என் மலர்
நீங்கள் தேடியது "Tunnel collapse"
- தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையை சேர்ந்த சுமார் 160-க்கும் மேற்பட்டோர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- எல்லை சாலை அமைப்பு மற்றும் இந்தோ-திபெத் எல்லை போலீஸ் படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் இருந்து யமுனோத்ரி தாம் நகருக்கு யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக சில்க்யாரா- தண்டல்ஹன் பகுதியை இணைக்கும் விதமாக சுரங்கப்பாதை அமைக்கும் திட்டமும் நடைபெற்று வருகிறது.
சார்தாம் சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக, உத்தர்காசியில் இருந்து யமுனோத்ரி தாம் வரையிலான 26 கிலோ மீட்டர் தூரத்தை குறைக்கும் நோக்கத்தில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.
நேற்று அதிகாலை இந்த சுரங்கப்பாதையில் பணிகள் மும்முரமாக நடைபெற்று கொண்டிருந்தது. சுமார் 40 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த நிலையில், சுரங்க பாதையில் சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு தொடக்க பகுதி திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
இதனால் சுரங்கத்திற்குள் வேலை செய்த 40 தொழிலாளர்களும் சிக்கி கொண்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். மேலும், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினரும் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த விபத்தில் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரம் சுரங்கப்பாதையில் சிக்கிய 40 தொழிலாளர்களின் கதி என்ன? என்பது தெரியாமல் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுத வண்ணம் உள்ளனர்.
இடிபாடுகள் அதிக அளவில் இருப்பதால் மீட்பு பணிகளில் கடும் சிரமம் நிலவுகிறது. இதனால் 15 மணிநேரத்திற்கு மேலாகியும் நேற்று வரை ஒரு தொழிலாளரை கூட மீட்க முடியவில்லை.
இதைத்தொடர்ந்து இன்று 2-வது நாளாக மீட்பு பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையை சேர்ந்த சுமார் 160-க்கும் மேற்பட்டோர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதவிர எல்லை சாலை அமைப்பு மற்றும் இந்தோ-திபெத் எல்லை போலீஸ் படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சுரங்கப்பாதை விபத்தில் சிக்கிய தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படாமல் தடுக்கும் வகையில் ஆக்சிஜன் குழாய் மூலம் ஆக்சிஜன் மற்றும் அவர்களுக்கு உணவு கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் ஜே.சி.பி., துளையிடும் கருவிகள் மூலமாகவும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை உத்தர்காசி கலெக்டர் அபிஷேக் ருஹேலா மேற்பார்வையிட்டு வருகிறார்.
மீட்பு பணிகள் தொடர்பாக அவருடன் உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர்சிங் தாமி பேசி உள்ளார்.
மீட்பு பணிகள் குறித்து முதலமைச்சர் புஷ்கர்சிங் தாமி கூறுகையில், "சம்பவம் குறித்து தகவல் அறிந்த உடனேயே அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசி வருகிறேன். தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்தில் உள்ளனர்.
விபத்தில் சிக்கிய தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக திரும்பி வர இறைவனை பிரார்த்திக்கிறோம்" என்றார்.
- சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி இன்றுடன்11 நாட்களாக நடைபெற்று வருகிறது.
- இதுவரை சுமார் 46.8 மீட்டர் வரை துளையிடப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர்காஷி என்ற இடத்தில் சுரங்கம் தோண்டும் பணியில் 41 தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் சுரங்கத்தின் ஒரு பகுதி மூடியது. இதனால் 41 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டனர்.
அவர்களை மீட்கும் பணி இன்றுடன்11 நாட்களாக நடைபெற்று வருகிறது.
சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களுக்கு தப்பிக்கும் பாதையைத் தயார் செய்வதற்காக அமெரிக்க ஆஜர் இயந்திரம் மூலம் துளையிடும் பணி மீண்டும் நேற்று தொடங்கப்பட்டது.
இன்னும் சில மணி நேரங்களில் சிக்கியுள்ளவர்களை மீட்டுவிடலாம் என்றும் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
துளையிடும் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, உள்ளே சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இதுவரை சுமார் 46.8 மீட்டர் வரை துளையிடப்பட்ட நிலையில், மீட்பு பணி மீண்டும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
- இரண்டு மீட்புக் குழுக்கள் நிலைமையை ஆராய்வதற்கு சுரங்கப் பாதைக்குள் சென்றுள்ளனர்.
- பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவு.
தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் அம்ராபாத்தில் சுரங்கப்பாதை ஒன்று இடிந்து விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விபத்தில், பணியில் இருந்த தொழிலாளர்கள் 30 பேர் உள்ளே சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் சிக்கியுள்ளவர்களை மீட்டு வருகின்றனர்.
நாகர்கர்னூல் மாவட்ட கலெக்டர், தீயணைப்புத் துறை அதிகாரிகள் மற்றும் மீட்பு படையினர் துரிதமாக மீட்பு பணி மேற்கொள்ள வேண்டும் என தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவுறுத்தி உள்ளார்.
மேலும் அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
விபத்து குறித்து நாகர்கர்னூல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வைபவ் கைக்வாட் கூறியதாவது:-
ஸ்ரீசைலம் நீர்தேக்கத்துக்கு அருகில் உள்ள சுரங்கப் பாதையில் இன்று வழக்கமான பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது, அதன் ஒரு பகுதி கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
நீர் பாசனத் திட்டத்தை மேற்கொண்ட நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு மீட்புக் குழுக்கள் நிலைமையை ஆராய்வதற்கு சுரங்கப் பாதைக்குள் சென்றுள்ளனர். எங்களிடம் தெளிவான தகவல்கள் இல்லை. மீட்புக்குழு வந்த பின்பு நிலைமை குறித்து தெரியவரும்.
இவ்வாறு கூறினார்.
- பேரிடர் மீட்பு படை குழுவினர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
- சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தெலுங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அணையில் பின்புறத்தில் இருந்து நல்கொண்டா மாவட்டத்திற்கு குடிநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது.
இந்த பணி கடந்த 2005-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது ஸ்ரீசைலம் இடது புற கால்வாய் என அழைக்கப்படுகிறது. இந்த சுரங்கப்பாதை உலகிலேயே மிகவும் நீளமான அதாவது 44 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.
சுரங்கப்பாதை பணிக்காக இருபுறமும் இருந்து துளையிடும் எந்திரங்கள் மூலம் பணிகள் நடைபெற்று வந்தன. ஒரு பக்கத்தில் 20 கிலோ மீட்டர் மறுபுறம் 14 கிலோ மீட்டர் நீளத்திற்கு தோண்டப்பட்டது.
இந்த பணியில் உத்தர பிரதேசம், ஜார்கண்ட், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த பணியாளர்கள் ஈடுபட்டனர். நேற்று 60 தொழிலாளர்கள் பணியில் இருந்தனர்.
அப்போது சுரங்க பாதையில் 14-வது கிலோமீட்டர் தொலைவில் திடீரென நீர்க்கசிவு ஏற்பட்டது. இதனை சரி செய்ய சில தொழிலாளர்கள் முயன்றனர். அப்போது சுரங்க பாதையில் இடிபாடு ஏற்பட்டது.
சுரங்கத்திற்குள் பயங்கர சத்தம் கேட்டதும் அங்கிருந்த தொழிலாளர்கள் பதறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதில் சிலர் காயம் அடைந்தனர். அவர்களில் 52 பேர் பாதுகாப்பாக வெளியே வர முடிந்தது.
உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஜெய் பிரகாஷ், பொறியாளர் மனோஜ் குமார், களப்பொறியாளர் ஸ்ரீநிவாஸ், ஜார்கண்ட்மாநிலத்தைச் சேர்ந்த சந்தீப் சாஹு, ஜாதக்ஸ், சந்தோஷ் சாஹு மற்றும் அனுஜ் சாஹு மற்றும் ராபின்ஸ் இந்தியா நிறுவனத்தின் 2 எந்திர ஆப்ரேட்டர்களான சன்னி சிங் பஞ்சாப்பைச் சேர்ந்த குர்ப்ரீத் சிங் ஆகிய 8 பேர் சுரங்கப்பாதைக்குள் சிக்கிக்கொண்டனர்.
அவர்களை மற்ற தொழிலாளர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை.
நிலைமை குறித்து தகவலறிந்த முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி பணிகளை துரிதபடுத்த உத்தரவிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி ரேவந்த் ரெட்டியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொழிலாளர்களை மீட்பதற்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தார்.
இதைத் தொடர்ந்து தெலுங்கானா நீர்ப்பாசன மந்திரி உத்தமகுமார் ரெட்டி தலைமையில் மீட்பு பணிகள் தொடங்கப்பட்டன.
இந்திய ராணுவத்தின் ஒரு குழு செகந்திராபாத்தில் இருந்து வரவழைக்கப்பட்டனர்.
மேலும் பேரிடர் மீட்பு படை குழுவினர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும் சிறப்பு என்ஜினினீயர் குழுக்கள் வந்து மீட்பு பணிக்கான ஆய்வு தொடங்கினர்.
ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களுடன் மருத்துவ குழுவினர் அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கனரக என்ஜின்கள் மூலம் மீட்பு பணிகள் தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக சுரங்கத்தில் சிக்கி உள்ள தொழிலாளர்களுக்கு ஆக்சிஜன் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
சுரங்கபாதையில் பெரிய கல்பாறைகள் சரிந்து மூடி உள்ளது. இதனால் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளன.
நேற்று பணி தொடங்கிய 30 நிமிடத்துக்குள் இந்த விபத்து நடந்ததாக தெரிவித்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து விட்டது.
8 தொழிலாளர்களை இன்னும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்கள் என்ன ஆனார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
என்ஞ்சின் ஆபரேட்டர் ஒருவர் எச்சரிக்கை விடுத்ததால் தான் தொழிலாளர்கள் பலர் தப்பமுடிந்தது. அதற்குள் பெரிய அளவிலான மண் சரிவு ஏற்பட்டதால் 8 பேர் சிக்கி கொண்டனர்.
தொழிலாளர்களை மீட்க உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்ட ராணுவ குழுவினருடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
தொழிலாளர்களை உயிருடன் கொண்டு வரும் முயற்சியில் அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது என மந்திரி உத்தம குமார் ரெட்டி தெரிவித்தார்.
இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 5 பேரின் உடல்கள் சேற்றில் புதைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
- உயிரிழந்தவர்களில் இருவர் பொறியாளர்கள், 6 பேர் தொழிலாளர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அணையில் பின்புறத்தில் இருந்து நல்கொண்டா மாவட்டத்திற்கு குடிநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது.
இதன் சுரங்கப்பாதை பணிக்காக இருபுறமும் இருந்து துளையிடும் எந்திரங்கள் மூலம் பணிகள் நடைபெற்று வந்தன. அப்போது கடந்த வாரம் ஏற்பட்ட மண் சரிவில் 8 பேர் சுரங்கப்பாதைக்குள் சிக்கிக்கொண்டனர்.
சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் 5 பேரின் உடல்கள் சேற்றில் புதைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், சுரங்கத்தில் சிக்கிய மற்ற 3 பேரும் இடிபாடுகளில் சிக்கி உடைந்த இயந்திரத்தின் அடியில் சிக்கி மரணம் அடைந்தது உறுதியாகி உள்ளது
தெலங்கானாவில் சுரங்கம் அமைக்கும் பணியில் மண் சரிவில் சிக்கிய 8 பேரும் ஒரு வாரத்திற்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் இருவர் பொறியாளர்கள், 6 பேர் தொழிலாளர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு உடல்களை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.






