search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mystery fever"

    பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று ஒரே நாளில் 30 குழந்தைகள் உள்பட 110 பேர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். #Fever
    கோவை:

    கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பன்றி, டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த 2 மாதங்களில் 35-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொள்ளாச்சி தாலுகா பகுதிகளில் ஏராளமானோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று ஒரே நாளில் 30 குழந்தைகள் உள்பட 110 பேர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களில் 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் உள்ளது. இவர்களை தனி வார்டில் சேர்த்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதே போல திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டரா பகுதிகளில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ராயம்பாளையத்தை சேர்ந்த 2 வயது சிறுவன் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். அவனை அவரது பெற்றோர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். காமராஜர் நகரை சேர்ந்த 3 சிறுமிகள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அந்த பகுதியில் தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    சேவூரில் ஒரே வீட்டில் வசிக்கும் 14 வயது சிறுமி, அவரது சகோதரன் ஆகியோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதே போல மேட்டுப்பாளையம், பொங்கலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோர் மர்ம காய்ச்சல் காரணமாக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். #Fever

    சேலத்தில் மர்ம காய்ச்சலுக்கு முதியவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சேலம்:

    சேலம் அஸ்தம்பட்டி கள்ளிக்காட்டை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 60). இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.

    பின்னர் அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் 2 நாட்களுக்கு முன்பு ஜெயராமனை அவரது உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து காய்ச்சல் வார்டில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    2 நாட்களாக தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜெயராமன் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர்.

    அஸ்தம்பட்டி பகுதியில் மேலும் பலருக்கு இதே போல காய்ச்சல் பாதிப்பு இருப்பதாகவும், சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என்றும் அந்த பகுதி மக்கள் புகார் கூறி உள்ளனர்.

    எனவே சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த பகுதியில் முகாமிட்டு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திண்டிவனம் அருகே மர்ம காய்ச்சலால் 10 நாட்களாக அவதிப்பட்டு வந்த 8 மாத பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள வடக்கொளப்பாக்கம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் எழிலரசன். கூலி தொழிலாளி.

    இவருக்கு 8 மாதத்தில் யுவஸ்ரீ என்ற பெண் குழந்தை இருந்தது. அந்த குழந்தை கடந்த 10 நாட்களாக மர்ம காய்ச்சலால் அவதிபட்டது.

    இதைத்தொடர்ந்து குழந்தை யுவஸ்ரீயை புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் குழந்தை யுவஸ்ரீ திடீரென்று பரிதாபமாக இறந்தாள்.

    இந்த சம்பவம் குறித்து பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆண்டிப்பட்டி அருகே மர்ம காய்ச்சலுக்கு பெண் பரிதாபமாக பலியானார்.
    ஆண்டிப்பட்டி:

    தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் மற்றும் மருத்துவ குழுவினர் கிராமப்பகுதியில் முகாமிட்டு சிகிச்சை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டி பகுதியிலும் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் ஆண்டிப்பட்டி மற்றும் தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு படையெடுத்து வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டி கீழஓடைத் தெருவை சேர்ந்த கனகராஜ் மனைவி மல்லிகா. கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்து வந்த மல்லிகா நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஆண்டிப்பட்டி பகுதியில் சுகாதார சீர்கேடு அதிகரித்துள்ளதாக பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் மல்லிகாவிற்கு பன்றி காய்ச்சல் இருந்ததாகவும் ஆனால் மருத்துவர்கள் வைரஸ் காய்ச்சல் என கூறியதாகவும் தெரிவித்தனர். அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டதால் மர்ம காய்ச்சல் பரவுகின்றது.

    எனவே சுகாதாரத்தை மேம்படுத்த மருத்துவ குழுவினர் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் ஒரே நாளில் 2 குழந்தைகள் மர்ம காய்ச்சலால் இறந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள எமக்கலாபுரம் கைலாசம்பட்டி காலனியைச் சேர்ந்த மணிமல்லான். அவரது மகன் யுவராஜ் (வயது 12). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த சில நாட்களாக யுவராஜூக்கு காய்ச்சல் இருந்து வந்தது. நேற்று காலை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வந்தான்.

    ரத்த பரிசோதனைக்கு எழுதி கொடுத்து விட்டு மருந்து மாத்திரைகள் வாங்கி வீட்டுக்கு சென்றான். மாலையில் மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்படவே ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டான்.

    அங்கு யுவராஜின் நிலை மோசமடையவே மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டான். ஆனால் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்து சாணார்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூரைச் சேர்ந்தவர் ரங்கநாதன். இவர் தனது மனைவி மற்றும் ஸ்ரீராம் என்ற 1 வயது ஆண் குழந்தையுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாட திண்டுக்கல் அருகே உள்ள அழகுபட்டி கிராமம் தெப்பக்குளத்துப்பட்டிக்கு வந்தார்.

    நேற்று இரவு ஸ்ரீராமுக்கு அதிக காய்ச்சலுடன் உடல் நிலை பாதிக்கப்பட்டது. திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு கொண்டு வந்தனர். ஆனால் சிகிச்சையின் போதே ஸ்ரீராம் பரிதாபமாக உயிரிழந்தான். இறந்து போன 2 பேருக்கும் என்ன காய்ச்சல் என்பதை தெரிவிக்க டாக்டர்கள் மறுத்து விட்டனர்.

    இது குறித்து ரெட்டியார் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் ஒரே நாளில் 2 குழந்தைகள் மர்ம காய்ச்சலால் இறந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    உடல்நிலை பாதிக்கப்பட்ட கணவரை கவனித்த மனைவி மர்மகாய்ச்சல் தாக்கி பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ராயபுரம்:

    திருவள்ளூர் அருகே உள்ள ஆரம்பாக்கத்தை அடுத்த தண்டலத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி முனியம்மாள் (வயது 37).

    கடந்த சில நாட்களாக செல்வத்துக்கு காய்ச்சல் இருந்தது. உடல் நிலை பாதிக்கப்பட்ட அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். முனியம்மாள் உடன் இருந்து கணவரை கவனித்து வந்தார். இதற்கிடையே முனியம்மாளுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. அவருக்கு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் உள்ள பெண்கள் வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    நேற்று காலை அவரது உடல்நிலை மிகவும் மோசம் அடைந்தது. சிகிச்சை பலனின்றி முனியம்மாள் பரிதாபமாக இறந்தார்.

    உடல்நிலை பாதிக்கப்பட்ட கணவரை கவனித்த மனைவி மர்மகாய்ச்சல் தாக்கி பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கடலூரில் மர்ம காய்ச்சலுக்கு வாலிபர் ஒருவர் பலியாகி உள்ளார். மேலும் அந்தப் பகுதியில் வேறு யாருக்காவது மர்ம காய்ச்சல் உள்ளதா? என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. #Mysteryfever
    கடலூர்:

    தமிழகத்தில் பல்வேறு இடங்களில் டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றி காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இதை தடுக்க சுகாதாரத்துறை சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    கடலூர் மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தினமும் 300-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெறுகின்றனர். அரசு ஆஸ்பத்திரிக்கு நோயாளிகள் வருகை அதிகரித்து உள்ளது.

    காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்து பார்த்ததில் இதுவரை 14 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ள தனி வார்டில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதேபோல் பன்றிகாய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 பேர் புதுவை மற்றும் சென்னையில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் மர்ம காச்சலுக்கு கடலூரில் வாலிபர் ஒருவர் பலியாகி உள்ளார். இதுபற்றிய விபரம் வருமாறு:-

    கடலூர் புருகீஸ்பேட்டையை சேர்ந்தவர் விமல் (வயது 33). இவருக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்தது. இதனால் அவர் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இவர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளது தெரியவந்தது. இது குறித்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் கீதா உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ குழுவினர் கடலூர் புருகீஸ்பேட்டை பகுதியில் பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கி வருகின்றனர்.

    மேலும் அந்தப் பகுதியில் வேறு யாருக்காவது மர்ம காய்ச்சல் உள்ளதா? என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. #Mysteryfever

    தூத்துக்குடியில் மர்மக் காய்ச்சலுக்கு பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Swineflu #Dengue

    முள்ளக்காடு:

    தூத்துக்குடி மாவட்டத்தில் மர்மக்காய்ச்சல் பரவி வருவதையடுத்து பல்வேறு தடுப்பு நடவடிகைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனினும் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. தூத்துக்குடியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு முள்ளக்காடு வடக்கு தெருவை சேர்ந்த முருகன் என்பவரின் மனைவி சாந்தினி என்ற கர்ப்பிணி மர்ம காய்ச்சல் காரணமாக இறந்தார். பின்னர் கழுகுமலையை சேர்ந்த ஒருவர் மர்ம காய்ச்சலுக்கு உயிரிழந்தார்.

    இதையடுத்து மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் அரசு, தனியார் மருத்துவ மனைகளிலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சிகிச்சை பெறுகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி அத்திமரப்பட்டி 56-வது வார்டுக்கு உட்பட்ட வேதக் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரசிகாமணி. விவசாயி. இவரது மனைவி கெப்சிபாய். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

    இந்நிலையில் கெப்சி பாய்க்கு திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, ஏற்கனவே மர்மகாய்ச்சலுக்கு சிலர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் கெப்சிபாய் என்ற பெண்ணும் உயிரிழந்துள்ளார். எனவே சுகாதாரத்துறையினரும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தீவிர சுகாதார பணிகளை முடுக்கிவிட்டு தீவிர தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். #Swineflu #Dengue

    சேலம் மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு மேலும் ஒரு சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #MysteryFever
    சேலம்:

    சேலம் அய்யந்திரு மாளிகை புத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி சுவிதா. இவர்களுக்கு ரித்தீஸ் (வயது 7), ஸ்ரீசாந்த் (4) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீசாந்த்துக்கு காய்ச்சல் ஏற்பட்டது. காய்ச்சலுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. நேற்று இரவு வீட்டில் இருந்தபோது திடீரென்று ஸ்ரீசாந்துக்கு மயக்கம் ஏற்பட்டது. உடனே அவரது பெற்றோர்கள் அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஸ்ரீசாந்த் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் சிறுவன் ஸ்ரீசாந்த் உடலை பார்த்து கதறி அழுதனர். மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பீதியை ஏற்படுத்தியது. இது குறித்து தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே மர்ம காய்ச்சலுக்கு கர்ப்பிணி பெண் உள்பட 4 பேர் இறந்துவிட்டனர். தற்போது மேலும் ஒரு சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  #MysteryFever



    தொட்டியத்தில் மர்ம காய்ச்சலுக்கு ஒருவயது குழந்தை பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    தொட்டியம்:

    தமிழகத்தில் பல இடங்களில் டெங்கு, பன்றி காய்ச்சலால் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந் நிலையில் தொட்டியத்தில் மர்ம காய்ச்சலுக்கு ஒருவயது குழந்தை பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள ஏழூர்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் இளையராஜா. எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ரோஷிகா (வயது 1) என்ற பெண் குழந்தை உள்ளது. 

    ரோஷிகாவிற்கு நேற்று முன்தினம் மதியம் திடீரென மர்மகாய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சையளிப்பதற்காக சென்றனர். அங்கு குழந்தை ரோஷிகாவின் ரத்த மாதிரியை பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சிகிச்சையளித்து வந்த நிலையில் குழந்தை ரோஷிகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மர்ம காய்ச்சலுக்கு குழந்தை பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே மர்ம காய்ச்சலுக்கு 4 வயது சிறுவன் பலியான சம்பவம் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.
    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள இடங்கணசாலை கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம், விசைத்தறி தொழிலாளி. இவரது மனைவி சந்திரா. இவர்களது 2 மகனுக்கும், ஒரு மகளுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.

    தொடர்ந்து 3 பேரும் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலன்இன்றி இளைய மகன் ரோகித் (வயது 4). நேற்று இரவு பரிதாபமாக உயிர் இழந்தார். மற்ற 2 குழந்தைகளும் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இடங்கணசாலை பகுதியில் இதேபோல மேலும் பலருக்கு மர்ம காய்ச்சல் பாதிப்பு உள்ளது. ஆனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த பகுதிக்கு சென்று பார்வையிடவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

    மேலும் உயிர் இழப்பை தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த பகுதியில் முகாமிட்டு காய்ச்சல் பரவுவதை தடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே சேலம் மாவட்டத்தில் மர்ம காய்ச்சல் பாதிப்பால் மகுடஞ்சாவடியை சேர்ந்த 8 மாத கர்ப்பிணி பெண் சுகன்யா, வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த மாணவன் சத்ரியன் மற்றும் இளம்பிள்ளைய சேர்ந்த தறி தொழிலாளி ஒருவரும் பலியாகி இருந்தனர்.

    தற்போது 4 வயது சிறுவனும் பலியாகி உள்ளதால் சேலம் மாவட்டத்தில் ஒரு மாதத்தில் மட்டும் காய்ச்சல் சாவு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    சேலம் மாவட்டத்தில் ஓமலூர், மேட்டூர், சங்ககிரி, ஆத்தூர், வாழப்பாடி உள்பட பல பகுதிகளில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்டோர் தினமும் சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

    இதில் பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்போர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் பொதுமக்களிடையே ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது.

    எனவே சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த வேண்டும் என்பது அனைவரின் எதிர் பார்ப்பாக உள்ளது.
    கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சல், மர்ம காய்ச்சலுக்கு சிறுமி உள்பட 4 பேர் பலியாகி உள்ளனர். #Swineflu #Dengue
    கோவை:

    கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பன்றி, டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு இதுவரை 10-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    காய்ச்சல் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் காய்ச்சலின் தாக்கம் குறையவில்லை.

    அரசு ஆஸ்பத்திரியில் கூட்டம் நிரம்பி வழிகிறது. கோவையில் தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் பாதிப்பு காரணமாக ஏராளமானோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு தினசரி ஏராளமானோர் வருகின்றனர். இதனால் காய்ச்சல் வார்டுகளில் நோயாளிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    காய்ச்சல் அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு பன்றி, டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என டாக்டர்கள் சோதனை செய்து அங்கு திறக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் கோவை வெள்ளலூரை சேர்ந்த நாகராஜ் (வயது 62). இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து அவரது உறவினர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு டாக்டர்கள் நாகராஜின் ரத்தத்தை பரிசோதனை செய்தபோது அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து நேற்று இரவு நாகராஜை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனளிக்காமால் இன்று அதிகாலை நாகராஜ் பரிதாபமாக இறந்தார்.

    இதே போல சுங்கம் பைபாஸ் ரோட்டை சேர்ந்த நாகமணி (45). இவர் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இரவு திடீரென நாகமணியின் உடல் நிலை மிகவும் மோசமானது. இதனையடுத்து அவரை உறவினர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு வந்த 1 மணிநேரத்தில் நாகமணி பரிதாபமாக இறந்தார்.

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள ஆர். வேலூரை சேர்ந்தவர் நாகராஜ் (55). இவரும் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக நேற்று முன்தினம் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அவரை டாக்டர்கள் அங்குள்ள காய்ச்சல் வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு நாகமணி பரிதாபமாக இறந்தார்.

    தாராபுரத்தை அடுத்த கொண்டரசம்பாளையம் மாருதி நகரை சேர்ந்தவர் கார்த்திக். பனியன் தொழிலாளி. இவரது மனைவி தேவி. இவர்களுக்கு சன்சியா(4) என்ற பெண் குழந்தை இருந்தது. இக்குழந்தைக்கு கடந்த மாதம் 18 -ந் தேதி காய்ச்சல் ஏற்பட்டதால் தாராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 2 நாள் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் காய்ச்சல் குணமாகாததால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிறுமியை பரிசோதித்தபோது பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி நேற்று மதியம் சிகிச்சை பலன் இன்றி பலனின்றி இறந்தார். இதனால் கொண்டரசம்பாளையம் பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கினர்.

    பலியான சன்சியாவின் பெற்றோருக்கு பன்றி காய்ச்சல் நோய் தடுப்பு மாத்திரைகள் வழங்கி அவர்களையும் டாக்டர்கள் பரிசோதனை செய்தனர்.

    தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு 12 பேரும், டெங்கு காய்ச்சலக்கு 3 பேரும், மர்ம காய்ச்சலுக்கு 56 பேர் என மொத்தம் 71 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். #Swineflu #Dengue
    ×