search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "London"

    இந்திய ஜனநாயகம் மற்றும் தேர்தல் கமிஷன் மீது களங்கம் ஏற்படுத்துவதற்கு காங்கிரஸ் கட்சி முயற்சி செய்வதாக மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். #EVMHackathon #RaviShankar #Congress
    புதுடெல்லி:

    மின்னணு வாக்கு எந்திரங்களில் மோசடி செய்துதான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சி வெற்றி பெற்றது என்று லண்டனில் இருந்து இணையவழியில் அமெரிக்க வாழ் இந்திய மின்னணு தொழில் நுட்ப வல்லுனர் சையது சுஜா என்பவர் பேட்டி அளித்துள்ளார்.

    இதற்கு பாரதீய ஜனதா கட்சி பதில் அளித்துள்ளது.

    அந்த கட்சியின் மூத்த தலைவரும், மத்திய மந்திரியுமான ரவிசங்கர் பிரசாத் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த விவகாரத்தில் புகார் கூறிய நபரின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருப்பது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆஷிஸ் ராய் தலைமையிலான இந்திய பத்திரிகையாளர் சங்கம் ஆகும். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவான பாட்டை அவர் பாடி உள்ளார். அவர் காங்கிரஸ் பத்திரிகையான நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கும் எழுதுகிறார். சமூக வலைத்தளங்களில் காங்கிரசுக்காக பிரசாரம் செய்கிறார். லண்டனில் ராகுல் காந்தியின் பொது நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ததும் அவர்தான். எனவே இந்திய ஜனநாயகம் மற்றும் தேர்தல் கமிஷன் மீது களங்கம் ஏற்படுத்துவதற்கு காங்கிரஸ் கட்சியின் ஆதரவில் நடந்த சதிதான் அந்த பத்திரிகையாளர் சந்திப்பு.

    இவ்வாறு அவர் கூறினார். #EVMHackathon #RaviShankar #Congress

    மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற கத்திக்குத்து சம்பவம் பயங்கரவாத தொடர்புடையது என இங்கிலாந்து போலீசார் தெரிவித்துள்ளனர். #ManchesterStabbingAttack
    லண்டன்:

    இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ரெயில்வே நிலையம் ஒன்றில் மர்ம நபர் ஒருவர் 3 பேரை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தி உள்ளார்.

    இந்த சம்பவத்தில் ஆண், பெண் மற்றும் காவல்துறை அதிகாரி ஒருவர் என 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கத்திக்குத்து தாக்குதல் நடத்திய மர்ம நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதுதொடர்பாக, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், மற்ற நாடுகள் மீது நீங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தும் வரை இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறும் என சந்தேகத்திற்குரிய நபர் கூறியதாக தெரிவித்தனர்.

    இதற்கிடையே, மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற கத்திக்குத்து சம்பவம் பயங்கரவாத தொடர்புடையது என இங்கிலாந்து போலீசார் தெரிவித்துள்ளனர். #ManchesterStabbingAttack
    சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டியில் பிரேசில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் உருகுவேயை வீழ்த்தியது. #Neymar #Brazil #Uruguay
    லண்டன்:

    5 முறை உலக சாம்பியன் பிரேசில்-உருகுவே அணிகள் இடையிலான சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நேற்று முன்தினம் நடந்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பந்து அதிக நேரம் பிரேசில் அணியினர் வசம் இருந்தாலும் எளிதில் கோல் அடிக்க முடியவில்லை.

    76-வது நிமிடத்தில் பிரேசில் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனை பயன்படுத்தி நட்சத்திர வீரர் நெய்மார் கோல் அடித்தார். உருகுவே பின்கள வீரர் டியாகோ லாக்சல்ட் முரட்டு ஆட்டத்தால் பிரேசில் வீரர் டானிலோவை தடுத்ததற்காக வழங்கப்பட்ட இந்த பெனால்டி வாய்ப்புக்கு உருகுவே வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அந்த எதிர்ப்புக்கு நடுவர் பணியவில்லை.

    உருகுவே அணி வீரர்கள் லூயிஸ் சுவாரஸ், எடிசன் கவானி ஆகியோர் கோலை நோக்கி அடித்த அபாரமான ஷாட்களை பிரேசில் அணியின் கோல்கீப்பர் அலிசன் லாவகமாக தடுத்து நிறுத்தினார். முடிவில் பிரேசில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் உருகுவேயை வீழ்த்தியது.
    விஷம் என பொருள்படும் டாக்சிக் என்ற வார்த்தையை இந்த ஆண்டிற்கான சிறந்த சொல்லாக ஆக்ஸ்போர்டு அகராதி தேர்வு செய்துள்ளது. #OxfordDictionary #Toxic #WordoftheYear
    லண்டன்:

    கடந்த 11 வருடங்களாக அந்தந்த ஆண்டின் சிறந்த வார்த்தையை ஆக்ஸ்போர்டு அகராதி வெளியிட்டு வருகிறது.

    இந்நிலையில், இந்த ஆண்டின் சர்வதேச வார்த்தையாக toxic என்னும் வார்த்தையை தேர்வு செய்துள்ளதாக ஆக்ஸ்போர்டு அகராதி செய்தி வெளியிட்டுள்ளது.

    டாக்ஸிக் என்றால் விஷம் என்ற பொருள். இது லத்தீன் மொழியில் டாக்ஸியஸ் என்ற சொல்லில் இருந்து உருவானது. 17-ம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் இந்த வார்த்தை பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

    இந்தாண்டு இந்த வார்த்தையைப் பற்றி அதிகம் பேர் விவாதித்ததாக ஆக்ஸ்போர்டு கூறியுள்ளது. அதனாலேயே இந்த வார்த்தையை இந்தாண்டின் சிறந்த வார்த்தையாக தேர்வு செய்ததாக அது விளக்கம் அளித்துள்ளது. #OxfordDictionary #Toxic #WordoftheYear
    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லண்டனில் உள்ள விமான நிலையத்தில் ஆடிப்பாடி, கோலாகலமாக பயணிகள் தீபாவளியை கொண்டாடினர். #Diwali
    லண்டன்:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லண்டனில் உள்ள விமான நிலையத்தில் ஆடிப்பாடி, கோலாகலமாக பயணிகள் மற்றும் ஊழியர்கள் தீபாவளியை கொண்டாடினர். #Diwali

    இந்துக்களின் மிக முக்கிய பண்டிகையான தீபாவளி திருநாள் (6.11.18) உலகம் முழுவதும் மிகவும் பிரம்மாண்டமாக பல்வேறு வழிகளில் கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையை இந்துக்கள் மட்டுமின்றி, பல்வேறு மதத்தினரும் பாகுபாடு இன்றி இந்தியாவில் கொண்டாடினர்.

    இந்நிலையில், லண்டன் நகரில் உள்ள ஹெத்ரோ விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் தீபாவளியை ஆனந்தமாக ஆடிப்பாடி கொண்டாடியுள்ளனர். இந்த காட்சி இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. #Diwali
    தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் ஸ்ருதிஹாசன் முதல் முறையாக லண்டனில் இசை நிகழ்ச்சி நடத்தி இருக்கிறார். #ShrutiHaasan
    ஸ்ருதிஹாசன் நடிக்க வருவதற்கு முன்பே இசையில் ஆர்வம் கொண்டிருந்தார். சிறு வயதிலிருந்தே பாடல்களைப் பாட ஆரம்பித்த ஸ்ருதி வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சினிமாவில் தொடர்ந்து பாடி வருகிறார். அத்துடன் இசையமைப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். 

    கமல் நடித்த உன்னைப்போல் ஒருவன் படத்துக்கு ஸ்ருதிஹாசன் தான் இசை அமைத்திருந்தார். உலகின் பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்தி இருக்கும் ஸ்ருதிஹாசன் முதன்முறையாக லண்டனில் இசை நிகழ்ச்சி நடத்தி இருக்கிறார். நேற்று முன் தினம் நடந்த இந்த இசை நிகழ்ச்சிக்கு பெருதிரளான கூட்டம் வந்தது. 

    நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், தானே இசையமைத்து பாடல்களை பாடினார். சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த நிகழ்ச்சியைக் கண்டுகளித்த ரசிகர்கள் கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தனர். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ஸ்ருதிஹாசன், அந்நிகழ்ச்சி குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியைக் காண வந்தவர்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்திருக்கிறார்.
    மல்லையா லண்டனுக்கு தப்புவதற்கு முன்பாக அருண் ஜெட்லியை சந்தித்து பேசினார் என பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார். #VijayMallaya #ArunJaitley #SubramanianSwamy
    புதுடெல்லி:

    பெங்களூருவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, 13 பொதுத்துறை வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்று லண்டனில் தஞ்சம் புகுந்துள்ளார். மல்லையா மீதான நிதி மோசடி வழக்குகளை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.

    லண்டனில் உள்ள அவரை இந்தியா கொண்டுவர, லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் கோர்ட்டில் இந்தியா சார்பில் வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் டிசம்பர் 10-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு விசாரணையில் ஆஜரான விஜய் மல்லையா, “நாட்டை விட்டு வெளியேறும் முன் நிதி மந்திரி அருண் ஜெட்லியை பல முறை சந்தித்து, நிலைமையை சரிசெய்ய முயற்சித்தேன்” என கூறியிருந்தார்.

    இதற்கு மறுப்பு தெரிவித்த அருண் ஜெட்லி, 2014-ம் ஆண்டு  முதல் தாம் விஜய் மல்லையாவை சந்திக்க அனுமதி வழங்கவில்லை என கூறியிருந்தார்.



    இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தனது ட்விட்டர் பக்கத்தில், 2015-ம் ஆண்டு பாராளுமன்ற வளாகத்தில் விஜய் மல்லையா, அருண் ஜெட்லியை சந்தித்து தாம் லண்டனுக்கு தப்புவது குறித்து தெரிவித்தார் என குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், மற்றொரு மறுக்க முடியாத உண்மை என்னவென்றால், விஜய் மல்லையா மீது இருந்த லுக் அவுட் நோட்டீஸ் தளர்க்கப்பட்டு, 54 பரிசோதிக்கப்பட்ட பயண பொருட்களை எடுத்துச் சென்றதாகவும் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.

    2014-ம் ஆண்டு முதல் விஜய் மல்லையவை தாம் சந்திக்கவில்லை என அருண் ஜெட்லி கூறியிருந்த நிலையில், அருண் ஜெட்லியிடம் லண்டனுக்கு தப்புவது குறித்து சொல்லிவிட்டுதான் சென்றார் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. #VijayMallaya #ArunJaitley #SubramanianSwamy
    ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் பிரிட்டனின் முடிவை தொடர்ந்து உலகின் மிகப்பெரிய பொருளாதார மையமாக இருந்த லண்டன் தற்போது அந்த சிறப்பை நியூயார்க்கிடம் இழந்துள்ளது. #NewYorkovertakes #topfinancialcentre
    லண்டன்:

    ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர். இதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்துவிட்ட பிரிட்டன் தனிநாடாகவே பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், ஐரோப்பிய யூனியனில் இணைந்திருக்கும் நாடுகளுடன் முன்னர் இருந்ததுபோல் இனி வர்த்தக உறவுகளை இனி பிரிட்டன் தொடர முடியாது என கருதப்படுகிறது. எனவே, உலகின் தலைசிறந்த பொருளாதார மையமாக விளங்கிய லண்டன் நகரில் இருந்து பல்வேறு நிதி நிறுவனங்கள் வேறு நாட்டின் முக்கிய நகரங்களுக்கு நகரத் தொடங்கியுள்ளன.

    அவ்வகையில், முதலீடுகளை ஈர்ப்பதில் உலகின் மிகப்பெரிய பொருளாதார மையமாக இருந்த லண்டன் தற்போது அந்த சிறப்பை  நியூயார்க் நகரிடம் இழந்துள்ளது.


    இதுதொடர்பாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவு இன்று வெளியாகியுள்ளது. பொருளாதார ரீதியாக சிறப்பிடம் பிடித்துள்ள 100  நகரங்களில் முதலாம் இடத்தில் நியூயார்க், இரண்டாம் இடத்தில் லண்டன் மற்றும் அடுத்தடுத்த இடங்களில் ஹாங்காங், சிங்கப்பூர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

    மிகப்பெரிய நிதி நிறுவனங்களின் அலுவலகங்கள், உள்கட்டமைப்பு, அதிகமான பணியாளர்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது. #NewYorkovertakes #topfinancialcentre
    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப்பின் மனைவி குல்சும் நவாஸ் உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். #NawazSharif #KulsumNawaz
    லண்டன்:

    பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் தற்போது அவென்பீல்டு ஊழல் வழக்கில் சிறையில் உள்ளார். இவருடன் இவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் சப்தார் ஆகியோரும் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.

    இவரது மனைவி குல்சூம் நவாஸ் உடல்நலக்குறைவால் தற்போது உயிரிழந்தார். 68 வயதான இவர், கடுமையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டு லண்டனில் சிகிச்சை பெற்று வந்தார்.



    இவரது உடல்நலக்குறைவை காரணம் காட்டியே நவாஸ் ஷரிப்பும், மகள் மரியமும் ஊழல் வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் லண்டனில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    தற்போது இவரது மறைவால், ரவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நவாஸ் ஷரிப் மற்றும் மரியம் நவாஸ் ஆகியோர் பரோல் மூலம் வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. #NawazSharif #KulsumNawaz 
    இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில் தேனீர் இடைவேளையின் போது இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvIND
    லண்டன்:

    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. 

    டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர் குக் அரை சதமடித்து 71 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து மொயின் அலியும் அரை சதமடித்து ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சிறிது நேரத்தில் அடில் ரஷித் அவுட்டானார். ஆனால், ஸ்டூவர்ட் பிராடு, ஜோஸ் பட்லர் ஜோடி இந்திய அணியை நன்கு சோதித்தது. உணவு இடைவேளைக்கு பிறகு ஸ்டூவர்ட் பிராடு, ஜோஸ் பட்லரை ரவீந்திர ஜடேஜா அபாரமாக வெளியேற்றினார். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 332 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளும், இஷாந்த் சர்மா, பும்ரா தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.



    இதைத்தொடர்ந்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடர்ந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுலும், ஷிகர் தவானும் களமிறங்கினர்.

    ஆட்டத்தின் இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் ஷிகர் தவானை 3 ரன்னில் வெளியேற்றி அதிர்ச்சி அளித்தார் ஸ்டூவர்ட் பிராடு. அவரை தொடர்ந்து புஜாரா களமிறங்கினார்.

    ராகுலும், புஜாராவும் நிதானமாக ஆடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். இதையடுத்து, தேனீர் இடைவேளை வரை இந்தியா ஒரு விக்கெட்டுக்கு 53 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvIND
    இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 332 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. #ENGvIND
    லண்டன்:

    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது.  டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்தார்.

    இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அலெஸ்டர் குக் மற்றும் ஜென்னிங்ஸ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடினர். ஜென்னிங்ஸ் 23 ரன்களில் அவுட்டானார். அவரை தொடர்ந்து மொயின் அலி களமிறங்கினார்.

    இந்த ஜோடி நிதானமாக ஆடியது. அரை சதமடித்த குக் 71 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து மொயின் அலியும் அரை சதமடித்து ஆட்டமிழந்தார். அதற்குபின் இறங்கிய வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சிறிது நேரத்தில் அடில் ரஷித்தை பும்ரா வெளியேற்றினார். இதனால் இங்கிலாந்து அணி விரைவில் சுருண்டு விடும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

    ஆனால், ஸ்டூவர்ட் பிராடு, ஜோஸ் பட்லர் ஜோடி இந்திய அணியை நன்கு சோதித்தனர். விக்கெட் விழாமல் இருவரும் நிதானமாக ஆடினர். ஜோஸ் பட்லர் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார்.  



    உணவு இடைவேளையில், இங்கிலாந்து 8 விக்கெட்டுக்கு 304 ரன்கள் எடுத்திருந்தது. உணவு இடைவேளைக்கு பின் தொடர்ந்து ஆடிய ஸ்டூவர்ட் பிராடு, ஜோஸ் பட்லர் ஆகியோரை ரவீந்திர ஜடேஜா அபாரமாக வெளியேற்றினார்.

    இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 332 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோஸ் பட்லர் - ஸ்டூவர்ட் பிராடு ஜோடி 9வது விக்கெட்டுக்கு 98 ரன்களை சேர்த்தது குறிப்பிடத்தக்கது. 

    இந்தியா தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளும், இஷாந்த் சர்மா, பும்ரா தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதையடுத்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. #ENGvIND
    இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையில், ஜோஸ் பட்லரின் பொறுப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 304 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvIND
    லண்டன்:

    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது.  டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்தார்.

    இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அலெஸ்டர் குக் மற்றும் ஜென்னிங்ஸ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடினர். ஜென்னிங்ஸ் 23 ரன்களில் அவுட்டானார். அவரை தொடர்ந்து மொயின் அலி களமிறங்கினார்.

    இந்த ஜோடி நிதானமாக ஆடியது. அரை சதமடித்த குக் 71 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து மொயின் அலியும் அரை சதமடித்து ஆட்டமிழந்தார். அதற்குபின் இறங்கிய வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்திருந்தது. ஜோஸ் பட்லரும், அடில் ரஷீத்தும் களத்தில் இருந்தனர்.



    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சிறிது நேரத்தில் அடில் ரஷித்தை பும்ரா வெளியேற்றினார். இதனால் இங்கிலாந்து அணி விரைவில் சுருண்டு விடும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

    அடுத்து இறங்கிய ஸ்டூவர்ட் பிராடு, ஜோஸ் பட்லருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இதனால் விக்கெட் விழாமல் இருவரும் நிதானமாக ஆடினர். ஜோஸ் பட்லர் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார்.  

    இரண்டாம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 8 விக்கெட்டுக்கு 304 ரன்கள் எடுத்துள்ளது. ஜோஸ் பட்லர் 63 ரன்னுடனும், பிராடு 36 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்த ஜோடி இதுவரை 90 ரன்களை சேர்த்துள்ளது. 

    இந்தியா தரப்பில் இஷாந்த் சர்மா, பும்ரா தலா 3 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா2 விக்கெட்டும் வீழ்த்தினர். #ENGvIND
    ×