search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maharashtra political crisis"

    • சிவசேனா கூட்டணி ஆட்சி பெரும்பான்மையை இழந்து இருப்பதால் மகாராஷ்டிரா அரசியலில் குழப்பம் நீடிக்கிறது.
    • எதிர்க்கட்சியான பா.ஜனதா புதிய அரசை அமைக்கும் முயற்சியில் களம் இறங்கி உள்ளது. ஏக்நாத் ஷிண்டேயின் ஆதரவுடன் பா.ஜனதா ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளது.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் ஆகிய கட்சிகளை கொண்ட மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக இருக்கிறார்.

    இந்த நிலையில் சிவசேனா மூத்த தலைவரும், மந்திரியுமான ஏக்நாத் ஷிண்டே கடந்த 20-ந்தேதி சிவசேனா தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளார். தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகி பா.ஜனதாவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று கோரி அவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அணி திரட்டினார்.

    ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதா ஆட்சி நடைபெறும் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஓட்டலில் முகாமிட்டு உள்ளனர்.

    மொத்தம் உள்ள 55 சிவசேனா எம்.எல்.ஏக்களில் 38 பேர் ஏக்நாத் ஷிண்டே பக்கம் உள்ளனர். சில சுயேட்சை எம்.எல்.ஏ.க்களும் அவருடன் உள்ளனர். மொத்தம் 50 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

    அதிருப்தி எம்.எல்.ஏக்களில் பெரும்பாலானோர் ஏக்நாத் ஷிண்டே பக்கம் இருப்பதால் உத்தவ் தாக்கரே ஆட்சி பெரும்பான்மையை இழந்து கவிழும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து தனது அரசை காப்பாற்ற ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை உத்தவ் தாக்கரே மேற்கொண்டார்.

    சிவசேனா அனுப்பிய கடிதத்தை ஏற்று அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 16 பேருக்கும் கடந்த சனிக்கிழமை துணை சபாநாயகர் நர்ஹாரி ஜிர்வால் தகுதி நீக்க நோட்டீசை அனுப்பினார். இதற்கு நேற்று மாலை 5 மணிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

    இதை எதிர்த்து ஷிண்டே அணியைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்களும் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.

    உத்தவ் தாக்கரே அரசுக்கு ஆதரவை தாங்கள் வாபஸ் பெற்று விட்டதாகவும், அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாகவும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்து இருந்தனர். தகுதி நீக்கம் செய்ய துணை சபாநாயகருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.

    இந்த மனு நீதிபதிகள் சூரியகாந்த், பர்டிவாலா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீதான மகாராஷ்டிரா மாநில சட்டசபை செயலகத்தின் தகுதி நீக்க நடவடிக்கைக்கு ஜூலை 12-ந்தேதி வரை இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஜூலை 12-ந்தேதி மாலை 5.30 மணிக்குள் தகுதி நீக்க நோட்டீசுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    மேலும் சட்டசபையில் பலப்பரீட்சை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற மகாராஷ்டிரா அரசு விடுத்த கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நிராகரித்தனர்.

    சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு உத்தவ் தாக்கரேவுக்கு பெரும் பின்னடைவாகும். அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு தலைமை வகித்து வரும் ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல் சுற்று வெற்றியாக கருதப்படுகிறது.

    சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு குறித்து ஏக்நாத் ஷிண்டே கூறும்போது, "தகுதி நீக்க நடவடிக்கைக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு பால்தாக்கரேவின் இந்துத்துவா கொள்கைக்கும், எனது குரு ஆனந்த் திதேகவின் லட்சியத்துக்கும் கிடைத்த வெற்றியாகும்" என்றார்.

    சிவசேனா கூட்டணி ஆட்சி பெரும்பான்மையை இழந்து இருப்பதால் மகாராஷ்டிரா அரசியலில் குழப்பம் நீடிக்கிறது. எதிர்க்கட்சியான பா.ஜனதா புதிய அரசை அமைக்கும் முயற்சியில் களம் இறங்கி உள்ளது. ஏக்நாத் ஷிண்டேயின் ஆதரவுடன் பா.ஜனதா ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளது.

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மகாராஷ்டிரா முன்னாள் பா.ஜனதா முதல்-மந்திரி பட்னாவிஸ் ஆகியோரை ஏக்நாத் ஷிண்டே கடந்த சில தினங்களுக்கு முன்பு வதேதாராவில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். தற்போது சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து புதிய ஆட்சியை அமைப்பதில் பா.ஜனதா தீவிரமாக இருக்கிறது.

    ஏக்நாத் ஷிண்டே ஓரிரு நாட்களில் மும்பை வருகிறார். அவர் கவர்னர் கோஷியாரியை சந்தித்து மனு ஒன்றை அளிக்க உள்ளார். மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது. இதனால் சட்டசபையில் உத்தவ் தாக்கரே அரசுக்கு மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.

    மற்றொரு திட்டமாக பா.ஜனதாவே கவர்னரை சந்தித்து மனு கொடுக்க முடிவு செய்துள்ளது. சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கும். இதையேற்று உத்தவ் தாக்கரே பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என்று கவர்னர் உத்தரவிடுவார்.

    சட்டசபையில் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்து விடும். அப்போது புதிய ஆட்சியை அமைக்கலாம் என்று பா.ஜனதா கருதுகிறது. வருகிற 3-ந்தேதிக்குள் புதிய அரசை பா.ஜனதா அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மகாராஷ்டிரா சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்ய ஏக்நாத் ஷிண்டே முடிவு செய் துள்ளார். இது தொடர்பாக அவர் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். அரசியல் அமைப்பு விதிகள் குறித்து அவர் மூத்த வக்கீல்களிடம் கேட்டு அறிந்தார்.

    மகாராஷ்டிராவில் அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு அரசியல் பரபரப்பு நீடித்து இருக்கும்.

    • கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா அரசியலில் அடுத்தடுத்த திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.
    • எங்கள் கட்சியினரே எங்களுக்கு துரோகம் செய்து விட்டார்கள்.

    மும்பை :

    மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சியில் எதிர்ப்பு அணி உருவாகி உள்ளது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அசாம் மாநிலம் கவுகாத்தி ஓட்டலில் முகாமிட்டு, பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து ஆட்சியமைக்க வேண்டும் என்று சிவசேனாவை வலியுறுத்தி வருகின்றனர். இதனால் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்.

    இந்த சர்ச்சையால் கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா அரசியலில் அடுத்தடுத்த திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இந்த நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் குறித்து சிவசேனா தொண்டர்கள் மத்தியில் சுற்றுலாத்துறை மந்திரி ஆதித்யா தாக்கரே கூறியதாவது:-

    காங்கிரஸும், தேசியவாத காங்கிரஸ் கட்சியினரும் எங்களுக்கு துரோகம் செய்வார்கள் என்று பலர் எங்களிடம் கூறினார்கள், ஆனால் எங்கள் கட்சியினரே எங்களுக்கு துரோகம் செய்து விட்டார்கள். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்களை லட்சத்திற்கும் கோடிக்கும் விற்றுவிட்டனர். மே 20 அன்று, ஏக்நாத் ஷிண்டேவிற்கு முதல்-மந்திரி பதவியை உத்தவ் தாக்கரே வழங்கினார்.

    ஆனால் அவர் தற்போது நாடகம் நடத்தி சென்றுவிட்டார். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கவுகாத்திக்கு சென்றுள்ளனர், அங்கு வெள்ளம் ஏற்பட்டு பலர் தங்குமிடம் மற்றும் உணவு இல்லாமல் உள்ளனர். ஆனால் அவர்கள் அங்கு ஆனந்தமாக இருக்கிறார்கள். எம்.எல்.ஏ.க்களின் ஒரு நாள் சாப்பாட்டுக்கான செலவு ரூ. 9 லட்சம், இது பெரும் அவமானத்திற்குரியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கவுகாத்தி ஓட்டலில் சிவசேனாவின் 8 மந்திரிகள் உள்பட அந்த கட்சியை சேர்ந்த 39 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
    • ஒரு வாரமாக இழுபறி நீடித்து வந்த மகாராஷ்டிரா அரசியலில் இனி அடுத்தடுத்த புதிய திருப்பங்களை எதிர்பார்க்கலாம்.

    மும்பை:

    மகாராஷ்டிராவில் 2019-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது பா.ஜனதா-சிவசேனா கூட்டணி கட்சிகள் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றன. ஆனால் தேர்தலுக்கு பின்னர் தனது இந்துத்வா கொள்கைக்கு முரணான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அரசை அமைத்து சிவசேனா அரசியல் அரங்கை அதிர வைத்தது.

    கட்சிக்கு எதிராக திரும்பிய எம்.எல்.ஏ.க்கள் முதல்-மந்திரி பதவியை பா.ஜனதா தங்களுக்கு 2½ ஆண்டுகள் விட்டு தர மறுத்ததால், சிவசேனா இந்த தடாலடி நடவடிக்கையை மேற்கொண்டது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். 288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபையில் ஆளும் கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் பலம் சிவசேனா- 55, தேசியவாத காங்கிரஸ்- 53, காங்கிரஸ்- 44 என்ற நிலையில், பா.ஜனதா வசம் மட்டும் அதிகபட்சமாக 106 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால், கூட்டணி அரசை கவிழ்க்க பா.ஜனதா முயற்சி செய்து வருவதாக கூறப்பட்டது.

    இந்தநிலையில் மராட்டியத்தில் கடந்த 20-ந் தேதி இரவில் பரபரப்பு அரசியல் திருப்பம் ஏற்பட்டது. சிவசேனாவின் பெரும்பாலான எம்.எல். ஏ.க்கள் கட்சி தலைமைக்கு எதிராக திரும்பினர். அவர்கள் இரவோடு, இரவாக குஜராத் மாநிலம் சூரத் சென்று, பின்னர் அசாம் மாநிலம் கவுகாத்திக்கு விரைந்து அங்குள்ள ஓட்டலில் முகாமிட்டனர்.

    தற்போது, அந்த ஓட்டலில் சிவசேனாவின் 8 மந்திரிகள் உள்பட அந்த கட்சியை சேர்ந்த 39 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அதிருப்தி அணிக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் குடும்ப விசுவாசியாக இருந்த மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமை தாங்குகிறார். அவர்கள் பா.ஜனதாவுடன் சேர்ந்து கூட்டணி அரசு அமைக்க வேண்டும் என்று சிவசேனா தலைமையை தொடர்ந்து வலியுறுத்தினர்.

    ஆனால் அவர்களின் கோரிக்கையை நிராகரித்த உத்தவ் தாக்கரே, தனது அரசை கப்பாற்ற ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

    இது தொடர்பாக சிவசேனா அனுப்பிய கடிதத்தை ஏற்று அந்த எம்.எல்.ஏ.க்களுக்கு கடந்த சனிக்கிழமை சட்டசபை செயலாளர் மூலம் துணை சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். அதில் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் உங்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என்ற கேள்வியுடன் நேற்று மாலை 5.30 மணிக்குள் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் தங்களை தகுதிநீக்கம் செய்ய அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 எம்.எல்.ஏ.க்களும் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், "துணை சபாநாயகர் நர்ஹரி ஜர்வாலுக்கு எதிராக நாங்கள் அளித்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வதில் முடிவு எடுக்க அவருக்கு அதிகாரம் இல்லை. மேலும் சிவசேனாவின் சட்டமன்ற குழு தலைவராக அஜய் சவுத்திரியை நியமித்த துணை சபாநாயகரின் முடிவு சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும்.

    தங்களது அணியில் உள்ள எம்.எல்.ஏ.க்களின் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க மகாராஷ்டிரா அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என கோரப்பட்டு இருந்தது. மேலும் உத்தவ் தாக்கரே அரசுக்கு ஆதரவை தாங்கள் திரும்பபெறுவதாகவும், அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும் அவர்கள் மனுவில் கூறியிருந்தனர்.

    இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சூர்ய காந்த், ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய கோடைக்கால விடுமுறை அமர்வு நேற்று விசாரித்தது. விசாரணையின்போது அதிருப்தி சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் நீரஜ் கிஷன் கவுல், "துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வாலை நீக்க கோரும் தீர்மானம் நிலுவையில் இருக்கும்போது, எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் கோரும் விவகாரத்தில் அவரால் முடிவு எடுக்க முடியாது" என வாதிட்டார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மனுதாரர்கள் ஏன் மும்பை ஐகோர்ட்டை நாடவில்லை என கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதில் அளித்த வக்கீல் நீரஜ் கிஷன் கவுல், "காலம் மிகக்குறைவாக உள்ளது. பலம் கொண்ட சிவசேனா, மனுதாரர்களின் வீடுகளை தாக்கி அரசு எந்திரத்தை முடக்கி வருகிறது. மனுதாரர்கள் அசாமில் எருதுகளை போல கொல்லப்பட்டு, 40 உடல்கள் மட்டும் மும்பை திரும்பும் என அச்சுறுத்தப்பட்டுள்ளனர். மும்பையில் மனுதாரர்களுக்கு உகந்த பாதுகாப்பு சூழல் இல்லை" என வாதிட்டார்.

    ஆனால் சிவசேனா சட்டமன்ற குழு தலைவர் அஜய் சவுத்திரி மற்றும் தலைமை கொறடா சுனில் பிரபு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி, "2020-ம் ஆண்டு ராஜஸ்தான் ஐகோர்ட்டை தவிர, சபாநாயகரின் நடவடிக்கைகளில் இதுவரை கோர்ட்டு தலையிடவில்லை" என வாதிட்டார். மேலும் சிவசேனா சட்டமன்ற குழு தலைவர் அஜய் சவுத்திரி சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் தேவ்தத் காமத், இந்த விவகாரத்தில் கோர்ட்டு தலையிட முடியாது, தகுதி நீக்க நடவடிக்கைகளுக்கு இதுவரை கோர்ட்டு தடை விதித்தது இல்லை என கூறினார்.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 16 பேரையும் தகுதிநீக்கம் செய்வது தொடர்பாக அடுத்த மாதம் (ஜூலை) 11-ந் தேதி வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர். மேலும் ரிட் மனு தொடர்பாக 5 நாட்களுக்குள் பதில் அளிக்க மகாராஷ்டிரா சட்டமன்ற செயலாளர், துணை சபாநாயகர், சட்டமன்ற குழு தலைவர் அஜய் சவுத்திரி, சிவசேனா தலைமை கொறடா சுனில் பிரபு மற்றும் மகாராஷ்டிரா அரசு, மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். தகுதி நீக்க நோட்டீஸ் தொடர்பாக அதிருப்தி அணியினர் விளக்கம் அளிப்பதற்கான காலக்கெடுவை ஜூலை 12-ந் தேதி மாலை 5.30 மணி வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மேலும் முக்கியமாக சட்டசபையில் பலப்பரீட்சை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற அரசின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நிராகரித்தனர். இது தேவையற்ற சட்ட சிக்கலை ஏற்படுத்தும் என்று கருத்து தெரிவித்த அவர்கள், இந்த விஷயத்தில் சட்டவிரோதமாக எதுவும் நடந்தால், அப்போது கோர்ட்டை அணுகலாம் என்று கூறினர்.

    இது தவிர அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், அவர்களின் சொத்துகளுக்கும் மகாராஷ்டிரா அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் தங்களது உத்தரவில் குறிப்பிட்டனர். இதையடுத்து வழக்கு விசாரணையை ஜூலை 11-ந் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். சுப்ரீம் கோர்ட்டின் இந்த இடைக்கால தீர்ப்பை கவுகாத்தி ஓட்டலில் முகாமிட்டுள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் வரவேற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இது பாலாசாகேப் தாக்கரேயின் (பால் தாக்கரே) இந்துத்வாவுக்கு கிடைத்த வெற்றி என ஏக்நாத் ஷிண்டே வலைதளத்தில் பதிவிட்டார்.

    சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு, அதிருப்தி அணிக்கு சாதகமாக அமைந்துள்ள நிலையில், அந்த அணியுடன் சேர்ந்து பா.ஜனதா ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டும் என்று கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக மும்பையில் பா.ஜனதா முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    இதற்கிடையே அசாமில் முகாமிட்டுள்ள அதிருப்தி அணியை சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்கள் மும்பை வர உள்ளதாகவும், அவர்கள் கவர்னரை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த வாரத்திற்குள் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேக்கு கவர்னர் உத்தரவிடுவார் என்று கூறப்படுகிறது. சட்டசபையில் பலப்பரீட்சை நடைபெறும் பட்சத்தில் உத்தவ் தாக்கரே அரசு தோற்கடிக்கப்பட்டு கவிழ்வதற்கான சாத்தியகூறுகள் நிலவுகிறது. இதனால் அவரது அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    எனவே ஒரு வாரமாக இழுபறி நீடித்து வந்த மகாராஷ்டிரா அரசியலில் இனி அடுத்தடுத்த புதிய திருப்பங்களை எதிர்பார்க்கலாம்.

    • சிவசேனா சார்பில் 16 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய துணை சபாநாயகரிடம் கடிதம் அளிக்கப்பட்டது.
    • சபாநாயகரின் நோட்டீசை எதிர்த்து ஏக்நாத் ஷிண்டே சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.

    மும்பை:

    சிவசேனா மந்திரி ஏக்நாத் ஷிண்டே கட்சிக்கு எதிராக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டு உள்ளார்.

    இதற்கிடையே, கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய சிவசேனா சார்பில் துணை சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. இதையடுத்து 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என கேட்டு துணை சபாநாயகர் 16 எம்.எல்.ஏ.க்களுக்கும் நோட்டீஸ் அனுப்பினார். திங்கட்கிழமைக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு இருந்தார்.

    சபாநாயகரின் நோட்டீசை எதிர்த்து ஏக்நாத் ஷிண்டே சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். மேலும் அவர் சிவசேனா சட்டமன்றக் குழு தலைவராக அஜய் சவுத்ரி நியமிக்கப்பட்டதை ரத்துசெய்ய வேண்டும் எனவும் அதில் கூறியுள்ளார்.

    இந்நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், துணை சபாநாயகரின் நோட்டீசுக்கு பதிலளிக்க ஜூலை 11-ம் தேதி வரை அவகாசம் வழங்கி இடைக்கால தீர்ப்பு அளித்துள்ளது. மேலும், அதிருப்தி எம்.எல்.ஏக்களை ஜூலை 11-ம் தேதி வரை தகுதி நீக்கம் செய்யக்கூடாது எனவும், அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டது.

    • மகாராஷ்டிராவில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்திற்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
    • சிவசேனா மந்திரி ஏக்நாத் ஷிண்டே, 40க்கும் மேற்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் கவுகாத்தியில் முகாமிட்டுள்ளார்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா மந்திரி ஏக்நாத் ஷிண்டே கட்சிக்கு எதிராக 40-க்கும் மேற்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டுள்ளார்.

    இதற்கிடையே, கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய சிவசேனா சார்பில் துணை சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. இதையடுத்து 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என கேட்டு துணை சபாநாயகர் 16 எம்.எல்.ஏ.க்களுக்கும் நோட்டீஸ் அனுப்பினார்.

    இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. இதன் காரணமாக மகாராஷ்டிராவில் அரசியலில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.

    இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில எம்.பி.யும், சிவசேனா செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் ராவத்திற்கு அமலாக்கத் துறை இன்று சம்மன் அனுப்பியுள்ளது.

    நில மோசடி வழக்கில் விசாரணைக்கு நாளை நேரில் ஆஜராகும்படி அமலாக்கத் துறை சஞ்சய் ராவத்திற்கு சம்மன் அனுப்பியது.

    இச்சம்பவம் அம்மாநில அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    • திரும்பி வர விரும்புபவர்களுக்கு கட்சியின் கதவுகள் திறந்தே உள்ளன.
    • அதிருப்தியாளர்கள் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக கூறுகின்றனர்.

    மும்பை :

    சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டுள்ள நிலையில், அவர்கள் சிவசேனாவின் புதிய அணியை உருவாக்கி உள்ளதாக நேற்று அறிவித்தனர். அவர்களின் எதிர்ப்பு காரணமாக மராட்டியத்தில் ஆளும் மகா விகாஸ் அகாடி அரசு கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு எனது வெளிப்படையான சாவல் என்னவென்றால் உடனடியாக அவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும். கடந்த காலங்களில் சகன் புஜ்பால், நாராயண் ரானே மற்றும் அவரது ஆதரவாளர்கள் மற்ற கட்சியில் இணைவதற்காக சிவசேனா எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

    அதிருப்தியாளர்கள் குழுவுக்குள்ளும் அதிருப்தி ஏற்படலாம். அவர்கள் மீண்டும் மும்பைக்கு வந்தவுடன் உண்மையான அதிருப்தி எங்கு இருக்கிறது என்று தெரியும். சிவசேனா மற்றும் பாலாசாகேப் தாக்கரே ஆகியோரின் பெயரை அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். கவுகாத்தியில் ஓட்டலில் வலுக்கட்டாயமாக தங்க வைக்கப்பட்டு உள்ள அதிருப்தியாளர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.

    அதிருப்தியாளர்கள் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக கூறுகின்றனர். எனவே அவர்கள் ஏன் இன்னும் கவுகாத்தியில் இருக்கிறார்கள். மும்பை வாருங்கள். வரவேற்க நானே விமான நிலையத்திற்கு செல்வேன். திரும்பி வர விரும்புபவர்களுக்கு கட்சியின் கதவுகள் திறந்தே உள்ளன. கவுகாத்தியில் உள்ள பலருடன் நான் தொடர்பில் இருக்கிறேன். ஏக்நாத் ஷிண்டேவை பா.ஜனதா முதல்-மந்திரி ஆக்குகிறதா என்று பார்ப்போம்.

    உங்களுக்கு தைரியம் இருந்தால் உங்கள் தந்தை பெயரையோ அல்லது வதோதரா, சூரத், டெல்லியில் உள்ள உங்களின் தந்தையின் பெயரையோ பயன்படுத்தி வாக்குகளை பெறுங்கள்.

    அசாம் வெள்ளத்தில் மக்கள் உயிர் மற்றும் உடைமைகள் சேதமாகி உள்ள நிலையில், அவர்கள் அங்கு அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு நிதியுதவி செய்கின்றனர். அதிருப்தியாளர்கள் தங்கியுள்ள ஓட்டலில் 340 அறைகள் உள்ளன. இது 18 மாடி கட்டிடம். இதில் அதிருப்தியாளர்கள் 3 தளங்களை பதிவு செய்துள்ளனர். நானும் இந்த ஓட்டலில் 40 அறைகள் கேட்டு மின் அஞ்சல் அனுப்பி வருகிறேன்.

    உத்தவ் தாக்கரேவை சுற்றுலா பயணியாக அசாமுக்கு அழைக்க அசாம் முதல்-மந்திரிக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். மராட்டியம் மற்றும் அசாம் சுற்றுலா மேம்பாட்டு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளேன். எனவே அங்குள்ள ஓட்டலில் முன்பதிவு செய்யவேண்டும். ஆனால் எனக்கு இன்னும் பதில் வரவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கேபினட் மந்திரிகளான அனில் பரப், சுபாஷ் தேசாய் ஆகியோர் எம்.எல்.சி.க்கள் ஆவர்.
    • சுபாஷ் தேசாயின் எம்.எல்.சி. பதவிக்காலம் அடுத்த மாதம் முடிகிறது.

    மும்பை :

    சிவசேனாவை சேர்ந்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே கட்சி தலைமைக்கு எதிராக கடந்த 20-ந்தேதி நள்ளிரவு ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் குஜராத் மாநிலம் சூரத்திற்கு சென்றார். பின்னர் அங்கு இருந்து அவர், ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தி சென்று அங்குள்ள ஓட்டலில் முகாமிட்டுள்ளார்.

    ஆரம்பத்தில் ஏக்நாத் ஷிண்டே முகாமில் 12 முதல் 15 சிவசேனா எம்.எல்.ஏ.க்களே இருந்ததாக கூறப்பட்டது. பின்னர் படிப்படியாக சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டே முகாமில் இணைந்தனர். இதில் நேற்று மாநில உயர் கல்வித்துறை மந்திரி உதய் சாமந்த், ஏக்நாத் ஷிண்டே முகாமில் இணைந்தார்.

    இவர் ஏக்நாத் ஷிண்டேவுடன் இணைந்த 9-வது சிவசேனா கேபினட் மந்திரி ஆவார். தற்போது சிவசேனா சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வான கேபினட் மந்திரிகளில், ஆதித்ய தாக்கரே மட்டுமே உத்தவ் தாக்கரேவுடன் உள்ளார். மற்ற கேபினட் மந்திரிகளான அனில் பரப், சுபாஷ் தேசாய் ஆகியோர் எம்.எல்.சி.க்கள் ஆவர்.

    இதில் அனில் பரப் அமலாக்கத்துறை பிடியில் உள்ளார். சுபாஷ் தேசாயின் எம்.எல்.சி. பதவிக்காலம் அடுத்த மாதம் முடிகிறது.

    • ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏக்கள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி
    • அதிருப்தி எம்எல்ஏக்கள் 16 பேரும் நாளை மறுநாளுக்குள் நோட்டீஸூக்கு பதிலளிக்க துணை சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

    மும்பை:

    மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளை கொண்ட கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சிவ சேனா மூத்த தலைவரும், மந்திரியுமான ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏக்கள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர். சிவசேனாவில் மொத்தம் உள்ள 56 எம்எல்ஏக்களில் 30க்கும் மேற்பட்டோர் எதிரணியில் உள்ளனர். இதனால் அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க சிவசேனா முடிவு செய்தது.

    மகாராஷ்டிர சட்டமன்றத்தில் சபாநாயகர் பதவி காலியாக உள்ள நிலையில் துணை சபாநாயகர் நர்ஹரி ஜெர்வாலிடம், 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யும்படி சிவசேனா மனு அளித்தது. அதன்படி அந்த 16 எம்எல்ஏக்களிடமும் விளக்கம் கேட்டு துணை சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். நாளை மறுநாளுக்குள் நோட்டீஸூக்கு பதிலளிக்க துணை சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

    இந்த சூழ்நிலையில், துணை சபாநாயகர் நர்கரி ஜெர்வால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக ஷிண்டே தரப்பில் உள்ள 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் நோட்டீஸ் அளித்தனர். ஆனால் இந்த நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் கையெழுத்திட்ட எம்எல்ஏக்கள் யாரும் அதை அலுவலகத்தில் சமர்ப்பிக்காததாலும், கடிதத்தில் அசல் கையொப்பம் இல்லாததாலும் நிராகரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ஏக்நாத் ஷிண்டேவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகாராஷ்டிராவில் 3 கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் அகாடி என்ற கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
    • அதிருப்தி எம்.எல்.ஏ.வின் அலுவலகம் சிவசேனா தொண்டர்களால் இன்று அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் அகாடி என்ற கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல் மந்திரியாக சிவசேனாவின் உத்தவ் தாக்கரே செயல்பட்டு வருகிறார்.

    இதற்கிடையே, சிவசேனா கட்சியை மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கு எதிராக திரும்பியுள்ளார். அவர் தனது ஆதரவாளர்களான 40க்கு மேற்பட்ட சிவசேனா எம்.எல்.ஏ.க்களுடன் அசாமின் கவுகாத்தியில் ஓரு ஓட்டலில் தங்கியுள்ளார். இதனால் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாவிகாஸ் அகாடி அரசு கவிழும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

    இந்நிலையில், உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக திரும்பியுள்ள எம்.எல்.ஏ.க்களைக் கண்டித்து சிவசேனா கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக, புனேவில் உள்ள பாலாஜி நகரில் பராண்டா தொகுதி சிவசேனா எம்.எல்.ஏ. தனாஜி சாவந்த் கட்சி அலுவலகத்தை சிவசேனா தொண்டர்கள் இன்று அடித்து நொறுக்கினர்.

    இதேபோல், பல்வேறு பகுதிகளில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிய சிவசேனா தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    ஏக்நாத் ஷிண்டே தலைமையில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் தனாஜி சாவந்தும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிவசேனாவின் 40க்கு மேற்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அசாமில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
    • அவர்கள் அரசுக்கு எதிராக முடிவெடுக்கும் பட்சத்தில் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

    கொல்கத்தா:

    மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து 40-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ.க்களுடன் பா.ஜ.க. ஆளும் அசாம் மாநிலம் கவுகாத்தியில் தஞ்சம் அடைந்துள்ளார் சிவசேனா மூத்த தலைவரும், மாநில பொதுப்பணித்துறை அமைச்சருமான ஏக்னாத் ஷிண்டே. அவர்கள் அரசுக்கு எதிராக முடிவெடுக்கும் பட்சத்தில் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

    இந்நிலையில், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    உத்தவ் தாக்கரே மற்றும் அனைவருக்கும் நீதி வேண்டும். இன்று நீங்கள் அதிகாரத்தில் இருக்கிறீர்கள். அதனால் பணபலம், மாபியா பலத்தைப் பயன்படுத்துகிறீர்கள். ஆனால் ஒருநாள் நீங்கள் ஆட்சியில் இருந்து சென்றாக வேண்டும். உங்கள் கட்சியையும் யாராவது உடைக்கலாம். இது தவறு, இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. மகாராஷ்டிராவிற்கு பிறகு மற்ற மாநில அரசுகளையும் கவிழ்ப்பார்கள். மக்களுக்கு நீதி வேண்டும் என தெரிவித்தார்.

    • மகாராஷ்டிராவில் கூட்டணி அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கவுஹாத்தியில் உள்ளனர்.
    • முதல் மந்திரி உத்தவ் தாக்கரே அரசு இல்லத்தை காலி செய்துவிட்டு நேற்று இரவு சொந்த வீடான மாதோஸ்ரீ இல்லம் சென்றார்.

    மும்பை:

    மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இக்கூட்டணிக்கு மஹா விகாஸ் அகாடி என பெயரிடப்பட்டுள்ளது. முதல் மந்திரியாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளார்.

    இதற்கிடையே, சிவசேனா மூத்த தலைவரும், மாநில பொதுப்பணித்துறை மந்திரியுமான ஏக்னாத் ஷிண்டே, சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் பலருடன் குஜராத்தின் சூரத்துக்குச் சென்றார். பின்னர் அங்கிருந்து விமானத்தில் அசாமின் கவுஹாத்திக்கு சென்றனர். அங்கு 40-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ.க்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து, முதல் மந்திரி உத்தவ் தாக்கரே, முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்ய தயார் எனக் கூறியதுடன் அரசு இல்லத்தை இரவோடு இரவாக காலி செய்துவிட்டு சொந்த வீடான மாதோஸ்ரீ இல்லத்துக்குச் சென்றார்.

    இந்நிலையில், சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    உத்தவ் தாக்கரே விரைவில் வர்ஷா இல்லத்திற்கு வருவார். கவுஹாத்தியில் உள்ள 21 எம்எல்ஏ.க்கள் எங்களை தொடர்பு கொண்டுள்ளனர். அவர்கள் மும்பை திரும்பியதும் எங்களுடன் இருப்பார்கள். அவர்கள் கவுஹாத்தியில் இருந்து தொடர்பு கொள்ளாமல் மீண்டும் மும்பைக்கு வந்து முதல் மந்திரியிடம் விவாதிக்க வேண்டும். அனைத்து எம்.எல்.ஏ.க்களும் விரும்பினால் கூட்டணியில் இருந்து வெளியேறுவது குறித்து பரிசீலிக்க நாங்கள் தயாராக உள்ளோம் என தெரிவித்தார்.

    ×