என் மலர்
உள்ளூர் செய்திகள்

சின்னமனூர் அருகே விபத்தில் முதியவர் பலி
- பைக் நிலை தடுமாறி கீழே விழுந்து முதியவர் பரிதாபமான பலியானார்.
- ஹைவேவிஸ் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
சின்னமனூர் அருகே ஹைவேவிஸ் மேகமலையை சேர்ந்தவர் மாரியப்பன்(60).
இவர் தனது மகன் ராஜேஸ்கண்ணாவுடன் மோட்டார் சைக்கிளில் மேகமலையில் இருந்து மணலூர் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலைதடுமாறி பைக் கவிழ்ந்தது.
இதில் படுகாயமடைந்த மாரியப்பன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டார். இதுகுறித்து ஹைவேவிஸ் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






