search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dindigul Govt Hospital"

    • அடிக்கடி இரவு நேரங்களில் நோயாளிகளுக்கு தெரியாமல் அவர்களது பணம் மற்றும் செல்போன்கள் திருடுபோவது வாடிக்கையாக உள்ளது.
    • விஷமுறிவு, தலைக்காயம் சிகிச்சை பிரிவில் 10 நோயாளிகளிடமும், ஒரு ஊழியரிடமும் இருந்த செல்போன்கள் மற்றும் பணம் ரூ.3000 திருடுபோனது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் ஆயிரக்கணக்கானோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு மருத்துவகல்லூரி தலைைம மருத்துவமனையாக இருப்பதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிகிச்சைக்கு வருகின்றனர்.

    இங்கு அடிக்கடி இரவு நேரங்களில் நோயாளிகளுக்கு தெரியாமல் அவர்களது பணம் மற்றும் செல்போன்கள் திருடுபோவது வாடிக்கையாக உள்ளது. பெரும்பாலும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வசதி இல்லாதவர்களே அரசு ஆஸ்பத்திரியை நாடி வருகின்றனர். இதில் பலருக்கு உதவியாக யாரும் இருப்பதில்லை.

    இதுபோன்ற நோயாளிகளை குறிவைத்து திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. சிகிச்சைக்கு வந்த இடத்தில் திருடுபோனது குறித்து பெரும்பாலும் நோயாளிகள் போலீஸ் நிலையத்தில் புகார் அளிப்பது கிடையாது.

    இதனைபயன்படுத்தி கொண்டு கொள்ளையர்கள் தொடர்ந்து தங்கள் கைவரிசையை காட்டி வருகின்றனர். திருடப்பட்ட செல்ேபான்களை கிடைத்த விலைக்கு வெளியில் விற்று பணம் பார்த்து விடுகின்றனர்.

    நேற்றுஇரவு விஷமுறிவு, தலைக்காயம் சிகிச்சை பிரிவில் 10 நோயாளிகளிடமும், ஒரு ஊழியரிடமும் இருந்த செல்போன்கள் மற்றும் பணம் ரூ.3000 திருடுபோனது. காலையில் எழுந்தவுடன் தங்களது செல்போனை தேடியபோது அது திருடுபோனது தெரியவந்தது. இதுவரை இதேபோல 10-க்கும் மேற்பட்ட நபர்களிடம் திருடுபோனது இதுவே முதல்முறை என்பதால் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    முக்கிய இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் இருந்தபோதும் அன்னியநபர்கள் யார் வருகிறார்கள் என கண்காணிக்கப்படாததால் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. எனவே இக்கும்பலை போலீசார் ரகசியமாக கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்து 5 நாட்களே ஆன சிசுவை விட்டுச் சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கோசுகுறிச்சியைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி செல்வராணி (வயது 25). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரசவத்துக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக இருந்த நிலையில் இன்று காலை திடீரென குழந்தை மட்டும் அழுது கொண்டு இருந்தது. அருகில் இருந்த பெண்கள் செல்வராணியை தேடிப்பார்த்தனர்.

    ஆனால் அவர் கிடைக்கவில்லை. செவிலியர்கள் மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் அனைவரும் நீண்ட நேரம் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் அந்தக் குழந்தையை மீட்டு சிசு பராமரிப்பு மையத்தில் சேர்த்தனர். அங்கு அந்த குழந்தை பராமரிக்கப்பட்டு வருகிறது.

    குழந்தையை விட்டுச் சென்ற தாய் குறித்து நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் நத்தம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு செல்வராணியை தேடி வருகின்றனர்.

    அவர் உண்மையிலேயே கோசுகுறிச்சியைச் சேர்ந்தவரா? அல்லது வேறு பகுதியைச் சேர்ந்தவரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்து 5 நாளான குழந்தையை தவிக்க விட்டு தாய் சென்ற சம்பவம் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்டதின் எதிரொலியாக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் மாவட்ட கலெக்டர் வினய் அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.

    திண்டுக்கல்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த 23 வயது கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்டது. இதுகுறித்து நடந்த விசாரணையில் தற்காலிக ஊழியர்கள் ரத்தத்தை ஆய்வு செய்யாமல் கவனக்குறைவால் அஜாக்கிரதையாக செயல்பட்டது தெரியவந்ததால் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    இதன் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் அதிரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    திண்டுக்கல் தலைமை அரசு ஆஸ்பத்திரியில் மாவட்ட கலெக்டர் வினய் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். ரத்த மாதிரி, தேதி உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்தார். மேலும் ஆய்வுக்கு வைக்கப்பட்டுள்ள ரத்தமாதிரிகளை முறையாக சோதனை செய்யப்பட்டு எடுக்கப்பட்டதா? என்பது குறித்தும் ஆய்வு செய்தார். இதனால் அரசு ஆஸ்பத்திரியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் ஒரே நாளில் 2 குழந்தைகள் மர்ம காய்ச்சலால் இறந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள எமக்கலாபுரம் கைலாசம்பட்டி காலனியைச் சேர்ந்த மணிமல்லான். அவரது மகன் யுவராஜ் (வயது 12). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த சில நாட்களாக யுவராஜூக்கு காய்ச்சல் இருந்து வந்தது. நேற்று காலை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வந்தான்.

    ரத்த பரிசோதனைக்கு எழுதி கொடுத்து விட்டு மருந்து மாத்திரைகள் வாங்கி வீட்டுக்கு சென்றான். மாலையில் மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்படவே ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டான்.

    அங்கு யுவராஜின் நிலை மோசமடையவே மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டான். ஆனால் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்து சாணார்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூரைச் சேர்ந்தவர் ரங்கநாதன். இவர் தனது மனைவி மற்றும் ஸ்ரீராம் என்ற 1 வயது ஆண் குழந்தையுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாட திண்டுக்கல் அருகே உள்ள அழகுபட்டி கிராமம் தெப்பக்குளத்துப்பட்டிக்கு வந்தார்.

    நேற்று இரவு ஸ்ரீராமுக்கு அதிக காய்ச்சலுடன் உடல் நிலை பாதிக்கப்பட்டது. திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு கொண்டு வந்தனர். ஆனால் சிகிச்சையின் போதே ஸ்ரீராம் பரிதாபமாக உயிரிழந்தான். இறந்து போன 2 பேருக்கும் என்ன காய்ச்சல் என்பதை தெரிவிக்க டாக்டர்கள் மறுத்து விட்டனர்.

    இது குறித்து ரெட்டியார் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் ஒரே நாளில் 2 குழந்தைகள் மர்ம காய்ச்சலால் இறந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×