search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்களின் பி.எப். பணத்தை வழங்க வேண்டும் -தொழிற்சங்கம் வலியுறுத்தல்
    X

    கோப்பு படம்.

    கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்களின் பி.எப். பணத்தை வழங்க வேண்டும் -தொழிற்சங்கம் வலியுறுத்தல்

    • திருபுவனையில் இயங்கி வந்த ஸ்பின்கோ நிறுவனம் பஞ்சு விலை உயர்வினால் கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் 8-ந்தேதி முதல் ஓராண்டு காலமாக இயங்கவில்லை.
    • இதனால் அதில் பணிபுரிந்த சுமார் 350 தொழிலாளர்களின் குடும்பங்கள் வருவாய் இன்றி வறுமையில் வாடி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை கூட்டுறவு நூற்பாலை தேசிய தொழிலாளர்கள் சங்கம் பி.எம்.சி தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளர் சிவசங்கரன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருபுவனையில் இயங்கி வந்த ஸ்பின்கோ நிறுவனம் பஞ்சு விலை உயர்வினால் கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் 8-ந்தேதி முதல் ஓராண்டு காலமாக இயங்கவில்லை. இதனால் அதில் பணிபுரிந்த சுமார் 350 தொழிலாளர்களின் குடும்பங்கள் வருவாய் இன்றி வறுமையில் வாடி வருகின்றனர்.

    ஆலையை இயக்க தொழிற்சங்கங்கள் பலகட்ட போராட்டங்கள் நடத்தியும் அரசு எவ்வித நடவடி க்கையும் எடுக்கவில்லை. கமிட்டி அமைப்பதாக கூறிய அரசு இதுவரை அமைக்கவில்லை. மேலும் ஆலையில் பணிபுரிந்த 58 வயதை பூர்த்தி அடைந்த தொழிலாளர்கள் குடும்ப ஓய்வூதியம் பெற தகுதி அடைந்தும், தொழிலா ளர்க ளின் விண்ணப்பங்களை இ.பி.எப் துறைக்கு பரிந்துரை செய்யாமல் நிர்வாகம் உள்ளது.

    இதனால் சுமார் 120 தொழிலாளர்கள் ஓய்வூதியம் நிதியை பெற முடியாமல் உள்ளனர். கூட்டுறவு நிறுவனத்தின் சார்பில் பிடித்தம் செய்து வைத்து ள்ள தொழிலாளர்களின் வைப்பு நிதியை அதிகாரிகள் திருப்பி கொடுப்பதற்கு முயற்சி செய்யாமல், தொழிலாளர்களை தவிக்க விடுகின்றனர்.

    எனவே, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை இ.பி.எப். நிறுவனத்தில் இருந்து, தொழிலாளர்கள் தங்களின் பணத்தை எடுக்க அரசு உடனடியாகத் நடவடி க்கை எடுக்க வேண்டும். நன்றாக இயங்கிக் கொண்டிருந்த கூட்டுறவு நூற்பாலையை ஏதோ சில காரணங்களை காட்டி இழுத்து மூடி உள்ளனர்.

    பணிபுரிந்த தொழிலாளருக்கு சம்பளம் வழங்கப்படவில்லை, செட்டில்மெண்ட் பணம் வழங்கப்படவில்லை, தொழிலாளர்களை ஏமாற்றும் போக்கினை நிர்வாகம் தொடர்ந்து செய்யுமானால், தொழிலா ளர்களை ஒன்று திரட்டி குடும்பத்துடன் பல்வேறு போராட்டங்களை நடத்துவோம் என்று அரசுக்கும், கூட்டுறவுத்துறை நிர்வாகத்திற்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×