search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யானை தாக்கி சிறுவன் பலி- வனத்துறையினரை கண்டித்து வயநாட்டில் கடையடைப்பு
    X

    யானை தாக்கி சிறுவன் பலி- வனத்துறையினரை கண்டித்து வயநாட்டில் கடையடைப்பு

    யானை தாக்கி சிறுவன் பலியானதை கண்டித்து வயநாட்டில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இது குறித்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    கொழிஞ்சாம்பாறை:

    நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் புலியாளம். இங்கு வசித்து வருபவர் சந்திரன். முதுமலை புலிகள் காப்பகத்தில் நெலாக் கோட்டை சரகத்தில் வனக்காப்பளராக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மகன் மகேஷ் (11). இவர் பள்ளி விடுமுறையில் முதுமலை அடுத்துள்ள கேரள மாநிலம் முத்தங்கா சரணாலயம் பொன்குழி பகுதியில் வசிக்கும் உறவினர் வீட்டுக்கு சென்றார்.

    இவர்களது வீடு வனப்பகுதியை ஒட்டி உள்ளது. அங்கு மகேஷ் மற்று சிறுவர்களுடன் சைக்கிள் ஓட்டி விளையாடி கொண்டிருந்தான்.

    அப்போது புதர் மறைவில் இருந்து வெளியே வந்த காட்டு யானை மகேசை தாக்கியது. இதில் அவன் அதே இடத்தில் இறந்தான். முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள் சிறுவனின் உடலை மீட்டனர். உடல் பிரேத பரிசோதனைக்கு பின் புலியாளம் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

    பொன் குழி பகுதியில் அடிக்கடி காட்டு யானை ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனை தடுக்க வனத்துறையினர் தவறி விட்டனர் என காங்கிரசார் குற்றம் சாட்டினார்கள்.

    வனத்துறையினரை கண்டித்து இன்று கேரள மாநிலம் வயநாட்டில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அங்கு ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். #tamilnews
    Next Story
    ×