search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajnath Singh"

    • 2014-ம் ஆண்டு மோடி பிரதமர் ஆனவுடன் நிலைமை மாறிவிட்டது.
    • வெளிநாடுகளில் பிரதமர் மோடியின் மரியாதை அதிகரித்துள்ளது.

    ஜம்மு :

    ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், நேற்று காஷ்மீருக்கு சென்றார். ஜம்முவில் உள்ள ஜம்மு பல்கலைக்கழகத்தில் நடந்த தேசிய பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டார்.

    மாநாட்டில் அவர் பேசியதாவது:-

    முன்பெல்லாம் சர்வதேச அமைப்புகளில் இந்தியா ஏதாவது சொன்னால், அது பெரிதாக எடுத்துக் கொள்ளப்படுவது இல்லை. ஆனால், 2014-ம் ஆண்டு மோடி பிரதமர் ஆனவுடன் நிலைமை மாறிவிட்டது.

    இப்போது, சர்வதேச அமைப்புகளில் இந்தியா பேசுவதை உலகம் உன்னிப்பாக கவனிக்கிறது.

    பிரதமர் மோடியின் தலைமையால் உலக அரங்கில் இந்தியாவின் கவுரவமும், அந்தஸ்தும் உயர்ந்துள்ளது. இதற்கு முன்பு அப்படி இல்லை.

    வெளிநாடுகளில் பிரதமர் மோடியின் மரியாதை அதிகரித்துள்ளது. ஒரு நாட்டின் பிரதமர், மோடியை 'பாஸ்' என்று சொல்கிறார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், மோடியிடம் 'ஆட்டோகிராப்' கேட்கும் அளவுக்கு அவர் அவ்வளவு பிரபலமானவர் என்று கூறியுள்ளார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஏழைகள் மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்கும் ஜெயலலிதா அரும்பாடுபட்டவர்.
    • தமிழகத்தில் ஜனநாயகம் செழிக்க வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வேண்டுகோள் விடுத்தார்.

    மத்திய பாஜக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் சென்னை தாம்பரத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசியதாவது:-

    மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான என்டிஏ அரசு அமைந்தபோது நமக்கு உறுதுணையாக இருந்து ஆதரவு கொடுத்தவர் அதிமுக தலைவர் ஜெயலலிதா அவர்கள். அவர் மீது தமிழகம் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறது. நாமும் ஜெயலலிதா மீது மிகுந்த மதிப்புடன் இருக்கிறோம்.

    ஏழைகள் மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்கும் ஜெயலலிதா அரும்பாடுபட்டவர். அதேபோல்தான் ஏழைகள் முன்னேறுவதற்காக நம் பாரத பிரதமர் பெரும் பங்காற்றி வருகிறார். வாஜ்பாய் அவர்கள் தமிழ் மக்கள் மீது அன்பும் பாசமும் கொண்டிருந்தது போன்று இப்போது நம் பிரதமர் மோடியும் தமிழர்கள் மீது மிகுந்த அன்பும் பாசமும் கொண்டிருக்கிறார்.

    தமிழகத்தில் அதிமுகவில் கூட்டணியில் இருக்கிறோம். கூட்டணி தர்மத்தின்படி மரியாதை மற்றும் அங்கீகாரத்தை கொடுக்க தயாராக இருக்கிறோம்.

    ஊழல் வழக்கில் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். மு.க. ஸ்டாலின் முன்பு அவரை ஊழல்வாதி என்றும் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார். இப்போது அவரது கோரிக்கை நிறைவேற்றப்பட்டால், அவர் அதை பழிவாங்கும் நடவடிக்கை என்கிறார். இந்த இரட்டை வேடம் ஏற்றுக்கொள்ள முடியாதது

    இவ்வாறு அவர் பேசினார்.

    தமிழக முதலமைச்சரின் பெயரையும், ரஷிய சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலினையும் குறிப்பிட்ட ராஜ்நாத் சிங், திமுக தலைவர் தனது பெயரைப் பெரிதாக எடுத்துக்கொண்டு ஜனநாயகத்தை ஆபத்தில் ஆழ்த்துகிறாரா? என்றார். மேலும், தமிழகத்தில் ஜனநாயகம் செழிக்க வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வேண்டுகோள் விடுத்தார்.

    மேலும், தமிழ்நாடு மற்றும் அண்டை நாடான இலங்கையில் உள்ள தமிழர்களின் நலனுக்காக மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்ட பணிகளை ராஜ்நாத் சிங் பட்டியலிட்டார்.

    • ஐ.என்.எஸ். கிர்பான் ஏவுகணை கப்பலில் ஏராளமான சிறப்பு அம்சங்கள் உள்ளன.
    • கடந்த 1991-ம் ஆண்டு ஜனவரி 12-ந்தேதி இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    வியட்நாம் நாட்டின் பாதுகாப்பு துறை மந்திரி பான்வான் கேங்க் 2 நாள் பயணமாக கடந்த 18-ந்தேதி இந்தியா வந்தார்.

    அவர் நேற்று புதுடெல்லியில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்த சந்திப்பின் போது இருநாட்டு உயர் அதிகாரிகளும் உடனிருந்தனர். அப்போது இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு முயற்சிகள் முன்னேற்றம் பற்றியும் பேசப்பட்டது.

    குறிப்பாக பாதுகாப்பு துறை ஒத்துழைப்பு, கடல் பாதுகாப்பு மற்றும் பன்னாட்டு ஒத்துழைப்பு ஆகியவை தொடர்பாக பேசப்பட்டது.

    அப்போது பேசிய மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், 'கடந்த ஆண்டு ஜூன் மாதம் நான் வியட்நாம் சென்ற போது இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு தளவாட ஆதரவு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் கூட்டு தொலை நோக்கு அறிக்கையும் வெளியிடப்பட்டது. இந்த கூட்டு தொலைநோக்கு அறிக்கை இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு விரிவான வழிகாட்டி ஆவணமாக உள்ளது.

    இந்த அறிக்கை நமது பாதுகாப்பு ஒத்துழைப்பின் நோக்கத்தையும், அளவையும் மேம்படுத்தி உள்ளது. இது எதிர்காலத்தின் பாதையை அமைக்கும் என நம்புகிறேன்' என்றார்.

    இதைத்தொடர்ந்து இந்த சந்திப்பின் போது இருதரப்பு ஒத்துழைப்பு திருப்தி அளிப்பதாக இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    மேலும் வியட்நாமின் கடற்படை திறன்களை மேம்படுத்துவதற்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கார்வெட் ஏவுகணையான ஐ.என்.எஸ். கிர்பான் ஏவுகணையை இந்தியா வியட்நாமுக்கு பரிசாக வழங்குவதாக ராஜ்நாத் சிங் அறிவித்தார்.

    இந்த ஐ.என்.எஸ். கிர்பான் ஏவுகணை கப்பலில் ஏராளமான சிறப்பு அம்சங்கள் உள்ளன. ஏவுகணையை ஏந்தி செல்லும் ரோந்து கப்பலான ஐ.என்.எஸ். கிர்பான் 1,350 டன் எடை உள்ள குக்ரி வகை ஏவுகணை கார்வெட் ஆகும்.

    இது கடந்த 1991-ம் ஆண்டு ஜனவரி 12-ந்தேதி இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. இது 91 மீட்டர் நீளம், 11 மீட்டர் கற்றை மற்றும் வேக திறன் கொண்டது.

    கடலோர பாதுகாப்புக்கும், கடலில் ரோந்து செல்வதற்கும், கடல் கொள்ளை எதிர்ப்பு பணியிலும் இந்த கப்பல் மிகவும் உதவியாக இருக்கும்.

    • விமான நிலையத்திலும், தாம்பரம் இரும்புலியூர் பகுதியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
    • கடந்த வாரம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சென்னை வந்த போது விமான நிலைய பகுதியில் மின்தடை ஏற்பட்டு இருளில் மூழ்கியது.

    சென்னை:

    மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஒரு நாள் பயணமாக இன்று மாலை சென்னை வருகிறார்.

    டெல்லியில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்படும் அவர் மதியம் 4.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார்.

    அவரை தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வரவேற்கின்றனர்.

    அதன் பிறகு தாம்பரம் அருகே இரும்புலியூரில் டி.டி.கே.நகர் மைதானத்தில் மாலை 4.45 மணிக்கு நடைபெறும் பாரதிய ஜனதா கட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

    பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிறகு மாலை 6.20 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு விமானத்தில் ராஜ்நாத்சிங் புறப்பட்டுச் செல்கிறார்.

    முன்னதாக விமான நிலையத்தில் பாராளுமன்ற தேர்தல் வியூகம் குறித்து பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரிடம் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் சென்னை வருவதையொட்டி விமான நிலையத்திலும், தாம்பரம் இரும்புலியூர் பகுதியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    கடந்த வாரம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சென்னை வந்த போது விமான நிலைய பகுதியில் மின்தடை ஏற்பட்டு இருளில் மூழ்கியது.

    இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எனவே அதேபோல் இன்று மீண்டும் மின்தடை ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு துணை மின் நிலையங்களில் உயர் அதிகாரிகள் பணியில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    • பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் ஜூன் 20 ஆம் தேதி சென்னை வர உள்ளார்.
    • தாம்பரத்தில் நடைபெற உள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.

    சென்னை:

    மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நாளை மறுதினம் (ஜூன் 20-ம் தேதி) சென்னை வர உள்ளார்.

    ஒருநாள் பயணமாக வருகை தரும் ராஜ்நாத்சிங், சென்னை தாம்பரம் அருகே இரும்புலியூரில், மாலை 5 மணியளவில் நடைபெறும் பா.ஜ.க சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.

    பாராளுமன்றத் தேர்தல் வியூகம் குறித்து பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரிடம் ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பின் மாலை 6.20 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு விமானத்தில் ராஜ்நாத்சிங் புறப்பட்டுச் செல்கிறார்.

    • நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்க பெரும் முயற்சி மேற்கொண்டுள்ளோம்.
    • கடந்த நிதி ஆண்டில் நமது பாதுகாப்பு உற்பத்தி ரூ.ஒரு லட்சம் கோடியை தாண்டியது.

    பெங்களூரு :

    இந்திய ராணுவத்துறை சார்பில் பாதுகாப்பு துறையில் தன்னிறைவு அடைவது தொடர்பான குழு கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தலைமை வகித்து பேசியதாவது:-

    பாதுகாப்பு துறையில் நமது தேவையை பூர்த்தி செய்வது மிக முக்கியமானது. இந்த நோக்கத்தில் பாதுகாப்பு துறையில் இந்தியா தற்சார்பு அடைவதை உறுதி செய்ய முயற்சி செய்து வருகிறோம். இது தொடர்பாக மத்திய அரசு முடிவுகளால் இலக்கை அடைகிறோம். நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்க பெரும் முயற்சி மேற்கொண்டுள்ளோம்.

    உலக அளவில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள நமது ராணுவத்தில் தொழில்நுட்ப ரீதியாக நவீனமயத்தை அறிமுகம் செய்து வருகிறோம். ராணுவத்திற்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு, நடப்பு ஆண்டில் உள்நாட்டு நிறுவனங்களிடம் இருந்து பாதுகாப்பு உபகரணங்களை கொள்முதல் செய்ய 75 சதவீத நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசின் தீவிர முயற்சிகளால் நீர்மூழ்கி கப்பல், போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஆயுதங்கள் உள்நாட்டில் சொந்த முயற்சியில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    நமது பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி நமது நாட்டின் தேவையை மட்டும் பூர்த்தி செய்யாமல், நமது நட்பு நாடுகளின் பாதுகாப்பு தேவைகளையும் பூர்த்தி செய்யப்படுகின்றன. கடந்த நிதி ஆண்டில் நமது பாதுகாப்பு உற்பத்தி ரூ.ஒரு லட்சம் கோடியை தாண்டியது. இதில் ரூ.16 ஆயிரம் கோடி அளவுக்கு உபகரணங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

    இது நமது நாட்டின் பாதுகாப்புத்துறை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு சாட்சி. பாதுகாப்பு துறையில் தன்னிறைவு அடையும் முயற்சிக்கு கட்சி பாகுபாடின்றி அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்குகிறார்கள். நாம் பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்யும் நாடாக மாற வேண்டும் என்றால் நாம் அனைவரும் நாடு தான் முதன்மை என்ற ஒரு நிலைப்பாட்டில் நிற்க வேண்டும். அப்போது தான் தற்சார்பு நிலையை நாம் அடைய முடியும்.

    இவ்வாறு ராஜ்நாத்சிங் பேசினார்.

    • அமெரிக்க ராணுவ மந்திரி லாய்ட் ஆஸ்டின் இந்தியா வந்துள்ளார்.
    • லாயிட் ஆஸ்டினுடன் ராஜ்நாத் சிங் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்.

    புதுடெல்லி:

    அமெரிக்க ராணுவ மந்திரி லாய்ட் ஆஸ்டின் 4 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக ஜப்பான், சிங்கப்பூருக்கு சென்று விட்டு இந்தியாவுக்கு நேற்று வந்தார். இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி அவரை முறைப்படி வரவேற்றார்.

    இதுதொடர்பாக அமெரிக்க மந்திரி லாய்ட் ஆஸ்டின் தனது டுவிட்டர் பதிவில், 'பாதுகாப்பு உறவை வலுப்படுத்துவதற்காக முக்கிய தலைவர்களை சந்தித்து ஆலோசனைகளை மேற்கொள்ள இந்தியாவுக்கு திரும்ப வந்துள்ளேன்' என பதிவிட்டிருந்தார். அவருக்கு டெல்லியில் முப்படையின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அதனை அவர் ஏற்றுக்கொண்டார்.

    இதையடுத்து இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்கை, அமெரிக்க ராணுவ மந்திரி லாய்ட் ஆஸ்டின் சந்தித்துப் பேசினார். அப்போது, இந்தியா மற்றும் அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் கூட்டமைப்புக்கான தொடக்க நடவடிக்கைகள் மற்றும் இருநாட்டு ராணுவங்களுக்கு இடையே செயல்பாட்டு ஒத்துழைப்பை விரிவாக்கும் முயற்சிகளை தொடருவது குறித்து பேசப்பட்டது.

    இந்நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை குறித்து ராஜ்நாத் சிங் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், டெல்லியில் எனது நண்பர் ஆஸ்டினை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்தியா மற்றும் அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில், செயல்திட்ட விருப்பங்களில் ஒன்றிணைந்து செயல்படுவது மற்றும் இரு நாடுகளுக்கு இடையே மேம்படுத்தப்பட்ட ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளை மையப்படுத்தி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தோ- பசிபிக் பகுதியில் ஒரு சுதந்திர, வெளிப்படையான மற்றும் விதிகளுக்கு உட்பட்ட விஷயங்களை உறுதிப்படுத்துவதற்கு இரு நாடுகளின் உறவு முக்கியத்துவம் வாய்ந்தது என தெரிவித்தார்.

    • உலகம் அதிவேக மாற்றத்தை கண்டு வருகிறது.
    • பாதுகாப்பு துறையும் மாறி வருகிறது.

    புனே :

    2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என்று ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பேசினார்.

    மராட்டிய மாநிலம் புனேயில் 'டெபன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் அட்னான்ஸ்டு டெக்னாலஜி'யின் பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி பேசியதாவது:-

    உலகம் அதிவேக மாற்றத்தை கண்டு வருகிறது. பாதுகாப்பு துறையும் மாறி வருகிறது. இந்த துறையில் பல தொழில்நுட்ப மாற்றங்களை காண்கிறோம். மேலும் பாதுகாப்பு துறையில் பல பிரச்சினைகள் எழுகின்றன. குறிப்பாக சைபர்பேஸ் மிரட்டல்கள் அதிகரிக்கின்றன.

    மாற்றத்துக்கு ஏற்ப தொழில்நுட்பத்தில் நாம் முன்னேற வேண்டும். தொழில்நுட்பத்தை மேம்படுத்த முயற்சிகள் முன்வைக்கப்பட வேண்டும்.

    பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதி அதிகரித்து உள்ளது. 2014-ம் ஆண்டுக்கு முன்பு இந்த துறையில் ரூ.900 கோடியாக ஏற்றுமதி இருந்தது. அது தற்போது ரூ.16 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.

    பொருளாதார நிபுணர்களின் கணிப்பின்படி, 2027-ம் ஆண்டுக்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடத்தை பிடித்து சாதனை படைக்கும். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும். நமது நாடு தற்போது சுயசார்பு தன்னிறைவு பெற்று வருகிறது. உலக பொருளாதாரத்தில் இந்தியா முதல் இடத்தை பிடிப்பதையும் மறுக்க முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அன்னிய படையெடுப்பாளர்கள், நாலந்தா பல்கலைக்கழகத்தை அழித்தனர்.
    • கலாசார அடையாளமாக திகழ்ந்த சோமநாதர் ஆலயத்தை சூறையாடினர்.

    புதுடெல்லி :

    தேசிய தொழில்நுட்ப தின கொண்டாட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. பொக்ரானில் வெற்றிகரமாக அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டதன் 25-வது ஆண்டு விழாவும் நடந்தது. பிரதமர் மோடி, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜிதேந்திரசிங் மற்றும் மூத்த விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில், ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் பேசியதாவது:-

    அன்னிய படையெடுப்பாளர்கள், நாலந்தா பல்கலைக்கழகத்தை அழித்தனர். கலாசார அடையாளமாக திகழ்ந்த சோமநாதர் ஆலயத்தை சூறையாடினர்.

    இந்த வரலாற்றில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொண்டோம். இத்தகைய வரலாறு மீண்டும் நடக்க அனுமதிக்க மாட்டோம் என்று உறுதி எடுத்துள்ளோம்.

    ஆனால், 1998-ம் ஆண்டு நடத்தப்பட்ட பொக்ரான் அணுகுண்டு சோதனை மூலம் உலகத்துக்கு ஒரு செய்தியை அனுப்பினோம். அதாவது, நாங்கள் அமைதியை விரும்பும் நாடாக இருக்கலாம். ஆனால், நாலந்தா பல்கலைக்கழகம் மீண்டும் எரிக்கப்படுவதையோ, சோமநாதர் ஆலயம் மீண்டும் சூறையாடப்படுவதையோ சகித்துக் கொள்ள மாட்டோம் என்பதுதான் அச்செய்தி.

    இந்தியாவின் சுயமரியாதைக்கு எதிராக எடுத்து வைக்கப்படும் ஒவ்வொரு அடிக்கும் உரிய பதிலடி கொடுப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத்சிங் இன்று ரஜோரி செல்கிறார்.
    • ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுனர் பலியான ராணுவ வீரர்களின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நேற்று நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேர் பலியானார்கள். வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், மேலும் அங்குள்ள நிலைமை குறித்து அறியவும் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத்சிங் இன்று ரஜோரி செல்கிறார்.

    இதே போல ராணுவ தளபதி மனோஜ் பாண்டேயும் அங்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார். ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுனர் பலியான ராணுவ வீரர்களின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    • ராணுவ செலவுகளை குறைக்கும் வகையில் முப்படைகளிலும் 4 ஆண்டுகளுக்கு மட்டுமே பணி வழங்கப்படும்.
    • இந்த திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.

    புது டெல்லி:

    மத்திய அரசின் பட்ஜெட்டில் இந்திய ராணுவத்துக்கு தான் அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கொரோனா காரணமாக ராணுவத்தில் ஆட்சேர்ப்பு பணிகள் முற்றிலுமாக முடங்கின. இதுபோன்ற சூழ்நிலையில் ராணுவத்தில் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

    இந்திய ராணுவம், இந்திய கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, ராணுவத்தின் மூன்று பிரிவுகளிலும் 1.25 லட்சத்திற்கும் அதிகமான இடங்கள் காலியாக உள்ளன. இந்த நிலையில், அக்னிபாத் என்ற புதிய ராணுவ ஆள் சேர்ப்பு திட்டத்தை மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் அறிமுகம் படுத்தினார்.

    அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது:- டூர் ஆப் டியுடி என்ற இந்த திட்டத்தில் நியமிக்கப்படும் வீரர்கள் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுவார்கள். ராணுவ செலவுகளை குறைக்கும் வகையில் முப்படைகளிலும் 4 ஆண்டுகளுக்கு மட்டுமே பணி. 'அக்னிபாத்' திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு மேலும் அதிகரிக்கும் என்றார்.

    இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    • அமைதி உடன்படிக்கை கால கட்டத்தில் கூட, பல முனைகளில் போர் தொடர்கிறது.
    • போர் மற்றும் அமைதி என்பது இனியும் இரண்டு தனித்தனி அம்சமாக இருக்க முடியாது.

    முசோரி:

    உத்தராகண்ட் மாநிலம் முசோரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாகவியல் கழகத்தில் நடைபெற்ற 28 வது சிவில் - ராணுவ கூட்டுப்பயிற்சி திட்டத்தை பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:

    தேச பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தவும், வருங்கால சவால்களை எதிர்கொள்ளவும் நிர்வாகம், ராணுவம் மேலும் இணைந்து செயல்படுவது அவசியம்.

    ராணுவ தாக்குதல்களிலிருந்து பாதுகாத்து கொள்வதில், ராணுவம் அல்லாத பல பரிணாமங்கள் இடம் பெற்றுள்ளதால், தேசபாதுகாப்பு என்பது பரந்து விரிந்ததாக மாறியுள்ளது.

    ரஷ்யா - உக்ரைன் நிலவரம் மற்றும் அதேபோன்ற பிற மோதல்கள், வழக்கமான போர் முறைகளிலிருந்து மாறுபட்டு இருப்பதை உலகம் கண்கூடாக காண்கிறது. போர் மற்றும் அமைதி என்பது இனியும் இரண்டு தனித்தனி அம்சமாக இருக்க முடியாது. அமைதி உடன்படிக்கை காலகட்டத்தில் கூட, பல முனைகளில் போர் தொடர்கிறது.

    கடந்த சில தசாப்தங்களாக முழு அளவிலான போர் தவிர்க்கப்பட்டிருக்கிறது. இதற்கு பதிலாக மறைமுக மற்றும் தாக்குதல்கள் இல்லா யுத்தங்கள் நடத்தப்படுகின்றன.

    தொழில்நுட்பம், வினியோக சங்கிலி, தகவல், எரிசக்தி, வர்த்தகம் மற்றும் நிதி நடைமுறைகள் போன்றவை ஆயுதமாக்கப் படுகின்றன.

    இத்தகைய ஆயுதம் வரும் காலங்களில் நமக்கு எதிராக பயன்படுத்தப்படக் கூடும். எனவே, இதுபோன்ற பரந்து விரியும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதில் மக்களின் ஒத்துழைப்பு அவசியம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×