search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "old man died"

    • 3 மாதங்களுக்கு முன்பு சுடலைமுத்துக்கும், பலவேசத்திற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
    • தோட்டாக்குடி குளத்தில் முதியவர் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு போலீஸ் சரகத்திற்குட்பட்ட ஆழ்வாநேரி, புதுக்குறிச்சியை சேர்ந்தவர் சுடலைமுத்து (வயது 55). இவருக்கு பலவேசம் என்ற மனைவியும், இந்து என்ற மகளும், சுப்பிரமணி என்ற மகனும் உள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சுடலைமுத்துக்கும், அவரது மனைவி பலவேசத்திற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து பலவேசம், கணவரை பிரிந்து, தனது மகன், மகளு டன் சொந்த ஊரான ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பொன்னங் குறிச்சிக்கு சென்று விட்டார். மனைவி, குழந்தைகள் பிரிந்து சென்று விட்டதால் சுடலை முத்து மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார். இதற்கிடையே கடந்த 19-ந் தேதி சுடலைமுத்து மாயமானார். அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களிலும் தேடி வந்தனர்.

    இந்நிலையில் மூன்றடைப்பு அருகே உள்ள தோட்டாக்குடி குளத்தில் முதியவர் சடலம் கிடப்ப தாக மூன்றடைப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் அவர் மாயமான சுடலைமுத்து என்பதும், அவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திடீரென மூச்சு விடுவதில் தியாகராஜனுக்கு சிரமம் ஏற்பட்டது.
    • சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டி கோவலன் தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் (61). இவருக்கு கடந்த 6 மாத காலமாக மூச்சு திணறல் ஏற்பட்டு வந்துள்ளது.

    இதற்காக அவர் மருந்து, மாத்திரை எடுத்து வந்துள்ளார். சம்பவத்தன்று திடீரென மூச்சு விடுவதில் தியாகராஜனுக்கு சிரமம் ஏற்பட்டது.

    இதனையடுத்து அவரை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். பின்னர் மருத்துவர் மருந்து மாத்திரை கொடுத்து வீட்டுக்கு அனுப்பி விட்டார்.

    இந்நிலையில் இரவு மீண்டும் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.அவரை மீண்டும் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே தியாகராஜன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 17-ந்தேதி குலதெய்வ கோவில் செல்வதற்காக பேட்டையில் இருந்து கடையம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.
    • இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பரமசிவம் இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

    முக்கூடல்:

    நெல்லையை அடுத்த பேட்டை காந்திமதி நகரை சேர்ந்த பரமசிவம் (வயது 81) என்பவருடைய மகன் சுப்பிரமணியன் (40).

    கார் கவிழ்நது விபத்து

    இவர் தனது மனைவி பேச்சியம்மாள் (36), மகள் பவித்ரா (13), மகன் மாதேஸ்வரன் (11) மற்றும் தந்தையுடன் கடந்த 17-ந்தேதி குலதெய்வ கோவில் செல்வதற்காக பேட்டையில் இருந்து கடையம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.

    காரை பரமசிவம் ஓட்டினார். பாப்பாக்குடி அருகே செங்குளம்- இடைகால் மெயின் ரோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஓடைப்பாலம் அருகில் சென்ற போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.

    இதனால் சாலை யோரத்தில் உள்ள பனை மரத்தில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் காரின் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி காயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்ததும் மேல் சிகிச்சைக்காக நெல்லை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    பிறந்தநாளில் பலி

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பரமசிவம் இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பரமசிவனுக்கு இன்று பிறந்த நாள் ஆகும். பிறந்த நாளன்று அவர் சிகிச்சை பலனின்றி இறந்தது அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    • சிகிச்சை பெற்று வந்த அவர் திடீரென மயங்கி கிடந்தார்
    • பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்

    ஆண்டிபட்டி:

    திருப்பூரை சேர்ந்தவர் மைக்கேல்ராசு (வயது60). இவர் மதுபோதைக்கு அடிமையானதால் தேனி மாவட்டம் க.விலக்கு பகுதியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் திடீரென மயங்கி கிடந்தார். இது குறித்து அவரது சகோதரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து மைக்கேல்ராசை தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

    அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ைமக்கேல்ராசு எற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ரோட்டோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
    • சுல்தான் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை சூலூர் அருகே உள்ள ஜே. கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 83). சம்பவத்தன்று இவர் திருப்பூரை சேர்ந்த தங்கராஜ் (36) என்பவரது காரில் முன்னால் அமர்ந்து சென்றார். கார் பல்லடம் - உடுமலை ரோட்டில் சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த ஆறுமுகம் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த தகவல் கிடைத்ததும் சுல்தான் பேட்டை போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் இறந்த முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சுல்தான் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து போன முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் அவிநாசி பாளையம் சுங்கச்சாவடி அருகில் நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இது குறித்து அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து போன முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.

    • சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது பைக் மோதி பலியானார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கோம்பை ஓடைத்தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது61).

    இவர் சம்பவத்தன்று கம்பம் - உத்தமபாளையம் பைபாஸ் சாலை மணிக்கட்டி ஆலமரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது சாலையை கடக்க முயன்ற ஒரு முதியவர் மீது மோதினார்.

    இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இறந்த முதியவர் யார்? எந்த ஊர்? என்ற விவரம் தெரிய வில்லை. இது குறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பைக் நிலை தடுமாறி கீழே விழுந்து முதியவர் பரிதாபமான பலியானார்.
    • ஹைவேவிஸ் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    சின்னமனூர் அருகே ஹைவேவிஸ் மேகமலையை சேர்ந்தவர் மாரியப்பன்(60).

    இவர் தனது மகன் ராஜேஸ்கண்ணாவுடன் மோட்டார் சைக்கிளில் மேகமலையில் இருந்து மணலூர் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலைதடுமாறி பைக் கவிழ்ந்தது.

    இதில் படுகாயமடைந்த மாரியப்பன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டார். இதுகுறித்து ஹைவேவிஸ் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று அதிக அளவு மாத்திரை சாப்பிட்டதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
    • போலீசார் விசாரித்து வருகின்றனர்

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் சின்னஓவுலாபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் நல்லு (வயது73). இவருக்கு கடந்த 10 வருடங்களாக ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் இருந்து வந்துள்ளது.

    இதற்காக மாத்திரைகள் சாப்பிட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று அதிக அளவு மாத்திரை சாப்பிட்டதால் மயக்கமடைந்தார்.

    தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இது குறித்து ராயப்பன்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மெகுழுவர்த்தி மற்றும் கொசுவத்தி சரிந்து விழுந்ததில் கயிற்று கட்டிலில் தீப்பற்றியது.
    • ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    கூடலூர்:

    கூடலூர் அருகே கன்னிகாளிபுரத்தை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது70). இவரது மகள் மல்லிகா மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் குடியிருந்து வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு தந்ைதயை பார்ப்பதற்காக கன்னிகாளிபுரம் வந்தார். இந்த நிலையில் மெகுழுவர்த்தி மற்றும் கொசுவத்தி சரிந்து விழுந்ததில் கயிற்று கட்டிலில் தீப்பற்றியது.

    இதில் படுகாயம் அடைந்த ராஜகோபாலை மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இது குறித்து கூடலூர் தெற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த மரத்தின்மீது பைக் மோதி முதியவர் பலத்த காயமடைந்தார்.
    • சிகிச்சை பலனின்றி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஜி.உசிலம்பட்டி வடக்குதெருவை சேர்ந்தவர் லட்சுமணன்(60). இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் கண்டமனூர் ேராட்டில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த மரத்தின்மீது பைக் மோதி அவர் பலத்த காயமடைந்தார். தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதுகுறித்து கண்டமனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனியார் பஸ் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியதில் முதியவர் தூக்கிவீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
    • நிலக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே ஜெய்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஜெயபால்(64). விவசாயியான இவர் மீனாட்சிபுரத்தில் உள்ள தோட்டகுடியிருப்பில் இருந்தார்.

    இவரது 8 வயது பேரன் சரண் நிலக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளி முடிந்ததும் சரண் தாத்தா வீட்டிற்கு வந்தான். அங்கிருந்து சரணை அழைத்துக்கொண்டு சைக்கிளில் ஜெய்நாயக்கன்பட்டிக்கு ஜெயபால் சென்று கொண்டிருந்தார்.

    மதுரை-பெரியகுளம் சாலையில் சென்றபோது வத்தலக்குண்டுவில் இருந்து வந்த தனியார் பஸ் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட 2 பேரும் படுகாயமடைந்தனர்.

    அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ஜெயபால் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது பேரன் சரணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ் தலைமையில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×