என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிளக்ஸ் பேனர் சரிந்து விழுந்ததில் பழுதான டிரான்ஸ்பார்மர் சரி செய்யும் பணி நடந்த காட்சி.
    X
    பிளக்ஸ் பேனர் சரிந்து விழுந்ததில் பழுதான டிரான்ஸ்பார்மர் சரி செய்யும் பணி நடந்த காட்சி.

    கோவில் விழாவில் பிளக்ஸ் பேனர் வைக்கும்போது மின்சாரம் தாக்கி 7 பேர் காயம்

    பெருந்துறை கோவில் விழாவில் பிளக்ஸ் பேனர் வைக்கும்போது மின்சாரம் தாக்கியதில் 7 பேர் படுகாயமடைந்தனர்.
    பெருந்துறை:

    பெருந்துறை புதிய பஸ் நிலையம் பகுதியில் கோட்டைமேடு மாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பொங்கல் விழா நாளை வியாழக்கிழமை நடைபெற உள்ளது.

    இதற்காக அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கோவிலின் அருகே ரோட்டில் பிளக்ஸ் பேனர் வைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த பிளக்ஸ் பேனரை அந்த பகுதியில் இருந்த டிரான்ஸ்பார்மர் அருகே வைத்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது எதிர்பாராதவிதமாக பிளக்ஸ் பேனர் டிரான்ஸ்பார்மர் மீது சாய்ந்தது. அதனை தாங்கி பிடிக்க முயன்ற அனைவரும் டிரான்ஸ்பார்மரின் உயர் அழுத்த மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்தனர்.

    இதில் காயமடைந்த கோட்டை மேடு காலனி பகுதியை சேர்ந்த சரத் குமார் (17), நந்தகுமார் (14), வேலுமணி ஆகிய 3 பேர் பெருந்துறை தனியார் மருத்துவமனையிலும், கவுதம் (15), சேமலையப்பன் (20), கண்ணன் (15), தனுஷ் (18) ஆகிய 4 பேர் பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    மேல் சிகிச்சைக்காக அவர்கள் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பெருந்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த விபத்தில் பழுதடைந்த டிரான்ஸ்பார் மரை மின்சார வாரிய ஊழியர்கள் சரி செய்தனர். இதனால் இந்த பகுதியில் 1 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.



    Next Story
    ×