search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழங்க வேண்டும்"

    • தமிழகத்தில் 6 லட்சம் விசைத்தறி மூலம் 30 லட்சம் குடும்பங்கள் வாழ்வாதாரம் பெறுகின்றனர்.
    • 30 சதவீத கூலி உயர்வாக, வேட்டிக்கு, 24ல் இருந்து 7.20 ரூபாய் உயர்ந்தி, 31.20 ரூபாயும், சேலைக்கு, 43 ரூபாயில் இருந்து 12.90 ரூபாய் உயர்த்தி 55.91 ரூபாயாகவும் வழங்க வேண்டும்.

    ஈரோடு:

    தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் டி.எஸ்.ஏ.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி யிருப்பதா வது:-

    தமிழகத்தில் 6 லட்சம் விசைத்தறி மூலம் 30 லட்சம் குடும்பங்கள் வாழ்வாதாரம் பெறுகின்றனர். அரசின் இலவச வேட்டி, சேலை, 228 விசைத்தறி கூட்டுறவு நெசவாளர் தொடக்க சங்கம் மூலம் 68 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகளுக்கு பகிர்ந்து வழங்கப்படுகிறது. இதன் மூலம், பல லட்சம் நெசவா ளர்கள் வேலை பெறுகின்ற னர்.

    கடந்த, 2010–-11ல் வேட்டிக்கு 16 ரூபாய், சேலைக்கு 28.16 ரூபாய் கூலி வழங்கினர். 2011–12ல் வேட்டிக்கு–18.40 ரூபாய், சேலைக்கு–31.68 ரூபாய், 2015–-16-ல் வேட்டிக்கு– 21.60 ரூபாய், சேலைக்கு–39.27 ரூபாய், 2019ல் வேட்டிக்கு–24 ரூபாய், சேலைக்கு–43.01 ரூபாய் என உயர்த்தினர்.

    அதன்பின் கூலி உயரவில்லை. கடந்த, 2010 முதல், 13 ஆண்டில் வேட்டி க்கு 8 ரூபாயும், சேலைக்கு 14.85 ரூபாயும் உயர்ந்துள்ளது. அதேநேரம் கடந்த, 4 ஆண்டில் தொழிலாளர் ஊதியம், குடோன் வாடகை, மின் கட்டணம், விசைத்தறி உதிரி பாகங்கள், போக்கு வரத்து செலவு, பஸ் கட்டணம், எலக்டரானிக் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.

    எனவே 30 சதவீத கூலி உயர்வாக, வேட்டிக்கு, 24ல் இருந்து 7.20 ரூபாய் உயர்ந்தி, 31.20 ரூபாயும், சேலைக்கு, 43 ரூபாயில் இருந்து 12.90 ரூபாய் உயர்த்தி 55.91 ரூபாயாகவும் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • சிறுதானியங்களை கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்.
    • காட்டு பன்றிகளை சுட்டுப்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட வன அலுவலகத்தில் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஸ் பிரபு தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

    இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஏ.எம்.முனுசாமி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க சத்தி மலை வட்டார செயலாளர் பி.சடையலிங்கம், பொருளாளர் பி.சடையப்பன், பர்கூர் மலை வட்டார செயலாளர் எஸ்.வி.மாரிமுத்து உள்பட பலர் பங்கேற்றனர்.

    குத்தியாலத்தூர், குன்றி, கூத்தம்பாளையம் ஆகிய பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட வனப்பகுதியில் காட்டு யானை ஒன்று மோட்டார் சைக்கிளில் சென்ற 4 பேரை மிதித்து கொன்றது.

    இந்த யானையை வேறு வனப்பகுதியில் கொண்டு சென்று விட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபற்றி பல முறை மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    கடம்பூர் வனச்சரகத்தில் குன்றி மலை கிராமத்தை சேர்ந்த பொம்மேகவுடர், சித்துமரி ஆகிய 2 பேரும் வன விலங்கால் கொல்லப்பட்டனர்.

    இதுபற்றியும் நடவடிக்கை எடுத்து இழப்பீடு வழங்கவும், மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

    வனப்பகுதி அதனையொட்டிய பகுதியில் காட்டு விலங்குகளான யானை, காட்டு பன்றி, மான் போன்ற விலங்கால் சேதமான பயிர்களுக்கு இழப்பீடு கேட்டு, மனு வழங்கியும் நிவாரணம் வழங்கப்படவில்லை.

    தமிழக அரசு சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்கும் என சட்டசபையில் அறிவித்தனர். இத்திட்டத்தை ஈரோடு மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் செயல்படுத்த வேண்டும்.

    வனப்பகுதியில் சேகரிக்கப்படும் சிறுதானியங்களை கொள்முதல் செய்ய அரசு கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்.

    வனத்தையும், விவசாய பயிர்களையும் அழிக்கும் காட்டு பன்றிகளை சுட கேரளா அரசு அனுமதி வழங்கியது போல தமிழகத்திலும் காட்டு பன்றிகளை சுட்டுப்பிடிக்க மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

    பின்னர் வனத்துறை அலுவலர்கள் பேசுகையில், ''அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகளை கண்காணித்து வழக்கு பதிவு செய்யப்படும்.

    போக்குவரத்து துறை சார்பில் நடவடிக்கைக்கு ஆவணம் செய்யப்படும். வன விலங்குகளால் பாதிக்கப்படும் பயிர் சேதத்துக்கு இழப்பீடு உரிய காலத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றனர்.

    • நெசவாளர் கூலிக்கும் அரசிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
    • மருத்துவ காப்பீட்டுத் திட்டமும் நடை முறையில் இல்லை.


    சென்னிமலை:

    ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவாளர் சம்மே ளன தலைவரும், மாவட்ட தி.மு.க. நெசவாளர் அணி அமைப்பாளருமான ராஜேந்திரன் முதல்-அமைச்சருக்கு அனுப்பி யுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

    கைத்தறி நெசவு தொழில் என்பது நூற்றாண்டு பாரம்பரிய மிக்க அரிய குடிசை தொழில். சிறு தொழிலாகும். தற்சமயம் கைத்தறி நெசவு கூட்டுறவு அமைப்பின் கீழ் அரசை நம்பி மட்டுமே நடந்து வருகிறது.

    தொழில்துறை மாற்றங்கள் மற்றும் நவீன விசைத்தறிகளின் வருகை யால் கைத்தறி நெசவை மெல்ல மெல்ல அழியும் நிலைக்கு கொண்டு சென்று உள்ளது.

    தொழில் துறை மாற்ற ங்கள் ஒருபுறம் இருந்தாலும் அவர்களது உழைப்பிற்கேற்ற ஊதியம் இன்றளவும் கிடைக்க பெறாததும் கைத்தறி நெசவின் அழி விற்கு முக்கிய காரணமாகும்.

    எனவே நெசவாளர்களது உழைப்பிற்கேற்ற ஊதியத்தை பெற்று தர வேண்டியது நம் எல்லோ ருடைய முக்கிய கடமை யாகும். நெசவாளர்களுக்கு கூலியை அரசுதான் வழங்கி வருகிறது.

    நெசவாளர் கூலிக்கும் அரசிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

    நெசவாளர் சங்கங்களில் நிதி ஆயிரத்திலிருந்து தான் கூலி வழங்கபடுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் 10 ஆண்டுகளுக்கு மட்டுமே நெசவாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

    இது மிகவும் வருந்தத்தக்க செயலாகும். நெசவாளர் ஊதியத்திற்கும், அரசிற்கும் எவ்வித தொடர்பும் இல்லாத நிலையில் எதற்காக ஊதிய உயர்வு வழங்கும் நிலையை அரசு தன்கட்டுப் பாட்டில் வைத்து கொண்டு உள்ளது.

    ஊதிய உயர்வை வழங்கும் நிலையை அரசு தன் கட்பாட்டிலிருந்து மாற்றி கூட்டுறவு சங்கங் களின் மண்டல அல்லது சரக அளவில் முடிவு செய்து கொள்ள உரிய அனுமதியை உடனடியாக வழங்கிட தங்களை அன் போடு கேட்டுக் கொள்கிறோம்.

    இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கை கூட்டத் தொடரில் கைத்தறி நெசவா ளர்களுக்கு 20 சதவீத கூலி உயர்வை வழங்க அரசானை வெளியிட ஆவண செய்ய வேண்டும்.

    தற்சமயம் தமிழக கைத்தறி நெசவாளர்களுக்கு எவ்வித மருத்துவ காப்பீட்டுத் திட்டமும் நடை முறையில் இல்லை.

    கடந்த காலங்களில் மாநில அரசின் பங்களிப்போடு மத்திய அரசின் மூலம் ஆண்டு ஒன்றிக்கு ரூ.30 ஆயிரம் வரை மருத்துவ காப்பீட்டுத் திட்டம் நடைமுறையில் இருந்தது.

    தற்சமயம் கைத்தறி நெசவில் ஈடுபட்டு உள்ளவர்கள் 60 வயதை நெருங்கியவர்களும் அதனை தாண்டியவர்களும் உள்ளனர்.

    மருத்துவ செலவினங்களுக்காக மாதம் ஒன்றுக்கு குறைந்தது ரூ.300 வரை செலவு செய்ய வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்.

    இதை அறிந்து தான் தமிழக அரசே நெசவாளர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த நடைமுறை படுத்த கடந்த ஆண்டே அறிவிப்பு வழங்கி இருந்தது.

    எனவே இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரிலாவது புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தி அரசைமட்டும் நம்பி வாழும் தமிழக கைத்தறி நெசவா ளர்கள் குடும்பங் களை காப்பாற்ற வேண்டுகி–றோம்.

    இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.

    • தனியார் நிறுவனத்தில், நிதி நிறுவனத்தின் நிதி உதவியுடன் சிறிய வகை டிராக்டர் வாங்கினார்.
    • ஆனால் பல ஆண்டுகள் கடந்தும் உரிய பதிவு செய்யப்பட்ட ஆர்.சி புத்தகமோ, அதன் நகலோ எதுவும் வழங்கப்படவில்லை.

    நாமக்கல்:

    நாமக்கல் நகரில் வசிப்பவர் வீரமணி. இவரது மனைவி பத்மாவதி. இவர் தனியார் நிறுவனத்தில், நிதி நிறுவனத்தின் நிதி உதவியுடன் சிறிய வகை டிராக்டர் வாங்கினார். நுகர்வோரின் பங்கு தொகையாக ரூ.57 ஆயிரத்து 381 சி.ஏ.ஐ நிறுவனத்திற்கு காசோலை மூலம் செலுத்தப்பட்டது.

    மாதத் தவணைத் தொகை ரூ.6,470 வீதம் 12 காசோ லைகளை பின் தேதியிட்டு பெற்றுக் கொண்ட நிதி நிறுவனம், பத்மாவதி கணவர் வீரமணியிடம் 10 காசோலைகளை பின் தேதியிட்டு பெற்றுக் கொண்டனர்.

    2011 ஜனவரியில் டிராக்டர் கொடுத்தபோது எவ்வித ரசீதும் வழங்கவில்லை. பலமுறை நேரில் சென்று ஆவணங்களை கேட்ட போது அரசு இந்த டிராக்டருக்கு ரூ.80 ஆயிரம் மானியம் பெற்று கணக்கில் வரவு வைத்துக்கொண்டு பின்னர் ஆவணங்களை தருவதாக நிதி நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

    ஆனால் பல ஆண்டுகள் கடந்தும் உரிய பதிவு செய்யப்பட்ட ஆர்.சி புத்தகமோ, அதன் நகலோ எதுவும் வழங்கப்–படவில்லை. ஆர்.சி என்டாஸ்மெண்ட் செலவுக்கு ரூ.3000 பெற்றுக் கொண்டு அதற்கு ரசீதும் கொடுக்கவில்லை.

    அரசு மானியம் பெற்று தருவதாக கூறி நுகர்வோரின் நில ஆவணங்களை பெற்றுக்கொண்டு எவ்வித நடவடிக்கையும் நிதி நிறுவனம் எடுக்கவில்லை. கடன் முழுவதும் கட்டி முடித்தும் ஆர்.சி புத்தகத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இது குறித்து 2013-ம் ஆண்டு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் நாமக்கல் பயனீட்டாளர் சங்கம் மூலம் வழக்கு தொடரப்பட்டது.

    விசாரணை நடத்திய நுகர்வோர் ஆணையம் எதிர் முறையீட்டாளர்கள் இருவரும் சேர்ந்து முறையீட்டாளருக்கு ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும், மன உளைச்சல் இழப்பீடாக ரூ.50,000, வழக்கு செலவாக ரூ.10,000 வழங்கவும் உத்தரவிட்டது.

    • கோபிசெட்டிபாளை யத்தில் தமிழ்நாடு அரசு ரேசன் கடை பணியாளர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.
    • ரேசன் கடை பணியாளர்களுக்கு ஒரு மாத சம்பளத்தை தீபாவளி போனசாக வழங்க வேண்டும்.

    கோபி:

    கோபிசெட்டிபாளை யத்தில் தமிழ்நாடு அரசு ரேசன் கடை பணியாளர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் ராஜேந்திரன், துணைத் தலைவர் சதாசிவம் ஆகியோர் தலைமை தாங்கி னர். பெருந்துறை குமார் வரவேற்றார்.

    இதில் அரசு பணியாளர்க ளுக்கு மகப்பேறு விடுப்பு 12 மாதம் வழங்கப்படுவது போல ரேசன் கடை பெண் பணியாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவித்த செயலாளர், மாநில பதிவாளர் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

    தமிழக முதல்-அமைச்சர் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி ரேசன் கடைகளுக்கு தனித்துறை ஏற்படுத்த வேண்டும். கூடுதல் பதிவாளர் சக்தி சரவணன் அறிக்கையில் அரசாணை எண்ணில் பரிந்துரைக்கப்பட்ட பரிந்து ரைகளை அமல்படுத்த வேண்டும்.

    மாநில பதிவாளர் அறிவிக்கப்பட்ட தேர்வு நிலை சிறப்பு நிலை குறித்து கமிட்டி அறிக்கை வெளியிட வேண்டும். ரேசன் கடை பணியாளர்களுக்கு ஒரு மாத சம்பளத்தை தீபாவளி போனசாக வழங்க வேண்டும்.

    நுகர் பொருள் வாணிப கிடங்கு நுகர்வு பணியாளர், ரேசன் கடை பணியாளர்க ளுக்கு ஒரே மாதிரியான வேலை நேரம்அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    • கைத்தறி நெசவாளர்கள் இன்றளவும் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்க பெறாமல் சிரம நிலையிலேயே வாழ்க்கை உள்ளது.
    • நெசவாளர் பசுமைவீட்டு திட்டத்தையும் அமல்படுத்தி நெசவாளர் நலன் காக்க வேண்டும்

    சென்னிமலை:

    கைத்தறி நெசவாளர்களுக்கு உற்பத்திக்கு முந்தைய செலவின தொகையினை அதிகரித்து வழங்க வேண்டும் என ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவாளர் சம்மேளனத்தின் தலைவரும், தி.மு.க., மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளருமான ராஜேந்திரன் முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

    அதில் கூறியிருப்பதாவது:

    கைத்தறி நெசவாளர்கள் இன்றளவும் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்க பெறாமல் சிரம நிலையிலேயே வாழ்க்கை உள்ளது. நெசவாளர்களுக்கு உற்பத்திக்கு முந்தைய செலவினங்களுக்கான தொகை 2012-ம் ஆண்டு வழங்கபட்டது.

    கடந்த 10 ஆண்டுகளாக உற்பத்திக்கு முந்தைய செலவினதொகை பலமடங்கு உயர்ந்துவிட்ட நிலையில் உடனடியாக நெசவாளர்களுக்கு குறைந்தது 50 சதவீதம் அளவிற்கு உற்பத்திக்கு முந்தைய செலவினதொகை உயர்த்தி வழங்க ஆவண செய்ய வேண்டும்.

    உற்பத்திக்கு முந்தைய செலவின தொகை சங்கங்களின் நிதி ஆதாரத்திலேயே வழங்கபடுவதால் இதன்மூலம் அரசிற்கு எவ்வித நிதிச்செலவும் இல்லை என்பதினையும் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

    தற்சமயம் கைத்தறி நெசவாளர்களுக்கு எந்தவொரு மருத்துவ காப்பீட்டுத் திட்டமும் நடைமுறையில் இல்லை. நெசவு தொழிலில் ஈடுபட்டுள்ள பெரும்பான்மையோருக்கு சர்க்கரை வியாதி மற்றும் ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் உள்ளது. குறைந்தது மாதம் ரூ. 500 முதல் ரூ. 1000 வரை மருத்துவ செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    எனவே உடனடியாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். நெசவாளர் பசுமைவீட்டு திட்டத்தையும் அமல்படுத்தி நெசவாளர் நலன் காக்க வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

    ×