search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கண்டமங்கலத்தில் சம்பளம் கேட்டு 100 நாள் தொழிலாளர்கள் போராட்டம்
    X

    கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 100 நாள் தொழிலாளர்கள் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.

    கண்டமங்கலத்தில் சம்பளம் கேட்டு 100 நாள் தொழிலாளர்கள் போராட்டம்

    • குரான் பானளயத்திலுள்ளவர்கள் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிசெய்து வருகின்றனர்.
    • 100 நாள் வேலை செய்த தொழிலாளர்களுடன் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகத்திடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் சேஷாங்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட குரான்பாளையம் கிராமம் உள்ளது. இங்குள்ளவர்கள் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிசெய்து வருகின்றனர். அதன்படி கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் வேலை செய்த 9 நாட்களுக்கான சம்பளம் வழங்கப்படவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இதை கண்டித்தும், அனை வருக்கும் ஜாப் கார்டு வழங்க கோரியும் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் முன்பு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.

    போராட்டத்தில் ஈடுபட்டவ ர்களுடன் கண்டமங்கலம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் கண்டமங்கலம் ஒன்றிய செயலாளர் குப்புசாமி, மாவட்ட குழு உறுப்பினர் சவுந்தர்ராஜன், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேஸ்வரி மற்றும் 100 நாள் வேலை செய்த தொழிலாளர்களுடன் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகத்திடம் கோரிக்கை மனு அளித்தனர்.க

    Next Story
    ×