search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் ஊழியர், நோயாளிகளின் செல்போன்- பணம் திருட்டு
    X

    கோப்பு படம்

    திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் ஊழியர், நோயாளிகளின் செல்போன்- பணம் திருட்டு

    • அடிக்கடி இரவு நேரங்களில் நோயாளிகளுக்கு தெரியாமல் அவர்களது பணம் மற்றும் செல்போன்கள் திருடுபோவது வாடிக்கையாக உள்ளது.
    • விஷமுறிவு, தலைக்காயம் சிகிச்சை பிரிவில் 10 நோயாளிகளிடமும், ஒரு ஊழியரிடமும் இருந்த செல்போன்கள் மற்றும் பணம் ரூ.3000 திருடுபோனது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் ஆயிரக்கணக்கானோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு மருத்துவகல்லூரி தலைைம மருத்துவமனையாக இருப்பதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிகிச்சைக்கு வருகின்றனர்.

    இங்கு அடிக்கடி இரவு நேரங்களில் நோயாளிகளுக்கு தெரியாமல் அவர்களது பணம் மற்றும் செல்போன்கள் திருடுபோவது வாடிக்கையாக உள்ளது. பெரும்பாலும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வசதி இல்லாதவர்களே அரசு ஆஸ்பத்திரியை நாடி வருகின்றனர். இதில் பலருக்கு உதவியாக யாரும் இருப்பதில்லை.

    இதுபோன்ற நோயாளிகளை குறிவைத்து திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. சிகிச்சைக்கு வந்த இடத்தில் திருடுபோனது குறித்து பெரும்பாலும் நோயாளிகள் போலீஸ் நிலையத்தில் புகார் அளிப்பது கிடையாது.

    இதனைபயன்படுத்தி கொண்டு கொள்ளையர்கள் தொடர்ந்து தங்கள் கைவரிசையை காட்டி வருகின்றனர். திருடப்பட்ட செல்ேபான்களை கிடைத்த விலைக்கு வெளியில் விற்று பணம் பார்த்து விடுகின்றனர்.

    நேற்றுஇரவு விஷமுறிவு, தலைக்காயம் சிகிச்சை பிரிவில் 10 நோயாளிகளிடமும், ஒரு ஊழியரிடமும் இருந்த செல்போன்கள் மற்றும் பணம் ரூ.3000 திருடுபோனது. காலையில் எழுந்தவுடன் தங்களது செல்போனை தேடியபோது அது திருடுபோனது தெரியவந்தது. இதுவரை இதேபோல 10-க்கும் மேற்பட்ட நபர்களிடம் திருடுபோனது இதுவே முதல்முறை என்பதால் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    முக்கிய இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் இருந்தபோதும் அன்னியநபர்கள் யார் வருகிறார்கள் என கண்காணிக்கப்படாததால் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. எனவே இக்கும்பலை போலீசார் ரகசியமாக கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×