search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rescue"

    • சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி இன்றுடன்11 நாட்களாக நடைபெற்று வருகிறது.
    • இதுவரை சுமார் 46.8 மீட்டர் வரை துளையிடப்பட்டுள்ளது.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர்காஷி என்ற இடத்தில் சுரங்கம் தோண்டும் பணியில் 41 தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் சுரங்கத்தின் ஒரு பகுதி மூடியது. இதனால் 41 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டனர்.

    அவர்களை மீட்கும் பணி இன்றுடன்11 நாட்களாக நடைபெற்று வருகிறது.

    சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களுக்கு தப்பிக்கும் பாதையைத் தயார் செய்வதற்காக அமெரிக்க ஆஜர் இயந்திரம் மூலம் துளையிடும் பணி மீண்டும் நேற்று தொடங்கப்பட்டது.

    இன்னும் சில மணி நேரங்களில் சிக்கியுள்ளவர்களை மீட்டுவிடலாம் என்றும் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    துளையிடும் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, உள்ளே சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

    இதுவரை சுமார் 46.8 மீட்டர் வரை துளையிடப்பட்ட நிலையில், மீட்பு பணி மீண்டும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    • நள்ளிரவு வனக்குழுவினர் ரோந்து சென்றனர். அப்போது யானை குட்டி குட்டைக்குள் சிக்கி இருப்பதை பார்த்தனர்.
    • தொடர்ந்து வனத்துறையினர் யானை குட்டியை கண்காணித்து வருகிறார்கள்.

    கோவை:

    கோவை மதுக்கரை வன சரகத்துக்குட்பட்ட மங்களபாளையத்தில் குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.

    நள்ளிரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை கூட்டம் இந்த தோட்ட பகுதிக்கு வந்தது. அப்போது 4 வயது ஆண் யானை குட்டி தோட்டத்தில் உள்ள விவசாய குட்டையில் தவறி விழுந்தது. இதில் வெளியே வரமுடியாமல் யானை குட்டி உயிருக்கு போராடியது. நள்ளிரவு வனக்குழுவினர் ரோந்து சென்றனர். அப்போது யானை குட்டி குட்டைக்குள் சிக்கி இருப்பதை பார்த்தனர். உடனடியாக அவர் இது குறித்து வன அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    பின்னர் வனச்சரக அலுவலர் தலைமையில் ஜே.சி.பி. எந்திரம் உதவியுடன் தண்ணீர் நிரம்பி இருந்த குட்டை மட்டம் செய்யப்பட்டு யானை குட்டியை குட்டையில் இருந்து வெளியேற்றினர். பின்னர் பாதுகாப்பாக வனப்பகுதியில் விட்டனர். தொடர்ந்து வனத்துறையினர் யானை குட்டியை கண்காணித்து வருகிறார்கள்.

    • படுகாயங்களுடன் கிடந்தவரை தீயணைப்பு படையினர் கயிறு கட்டி மீட்டனர்
    • அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் குன்னூர்- மேட்டுப்பாளை யம் மலைபாதையில் பல்வேறு இடங்களில் புதிதாக நீர்வீழ்ச்சிகள் உருவாகி உள்ளன. அவற்றில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    குன்னூர் அடுத்த சேலாஸ் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது46). கூலித்தொழிலாளி. அவர் குரும்பாடி அருகே உள்ள அருவியில் குளிக்க சென்றார். அப்போது அவர் கால் தவறி 100 அடி பள்ளத்தாக்கில் விழுந்தார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் இதுகுறித்து போலீசாருக்கு உடனடியாக தகவல் அளித்தனர். தகவலின்பே ரில் போலீசார் மற்றும் தீயனைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் 100 அடி ஆழம் உடைய பள்ளத்தாக்கில் கயிறு கட்டி கீழே இறங்கி சென்று, 4 மணி நேரம் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது ரவிச்சந்திரன் பள்ளத்தாக்கின் மத்தியில் தலை மற்றும் கால்களில் படுகாயங்களுடன் கிடப்பதை பார்த்தனர்.

    உடனடியாக அவரை மீட்டு மேலே கொண்டு வந்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் அங்குள்ள அரசு மருத்துவம னையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • சேலம் மாவட்டம் ஏற்காடு எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி. இவர் இன்று காலை சுமார் 9 மணியளவில் வீட்டின் அருகில் உள்ள தனக்கு சொந்தமான கிணற்றை சுற்றி இருந்த முட்புதர்களை வெட்டி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
    • அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து முதல் உதவி செய்யப்பட்டு ஏற்காடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி (55). இவர் இன்று காலை சுமார் 9 மணியளவில் வீட்டின் அருகில் உள்ள தனக்கு சொந்தமான கிணற்றை சுற்றி இருந்த முட்புதர்களை வெட்டி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். கடந்த 2 நாட்களாக பெய்து வந்த மழையினால் கிணற்றை சுற்றி சேறும், சகதியுமாக இருந்துள்ளது.

    இதனால் எதிர்பாராத விதமாக கால் வழுக்கி 20 அடி ஆழம் உள்ள அந்த கிணற்றில் செல்வமணி தவறி விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், போலீசார் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் செல்வகுமாரை உயிருடன் மீட்டனர். அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து முதல் உதவி செய்யப்பட்டு ஏற்காடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    • உடனடியாக சுங்கத்துறை அதிகாரிகள் வனத்துறை அதிகாரிகளை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
    • விசாரணைக்கு வராத நபர் குறித்தும் சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    கோவை:

    சிங்கப்பூரில் இருந்து விமானம் ஒன்று கடந்த 6-ந் தேதி கோவை விமான நிலையம் வந்தது. பயணிகளின் உடைமைகளை சோதனை செய்யும் இடத்தில் 3 பெட்டிகள் அனாதையாக இருந்தது. அந்த பெட்டிகளுக்கு யாரும் உரிமை கோரவில்லை.

    ஒருநாள் முழுவதும் 3 பெட்டிகளும் அங்கேயே இருந்ததால் விமான நிலைய அதிகாரிகள் சந்தேகம் அடைந்து 3 பெட்டியை யார் எடுத்து வந்தார்கள் என்று கண்காணிப்பு கேமிரா மூலம் சோதனை செய்தனர்.

    அப்போது 3 நபர்கள் பெட்டியை எடுத்து வந்து வைப்பதும், அவர்கள் சிங்கப்பூரில் இருந்து வந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு அவர்களை விமான நிலையத்திற்கு வரவழைத்தனர். 3 பேரில் 2 பேர் டொமினிக், ராமசாமி ஆகியோர் விசாரணைக்கு வந்தனர். ஒரு நபர் வரவில்லை.

    இதுகுறித்து விசாரணை மேற்கண்டபோது பெட்டியில் சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட வெளிநாட்டு உயிரினங்களான 11 ஆயிரம் ஆமைகள், சிலந்தி வகைகள், அரியவகை பாம்புகள் இருப்பது தெரியவந்தது. உடனடியாக சுங்கத்துறை அதிகாரிகள் வனத்துறை அதிகாரிகளை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் அரியவகை வெளிநாட்டு விலங்குகள் என்பதால் மீண்டும் சிங்கப்பூருக்கு அனுப்ப சுங்கத்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர். விசாரணைக்கு வராத நபர் குறித்தும் சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • மரத்தின் கிளையை பிடித்து மேடான பகுதியில் நின்றதால் தப்பினார்.
    • தீயணைப்பு படையினர் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்

    கவுண்டம்பாளையம்,

    கோவை இடிகரை அத்திபாளையம் பகுதியில் கவுசிகாநதி பெரும்பள்ளம் செல்கிறது. இந்த பள்ளத்தின் நடுவே பொதுமக்கள் நடந்து செல்ல மற்றும் போக்குவரத்து வாகனங்களில் செல்வதற்கு வசதியாக தரைப்பாலமும் உள்ளது.

    இன்று அதிகாலை பெய்த மழை காரணமாக இந்த பள்ளத்தில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு, தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் தரைப்பாலம் மூழ்கியது.அப்போது அத்திபாளையத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டார். தரைப்பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.

    அவரது சத்தம்கேட்டும் அக்கம்பக்கத்தினர் சம்பவம் குறித்து பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து, தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர் மரத்தின் கிளையை பிடித்து மேடான பகுதியில் நின்று கொண்டிருந்தார்.

    தீயணைப்பு படையினர் விரைந்து சென்று அவரை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.

    • கந்தர்வகோட்டை குப்பையன்பட்டியில் கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு
    • 40 அடி கழிவுநீர் கிடக்கும், கிணற்றில் தவறி விழுந்து

    கந்தர்வகோட்டை 

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த குப்பையன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரெங்கராஜ். இவருக்கு சொந்தமான நிறைமாத பசுமாடு மேய்ச்சலுக்கு சென்ற இடத்தில் 40 அடி கழிவுநீர் கிடக்கும், கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடியது. தகவல் அறிந்த கந்தர்வகோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் அப்துல் ரஹ்மான் தலைமையில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், பசுமாட்டை போராடி உயிருடன் மீட்டனர்.

    • டி.சி. கொடுத்து விடுவேன் என தலைமை ஆசிரியர் மிரட்டியதால் வேதனை
    • பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டனர்

    கோவை,

    கோவை மதுக்கரை அருகே உள்ள குரும்பபாளையம் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் சக்திபாபு. இவரது மகன் யோகேஷ் (வயது 13).

    திருவள்ளுவர் வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் லோகேஷ் (13). கல்யாண சுந்தரனார் வீதியை சேர்ந்தவர் மயில்சாமி. இவரது மகன் அஸ்வந்த் (13), வீரமாத்தி அம்மன் கோவில் விதியை சேர்ந்தவர் சுரேஷ்பாபு. இவரது மகன் ரோகித் (13). இவர்கள் 4 பேரும் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து பள்ளியில் தலைமை ஆசிரியர் மாணவர்கள் 4 பேரையும் அழைத்து டி.சி. கொடுத்து விடுவேன் என மிரட்டி உள்ளார்.

    இதனால் பெற்றோருக்கு பயந்த மாணவர்கள் 4 பேரும் வீட்டிற்கு செல்லாமல் இருந்தனர். மேலும் அவர்கள் ஊட்டிக்கு செல்லலாம் என முடிவு செய்தனர். அதன்படி கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு புறப்பட்டு சென்றனர். மாணவர்கள் பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சியடைந்த அவர்களின் பெற்றோர் மதுக்கரை போலீசில் மாயமான தங்களது மகன்களை கண்டுபிடித்து தரும்படி புகார் செய்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர்களை தேடி வந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் மாணவர்கள் ஊட்டி செல்வதற்காக மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் நிற்பது தெரிய வந்தது. பின்னர் மதுக்கரை போலீசார் இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் விரைந்து சென்று மாணவர்கள் 4 பேரையும் மீட்டனர். பின்னர் அவர்களை அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    • சாக்கடை கால்வாயில் அதிகாலையில் நாய் ஒன்று விழுந்துள்ளது
    • தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து நாயை உயிருடன் மீட்டனர்

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வாலறைக்கேட் அருகே பண்ணக்காடு பகுதியில் அதிக ஆழமுள்ள சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த சாக்கடை கால்வாயில் அதிகாலையில் நாய் ஒன்று விழுந்துள்ளது. பின்னர் சாக்கடையில் இருந்து வெளியே வரமுடியாததால் தொடர்ந்து சத்தமிட்டு கொண்டே இருந்தது. இதை பார்த்த அந்த வழியாக சென்ற கணேஷ் புவன் என்பவர் திருச்செங்கோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து தீயணைப்பு அலுவலர் குணசேகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சதீஷ்குமார், ஹரிஹரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து நாயை உயிருடன் மீட்டனர். இதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறை வீரர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

    • பூமாண்டம்பாளையம் பகுதியில் கிணற்றில் விழுந்த நாய் உயிருடன் மீட்பு
    • இவர் வளர்த்த நாய் அருகில் இருந்த 70 அடி கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

    வேலாயுதம் பாளையம், 

    கரூர் மாவட்டம் பூமாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 50). இவர் வளர்த்த நாய் அருகில் இருந்த 70 அடி கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதுகுறித்து கந்தசாமி வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று நாயை கயிற்றால் கட்டி பத்திரமாக உயிருடன் மீட்டனர்.

    • சிவஹரி (14). பாண்டியன் நகரில் உள்ள தனியார் பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • வீட்டுப்பாடம் எழுதாததால், பள்ளி செல்ல பயந்து, வீட்டுக்கு தெரியாமல் உறவினர் வீட்டுக்கு சென்றதாக போலீசார் கூறினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் போயம்பாளையம், நந்தா நகரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் சிவஹரி (14). பாண்டியன் நகரில் உள்ள தனியார் பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வருகிறார். சிவஹரி நேற்று அதிகாலை கடைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்திலும் உறவினர் வீடுகளிலும் தேடிப் பார்த்தனர் ஆனால் எங்கும் சிறுவனை காணவில்லை. பின்னர் இது குறித்து அனுப்பர்பாளையம் போலீசில் புகார் செய்தனர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான சிறுவனை தேடி வந்தனர்.

    போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் ஈரோடு மாவட்டம், திண்டலிலுள்ள உறவினர் வீட்டுக்கு சிறுவன் சென்றது தெரியவந்தது. திண்டல் சென்று சிறுவனை அழைத்து வந்த போலீசார் உரிய அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்

    வீட்டுப்பாடம் எழுதாததால், பள்ளி செல்ல பயந்து, வீட்டுக்கு தெரியாமல் உறவினர் வீட்டுக்கு சென்றதாக போலீசார் கூறினர்.

    • ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி முட்புதரில் சிக்கிய மலைப்பாம்பை பத்திரமாக மீட்டார்.
    • பிடிபட்ட மலைப்பாம்பு சுமார் 8 அடி நீளம் இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் அன்னூரில் இருந்து சத்தி செல்லும் சாலையில் பட்டறை அருகே மலைப்பாம்பு ஒன்று சாலையோர முட்புதரில் சிக்கி தவிப்பதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் பாம்பு பிடி வீரர் சிரஞ்சீவிக்கு தகவல் அளித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாம்பு பிடி வீரர் சிரஞ்சீவி ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி முட்புதரில் சிக்கிய மலைப்பாம்பை பத்திரமாக மீட்டார்.

    இதுகுறித்து சிறுமுகை வனத்துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். வனத்துறையினரும் அங்கு வந்த மலைப்பாம்பினை மீட்டு பத்திரமாக அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர்.

    பிடிபட்ட மலைப்பாம்பு சுமார் 8 அடி நீளம் இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    ×