search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Motor cycle"

    • பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் கீழவாசலை சேர்ந்தவர் முகமது ரசூல் (வயது 24).

    சம்பவத்தன்று இரவு இவர் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார்.

    மறுநாள் பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை.

    அதிர்ச்சி அடைந்த இவர் பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இது குறித்து தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அதில் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்த சூர்யா (வயது 27) என்பவர் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து சூர்யாவை பிடித்து போலீசார் கைது செய்தனர்.

    • அமல்ராஜ் பிரபு நேற்று மதியம் எப்போதும் வென்றானில் இருந்து வேலைக்காக தூத்துக்குடிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.
    • சுப்ரமணியபுரம் விளக்கு அருகே சென்ற போது அங்கு நின்று கொண்டு இருந்த கண்டெய்னர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

    புதியம்புத்தூர்:

    தூத்துக்குடி தாமஸ் நகரை சேர்ந்தவர் அமல்ராஜ் பிரபு (வயது 54). இவர் எப்போதும்வென்றான் மின்வாரிய அலுவலகத்தில் லைனிங் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று மதியம் எப்போதும் வென்றனில் இருந்து வேலைக்காக தூத்துக்குடிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    சுப்ரமணியபுரம் விளக்கு அருகே சென்ற போது அங்கு நின்று கொண்டு இருந்த கண்டெய்னர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அமல்ராஜ் பிரபு பரிதாபமாக உயிரிழந்தார்.

    தகவலறிந்ததும் எப்போதும் வென்றான் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்று தனது உறவினர் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வ தற்காக ஆரோக்கியசாமி தனது மகன் டிக்சனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
    • தூத்துக்குடி மட்டக்கடை குரூஸ்புரத்தை சேர்ந்த ரித்திஸ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், சாமுவேல் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளில் பின்னால் மோதியது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பூபால ராயபுரம் அருகே உள்ள சாமுவேல்புரத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. மீனவர். இவரது மகன் டிக்சன்(வயது 7) அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தான்.

    இந்நிலையில் நேற்று தனது உறவினர் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வ தற்காக ஆரோக்கியசாமி தனது மகன் டிக்சனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் நிகழ்ச்சி முடிந்ததும் இருவரும் இரவில் வீடு திரும்பினர். அவர்கள் தெற்கு கடற்கரை சாலை இனிகோ நகர் பகுதியில் வந்த போது தூத்துக்குடி மட்டக்கடை குரூஸ்புரத்தை சேர்ந்த ரித்திஸ்(21) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், சாமுவேல் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கி ளில் பின்னால் மோதியது.

    இதில் தந்தை, மகன் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் விரைந்து சென்று காயமடைந்த வர்க ளை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர். ஆனால் செல் லும் வழியி லேயே டிக்சன் பரிதாபமாக உயிரிழந்தான். ஆரோக்கிய சாமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக போலீ சார் வழக்குப்பதிவு செய்து ரித்திசிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • மோட்டார் சைக்கிள் சாலையோரம் நின்று கொண்டிருந்த போலீஸ் காரர் மீது மோதியது.
    • இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    மெலட்டூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, மெலட்டூர் போலீஸ் ஸ்டேஷனல் ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் பழனிவேல் (வயது 39).

    இவர் கொத்தங்குடி அருகே உள்ள உதாரமங்களம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார் அப்போது அந்த வழியாக ராமநாதன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் நின்று கொண்டிருந்த ஏட்டு பழனிவேல் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பழனிவேல் பரிதாபமாக இறந்தார்.

    தகவல் அறிந்த மெலட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழனி வேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து தொடர்பாக தஞ்சை எஸ் பி ஆசிஷ் ராவத் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    விபத்தில் இறந்த ஏட்டு பழனிவேலுக்கு திருமணமாகி சத்தியா 32 என்ற மனைவியும், சாய் பிரசாத் 9, பத்ரிநாத் 7 என்ற இரு மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு திருமண மண்டபம் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றார்.
    • திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே உள்ள காச வளநாடு புதூர் கீழத்தெருவை சேர்ந்தவர் அப்பர் (வயது 52 ). சம்பவத்தன்று இவர் தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு திருமண மண்டபம் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றார்.

    திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை.

    அதிர்ச்சி அடைந்த இவர் பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இது குறித்து அவர் தமிழ் பல்கலைக்கழகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மோட்டார் சைக்கிளை தேடி வருகின்றனர்.

    • வீட்டின் எதிரே மேய்ந்து கொண்டிருந்த சாந்தகுமார் என்பவர் ஆடுகளில் ஒன்றை திடீரென காணவில்லை.
    • அவர் அக்கம் பக்கத்தில் தேடிய போது 2 வாலிபர்கள் ஆட்டை தூக்கிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் செல்வதாக சிலர் கூறியுள்ளனர்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி ராஜமன்னியபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருபவர் சாந்தகுமார் (வயது42). இவர் தனது வீட்டில் ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று காலை சாந்தகுமார் வழக்கம் போல தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு திறந்து விட்டுள்ளார்.

    ஆடு திருட்டு

    வீட்டின் எதிரே மேய்ந்து கொண்டிருந்த அவரது ஆடுகளில் ஒன்றை திடீரென காணவில்லை. அவர் அக்கம் பக்கத்தில் தேடிய போது 2 வாலிபர்கள் ஆட்டை தூக்கிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் செல்வதாக சிலர் கூறியுள்ளனர்.

    உடனே சுதாரித்துக் கொண்ட சாந்தகுமார் ஆறுமுகநேரி சந்தைக்கு விரைந்து சென்றுள்ளார். அங்கு தனது ஆட்டை இரு நபர்கள் ரூ. 10 ஆயிரத்துக்கு விற்பனை செய்ய வேறு ஒருவரிடம் பேசி கொண்டிருப்பதை கண்டார்.

    2 பேர் கைது

    உடனடியாக இதுபற்றி அவர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் துரிதமாக செயல்பட்டு ஆடு திருடிய அந்த 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் காயல்பட்டினம் ரத்தினபுரியை சேர்ந்த கார்த்திக்ராஜா (33), முத்துசாமி (34) என்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ஆடு மீட்கப்பட்டது. ஆடு திருடுவதற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    • தூத்துக்குடி 2-ம் கேட் ஆண்டாள் தெரு பகுதி வழியாக செல்லும் போது அந்த வழியாக அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் பாக்கியலட்சுமி படுகாயம் அடைந்தார்.
    • தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம்ஆனந்த், போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கந்தசாமிபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி பாக்கியலட்சுமி (வயது 62). இவர் அப்பகுதியில் உள்ள வீடுகளில் வேலை செய்து வருகிறார்.

    மோட்டார் சைக்கிள் மோதி பலி

    இந்நிலையில் பாக்கியலட்சுமி வழக்கம் போல வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். தூத்துக்குடி 2-ம் கேட் ஆண்டாள் தெரு பகுதி வழியாக செல்லும் போது அந்த வழியாக அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார். இதனால் பாக்கியலட்சுமி சம்பவ இடத்திலே துடிதுடித்து உயிரிழந்தார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம்ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் ரத்தின பாண்டி மற்றும் போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    வழக்குப்பதிவு

    மேலும் விபத்து ஏற்படுத்திய தூத்துக்குடி யாதவர் 2-வது தெருவை சேர்ந்த கல்லூரி மாணவர் ஆரி முகமதுகான் மீது வழக்குப்பதிவு செய்து அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் மாவட்ட காவல்துறையின் அறிவிப்புகள் மற்றும் சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறி மோட்டார் சைக்கிளில் சைலன்ஸர்களை அகற்றிவிட்டு அதி வேகமாக வாகனங்களை ஓட்டி சத்தத்தை எழுப்பி வருகின்றனர். இதனால் சாலைகளில் செல்லும் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். மேலும் அதிகமான விபத்துகளும் நடைபெற்று வருகிறது.

    தூத்துக்குடியை சுற்றியுள்ள முக்கிய சாலைகளில் வலது புறமாக நேர் எதிர் எதிரே வாகனம் ஓட்டுவதும் அதிகரித்து வருகிறது. இது போன்ற வாகன ஓட்டிகள் மீதும், சாலைகளில் அறிவிப்புகளை மீறி வாகனங்களை நிறுத்துபவர்கள் மீதும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அந்தோணி ஸ்டாலின் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • எதற்காக இங்கே நிறுத்தப் பட்டது? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் டோல் கேட், ஆய்வேலி அகரம் உள்ளிட்ட பகுதியில் திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாலை ஓரங்களில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டு இருந்த 45 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். அதன் உரிமையாளர் யார்? எதற்காக இங்கே நிறுத்தப் பட்டது? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • ராய்ச்சூரில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது.
    • ரெயில்வே சுரங்க சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கியது.

    ராய்ச்சூர் :

    கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் மாநிலத்தில் சில பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வடகர்நாடக மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் சாலை, சுரங்க சாலைகள், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ராய்ச்சூரில் ரெயில்வே சுரங்க சாலையில் தண்ணீர் தேங்கியதால் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளை தலையில் சுமந்து சென்ற சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

    ராய்ச்சூரில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. இந்த கனமழை காரணமாக ராய்ச்சூர் அருகே சக்திநகர் ஆர்.டி.பி.எஸ். பகுதியில் உள்ள ரெயில்வே சுரங்க சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார்.

    சுரங்க சாலையில் தண்ணீர் தேங்கி கிடப்பதை பார்த்த அவர், எவ்வாறு கடந்து செல்லலாம் என்று யோசித்துள்ளார். பின்னர் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி, தனது பேண்ட்டை தண்ணீர் படாதவாறு தொடை வரை மடித்தார். பின்னர் திடீரென்று தனது மோட்டார் சைக்கிளை அலேக்காக தூக்கி தலையில் வைத்து கொண்டு 'பாகுபலி' பட பாணியில் சுரங்கச்சாலையை கடந்து சென்றார். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • 7 குழந்தைகளின் உயிரை பணயம் வைத்ததற்காக அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
    • காவல் துறையினர் குழந்தைகளை ஆபத்தான வகையில் அழைத்துச் சென்ற அந்த நபரை கைது செய்தனர்.

    மும்பை:

    மும்பையைச் சேர்ந்த நபர் மோட்டார் சைக்கிளில் 7 குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வீடியோ டுவிட்டரில் வைரலானது.

    மோட்டார் சைக்கிள் முன்பக்கத்தில் 2 குழந்தைகளும், பின்பக்கத்தில் 3 குழந்தைகளும, மேலும் 2 குழந்தைகள் நின்று கொண்டு பயணிப்பதும் அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது.

    இது குறித்து அந்த டுவிட்டர் பயனாளர் "பொறுப்பற்ற பித்துப் பிடித்த நபர் 7 குழந்தைகளுடன் சவாரி செய்கிறார். 7 குழந்தைகளின் உயிரை பணயம் வைத்ததற்காக அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

    இந்த குழந்தைகளின் பெற்றோர் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்" என்று பதிவிட்டிருந்தார். போக்குவரத்து காவல் துறையினர் குழந்தைகளை ஆபத்தான வகையில் அழைத்துச் சென்ற அந்த நபரை கைது செய்தனர்.

    மேலும் அந்த நபர் மீது அளவுக்கு அதிகமாக குழந்தைகளை ஏற்றிச் சென்று உயிருக்கு ஆபத்தை விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    • 10 ந் தேதி திருப்பனந்தாள் மதுபான கடையில் நிறுத்தி விட்டு திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே மானம்பாடி சேர்ந்தவர்கிளின்டன்.

    இவர் தனது மோட்டார் சைக்கிளை கடந்த மாதம் 10 ந் தேதி திருப்பனந்தாள் மதுபான கடையில் நிறுத்தி விட்டு திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை.

    இது குறித்து அவர் திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரணையில் காட்டுமன்னார் கோவில் ரஜினி (வயது 38) அதே பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (35) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளை திருடி விற்பதற்காக உட பேரியைச் சேர்ந்த வரதராஜன் (வயது 39) என்பவரிடம் கொடுத்துள்ளதாக தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து போலீசார் மூவரையும் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

    • உடுமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
    • அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    உடுமலை:

    உடுமலை எஸ்.வி புரத்தைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவரது மகன் பிரதீப் குமார் (வயது 32).கடந்த மாதம் 18 ந்தேதி அவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர் யாரோ திருடி சென்று விட்டனர். இது சம்பந்தமாக உடுமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் பழனி கலிங்கநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரது மகன் பிரவீன் குமார்(38) என்பவர் வாகனத்தை திருடியது தெரிய வந்தது.இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். 

    ×