search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "London"

    இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில் தேனீர் இடைவேளையின் போது இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvIND
    லண்டன்:

    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. 

    டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர் குக் அரை சதமடித்து 71 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து மொயின் அலியும் அரை சதமடித்து ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சிறிது நேரத்தில் அடில் ரஷித் அவுட்டானார். ஆனால், ஸ்டூவர்ட் பிராடு, ஜோஸ் பட்லர் ஜோடி இந்திய அணியை நன்கு சோதித்தது. உணவு இடைவேளைக்கு பிறகு ஸ்டூவர்ட் பிராடு, ஜோஸ் பட்லரை ரவீந்திர ஜடேஜா அபாரமாக வெளியேற்றினார். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 332 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளும், இஷாந்த் சர்மா, பும்ரா தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.



    இதைத்தொடர்ந்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடர்ந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுலும், ஷிகர் தவானும் களமிறங்கினர்.

    ஆட்டத்தின் இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் ஷிகர் தவானை 3 ரன்னில் வெளியேற்றி அதிர்ச்சி அளித்தார் ஸ்டூவர்ட் பிராடு. அவரை தொடர்ந்து புஜாரா களமிறங்கினார்.

    ராகுலும், புஜாராவும் நிதானமாக ஆடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். இதையடுத்து, தேனீர் இடைவேளை வரை இந்தியா ஒரு விக்கெட்டுக்கு 53 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvIND
    இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 332 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. #ENGvIND
    லண்டன்:

    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது.  டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்தார்.

    இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அலெஸ்டர் குக் மற்றும் ஜென்னிங்ஸ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடினர். ஜென்னிங்ஸ் 23 ரன்களில் அவுட்டானார். அவரை தொடர்ந்து மொயின் அலி களமிறங்கினார்.

    இந்த ஜோடி நிதானமாக ஆடியது. அரை சதமடித்த குக் 71 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து மொயின் அலியும் அரை சதமடித்து ஆட்டமிழந்தார். அதற்குபின் இறங்கிய வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சிறிது நேரத்தில் அடில் ரஷித்தை பும்ரா வெளியேற்றினார். இதனால் இங்கிலாந்து அணி விரைவில் சுருண்டு விடும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

    ஆனால், ஸ்டூவர்ட் பிராடு, ஜோஸ் பட்லர் ஜோடி இந்திய அணியை நன்கு சோதித்தனர். விக்கெட் விழாமல் இருவரும் நிதானமாக ஆடினர். ஜோஸ் பட்லர் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார்.  



    உணவு இடைவேளையில், இங்கிலாந்து 8 விக்கெட்டுக்கு 304 ரன்கள் எடுத்திருந்தது. உணவு இடைவேளைக்கு பின் தொடர்ந்து ஆடிய ஸ்டூவர்ட் பிராடு, ஜோஸ் பட்லர் ஆகியோரை ரவீந்திர ஜடேஜா அபாரமாக வெளியேற்றினார்.

    இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 332 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோஸ் பட்லர் - ஸ்டூவர்ட் பிராடு ஜோடி 9வது விக்கெட்டுக்கு 98 ரன்களை சேர்த்தது குறிப்பிடத்தக்கது. 

    இந்தியா தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளும், இஷாந்த் சர்மா, பும்ரா தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதையடுத்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. #ENGvIND
    இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையில், ஜோஸ் பட்லரின் பொறுப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 304 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvIND
    லண்டன்:

    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது.  டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்தார்.

    இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அலெஸ்டர் குக் மற்றும் ஜென்னிங்ஸ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடினர். ஜென்னிங்ஸ் 23 ரன்களில் அவுட்டானார். அவரை தொடர்ந்து மொயின் அலி களமிறங்கினார்.

    இந்த ஜோடி நிதானமாக ஆடியது. அரை சதமடித்த குக் 71 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து மொயின் அலியும் அரை சதமடித்து ஆட்டமிழந்தார். அதற்குபின் இறங்கிய வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்திருந்தது. ஜோஸ் பட்லரும், அடில் ரஷீத்தும் களத்தில் இருந்தனர்.



    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சிறிது நேரத்தில் அடில் ரஷித்தை பும்ரா வெளியேற்றினார். இதனால் இங்கிலாந்து அணி விரைவில் சுருண்டு விடும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

    அடுத்து இறங்கிய ஸ்டூவர்ட் பிராடு, ஜோஸ் பட்லருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இதனால் விக்கெட் விழாமல் இருவரும் நிதானமாக ஆடினர். ஜோஸ் பட்லர் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார்.  

    இரண்டாம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 8 விக்கெட்டுக்கு 304 ரன்கள் எடுத்துள்ளது. ஜோஸ் பட்லர் 63 ரன்னுடனும், பிராடு 36 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்த ஜோடி இதுவரை 90 ரன்களை சேர்த்துள்ளது. 

    இந்தியா தரப்பில் இஷாந்த் சர்மா, பும்ரா தலா 3 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா2 விக்கெட்டும் வீழ்த்தினர். #ENGvIND
    இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvIND
    லண்டன்:

    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கியது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

    இங்கிலாந்து அணியில் மாற்றம் ஏதும் செய்யவில்லை. இந்திய அணியில் ஹனுமா விஹாரி அறிமுகமாகியுள்ளார். இந்திய அணியில் அறிமுகமாகும் 292-வது டெஸ்ட் வீரர் இவராவார். ஹர்திக் பாண்டியா, அஸ்வின் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

    இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அலெஸ்டர் குக் மற்றும் ஜென்னிங்ஸ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடினர்.

    அணியின் எண்ணிக்கை 60 ஆக இருந்தபோது, ஜென்னிங்சை வெளியேற்றினார் ரவீந்திர ஜடேஜா. ஜென்னிங்ஸ் 23 ரன்களில் அவுட்டானார். அவரை தொடர்ந்து மொயின் அலி களமிறங்கினார்.

    உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டுக்கு 68 ரன்கள் எடுத்திருந்தது. அலெஸ்டர் குக் 37 ரன்னுடனும், மொயின் அலி 2 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். #ENGvIND
    மூளை அறுவை சிகிச்சையின்போது சில கணங்கள் உயிரிழந்த ஒரு பெண், ‘நான் இறந்தபோது எப்படி உணர்ந்தேன்’ என்பதை இங்கிலாந்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் விளக்கியுள்ளார்.
    லண்டன்:

    ஹாங்காங்கில் பிறந்து தற்போது லண்டனில் வசிக்கும் மிச்சைலி எல்மேன் (25). இவருக்கு 11 வயதில் மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த அறுவை சிகிச்சையின்போது சில கணங்கள் தன் உடலை விட்டு உயிர் பிரிந்ததாகவும், அதனை தாம் நன்கு உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    மிச்சைலி, கட்டிலில் படுத்தபடியே, சில அடிகள் உயரத்துக்கு மிதந்ததாகவும், அந்த கணம் மிகவும் அமைதியாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில், மரணம் மிகவும் அமைதியானது, அதனை கண்டு யாரும் அஞ்ச வேண்டாம் எனவும் மிச்சைலி அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
    சீக்கியர் கலவரம் தொடர்பாக ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு எதிராக லண்டனில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். #RahulGandhi
    லண்டன்:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.

    மேற்கு லண்டனில் உள்ள சவுத் ருசிப்பில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அவர் உள்ளூர் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பேசினார். 1,500-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் ஆதரவாளர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசிக்கொண்டு இருந்த போது காலிஸ்தான் ஆதரவாளர்கள் உள்ளே நுழைய முயன்றனர். அங்கு பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டு இருந்ததால் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. ராகுல் காந்தி நிகழ்ச்சிக்கு தொந்தரவு செய்வதற்காக அவர்கள் உள்ளே செல்ல முயன்றனர்.

    பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை ஓட்டலுக்குள் அனுமதிக்காததால் அவர்கள் ராகுல் காந்திக்கு எதிராக ஓட்டல் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சீக்கியர் கலவரம் தொடர்பாக ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு எதிராக அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    1984-ம் ஆண்டு இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து நடந்த சீக்கியருக்கு எதிரான கலவரத்துக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் சம்பந்தமில்லை என்று அவர் தெரிவித்து இருந்தார். #RahulGandhi


    தி.மு.க. செயல் தலைவரும் தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் பன்னாட்டு முனையத்தில் இருந்து துபாய் வழியாக லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றார். #DMK #Stalin
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவரும் தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் சென்றார். அங்குள்ள பன்னாட்டு முனையத்தில் இருந்து துபாய் வழியாக லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் சென்றார்.

    முன்னதாக, தமிழகத்திற்கு பல திட்டங்களை மத்திய அரசு தந்துள்ளதாக அமித்ஷா பேசியிருப்பது குறித்து கேட்டதற்கு ‘நான் அவர் பேசியதை பார்க்கவில்லை’ என கூறியபடி சென்றார்.

    லண்டனில் அவர் ஒரு வாரம் தங்கியிருந்து மீண்டும் சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது. #DMK #Stalin 
    இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் பிரத்வி ஷா, ஹனுமா விஹாரி சதத்தால் இந்தியா ‘ஏ’ அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #INDAvENGA #ENGAvINDA
    லண்டன்:

    இந்தியா ‘ஏ’, வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’, இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், முத்தரப்பு தொடரின் இறுதி போட்டியில் இந்தியா ‘ஏ’ - இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய ‘ஏ’ பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இங்கிலாந்து லயன்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் சாம் ஹெய்ன், லியம் லிவிங்ஸ்டோன் ஆகியோர் சிறப்பாக ஆடினர்.

    இருவரும் சேர்ந்து 150 ரன்களுக்கு மேல் சேர்த்தனர். மற்றவர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. சிறப்பாக ஆடிய சாம்
    ஹெயின் 108 ரன்களும், லியம் லிவிங்ஸ்டோன் 83 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். இறுதியில், இங்கிலாந்து லயன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது.

    இந்தியா ஏ சார்பில் தீபக் சாஹர், கலீல் அகமது தலா 3 விக்கெட்டும், ஷர்துல் தாக்குர் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இதையடுத்து, 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஏ அணி களமிறங்கியது. பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    ரிஷப் பந்த் 15 ரன்னிலும், மயங்க் அகர்வால் 40 ரன்னிலும், ஷுப்மான் கில் 20 ரன்னிலும், கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 44 ரன்னிலும், ஹனுமா விஹாரி 37 ரன்னிலும் வெளியேறினார்கள். அதன்பின் ரிஷப் பந்துடன் ஜோடி சேர்ந்த குருணால் பாண்ட்யா அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

    இறுதியில், இந்தியா ஏ அணி 48.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்தியா ‘ஏ’ அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து லயன்ஸ் அணியை வீழ்த்தியது. #INDAvENGA #ENGAvINDA
    லண்டனின் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் 12-வது மாடியில் ஏற்பட்ட தீயை, 58 தீயணைப்பு துறை வீரர்கள் போராடி அணைத்தனர்.

    லண்டன்:

    லண்டனின் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் 12-வது மாடியில் நேற்று மதியம் தீவிபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறையினருக்கு 90க்கும் மேற்பட்ட போல்கால்கள் வந்துள்ளது. இதையடுத்து எட்டு தீயணைப்பு வாகனங்களில் 58 வீரர்கள் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்தனர்.

    அவர்கள் அங்கு செல்வதற்குள் கட்டிடத்தில் இருந்த 40 பேர் பத்திரமாக வெளியேறிவிட்டனர். அங்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் 3 பேரை மீட்டனர். அதன்பின் நீண்ட நேர போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டது.

    நல்ல வேளையாக யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. இந்த தீவிபத்தில் 12-வது மாடியில் இருந்த ஒரு குடியிருப்பின் சில பகுதிகள் மற்றும் 13-வது மாடியின் பால்கனி சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
    இங்கிலாந்து நாட்டில் சூனியம் செய்து பெண்களை பாலியல் தொழிலுக்காக ஜெர்மன் நாட்டிற்கு கடத்தி வந்த நர்ஸ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.
    லண்டன்:

    லண்டனைச் சேர்ந்த ஜோசப்பின் இயாமு என்ற செவிலி, சூனியம் செய்து பெண்களை பாலியல் தொழிலுக்காக ஜெர்மன் போன்ற நாடுகளுக்கு கடத்தியதாக கைது செய்யப்பட்டார்.  விசாரணையில், 2009-ம் ஆண்டு முதல் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற இயாமு தேசிய சுகாதார மையத்தில் செவிலியாக பணி புரிந்து வருவதாகவும், இவருக்கு பில்லி சூனியம் போன்றவற்றில் அதிக ஈடுபாடு இருப்பதும் தெரியவந்தது.

    இந்த பில்லி சூனியம் செய்வதன் மூலம் பெண்களை கடத்தி, அவர்களை கோழியின் இதயம், புழு, மற்றும் இரத்தம் போன்றவற்றை குடிக்கச் செய்து அவர்களை பாலியல் தொழிலுக்காக ஜெர்மன் நாட்டுக்கு கடத்தி வந்ததும் தெரியவந்தது.

    இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகையில், 30 ஆயிரம் முதல் 38 ஆயிரம் யூரோப் அளவுக்கு பணம் வாங்கிக் கொண்டு தங்களை பாலியல் தொழிலுக்காக விற்று விடுவதாகவும், இயாமு பில்லி சூனியம் செய்வதால் அவரை எதிர்க்க பயந்து வந்ததாகவும் தெரிவித்தனர்.

    கைது செய்யப்பட்ட இயாமு மீது பர்மிங்காம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கடத்தப்பட்ட பெண்கள் ஜெர்மனியில் ஒப்படைக்கப்பட்டவுடன் இமாமுவின் வேலை முடிந்துவிட்டதாகவும், அதன்பின் அங்கு உள்ளவர்கள் அந்த பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்ததாகவும் வழக்கு விசாரணையின் போது அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

    10 வார காரலமாக நடைபெற்ற விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, பாலியல் தொழிலுக்காக பெண்களை கடத்தி வழக்கில் இயாமு குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அவருக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

    பிரிட்டனில் கொண்டு வரப்பட்ட நவீன அடிமைகளுக்கான சட்டத்தில் தண்டனைக்கு உள்ளாக்கப்படும் முதல் குற்றவாளி ஜோசப்பின் இயாமு என்பது குறிப்பிடத்தக்கது. 
    இங்கிலாந்தின் மேடம் துசாட்ஸ் மியூசியத்தில் பிரபல யோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை அமைக்கப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். #MadameTussaudsMuseum #Ramdev
    லண்டன்:

    சர்வதேச அளவில் புகழ்பெற்ற மேடம் துசாட்ஸ் மெழுகு சிலை அருங்காட்சியகம் லண்டனில் அமைந்துள்ளது. இங்கு உலக நாடுகளில் பிரபலமானவர்களின் மெழுகு சிலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    அந்த வரிசையில், பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் மெழுகு சிலை இந்த அருங்காட்சியகத்தில் விரைவில் இடம் பெறவுள்ளது.

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு லண்டன் சென்றுள்ள பாபா ராம்தேவ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், யோகாவை உலகளவில் பிரபலப்படுத்தும் முயற்சியாக எனது மெழுகு சிலை நிறுவப்பட வேண்டும் என அவர்கள் கேட்டு கொண்டனர். ஆனால் நான் இதற்கு மறுப்பு தெரிவித்து வந்தேன். இங்கு சிலை நிறுவப்படுவதன் மூலம் பல்வேறு நாட்டினர் யோகாவின் பெருமைகளை அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும் என்பதால் சிலை அமைக்க ஒப்புக் கொண்டேன். இதையடுத்து, எனது மெழுகு சிலை விரைவில் அமையவுள்ளது என தெரிவித்தார். #MadameTussaudsMuseum #Ramdev
    இங்கிலாந்து தலைநகர் லண்டன் சாரிங் கிராஸ் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர். #CharingCrossStation
    லண்டன்:

    இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள சாரிங் கிராஸ் ரெயில் நிலையம் நகரத்தின் மிக பரபரப்பான இடங்களில் ஒன்றாகும். இந்நிலையில், இன்று காலை ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக ஒரு நபர் அங்கிருந்து மிரட்டியுள்ளார். இதனை அடுத்து ரெயில் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

    ஆயுதம் தாங்கிய அதிரடிப்படையினர் ரெயில் நிலையத்தில் குவிக்கப்பட்டனர். சிறிது நேரத்திற்கு பிறகு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். வழக்கமான ரெயில் போக்குவரத்து விரைவில் தொடங்கும் எனவும் கூறினர். 
    ×