search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MVA"

    • மகாராஷ்டிராவில் கூட்டணி அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கவுஹாத்தியில் உள்ளனர்.
    • முதல் மந்திரி உத்தவ் தாக்கரே அரசு இல்லத்தை காலி செய்துவிட்டு நேற்று இரவு சொந்த வீடான மாதோஸ்ரீ இல்லம் சென்றார்.

    மும்பை:

    மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இக்கூட்டணிக்கு மஹா விகாஸ் அகாடி என பெயரிடப்பட்டுள்ளது. முதல் மந்திரியாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளார்.

    இதற்கிடையே, சிவசேனா மூத்த தலைவரும், மாநில பொதுப்பணித்துறை மந்திரியுமான ஏக்னாத் ஷிண்டே, சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் பலருடன் குஜராத்தின் சூரத்துக்குச் சென்றார். பின்னர் அங்கிருந்து விமானத்தில் அசாமின் கவுஹாத்திக்கு சென்றனர். அங்கு 40-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ.க்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து, முதல் மந்திரி உத்தவ் தாக்கரே, முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்ய தயார் எனக் கூறியதுடன் அரசு இல்லத்தை இரவோடு இரவாக காலி செய்துவிட்டு சொந்த வீடான மாதோஸ்ரீ இல்லத்துக்குச் சென்றார்.

    இந்நிலையில், சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    உத்தவ் தாக்கரே விரைவில் வர்ஷா இல்லத்திற்கு வருவார். கவுஹாத்தியில் உள்ள 21 எம்எல்ஏ.க்கள் எங்களை தொடர்பு கொண்டுள்ளனர். அவர்கள் மும்பை திரும்பியதும் எங்களுடன் இருப்பார்கள். அவர்கள் கவுஹாத்தியில் இருந்து தொடர்பு கொள்ளாமல் மீண்டும் மும்பைக்கு வந்து முதல் மந்திரியிடம் விவாதிக்க வேண்டும். அனைத்து எம்.எல்.ஏ.க்களும் விரும்பினால் கூட்டணியில் இருந்து வெளியேறுவது குறித்து பரிசீலிக்க நாங்கள் தயாராக உள்ளோம் என தெரிவித்தார்.

    ×