search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madhya Pradesh"

    • டாடியா மாநில உள்துறை அமைச்சரின் தொகுதிக்கு உட்பட்டது
    • பலியானவர்களில் 4 பேர் 30 வயதுக்கு உட்பட்டவர்கள்

    மத்திய பிரதேசத்தின் வட மத்திய பகுதியில் உள்ளது டாடியா மாவட்டம். இது அம்மாநில உள்துறை அமைச்சர் டாக்டர். நரோத்தம் மிஷ்ராவின் தொகுதிக்கு உட்பட்ட மாவட்டமாகும். இங்கு டாங்கி மற்றும் பால் எனப்படும் இரு பிரிவினர் வசிக்கின்றனர். இந்த இரு பிரிவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் அடங்கும்.

    அங்குள்ள நிலங்களில் ஆடுகள் புல் மேய்வது தொடர்பான விஷயங்களில் இந்த இரு பிரிவினருக்குமிடையே அவ்வப்போது வாக்குவாதம் நடப்பதுண்டு.

    நேற்று இரு பிரிவை சேர்ந்தவர்களும் இது சம்பந்தமான ஒரு பிரச்சனையை தீர்த்து வைக்க ஒன்று கூடி பேசி வந்தனர். அப்போது அவர்களின் வாக்குவாதம் சண்டையாக மாறியது.

    இதனையடுத்து ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். அது வன்முறையாக மாறியதில் அவர்கள் இரு பிரிவினரிடையே துப்பாக்கிகளை மறைத்து வைத்திருந்தவர்கள், அதனை வெளியில் எடுத்து சுட்டனர்.

    இதில் 30 வயதுகளில் உள்ள 4 பேர்களும், 70 வயதுக்கு மேற்பட்ட ஒருவரும் கொல்லப்பட்டனர். மேலும் 2 பேர் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    பலியான 5 பேரில், 3 பேர் (பிரகாஷ், ராம்நரேஷ், சுரேந்திரா) டாங்கி வகுப்பையும், 2 பேர் (ராஜேந்திரா, ராகவேந்திரா) பால் வகுப்பையும் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் துப்பாக்கி குண்டுக்கு பலியானவர்கள்.

    மேலும் வன்முறை வெடிக்காமல் இருக்க ஏராளமான காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, இதுவரை 6 பேரை காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மழை பெய்ய வேண்டி ஒவ்வொரு ஊரிலும் வினோத சடங்குகளை செய்யும் வழக்கம் இருந்து வருகிறது.
    • கழுதைக்கு கிராம மக்கள் குலாப் ஜாமுன் ஊட்டிவிடும் வீடியோ வைரல்.

    மழை பெய்ய வேண்டி ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து கழுதைக்கு குலாப் ஜாமுன் ஊட்டிவிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மத்திய பிரதேச மாநிலத்தின் மண்ட்ஸர் மாவட்டத்தை சேர்ந்த கிராம மக்கள் தான் இந்த வினோத சடங்கை செய்துள்ளனர்.

    கிராம மக்கள் மழைக்காக வினோத சடங்கு செய்த சம்பவம், பலருக்கும் புதிதாக இருக்கலாம் ஆனால் அவர்களை பொருத்தவரையில், கழுதைக்கு குலாப் ஜாமுன் ஊட்டிவிட்ட சடங்கு "மிஷன்" அமோக வெற்றி தான். குலாப் ஜாமுன் ஊட்டிவிட்ட இரண்டே நாட்களில் அந்த மாவட்டத்தில் மழை பொழிந்து, கிராம மக்கள் வேண்டுதல் பலித்து விட்டது.

     

    மழை பெய்ததை அடுத்து ஊரில் உள்ள பூசாரி கழுதையை வயல்வெளிக்கு அழைத்துச் சென்று விவாசய பணிகளை துவங்கி வைத்தார். வினோத சடங்கின் அங்கமாக, கழுதை ஒரு பிளேட் முழுக்க குலாப் ஜாமுன் சாப்பிடும் காட்சிகள் அடங்கிய வீடியோ வைரல் ஆகி, பலதரப்பட்ட கமென்ட்களை குவித்து வருகிறது.

    வினோத சடங்கை தொடர்ந்து இரண்டு நாட்கள் கழித்து பெய்யத் துவங்கிய மழை, 24 மணி நேரத்திற்கு நீடித்தது. மழை பெய்ததால் ஊர் மக்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில், அதனை கொண்டாடும் வகையில் மீண்டும் கழுதைக்கு குலாப் ஜாமுன் ஊட்டிவிட்டனர். 

    • சிறுமி நீண்டநேரம் ஆகியும் திரும்பி வராததால் அவரை குடும்பத்தினர் தேட ஆரம்பித்தனர்
    • மைஹார் நகரில் உள்ள அந்த இரு குற்றவாளிகளின் வீடுகள் இடிக்கப்பட்டன

    மத்திய பிரதேச மாநிலம் சத்னா பகுதியை சேர்ந்தது மைஹார் நகரம். இங்கு பிரபலமான அன்னை சாரதா தேவி ஆலயம் உள்ளது.

    நேற்று மாலை 11-வயது சிறுமி, அன்னை சாரதா கோயிலில் தண்ணீர் எடுக்க சென்றிருக்கிறார். அப்போது அவரை ரவி சவுத்ரி (31) மற்றும் அதுல் பதோலியா (30) எனும் அக்கோயிலின் ஊழியர்கள் இருவர் வழிமறித்துள்ளனர். பிறகு அருகில் உள்ள காட்டுக்குள் தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர். அத்துடன் வெறி அடங்காமல் கொடூரமாக தாக்கி உள்ளனர்.

    தண்ணீர் எடுக்கச் சென்ற சிறுமி நீண்டநேரம் ஆகியும் திரும்பி வராததால் அவரை குடும்பத்தினர் தேட ஆரம்பித்தனர். அப்போது, வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அவளை கண்டுபிடித்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அச்சிறுமியை மீட்டு ரேவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரது உடல்நிலை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.

    "கடிபட்ட காயங்கள் மற்றும் உடல் ரீதியான தாக்குதலால் அவரது உடலே நீல நிறமாக மாறியிருந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அச்சிறுமியை கடுமையான முறையில் வன்கொடுமை செய்திருக்கிறார்கள்," என அச்சிறுமிக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர் இன்று தெரிவித்தார்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகள் இருவரையும் கைது செய்தனர்.

    "குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடத்தல், கூட்டு பலாத்காரம், காயப்படுத்துதல் மற்றும் போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். சிறுமியின் உடல்நிலை மோசமாக உள்ளது. தேவைப்பட்டால், அவரை டெல்லிக்கு அழைத்துச் செல்ல ஏர் ஆம்புலன்ஸ் தயாராக உள்ளது" என்று காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் கே.பி. வெங்கடேஷ்வர் கூறினார்.

    காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கூட்டு குழு, இன்று மைஹார் நகரில் உள்ள அந்த இரு குற்றவாளிகளின் வீடுகளை இடித்தது.

    இச்சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்த மத்திய பிரதேச முதல்வர் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது:

    "மைஹாரில் நடந்த பலாத்காரம் பற்றிய தகவல் எனக்கு கிடைத்தது. என் இதயம் வலிக்கிறது. நான் வேதனைப்படுகிறேன். குற்றவாளிகள் யாரும் தப்பிக்க கூடாது என காவல்துறையினருக்கு அறிவுறுத்தி உள்ளேன். சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குற்றவாளிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

    கைது செய்யப்பட்ட கோவில் ஊழியர்கள் இருவரையும் மைஹார் கோவில் நிர்வாகக் குழு உடனடியாக பணி நீக்கம் செய்துள்ளது.

    • உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்கள் என அனைவருமே மாணவர்கள்

    போபால்:

    மத்திய பிரதேசத்தில் அக்காள், தங்கையை கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மத்திய பிரதேச மாநிலம் தாட்டியா மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவரையும் ஒரு கும்பல் கடத்திச் சென்று ஒரு வீட்டில் அடைத்து வைத்துள்ளது. பின்னர் சகோதரிகளில் மூத்த பெண்ணை கும்பலாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவரது தங்கையையும் துன்புறுத்தி உள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்கள் இருவரும் வீட்டுக்கு வந்ததும், மூத்த பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    இந்த விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அந்த பெண்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இரண்டு நபர்களை தேடி வருகின்றனர். குற்றம்சாட்டப்பட்ட 4 பேரில் ஒருவன் அப்பகுதி பாஜக பிரமுகரின் மகன் என்பது தெரியவந்துள்ளது.

    பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்கள் என அனைவருமே மாணவர்கள் என்றும், இந்த விவகாரம் தொடர்பாக தீவிரமாக விசாரித்து வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு தெரிவித்துள்ளார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மனைவி, மகள் கிடைக்காததால் அங்குள்ள உள்ளூர் காவல் நிலையத்தில் சஞ்சீவ் புகார் அளித்தார்.
    • காணாமல் போன மனைவி மற்றும் மகளை கண்டுபிடித்து ஒப்படைப்பதாக சஞ்சீவிடம் காவல் துறை உறுதி.

    நாட்டில் பல்வேறு மாநிலங்களில் தக்காளி விலை உச்சத்தை தொட்டுள்ளது. கிலோவுக்கு ரூ.130- ரூ.150 வரை விற்பனையாகிறது. இதனால் சாமானிய மக்கள் அன்றாட சமையலுக்கு பயன்படுத்தப்படும் தக்காளியை வாங்க சிரமப்பட்டு வருகின்றனர். சமையலுக்கு தக்காளி மிக அவசியம் என்பதால், வீட்டில் பெண்கள் சிறிய தொகையிலாவது தக்காளியை வாங்கி பார்த்து பார்த்து பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், தக்காளியால் சண்டை ஏற்பட்டு ஒரு குடும்பமே பிரிந்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

    மத்திய பிரதேசம் மாநிலம் ஷாஹ்டால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவ் புர்மன். சிற்றுண்டி கடை நடத்தி வருகிறார். அப்போது, சமையலுக்காக சஞ்சீவ் தனது மனைவியை கேட்காமல் இரண்டு தக்காளியை பயன்படுத்தியதாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி தக்காளி விற்கும் விலைவாசிக்கு என்னிடம் கேட்காமல் எப்படி இரண்டு தக்காளியை சமையலுக்கு பயன்படுத்துவீர்கள் என்று கோபமடைந்துள்ளார். இது இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு பெரிய பிரச்சினையாகி உள்ளது. இதனால் கோபமடைந்த சஞ்சீவின் மனைவி தனது மகளுடன் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

    போனவள் திரும்பி வந்துவிடுவாள் என்று இருந்த சஞ்சீவ் வெகுநேரமாகியும் வராததால் பதற்றமடைந்தார். பின்னர் எங்கு தேடியும் மனைவி, மகள் கிடைக்காததால் அங்குள்ள உள்ளூர் காவல் நிலையத்தில் சஞ்சீவ் புகார் அளித்தார்.

    இந்நிலையில், காணாமல் போன மனைவி மற்றும் மகளை கண்டுபிடித்து ஒப்படைப்பதாக சஞ்சீவிடம் காவல் துறை உறுதியளித்து அனுப்பி வைத்தனர்.

    • சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் கோவிந்த் சிங் கேட்ட கேள்விக்கு முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் எழுத்துப்பூர்வமாக பதில்.
    • 78,000 எண்ணிக்கையில் 21,631 கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் உள்ளனர்.

    மத்திய பிரதேசத்தில் நடப்பு காலண்டர் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் கிட்டத்தட்ட 78,000 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடால் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள என மாநில அரசு இன்று சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளது.

    சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் கோவிந்த் சிங் கேட்ட கேள்விக்கு முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

    ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் உணவுப் பற்றாக்குறை அல்லது அவர்களுக்கு ஏற்ற உணவுப் பற்றாக்குறை காரணமாக பெரும்பாலும் பலவீனமானவர்களாகவும், உடல்நலம் குன்றியவர்களாகவும் இருப்பார்கள். இது குழந்தைகளில் வளர்ச்சி குன்றியதையும், உடல் எடை குறைவதையும் உண்டாக்கும்.

    பிந்த் மாவட்டத்தில் உள்ள லஹார் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ., சிங், இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் சுமார் 78,000 ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டதா என்பதை அறிய முயன்றார்.

    இதில், அடல் பிஹாரி வாஜ்பாய் குழந்தைகள் நலம் மற்றும் ஊட்டச்சத்து இயக்கத்தின் புள்ளி விவரங்களை மேற்கோள் காட்டி, "இந்த எண்ணிக்கையில் 21,631 கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் உள்ளனர்" என தெரிவித்தார்.

    அரசாங்கத்தின் எழுத்துப்பூர்வ பதிலின்படி, இந்தூர் பிரிவு மாநிலத்தில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் எண்ணிக்கையில் 22,721 ஆக உள்ளது. இந்த பிரிவில் பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் அலிராஜ்பூர் மற்றும் ஜாபுவா மாவட்டங்கள் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பள்ளி நிர்வாகத்தை சேர்ந்தவர்களில் ஒன்பது பேர் இஸ்லாமியர்கள் ஆவர்.
    • தாமோ மாவட்டத்தை சேர்ந்த கங்கா ஜமுனா உயர்நிலை பள்ளியில் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

    பள்ளிக்குள் மாணவர்களை ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்திய பள்ளி நிர்வாகம் சிக்கலில் சிக்கியது. இந்த விவகாரம் தொடர்பாக பள்ளி நிர்வாகத்தை சேர்ந்த 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சம்பந்தப்பட்ட பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று வரும் இரண்டு மாணவிகள், பள்ளி நிர்வாகம் தங்களை ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்தியது என குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் அவர்கள் கையில் கட்டியிருந்த கயிறு மற்றும் நெற்றியில் வைத்திருந்த பொட்டு ஆகியவற்றை எடுக்குமாறு பள்ளி நிர்வாகத்தினர் வலியுறுத்தியதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர். பள்ளியில் இறைவணக்க கூட்டத்தில் இஸ்லாமிய பாடல்களை பாட வைத்ததாக குற்றம்சாட்டியுள்ளனர்.

    மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் இருந்து சுமார் 250 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள தாமோ மாவட்டத்தை சேர்ந்த கங்கா ஜமுனா உயர்நிலை பள்ளியில் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. பள்ளி நிர்வாகத்தை சேர்ந்தவர்களில் ஒன்பது பேர் இஸ்லாமியர்கள், இருவர் வேறு மதத்தை சேர்ந்தவர்கள ஆவர்.

    ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்தியவர்கள் மீது ஐ.பி.சி. 295 மற்றும் 506 பிரிவுகளின் கீழ் தாமோ கோட்வாலி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னதாக பள்ளிக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளதாக மத்திய பிரதேச மாநிலத்தின் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செய்தியாளர்களிடம் தெரிவித்து இருந்தார்.

    முஸ்லீம் அல்லாத மதத்தை சேர்ந்தவர்களை ஹிஜாப் அணிய வலியுறுத்தும் விவகாரத்தில் தற்போது சர்ச்சையில் சிக்கியிருக்கும் கங்கா ஜமுனா பள்ளி ஏற்கனவே சர்ச்சையில் சிக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் தான் இந்த பள்ளி நிர்வாகத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

    • நவம்பர் 27 ஆம் தேதி இந்தூரை அடைந்த ராகுல் காந்தி மறுநாளே உஜ்ஜைன் மாவட்டத்திற்கு சென்றார்.
    • இந்தூரில் உள்ள இனிப்பு கடைக்கு கொலை மிரட்டல் கடிதங்கள் வந்தன.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கமல் நாத் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் கடிதங்களை அனுப்பிய 60 வயது நபர் மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூரில் வைத்து கைது செய்யப்பட்டார். இவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ் நாட்டின் கன்னியாகுமாரியில் ராகுல் காந்தி துவங்கிய பாரத் ஜோடோ நடைபயணத்தின் போது கொலை மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. யாத்திரையின் அங்கமாக கடந்த நவம்பர் 27 ஆம் தேதி இந்தூரை அடைந்த ராகுல் காந்தி மறுநாளே உஜ்ஜைன் மாவட்டத்திற்கு சென்றார்.

     

    இந்தூரில் உள்ள இனிப்பு கடைக்கு கொலை மிரட்டல் கடிதங்கள் வந்தன. இதனை அனுப்பியவர் தயாசிங் என்கிற ஐஷிலால் ஜாம் என்று போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் இவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், ரயில் மூலம் தப்ப இருந்த ஜஷிலால் ஜாமை ரயில் நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

    இவர் எதற்காக அந்த மாதிரியான கடிதத்தை அனுப்பினார் என்ற விவரங்கள் மர்மமாகவே உள்ளது. கொலை மிரட்டல் விடுத்ததை அடுத்து இவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்தூரில் பாரத் ஜோடோ நடைபயணத்தின் போது ராகுல் காந்தி மற்றும் கமல் நாத் ஆகிய இருவரும் வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்படுவர் என்று ஜஷிலால் ஜாம் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. 

    • மத்திய பிரதேசத்தில் இருந்து தஞ்சைக்கு சரக்கு ரெயிலில் 2600 டன் கோதுமை வந்தது.
    • கோதுமை மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு மத்திய சேமிப்பு கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பு வைக்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மத்திய தொகுப்பிலிருந்து பொது விநியோகத் திட்டத்தின் கீழ் புழுங்கல் அரிசி, பச்சரிசி, கோதுமை போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. வெளி மாநிலங்களில் வரும் கோதுமை உள்ளிட்ட பொருட்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு சரக்கு ரெயில்களில் அனுப்பி வைக்கப்படுகிறது.

    அதன்படி இன்று மத்திய பிரதேசத்தில் இருந்து 2600 டன் கோதுமை சரக்கு ரெயிலின் 42 வேகன்களில் தஞ்சை ரெயில் நிலையத்துக்கு வந்தது. பின்னர் கோதுமை மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு மத்திய சேமிப்பு கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பு வைக்கப்பட்டன. அங்கிருந்து பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு கோதுமை விநியோகிக்கப்பட உள்ளது.

    • சின்னு முஸ்தாக் மத்திய பிரதேசத்தின் கஞ்சர்சேர்வா பகுதியில் பதுங்கியிருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.
    • தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வரும் காட்சியைப் போல் குற்றவாளியை அங்கு சென்று போலீசார் பிடித்துள்ளனர்.

    சென்னை:

    கோவை மாவட்டத்தில் நகை தயாரிப்பு பட்டறைகளில் தயாரிக்கப்படும் நகைகள் அங்கிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன.

    அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் கோவையில் இருந்து ஐதராபாத்திற்கு நகைகளைக் கொண்டு சென்ற ஒரு வாகனத்தில் இருந்து சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புடைய 6.5 கிலோ தங்கம் திருடுபோனது. இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், நகைகளை ஏற்றிச் சென்ற வாகனத்தை சுங்கச்சாவடிகளில் இருக்கும் சி.சி.டி.வி. கேமரா உதவியுடன் போலீசார் கண்காணித்தனர். அப்போது அந்த வாகனத்தை கார் ஒன்று பின்தொடர்ந்து சென்றதை போலீசார் கண்டுபிடித்தனர்.

    அந்த காரின் நம்பரை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், நகைகளை கொள்ளையடித்துச் சென்ற நபரின் பெயர் சின்னு முஸ்தாக் என்பதும், அந்த நபர் மத்திய பிரதேச மாநிலம் கஞ்சர்சேர்வா என்ற பகுதியில் பதுங்கி இருப்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து கோவை மாநகர காவல்துறை சார்பில் 4 பேர் கொண்ட தனிப்படை போலீசார் மத்திய பிரதேசத்திற்குச் சென்றனர்.

    அங்கு சென்று கஞ்சர்சேர்வா பகுதி குறித்து தனிப்படை போலீசார் விசாரித்த போது, அங்கு குற்றப்பின்னணி கொண்ட நபர்கள் பலர் வசித்து வருவதாகவும், அவர்களிடம் நாட்டுத் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பதும் தெரியவந்தது. மேலும் அங்கு செல்வதற்கு உள்ளூர் டிராவல்ஸ் ஏஜெண்டுகள் பலர் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனையடுத்து உள்ளூர் போலீஸ் உதவியுடன் தமிழகத்தைச் சேர்ந்த தனிப்படை போலீசார் கஞ்சர்சேர்வா கிராமத்திற்குச் சென்றனர். அங்கு பதுங்கியிருந்த குற்றவாளி சின்னு முஸ்தாக்கை அடையாளம் கண்டு போலீசார் அவரை பிடிக்க முயன்றபோது, அங்குள்ள கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து போலீசை தாக்கத் தொடங்கியுள்ளனர். இதனிடையே போலீசார் ஒருபுறம் துப்பாக்கியைக் காட்டி கிராம மக்களை கட்டுப்படுத்த முயன்றபோது, மறுபுறம் தமிழக போலீசார் சின்னு முஸ்தாக்கை வண்டியில் ஏற்றி அங்கிருந்து விரைந்தனர். தமிழில் வெளியான 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் வரும் காட்சியைப் போல் சுமார் 10 நிமிட இடைவெளியில் இந்த சம்பவம் நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபரை தனிப்படை போலீசார் தமிழகத்திற்கு கொண்டு வந்தனர்.

    இரு மாநில போலீசாரின் உதவியுடன் திருடப்பட்ட 6.5 கிலோ தங்கம் மீட்கப்பட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் துணிச்சலாக செயல்பட்டு குற்றவாளியைப் பிடித்த தனிப்படை போலீசாரை பாராட்டி தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு அவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கினார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. கிராமத்திற்குள் புகுந்த போலீசார் மீது அங்குள்ள மக்கள் தாக்குதல் நடத்த முயன்ற சம்பவங்கள் அதில் பதிவாகியுள்ளன.

    மத்திய பிரதேசத்தில் சாராயத்தை இலுப்பை பூவைக் கொண்டு தயாரிப்பது மூலம், பழங்குடியின மக்களுக்கு வேலை வாய்ப்பையும், வருமானத்தையும் தரும் என்று மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
    போபால்:

    மத்தியப் பிரதேசம் மாநிலம் மாண்ட்லா மாவட்டத்தில் ஜன்ஜாதியா கௌரவ் திவாஸ் நாள் கொண்டாட்டத்தில், அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்துக் கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

    புதிய கலால் கொள்கையின்படி, பாரம்பரிய வழியில் இலுப்பை பூவில் இருந்து தயாரிக்கப்படும் சாராயம் இனி சட்டவிரோதம் ஆகாது. இது 'பாரம்பரிய மதுபானம்' என்ற பெயரில் மதுபானக் கடைகளில் விற்பனை செய்யப்படும். இலுப்பை பூ பயன்படுத்துவதன் மூலம் பழங்குடியின மக்களுக்கு வேலை வாய்ப்பையும், வருமானத்தையும் ஏற்படுத்தி தரும்.
    இவ்வாறு அவர் கூறினார்.

    இலுப்பை பூ

    பாஜக தலைமையிலான மத்தியப் பிரதேச அரசாங்கத்தின் பாரம்பரிய மதுபான விற்பனை முயற்சியை காங்கிரஸ் கடுமையாக சாடி உள்ளது. இது பாஜகவின் தார்மீக வீழ்ச்சி என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கே.கே.மிஸ்ரா கூறி உள்ளார்.

    மேலும், "சமீபத்தில் கள்ளச் சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மூலிகை சாராயத்தை சட்டப்பூர்வமாக்கும் முடிவை அரசு எடுத்திருப்பது துரதிர்ஷ்டவசமானது" என்றும் அவர் கூறினார்.

    மத்திய பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய முதல் மந்திரி கமல்நாத், மக்களுக்கு சேவை செய்யாவிட்டால் எனது மகனின் உடைகளை கிழித்து விடுங்கள் என தெரிவித்தார். #LokSabhaElections2019 #Kamalnath
    போபால்:

    மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் முதல் மந்திரியாக காங்கிரசை சேர்ந்த  கமல்நாத் பதவிவகித்து வருகிறார். இவர் சிந்த்வாரா தொகுதியில் இருந்து 9 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

    இதற்கிடையே, சிந்த்வாரா பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட தனது மகன் நகுல் நாத்தை களமிறக்கி உள்ளார் கமல்நாத்.

    இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய முதல் மந்திரி கமல்நாத்,  மக்களுக்கு சேவை செய்யாவிட்டால் எனது மகனின் உடைகளை கிழித்து விடுங்கள் என தெரிவித்தார்.

    இதுதொடர்பாக, தனோரா பகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கமல்நாத் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், இந்த பிராந்தியத்துடன் 40 ஆண்டு காலமாக இணைந்து பணியாற்றி வருகிறேன். நீங்கள் கொடுத்த அன்பும், வலிமையும்தான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தி இருக்கிறது.

    நகுல் நிச்சயம் உங்களுக்கு சேவையாற்றுவார். அதற்கான பொறுப்பை நான் அவரிடம் ஒப்படைத்து இருக்கிறேன். உங்களுக்கு பணியாற்றுவதற்கு அவரை எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு சேவையாற்றவில்லை என்றால், அவரது உடைகளை கிழித்து விடுங்கள் என தெரிவித்தார். #LokSabhaElections2019 #Kamalnath
    ×