search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Offensive"

    தேனி அருகே குடும்ப பிரச்சினையில் மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி தெற்கு ஜெகநாதபுத்தை சேர்ந்த பால்பாண்டி மகள் சரண்யா (வயது28). இவருக்கும் பொம்மையகவுண்டன் பட்டியை சேர்ந்த சிலம்பரசன் (39) என்பவருக்கும் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சரண்யா கடந்த 5 வருடமாக கணவரை விட்டு பிரிந்து தந்தை வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று அங்கு வந்த சிலம்பரசன் தனது மனைவியை அடித்து துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சிலம்பரசனை கைது செய்தனர்.

    தேனி அருகில் உள்ள கோடாங்கிபட்டி ரைஸ்மில் தெருவை சேர்ந்தவர் கருப்பாயி. இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் லட்சுமி என்பவருக்கும் சாக்கடை தண்ணீர் செல்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்வத்தன்று இது குறித்து ஏற்பட்ட தகராறில் லட்சுமி அவரது உறவினர்கள் ராஜேஷ், கஸ்தூரி, ரகு ஆகிய 4 பேரும் சேர்ந்து கருப்பாயி அம்மாளை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இது குறித்து அவரது பேரன் தினேஷ் கொடுத்த புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கஸ்தூரியை கைது செய்தனர்.

    தேனியில் கோவில் நிர்வாகியை தாக்கிய கும்பல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தேனி:

    தேனி விஸ்வநாததாஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சன்னாசி (வயது 49). அப்பகுதியில் உள்ள முத்துமாரி கண்ணாத்தாள் கோவிலில் செயலாளராக உள்ளார். அந்த கோவிலில் தற்போது திருவிழா நடைபெற்றது. முளைப்பாரி ஊர்வலத்தின் போது அதே பகுதியைச் சேர்ந்த பாண்டி, முத்தையா, முத்துக்கருப்பண், வீரமணி, முத்துமாணிக்கம் ஆகியோர் சன்னாசியிடம் வந்து கோவில் பொறுப்பு குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    பின்பு திடீரென அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து தேனி போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி அருகே பழனி செட்டிபட்டி போலீஸ் சரகம் டொம்புச்சேரி சவுடாம்பிகா கோவில் தெருவைச் சேர்ந்தவர் சேதுராமன் (வயது 45). அதே ஊரைச் சேர்ந்த முருகன் என்பவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தனது விவசாய நிலத்தை குத்தகைக்கு கொடுத்துள்ளார்.

    முருகன் சரிவர குத்தகை பணம் தராததால் தனது நிலத்தை திரும்ப ஒப்படைக்கும்படி கூறியுள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதல் ஆத்திரமடைந்த முருகன் சேதுராமனை தாக்கி மிரட்டினார். இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் முருகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    யானை தாக்கி சிறுவன் பலியானதை கண்டித்து வயநாட்டில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இது குறித்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    கொழிஞ்சாம்பாறை:

    நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் புலியாளம். இங்கு வசித்து வருபவர் சந்திரன். முதுமலை புலிகள் காப்பகத்தில் நெலாக் கோட்டை சரகத்தில் வனக்காப்பளராக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மகன் மகேஷ் (11). இவர் பள்ளி விடுமுறையில் முதுமலை அடுத்துள்ள கேரள மாநிலம் முத்தங்கா சரணாலயம் பொன்குழி பகுதியில் வசிக்கும் உறவினர் வீட்டுக்கு சென்றார்.

    இவர்களது வீடு வனப்பகுதியை ஒட்டி உள்ளது. அங்கு மகேஷ் மற்று சிறுவர்களுடன் சைக்கிள் ஓட்டி விளையாடி கொண்டிருந்தான்.

    அப்போது புதர் மறைவில் இருந்து வெளியே வந்த காட்டு யானை மகேசை தாக்கியது. இதில் அவன் அதே இடத்தில் இறந்தான். முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள் சிறுவனின் உடலை மீட்டனர். உடல் பிரேத பரிசோதனைக்கு பின் புலியாளம் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

    பொன் குழி பகுதியில் அடிக்கடி காட்டு யானை ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனை தடுக்க வனத்துறையினர் தவறி விட்டனர் என காங்கிரசார் குற்றம் சாட்டினார்கள்.

    வனத்துறையினரை கண்டித்து இன்று கேரள மாநிலம் வயநாட்டில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அங்கு ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். #tamilnews
    பெருந்துறை கோவில் விழாவில் பிளக்ஸ் பேனர் வைக்கும்போது மின்சாரம் தாக்கியதில் 7 பேர் படுகாயமடைந்தனர்.
    பெருந்துறை:

    பெருந்துறை புதிய பஸ் நிலையம் பகுதியில் கோட்டைமேடு மாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பொங்கல் விழா நாளை வியாழக்கிழமை நடைபெற உள்ளது.

    இதற்காக அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கோவிலின் அருகே ரோட்டில் பிளக்ஸ் பேனர் வைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த பிளக்ஸ் பேனரை அந்த பகுதியில் இருந்த டிரான்ஸ்பார்மர் அருகே வைத்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது எதிர்பாராதவிதமாக பிளக்ஸ் பேனர் டிரான்ஸ்பார்மர் மீது சாய்ந்தது. அதனை தாங்கி பிடிக்க முயன்ற அனைவரும் டிரான்ஸ்பார்மரின் உயர் அழுத்த மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்தனர்.

    இதில் காயமடைந்த கோட்டை மேடு காலனி பகுதியை சேர்ந்த சரத் குமார் (17), நந்தகுமார் (14), வேலுமணி ஆகிய 3 பேர் பெருந்துறை தனியார் மருத்துவமனையிலும், கவுதம் (15), சேமலையப்பன் (20), கண்ணன் (15), தனுஷ் (18) ஆகிய 4 பேர் பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    மேல் சிகிச்சைக்காக அவர்கள் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பெருந்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த விபத்தில் பழுதடைந்த டிரான்ஸ்பார் மரை மின்சார வாரிய ஊழியர்கள் சரி செய்தனர். இதனால் இந்த பகுதியில் 1 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.



    எஸ்.வி.சேகர் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை கேட்ட வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.#SVeShekher
    சென்னை:

    பெண் பத்திரிக்கையாளர்களை பற்றி அவதூறு கருத்து தெரிவித்த எஸ்.வி.சேகருக்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பத்திரிக்கையாளர்கள், அவரது வீட்டின் மீது கல்வீசி தாக்கினர்.

    இந்த சம்பவம் தொடர்பாக 30 பத்திரிக்கையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், வழக்கை சி.பி.ஐ. அல்லது சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்ற கோரி வழக்கறிஞர் பிரேமானந்த் சென்னை ஐகோர்ட்டில் பொது நல மனுதாக்கல் செய்தார்.

    இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், நீதிபதி எம். தண்டபாணி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது பாதிக்கப்பட்ட எஸ்.வி.சேகர் நீதி மன்றத்தை நாடாத போது,என்ன நோக்குடன் பொது நல வழக்கு தாக்கல் செயயப்பட்டுள்ளது? அவர் நீதி மன்றத்தை நாட முடியாத அளவுக்கு ஒடுக்கப்பட்டவரா? மூன்றாவது நபருக்காக பொது நல வழக்கு தாக்கல் செய்ய முடியாது எனக்கூறி, மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். #SVeShekher
    ×