search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "388 CHILDREN ARE MALNOURISHED"

    • சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் கோவிந்த் சிங் கேட்ட கேள்விக்கு முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் எழுத்துப்பூர்வமாக பதில்.
    • 78,000 எண்ணிக்கையில் 21,631 கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் உள்ளனர்.

    மத்திய பிரதேசத்தில் நடப்பு காலண்டர் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் கிட்டத்தட்ட 78,000 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடால் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள என மாநில அரசு இன்று சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளது.

    சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் கோவிந்த் சிங் கேட்ட கேள்விக்கு முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

    ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் உணவுப் பற்றாக்குறை அல்லது அவர்களுக்கு ஏற்ற உணவுப் பற்றாக்குறை காரணமாக பெரும்பாலும் பலவீனமானவர்களாகவும், உடல்நலம் குன்றியவர்களாகவும் இருப்பார்கள். இது குழந்தைகளில் வளர்ச்சி குன்றியதையும், உடல் எடை குறைவதையும் உண்டாக்கும்.

    பிந்த் மாவட்டத்தில் உள்ள லஹார் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ., சிங், இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் சுமார் 78,000 ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டதா என்பதை அறிய முயன்றார்.

    இதில், அடல் பிஹாரி வாஜ்பாய் குழந்தைகள் நலம் மற்றும் ஊட்டச்சத்து இயக்கத்தின் புள்ளி விவரங்களை மேற்கோள் காட்டி, "இந்த எண்ணிக்கையில் 21,631 கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் உள்ளனர்" என தெரிவித்தார்.

    அரசாங்கத்தின் எழுத்துப்பூர்வ பதிலின்படி, இந்தூர் பிரிவு மாநிலத்தில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் எண்ணிக்கையில் 22,721 ஆக உள்ளது. இந்த பிரிவில் பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் அலிராஜ்பூர் மற்றும் ஜாபுவா மாவட்டங்கள் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அரியலூர் மாவட்டத்தில் 17,388 குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்ட இயக்குநர் தெரிவித்தார்.
    • குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு ஊட்டச்சத்தை உறுதி செய் என்ற திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன்படி மருத்துவத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் மற்றும் பெற்றோர் ஆகியோர் இணைந்து இத்திட்டத்தினை செயல்படுத்த வேண்டும்.

    அரியலூர்:

    அரியலூர் அரசு மருத்துவமனையில் உள்ள மாவட்ட ஆரம்ப நோய் கண்டறிதல் மையம் மற்றும் குழந்தைகளின் நிலையை தொடர்ந்து கண்காணிக்க மேற்பார்வையாளர்களுக்கென உருவாக்கப்பட்ட கைப்பேசி செயலியின் மாதிரி செயல்பாடு ஆகியவற்றை ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்ட இயக்குநர் வி.அமுதவள்ளி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:

    தமிழகத்திலுள்ள அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு உயரம், எடை அளக்கப்பட்டது, வயதிற்கேற்ற உயரம், வயதிற்கேற்ற எடை, உயரத்திற்கேற்ற எடை குழந்தைகள் உள்ளனரா என்பது குறித்து மூன்று வகையான சோதனை செய்யப்பட்டது.

    இச்சோதனையின் மூலம் தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களில் உள்ள 37 இலட்சம் குழந்தைகளில் 2.50 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து நிலையில் பின்தங்கி உள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது. இதில் அரியலூர் மாவட்டத்தில் மட்டும் 17,388 குழந்தைகள் ஊட்டச்சத்து நிலையில் பின்தங்கி உள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது.

    இத்தகைய குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு ஊட்டச்சத்தை உறுதி செய் என்ற திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இதன்படி மருத்துவத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் மற்றும் பெற்றோர் ஆகியோர் இணைந்து இத்திட்டத்தினை செயல்படுத்த வேண்டும்.

    குழந்தைகளுக்கு சத்துணவு மையத்தில் மதிய உணவு வழங்கப்படுகிறது. இதே போன்று வீட்டில் குழந்தைகளுக்கு காலை மற்றும் இரவு சத்தான உணவுகள் வழங்குவதை பெற்றோர்கள் உறுதிபடுத்த வேண்டும்.

    குழந்தைகளுக்கு காய்கறிகள், பால், பருப்பு, கீரைகள், நெய் உள்ளிட்ட சத்தான உணவுகளை பெற்றோர்கள் வழங்க வேண்டும். குழந்தைகளுக்கு நமது பாரம்பரிய உணவுகளை வழங்க வேண்டும். இது குறித்து பெற்றோர்கள் தங்களது உறவினர்களிடையே உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்குவதில் அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு பெற்றோர்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். அங்கன்வாடி மையத்தில் வழங்கப்படும் சத்துமாவினை குழந்தைகளுக்கு தவறாமல் வழங்க வேண்டும். பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் மிகவும் அவசியமாகும்.

    எனவே, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகளை வழங்கி, ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

    ×