search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "President Droupadi Murmu"

    • பெங்களூரு கவர்னர் மாளிகையில் பழங்குடியின மக்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடினார்.
    • அப்போது பேசிய அவர், பெண்கள் கல்வி பயின்று முன்னேற்றம் அடைய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    பெங்களூரு:

    ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று தனி விமானம் மூலம் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்தில் வந்து இறங்கினார். அவரை ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல் மந்திரி சித்தராமையா உள்ளிட்டோர் பூங்கொடுத்து கொடுத்தும், மைசூரு தலைப்பாகை அணிவித்தும் வரவேற்றனர்.

    அதன்பின், அங்கிருந்து சிக்பள்ளாப்பூருக்கு புறப்பட்டுச் சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்மு, அங்கு நடைபெற்ற சத்யசாய் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். அங்கு அவர் பேசியதாவது:

    பல்வேறு துறைகளில் பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றம் இந்தியாவில் நிகழும் மாற்றத்தின் ஒரு பார்வையை முன்வைக்கிறது.

    இந்த ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் எங்கள் மகள்கள் முதல் 4 ரேங்க்களுக்குள் வந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். சம வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் நம் மகள்கள் நம் ஆண்களை விட சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பதை இது குறிக்கிறது.

    இது இந்தியாவில் நிகழும் மாற்றம் மற்றும் நமது நாட்டின் பொன்னான எதிர்காலத்தின் ஒரு பார்வை என தெரிவித்தார்.

    யே டூ டிரெய்லர் ஹை. பிக்சர் அபி பாக்கி ஹை. (இது வெறும் டிரெய்லர். முக்கியப் படம் இன்னும் வெளிவரவில்லை) என பிரபல இந்தி திரைப்படத்தின் வசனத்தைச் சொல்லும்போது பார்வையாளர்கள் கரவொலி எழுப்பினர்.

    • ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • அதில் ஈத் பண்டிகை அன்பையும், தியாகத்தையும் விளக்கும் புனித பண்டிகை என குறிப்பிட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஈத் பண்டிகை அன்பையும், தியாகத்தையும் விளக்கும் புனித பண்டிகை என்று குறிப்பிட்டுள்ளார்.

    தியாகம் மற்றும் மனித குலத்திற்கு தன்னலமற்ற சேவையை வழங்கும் பாதையைப் பின்பற்ற இந்தப் பண்டிகை நம்மை ஊக்குவிக்கிறது.

    இந்நாளில் சமுதாயத்திற்கு பரஸ்பர சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தைப் பரப்ப நாம் அனைவரும் உறுதி எடுத்துக் கொள்வோம் என தெரிவித்துள்ளார்.

    • இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
    • அனைவருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் அவரது பொது வாழ்வு அமைந்திடவும் வாழ்த்துகிறேன்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் அவர் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:-

    இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். குடியரசுத் தலைவர் நல்ல உடல் நலத்துடனும், மகிழ்ச்சியுடனும் திகழவும், அனைவருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் அவரது பொது வாழ்வு அமைந்திடவும் வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    • வியட்நாம் ராணுவ மந்திரி பான் வான் ஜியாங் 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
    • ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்த அவர் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    புதுடெல்லி:

    வியட்நாம் நாட்டின் ராணுவ மந்திரி பான் வான் ஜியாங் 2 நாள் அரசுமுறை பயணமாக நேற்று இந்தியா வந்தார். முப்படை வீரர்களின் ராணுவ மரியாதையை ஏற்றுக்கொண்ட வியட்நாம் ராணுவ மந்திரி பான் வான் ஜியாங், டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

    தலைநகர் டெல்லியில் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது, சீனாவின் ஆதிக்கம் மிகுந்த தென் சீனக் கடலின் நிலைமையை மறுபரிசீலனை செய்வது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். இருதரப்பு பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் இருவரும் தங்களது கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

    இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவை வியட்நாம் ராணுவ மந்திரி பான் வான் ஜியாங் நேற்று சந்தித்தார். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.

    • பராமரிபோ விமான நிலையத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு திரவுபதி முர்முவின் முதல் ஐரோப்பிய பயணம் இதுவாகும்.

    பராமரிபோ:

    தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சுரினாம் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான செர்பியா ஆகிய நாடுகளுக்கு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு 6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு அவரது முதல் ஐரோப்பிய பயணம் இதுவாகும்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று விமானம் மூலமாக சுரினாம் நாட்டிற்குச் சென்றடைந்தார். அந்நாட்டின் தலைநகரான பராமரிபோவில் உள்ள ஜோஹன் அடால்ஃப் பெங்கல் சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்ற அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதற்கிடையே, சுரினாம் நாட்டின் அதிபர் சந்திரிகாபெர்சாத் சாந்தோகியை ஜனாதிபதி திரவுபதி முர்மு சந்தித்தார். அப்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் விதமாக பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

    இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு சுரினாம் நாட்டின் உயரிய விருதான, கிராண்ட் ஆர்டர் ஆப் தி செயின் ஆப் தி யெல்லோ ஸ்டார் விருதை அந்நாட்டு அதிபர் சாந்தோகி வழங்கி கவுரவித்தார்.

    அப்போது பேசிய ஜனாதிபதி திரவுபதி முர்மு, இந்த அங்கீகாரம் எனக்கு மட்டுமல்ல, இந்திய-சுரினாமியர் சமூகத்தின் அடுத்தடுத்த தலைமுறையினருக்கு இந்த விருதை அர்ப்பணிக்கிறேன் என தெரிவித்தார்.

    • பராமரிபோ விமான நிலையத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு திரவுபதி முர்முவின் முதல் ஐரோப்பிய பயணம் இதுவாகும்.

    பராமரிபோ:

    தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சுரினாம் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான செர்பியா ஆகிய நாடுகளுக்கு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு 6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு அவரது முதல் ஐரோப்பிய பயணம் இதுவாகும்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று விமானம் மூலமாக சுரினாம் நாட்டிற்குச் சென்றடைந்தார். அந்நாட்டின் தலைநகரான பராமரிபோவில் உள்ள ஜோஹன் அடால்ஃப் பெங்கல் சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்ற அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், சுரினாம் நாட்டின் அதிபர் சந்திரிகாபெர்சாத் சாந்தோகியை ஜனாதிபதி திரவுபதி முர்மு சந்தித்தார். அப்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் விதமாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

    மேலும் சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

    • ஜனாதிபதி திரவுபதி முர்மு 6 நாள் பயணமாக வெளிநாடு புறப்பட்டார்.
    • முதல் கட்டமாக சுரினாம் செல்லும் அவர் தொடர்ந்து செர்பியாவிற்கு செல்கிறார்.

    புதுடெல்லி:

    ஜனாதிபதி திரவுபதி முர்மு 6 நாள் பயணமாக சுரினாம் மற்றும் செர்பியா புறப்பட்டார்.

    ஜனாதிபதி தனது பயணத்தின் முதல் கட்டமாக ஜூன் 4 முதல் 6 வரை தென் அமெரிக்க நாடான சுரினாமுக்கு பயணம் செய்கிறார்.

    சுரினாமில் இருந்து அவர் ஜூன் 7 முதல் 9 வரை தனது பயணத்தின் இரண்டாவது கட்டமாக ஐரோப்பாவில் உள்ள செர்பியாவுக்குச் செல்கிறார்.

    சுரினாம் அதிபர் சான் சந்தோகி அழைப்பின் பேரில் ஜூன் 4 முதல் 6 வரை ஜனாதிபதி சுரினாமில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார்.

    சுரினாமுக்கு இந்தியர்கள் வருகை தந்ததன் 150-வது ஆண்டு விழாவில் ஜனாதிபதி பிரதம விருந்தினராக கலந்து கொள்வதால் இந்த விஜயம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

    ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு அவரது முதல் ஐரோப்பிய பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி 28-ந்தேதி திறந்து வைக்கிறார்.
    • திறப்பு விழாவை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவித்து உள்ளன.

    புதுடெல்லி :

    தலைநகர் டெல்லியில் சுமார் ரூ.850 கோடி மதிப்பில் பிரமாண்ட பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இதற்காக கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10-ந்தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

    'சென்டிரல் விஸ்டா' என்ற திட்டத்தின் கட்டப்பட்டுள்ள பாராளுமன்ற கட்டிடப்பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இதனையடுத்து இதனை பிரதமர் நரேந்திரமோடி வருகிற 28-ந்தேதி திறந்து வைக்கிறார்.

    பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைக்க வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    இதனால் திறப்பு விழாவை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவித்து உள்ளன. ஆனால் ஜனநாயகத்தின் கோவிலாக திகழும் பாராளுமன்ற திறப்பு விழாவில் எதிர்க்கட்சிகள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று ஆளும் பா.ஜ.க. அரசு அழைப்பு விடுத்துள்ளன.

    இதற்கிடையே பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் நேற்று பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

    தமிழகத்தின் கன்னியாகுமரியைச் சேர்ந்த வக்கீல் ஜெய் சுகின் என்பவர்தான் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

    முக்கியத்துவம் வாய்ந்த அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    அரசியலமைப்பு சட்டம் 79-வது பிரிவில் பாராளுமன்றம் என்பது ஜனாதிபதியையும் இரு அவைகளையும் கொண்டது என குறிப்பிடப்பட்டு உள்ளது. நாட்டின் முதல் குடிமகனாக உள்ள ஜனாதிபதியே பாராளுமன்றத்தை கூட்டவும், ஒத்திவைக்கவும் அதிகாரம் படைத்தவர்.

    பிரதமரையும், மந்திரிகளையும் நியமிப்பதுடன், மத்திய அரசின் அனைத்து நடவடிக்கைகளும் ஜனாதிபதியின் பெயரிலேயே எடுக்கப்படுகின்றன.

    இதுபோன்ற சூழலில் புதிய பாராளுமன்றத்தை திறப்பதற்கு அவருக்கு அழைப்பு விடுக்காதது, ஜனாதிபதியின் மதிப்பை குறைப்பது மட்டுமின்றி அரசியலமைப்பு சட்டத்தையும் மீறுவதாக உள்ளது.

    இந்த விவகாரத்தில் மக்களவை செயலாளரின் அழைப்பிதழ் தன்னிச்சையானது. எனவே புதிய பாராளுமன்றத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முவை கொண்டு திறக்க மக்களவை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

    இந்த மனு நீதிபதிகள் மகேஸ்வரி, நரசிம்மா அடங்கிய அமர்வு முன்பு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜெய் சுக்தேவ் என்பவர் பொது நல வழக்கை தாக்கல் செய்து உள்ளார்.
    • புதிய பாராளுமன்ற கட்டிடத்தை நாட்டின் ஜனாதிபதியால் திறந்து வைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி வருகிற 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கிறார். இந்த விழாவை புறக்கணிக்கப்போவதாக காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்து உள்ளது.

    இந்த நிலையில் இது தொடர்பாக பொது நல வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டு உள்ளது. ஜெய் சுக்தேவ் என்பவர் இந்த வழக்கை தாக்கல் செய்து உள்ளார்.

    அதில் அவர் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை நாட்டின் ஜனாதிபதி திறந்து வைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என கூறி உள்ளார்.

    • பாராளுமன்ற இரு அவைகளின் தலைவராக இருப்பவர் குடியரசு தலைவர்.
    • பாராளுமன்ற கூட்டத்தொடரை கூட்டவும், முடிக்கவும் உரிமை படைத்தவர் குடியரசு தலைவர்.

    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கடந்த 2 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பல்வேறு துறை சார்ந்த முதலீட்டு ஊக்குவிப்பு நிகழ்வுகளை நடத்தி இதுவரை 226 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு உள்ளன.

    இதன்மூலம் ரூ.2 லட்சத்து 95 ஆயிரத்து 339 கோடி அளவுக்கு முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. ரூ. 4 லட்சத்து 12 ஆயிரத்து 565 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் அகில இந்திய அளவில் மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி 2022-23ம் நிதியாண்டில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அந்நிய முதலீடு 16.3 சதவீதம் குறைந்திருப்பதாக கூறுகிறது. இந்தியாவில் தொழில் துறை வளர்ச்சி பெறவும், வேலைவாய்ப்பு பெருகுவதற்கு மாறாக, பொருளாதார பேரழிவிற்கு வழிவகுக்கும் பல்வேறு நடவடிக்கைகளை பிரதமர் மோடி அரசு எடுத்து வருகிறது. இதற்கு சமீபத்தைய காரணம் ரூ.2000 நோட்டு புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டதாகும்.

    இதனால் 6 கோடி சிறு, குறு தொழில்களும் 11 கோடி விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

    உலகமே வியந்து போற்றுகிற அற்புதமான பாராளுமன்ற கட்டிடம் கடந்த 75 ஆண்டுகளாக இயங்கி வருகிற நிலையில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை மிக அருகாமையிலேயே ரூ.850 கோடிக்கு மேலாக செலவிட்டு கட்டிடம் கட்டுவது துக்ளக் ஆட்சியை தான் நினைவுபடுத்துகிறது. துக்ளக் ஆட்சியில் தலைநகர் மாற்றப்பட்டது. ஆனால் நவீன துக்ளக் ஆக செயல்பட்டு வருகிற மோடி ஆட்சியில் தற்போது பாராளுமன்றம் மாற்றப்பட்டிருக்கிறது.

    புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கான திறப்பு விழாவிற்கு பழங்குடி இனத்தை சேர்ந்த பெண் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அழைக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்.

    ஏற்கனவே கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு அன்றைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைக்கப்படவில்லை. நாட்டின் மிக உயர்ந்த பதவிகளுக்கு தலித், ஆதிவாசிகளை நியமித்ததாக தம்பட்டம் அடித்துக் கொண்ட பிரதமர் மோடி, அழைக்கப்பட வேண்டிய நிகழ்ச்சிக்கு அழைக்கப்படாமல் அவமானப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இதன்மூலம் மோடியின் சுயரூபத்தை அனைவரும் அறிந்து கொள்ளலாம்.

    பாராளுமன்ற இரு அவைகளின் தலைவராக இருப்பவர் குடியரசு தலைவர். பாராளுமன்ற கூட்டத்தொடரை கூட்டவும், முடிக்கவும் உரிமை படைத்தவர் குடியரசு தலைவர். பாராளுமன்றத்தில் இயற்றப்படுகிற மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் கொடுத்தால் தான் அது சட்டமாக நிறைவேறும். குடியரசு தலைவருக்கு அரசமைப்பு சட்டம் வழங்கியிருக்கிற உரிமைகளை உதாசீனம் செய்கிற வகையில் குடியரசு தலைவரை புறக்கணித்துவிட்டு பிரதமர் மோடியே புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறப்பது அரசமைப்பு சட்டத்தையும் குடியரசு தலைவரையும் அவமதிக்கிற செயலாகும்.

    எனவே தான் 28-ந்தேதி புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து புறக்கணித்திருக்கின்றன. பிரதமர் மோடியின் ஜனநாயக விரோத பாசிச செயலுக்கு ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்திற்குக்கின்றன.

    புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கான தேதி மே 28. அந்த தேதியை தேர்வு செய்ததற்கான காரணம் அன்று தான் சாவர்க்கர் பிறந்தநாள். இந்திய விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டு அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாவர்க்கர் பிரிட்டீஷ் ஆட்சிக்கு எதிராக எவ்வித செயலிலும் ஈடுபடமாட்டேன் என்று உறுதி கூறி, மன்னிப்பு கடிதம் எழுதி, சிறையில் இருந்து விடுதலை ஆனவர்.

    இதன்மூலம் இந்திய விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்திய சாவர்க்கரின் பிறந்தநாளில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறப்பதை விட இந்திய மக்களுக்கு செய்கிற துரோகம் வேறு எதுவும் இருக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை திறப்பு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • மாற்றப்பட்ட தேதி குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

    சென்னையில் கிண்டி கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் 1000 படுக்கை வசதி கொண்ட கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனையை வருகிற 5-ந்தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை திறப்பு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாற்றம் செய்யப்படும் தேதியில் ஜனாதிபதியே மருத்துவமனையை திறப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மாற்றப்பட்ட தேதி குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

    • கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஜூன் 3-ந் தேதியில் இருந்து வெகு விமரிசையாக கொண்டாட தி.மு.க. முடிவு செய்துள்ளது.
    • ஜனாதிபதி பங்கேற்கும் விழாவை மிகச் சிறப்பாக நடத்துவது பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஜூன் 3-ந் தேதியில் இருந்து வெகு விமரிசையாக கொண்டாட தி.மு.க. முடிவு செய்துள்ளது.

    இதையொட்டி 3-ந் தேதி மாலை வடசென்னையில் தி.மு.க. தோழமை கட்சியினர் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    கிண்டி கிங் நோய் தடுப்பு ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 1000 படுக்கைகளுடன் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை ஜூன் 5-ந் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைப்பதுடன் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையும் தொடங்கி வைக்கிறார்.

    இதன் பிறகு ஜூன் 20-ந் தேதி திருவாரூரில் கலைஞர் கோட்டம் திறப்பு விழா நடைபெறுகிறது. பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் திறந்து வைக்கிறார்.

    இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் மிகச் சிறப்பாக நடத்துவதற்காக தி.மு.க. உயர்நிலை செயல் திட்ட குழு கூட்டத்தை கூட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பொதுச் செயலாளர் துரைமுருகன் பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி எம்.பி., இவர்களுடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள் டி.கே.எஸ்.இளங்கோவன், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பொன் முத்துராமலிங்கம், திருச்சி சிவா, கும்மிடிப்பூண்டி வேணு, குத்தாலம் கல்யாணம், பூச்சி முருகன் மற்றும் 23 பேர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    இதில் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ந் தேதியன்று நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டும். ஜனாதிபதி பங்கேற்கும் 5-ந் தேதியன்று விழாவை மிகச் சிறப்பாக நடத்துவது பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    ×