search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லண்டனில் ராகுலுக்கு எதிராக காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம்
    X

    லண்டனில் ராகுலுக்கு எதிராக காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம்

    சீக்கியர் கலவரம் தொடர்பாக ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு எதிராக லண்டனில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். #RahulGandhi
    லண்டன்:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.

    மேற்கு லண்டனில் உள்ள சவுத் ருசிப்பில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அவர் உள்ளூர் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பேசினார். 1,500-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் ஆதரவாளர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசிக்கொண்டு இருந்த போது காலிஸ்தான் ஆதரவாளர்கள் உள்ளே நுழைய முயன்றனர். அங்கு பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டு இருந்ததால் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. ராகுல் காந்தி நிகழ்ச்சிக்கு தொந்தரவு செய்வதற்காக அவர்கள் உள்ளே செல்ல முயன்றனர்.

    பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை ஓட்டலுக்குள் அனுமதிக்காததால் அவர்கள் ராகுல் காந்திக்கு எதிராக ஓட்டல் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சீக்கியர் கலவரம் தொடர்பாக ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு எதிராக அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    1984-ம் ஆண்டு இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து நடந்த சீக்கியருக்கு எதிரான கலவரத்துக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் சம்பந்தமில்லை என்று அவர் தெரிவித்து இருந்தார். #RahulGandhi


    Next Story
    ×