில் தமிழ்நாடு அரசு ரேசன் கடை பணியாளர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.
    • ரேசன் கடை பணியாளர்களுக்கு ஒரு மாத சம்பளத்தை தீபாவளி போனசாக வழங்க வேண்டும்.

    கோபி:

    கோபிசெட்டிபாளை யத்தில் தமிழ்நாடு அரசு ரேசன் கடை பணியாளர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் ராஜேந்திரன், துணைத் தலைவர் சதாசிவம் ஆகியோர் தலைமை தாங்கி னர். பெருந்துறை குமார் வரவேற்றார்.

    இதில் அரசு பணியாளர்க ளுக்கு மகப்பேறு விடுப்பு 12 மாதம் வழங்கப்படுவது போல ரேசன் கடை பெண் பணியாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவித்த செயலாளர், மாநில பதிவாளர் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

    தமிழக முதல்-அமைச்சர் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி ரேசன் கடைகளுக்கு தனித்துறை ஏற்படுத்த வேண்டும். கூடுதல் பதிவாளர் சக்தி சரவணன் அறிக்கையில் அரசாணை எண்ணில் பரிந்துரைக்கப்பட்ட பரிந்து ரைகளை அமல்படுத்த வேண்டும்.

    மாநில பதிவாளர் அறிவிக்கப்பட்ட தேர்வு நிலை சிறப்பு நிலை குறித்து கமிட்டி அறிக்கை வெளியிட வேண்டும். ரேசன் கடை பணியாளர்களுக்கு ஒரு மாத சம்பளத்தை தீபாவளி போனசாக வழங்க வேண்டும்.

    நுகர் பொருள் வாணிப கிடங்கு நுகர்வு பணியாளர், ரேசன் கடை பணியாளர்க ளுக்கு ஒரே மாதிரியான வேலை நேரம்அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    ×