search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lok sabha elections"

    கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திடீரென மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டதற்கான தகவல்கள் வெளியாகியுள்ளது.
    கரூர்:

    கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்தவர் ராஜசேகர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு அதிகாரியாக பொறுப்பேற்றார். இந்தநிலையில் நேற்று அங்கிருந்து திடீரென மாற்றப்பட்டார். அவருக்கு வேறு பணி வழங்கப்படவில்லை. காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

    இதையடுத்து கரூர் மாவட்ட புதிய போலீஸ்சூப்பிரண்டாக சென்னை கணினி மயமாக்கல் துறையின் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய விக்கிரமன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகர் அதிரடியாக மாற்றப்பட்டதும் அவருக்கு புதிய பொறுப்பு எதுவும் வழங்கப்படாமல் இருப்பதும் காவல் துறை மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தற்போது கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் இடைத்தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது. தேர்தல் பிரசார பாதுகாப்பு ஏற்பாடுகளில் முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது அதிருப்தி ஏற்பட்டதாலும் ராஜசேகர் மீது எழுந்த சில புகார்கள் தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து, தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டிக்கு கடிதம் எழுதியது. அவரை மாற்ற பரிந்துரை செய்தது. அதன் எதிரொலியாகவே ராஜசேகர் மாற்றப்பட்டு விக்கிரமன் நியமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    அதேபோன்று பாராளுமன்ற தேர்தல் முதலே கரூர் மாவட்டத்தில் பல பிரச்சனைகள் எழுந்தது. வேட்பாளர்கள் தேர்தல் அதிகாரியான கலெக்டர், உள்பட பல அதிகாரிகள் மீது புகார்களை அடுக்கிக்கொண்டே இருந்தனர். சமீபத்தில் பாராளுமன்ற தேர்தல் ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த இடத்திலும் குளறுபடி தொடர்பாக புகார்கள் கூறப்பட்டது. அதிகாரிகள் மட்டத்தில் எழுந்த கருத்து வேறுபாடும் போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகர் மாற்றத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.
    பாஜகவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்கும் என்றும், கடந்த தேர்தலை விட பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் அமித்‌ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி :

    பா.ஜனதா தலைவர் அமித்‌ஷா ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

    இந்த தேர்தலில் பா.ஜனதா தனி பெரும்பான்மை பெறும். கடந்த 2014-ம் ஆண்டு வெற்றி பெற்றதை விட அதிக தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறும்.

    கடந்த தேர்தலில் வெற்றி பெறாத 120 தொகுதிகளில் இந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு இருக்கும் என்று கணித்தேன். அவற்றில் 55 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறும். பா.ஜனதா பலவீனமாக இருந்த கடலோர மாநிலங்களிலும், கிழக்கு மாநிலங்களிலும் கட்சியை பலப்படுத்தும் பணியில் வெற்றி பெற்றுள்ளேன்.

    அதன்படி, மேற்கு வங்காளத்தில் 33 தொகுதிகளுக்கு மேலும், ஒடிசா மாநிலத்தில் 12 முதல் 15 தொகுதிகளும் கிடைக்கும். உத்தரபிரதேசத்தில் கடந்த முறை பெற்றதை விட அதிகமாக, அதாவது, 73 தொகுதிகளுக்கு மேல் கிடைக்கும்.

    தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ், ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் ஆகியோர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தால், அதை வரவேற்போம்.



    பிரதமர் மோடி, மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு புறப்பட தயாராக இருக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். யார் கிளம்ப வேண்டும் என்று 23-ந்தேதி தெரியும்.

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை விமர்சிக்கக்கூடாது என்றால், அவர் இந்திரா குடும்பத்தை சேர்ந்தவர் என்ற காரணத்தாலா? கடந்த காலத்தில் செய்த தவறுகளில் இருந்து ராகுலும், பிரியங்காவும் எவ்வளவு முயன்றாலும் தப்ப முடியாது.

    தேசியவாதம்தான் பா.ஜனதா தொடங்கியதில் இருந்தே எங்களது உந்துசக்தி. அதை ஓட்டுக்காக நாங்கள் பயன்படுத்தவில்லை. முப்படைகளை நாங்கள் அரசியலுக்கு பயன்படுத்துவதாக கூறுகிறார்கள். மோடி அரசு முடிவு எடுத்ததன் பேரிலேயே விமானப்படை தாக்குதலில் ஈடுபட்டது.

    மோடி ஆட்சியில், தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள். கடந்த 30 ஆண்டுகளில், விலைவாசி பற்றி பேசப்படாத ஒரே தேர்தல் இதுவாகும். இந்த பெருமை மோடி அரசையே சாரும்.

    இவ்வாறு அமித்‌ஷா கூறினார்.
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் ராணுவ வீரர் தேஜ்பகதூர் யாதவ் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #TejBahadurYadav #Varanasi
    புதுடெல்லி:

    ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்ட தேஜ் பகதூர் யாதவ், வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து சமாஜ்வாடி கட்சி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தார்.  ஆனால், வேட்பு மனுவில் சரியான விவரங்கள் இல்லை என கூறி தேர்தல் ஆணையம் அவரது வேட்பு மனுவை நிராகரித்தது.

    ஆனாலும், வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடுவதில் உறுதியாக இருந்த தேஜ் பகதூர் யாதவ், தனது வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

    அவரது மனு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜராகி வாதாடினார். அப்போது, உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை சுட்டிக் காட்டிய அவர், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது தேர்தல் வழக்கு தொடரலாம் என தெரிவித்தார்.

    ஆனால், பல்வேறு தீர்ப்புகளை மேற்கோள் காட்டி வாதாடிய தேர்தல் ஆணைய வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, தேர்தல் முடிந்தபிறகுதான் தேர்தல் தொடர்பான வழக்குகளை தொடர முடியும் என்றார்.

    அப்படியென்றால் தேர்தல் முடிந்தபிறகு தனது கட்சிக்காரர், இந்த வழக்கை மீண்டும் தொடர அனுமதிக்கும்படி பிரசாந்த் பூஷன் கேட்டுக்கொண்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தேஜ் பகதூர் யாதவின் மனுவை தள்ளுபடி செய்தனர். இதன்மூலம் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் தேஜ் பகதூர் யாதவின் முயற்சி தோல்வி அடைந்தது. #TejBahadurYadav #Varanasi
    ஒரே நபர் 2 தொகுதிகளில் போட்டியிடுவதை தடை செய்ய வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. #SC
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் ஒரே நபர் 2 தொகுதிகளில் போட்டியிடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி பாஜக தலைவரும் வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாய், உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.  இவ்வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

    ஆனால் அஸ்வினி குமார் உபாத்யாயின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், அவரது வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டது.

    ஒரு நபர் 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிபெற்றால் அவர், அவற்றில் ஒரு தொகுதியில் இருந்து விலகவேண்டியுள்ளது. இதனால் அரசுக்கு வீண் செலவும், உழைப்பு வீணடிப்பும் ஏற்படுகிறது. வெற்றிபெற்ற ஒரு வேட்பாளர் ராஜினாமா செய்வது அவருக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு அநீதி அளிப்பதாகவும் உள்ளது என மனுதாரர் கூறியுள்ளார். #SC
    வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ள நிலையில், இன்று பிரம்மாண்ட பேரணி நடத்துகிறார். #LokSabhaElections2019 #Modi #ModiNomination
    வாரணாசி:

    பாராளுமன்றத் தேர்தலில் உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். நாளை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார். இதையொட்டி, வாரணாசியில் இன்று பிரம்மாண்ட பேரணி நடத்துகிறார். இதனால் வாரணாசியின் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    முதலில், வாரணாசியில் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்திற்கு செல்லும் மோடி, அந்த பல்கலைக்கழக நிறுவனரான மறைந்த மதன் மோகன் மாளவியா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இதையடுத்து, சாலை மார்க்கமாக மோடி பிற்பகல் 3 மணிக்கு பேரணி செல்கிறார்.



    வாரணாசியில் உள்ள தாசாஸ்வமேத் நதிமுகத்துவார பகுதி வரை பேரணி நடைபெறுகிறது. இந்தப் பேரணியில் பாஜக மூத்த தலைவர்கள், மத்திய மந்திரிகள் கலந்து கொள்ள உள்ளனர். இதையடுத்து கங்கை நதியில் ஆரத்தி எடுத்து மோடி வழிபாடு நடத்துகிறார்.

    நாளை வேட்பு மனு தாக்கலுக்கு முன்பாக, கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஹோட்டலில் பாஜக தொண்டர்களுடன் காலையில் மோடி ஆலோசனை நடத்துகிறார். பின்னர் கால பைரவர் கோயிலில் வழிபாடு நடத்துகிறார். இந்த வழிபாட்டை முடித்துக் கொண்டு, புறப்படும் அவர், 11.30 மணியளவில் வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார். #LokSabhaElections2019 #Modi #ModiNomination
    குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பெண் சாமியார் சாத்வி பிரக்யா தேர்தலில் போட்டியிட தடை இல்லை என மும்பை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #SadhviPragya #LokSabhaElection
    மும்பை:

    மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் மாலேகான் பகுதியில் கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ந்தேதி நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக பெண் சாமியார் சாத்வி பிரக்யா சிங் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஜாமீனில் வெளிவந்துள்ள சாத்வி பிரக்யா சிங் தற்போது மத்தியபிரதேச மாநிலம் போபால் நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிடுகிறார்.

    இந்தநிலையில் ஜாமீனில் வெளிவந்துள்ள சாத்வி பிரக்யா சிங் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கவேண்டும் எனக்கோரி, மாலேகான் குண்டுவெடிப்பில் மகனை இழந்த நிசார் சையது என்பவர் மும்பையில் உள்ள தேசிய புலனாய்வு முகமை சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை நேற்று விசாரித்த சிறப்பு கோர்ட்டு, நிசார் சையத்தின் மனுவை தள்ளுபடி செய்தது. இது குறித்து நீதிபதி, ‘ஒருவர் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க இந்த கோர்ட்டுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை. இது தேர்தல் அதிகாரிகளின் வரம்புக்கு உள்பட்டதாகும். எனவே வழக்கை தள்ளுபடி செய்கிறேன்’ என உத்தரவிட்டார்.   #SadhviPragya #LokSabhaElection
    பா.ஜ.க.வில் இன்று இணைந்த இந்தி சினிமாவின் முன்னணி நடிகரான சன்னி தியோல், பஞ்சாப் மாநிலத்தின் குருதாஸ்பூர் தொகுதி வேட்பாளராக போட்டியிடுகிறார் என அக்கட்சி அறிவித்துள்ளது. #BJP #SunnyDeol
    புதுடெல்லி:

    இந்தி சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சன்னி தியோல். இவர் பிரபல இந்தி நடிகர் தர்மேந்திராவின் முதல் மனைவியின் மகன். தர்மேந்திரா பா.ஜ.க. சார்பில் கடந்த 2004ஆம் ஆண்டு பொதுதேர்தலில் போட்டியிட்டு வென்றவர்.
     
    தர்மேந்திராவின் இரண்டாவது மனைவியும் நடிகையுமான ஹேமமாலினியும் பா.ஜ.க.வில் மதுரா தொகுதியில் போட்டியிடுகிறார்.

    இதற்கிடையே, சன்னி தியோல் பா.ஜ.க. தலைவரும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சருமான நிர்மலா சீதாராமன் முன்னிலையில் அந்த கட்சியில் இன்று இணைந்தார்.



    இந்நிலையில், இன்று இரவு பாஜக சார்பில் பஞ்சாப், சண்டிகர் மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது.

    இதில், பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் தொகுதியில் சன்னி தியோலும், ஹொசைர்பூர் தொகுதியில் சாம் பிரகாஷும், சண்டிகரில் கிரண் கெர் ஆகியோரும் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர் என அறிவித்துள்ளது. #BJP #SunnyDeol
    தமிழகத்தில் நாளை தேர்தல் நடைபெற உள்ளதால், தியேட்டர்களில் நாளை காலை மற்றும் மதியம் திரைப்பட காட்சிகள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #CinemaShowsCancel
    தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.



    இந்த தேர்தலில் மக்கள் பணிச்சுமையின்றி வாக்களிக்கும் வகையில், நாளை (ஏப்ரல் 19) அரசு விடுமுறை தினம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதேபோல் தனியார் நிறுவனங்கள் மற்றும் வேலை அளிப்பவர்கள் தங்களிடம் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களும் சிரமம் இன்றி வாக்களிக்க ஏதுவாக, அவர்களுக்கு நாளை சம்பளத்துடன் விடுப்பு அளிக்க வேண்டும் என தொழிலாளர் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில், தேர்தலையொட்டி தமிழகம் முழுவதிலும் உள்ள தியேட்டர்களில் நாளை காலை மற்றும் மதியம் திரைப்படக் காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. இதற்கான அறிவிப்பை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது. #LokSabhaElections2019 #CinemaShowsCancel

    வரும் பாராளுமன்ற தேர்தலில் ஜாதி, மதம் மற்றும் பணத்தை நோக்கமாக வைத்து ஓட்டு போட வேண்டாம் என தமிழ் மக்களுக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வேண்டுகோள் விடுத்துள்ளார். #Loksabhaelections2019 #Sadhguru
    சென்னை:

    ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அமெரிக்காவில் இருந்து வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-

    எல்லோருக்கும் வணக்கம், நம் தமிழ் மாநிலத்தில் இருக்கும் எல்லா தமிழ் அன்பர்களுக்கும் நான் ஒன்றை கேட்டுக்கொள்கிறேன். நாம் ஜனநாயகத்தில் இருக்கிறோம். ஜனநாயகம் என்றால் ஜனங்கள் தான் நாயகர்கள். இந்த தேர்தல் நேரத்தில் நாம் நம் பொறுப்பை நல்லப்படியாக கடைப்பிடிக்க வேண்டும். நம் நாட்டு தலைவரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு நம் கையில் இருக்கிறது. இதை நாம் பொறுப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

    நான் தற்போது அமெரிக்காவில் இருக்கிறேன். இருந்தாலும், தேர்தல் நாளான 18-ந் தேதி ஒரே ஒரு நாள் மட்டும் நான் வாக்களிப்பதற்காக இந்தியா வருகிறேன். வாக்களித்து விட்டு மீண்டும் உடனே இங்கு திரும்ப வேண்டி உள்ளது. நான் இந்த அளவுக்கு பொறுப்பு எடுப்பதற்கு காரணம், இது மிக மிக முக்கியமான பொறுப்பு.

    நம் நாட்டின் முன்னேற்றம், நாட்டின் எதிர்காலம், அடுத்த தலைமுறையினரின் எதிர்காலம் நம்கையில் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஓட்டு என்பது ஒரு சாமானியமான வி‌ஷயம் அல்ல. ஜனநாயகம் வருவதற்கு முன் நாட்டின் தலைவரை நிர்ணயிக்கும் சக்தி கிடையாது. இப்போது தான் இந்த சக்தி நம் கையில் இருக்கிறது. இதை நீங்கள் பொறுப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    தமிழ் மக்கள் எல்லாரும், ஒருவர் விடாமல், உங்களுக்கு யார் வேண்டுமோ, யார் வந்தால் நாட்டுக்கு நல்லது என்று நினைக்கிறீர்களோ அவருக்கு ஓட்டு போடுங்கள். பிறர் சொல்வதை வைத்தும், ஜாதி, மதம், பணத்தை நோக்கமாக வைத்து ஓட்டு போட வேண்டாம். நாட்டுக்கு எது நல்லதோ அதை நீங்கள் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு சத்குரு வீடியோவில் பேசியுள்ளார். #Loksabhaelections2019 #Sadhguru
    சாதி, மதத்தை கையாண்டு எந்த வேட்பாளராவது பிரசாரம் செய்ய முயன்றால் அவர்கள் மீது அவசியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #Loksabhaelections2019 #ElectionCommission #SC
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக தேர்தல் நடந்து வருகிறது. கடந்த 11-ந்தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது.

    இன்னும் 6 கட்ட தேர்தல் நடைபெற வேண்டி உள்ளது. இதனால் நாடு முழுவதும் மிக தீவிரமாக பிரசாரம் நடந்து வருகிறது.

    இதற்கிடையே தேர்தல் பிரசாரத்தில் சாதி, மதம் தலை தூக்கி இருப்பதாக தலைமை தேர்தல் ஆணையருக்கு நாடு முழுவதும் இருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் சாதி, மதம் தாக்கம் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

    சமீபத்தில் இது தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதில் சாதி, மதத்தை வைத்து தேர்தல் ஆதாயம் தேடும் வேட்பாளர்களை கோர்ட்டு தடுக்க வேண்டும் என்று கூறி இருந்தது.

    இந்த வழக்கு விசாரணை இன்று சுப்ரீம்கோர்ட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கு தொடர்ந்தவரும், தேர்தல் ஆணைய வழக்கறிஞரும் ஆஜராகி வாதாடினார்கள்.

    அப்போது நீதிபதிகள், “சாதி, மதத்தை தூண்டி விட்டு வாக்கு சேகரிக்க நினைக்கும் வேட்பாளர்கள் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

    அதற்கு தேர்தல் ஆணையம் வழக்கறிஞர் பதில் அளித்து கூறியதாவது:-

    தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வேட்பாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய மட்டுமே தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. மேலும் வேட்பாளர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புகிறோம்.


    மற்றபடி வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க எந்த அதிகாரமும் தேர்தல் ஆணையத்துக்கு இல்லை. குறிப்பாக விதிகளை மீறும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்வது உள்ளிட்ட எந்த அதிகாரமும் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கிடையாது.

    இவ்வாறு அந்த வக்கீல் கூறினார்.

    சாதி, மதத்தை கையாண்டு எந்த வேட்பாளராவது பிரசாரம் செய்ய முயன்றால் அவர்கள் மீது அவசியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படிப்பட்ட வேட்பாளர்களை தேர்தல் ஆணையம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

    மேலும் தேர்தல் ஆணையத்துக்கு இருக்கும் அதிகப்பட்ச அதிகாரத்தை பயன்படுத்தி அத்தகைய வேட்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள். #Loksabhaelections2019 #ElectionCommission #SC
    மக்களவைத் தேர்தல் தொடங்கி உள்ள நிலையில், வாக்காளர்கள் தவறாது வாக்களிக்கும்படி பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். #LokSabhaElections2019 #Modi #IndiaElections2019
    புதுடெல்லி:

    17-வது மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.



    வாக்குப்பதிவு துவங்கியுள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், ‘மக்களவைத் தேர்தல் இன்று தொடங்கி உள்ளது. முதல் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் உள்ள மக்கள் சாதனை படைக்கும் அளவில் பெரிய எண்ணிக்கையில் வந்து வாக்கினை பதிவு செய்ய வேண்டும். குறிப்பாக முதல் முறை வாக்களிக்க உள்ள இளைஞர்கள், அதிக அளவில் வந்து வாக்களிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார். #LokSabhaElections2019 #Modi #IndiaElections2019
    முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 20 மாநிலங்களின் 91 பாராளுமன்ற தொகுதிகளில் பிரசாரம் ஓய்ந்தது. இந்த தொகுதிகளிலும், 4 மாநில சட்டசபை தொகுதிகளிலும் நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது. #LokSabhaElection
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 11-ந்தேதி (நாளை) தொடங்கி அடுத்த மாதம் 19-ந்தேதி வரை 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இத்துடன் ஆயுள் காலம் முடிகிற ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தலைப் பொறுத்தமட்டில், 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகள் நாளை (வியாழக்கிழமை) முதல் கட்ட தேர்தலை சந்திக்கின்றன.

    அந்த மாநிலங்களிலும் அவற்றின் தொகுதிகள் எண்ணிக்கையும் வருமாறு:-

    ஆந்திரா-25, அருணாசலபிரதேசம்-2, அசாம்-5, பீகார்-4, சத்தீஷ்கார்-1, காஷ்மீர்-2, மராட்டியம்-7, மணிப்பூர்-1, மேகாலயா-2, மிசோரம்-1, நாகலாந்து-1, ஒடிசா-4, சிக்கிம்-1, தெலுங்கானா-17, திரிபுரா-1, உத்தரபிரதேசம்-8, உத்தரகாண்ட்-5, மேற்கு வங்காளம்-2, லட்சத்தீவுகள்-1, அந்தமான் நிகோபார் தீவுகள்-1

    பாராளுமன்ற தேர்தலில் முதல் கட்ட தேர்தலை நாளை சந்திக்கிற முக்கிய தலைவர்களில் உத்தரபிரதேசத்தில் இருந்து போட்டியிடும் மத்திய மந்திரிகள் வி.கே. சிங் (காசியாபாத்), மகேஷ் சர்மா (நொய்டா), சத்யபால் சிங் (பாக்பத்), ராஷ்ட்ரிய லோக்தளம் கட்சி தலைவர் அஜித் சிங் (முசாப்பர்நகர்) ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவர்.

    மராட்டிய மாநிலத்தில் முதல் கட்ட தேர்தலை சந்திக்கிற தலைவர்களில் மத்திய மந்திரி நிதின் கட்காரி (நாக்பூர்), முன்னாள் மத்திய மந்திரியும் காங்கிரஸ் தலைவருமான சுஷில்குமார் ஷிண்டே (சோலாப்பூர்) உள்ளிட்டவர்கள் அடங்குவர்.

    ஆந்திரா, அருணாசல பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய 4 மாநிலங்கள் சட்டசபை தேர்தலை சந்தித்தாலும், இவற்றில் ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய 3 மாநிலங்களில் மட்டும் அனைத்து தொகுதிகளிலும் ஒரே நாளில் நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது.

    ஒடிசாவை பொறுத்தவரையில் முதல் கட்ட தேர்தலை சந்திக்கிற 4 பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சட்டசபை தொகுதிகளில் மட்டும் நாளை முதல் கட்ட தேர்தல் நடக்கிறது.

    சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்குதேசம் கட்சியின் ஆட்சி நடக்கிற ஆந்திராவில், ஆட்சியை தக்க வைக்க அவர் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதே நேரத்தில் ஆட்சியை அவரிடம் இருந்து பறிப்பதற்கு ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசும், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனாவும் முயற்சிக்கின்றனர். காங்கிரஸ், பாரதீய ஜனதா ஆகிய இரு கட்சிகளும் பெயரளவில்தான் களத்தில் உள்ளன.

    அருணாசலபிரதேசத்தில் முதல்-மந்திரி பெமா காண்டு தலைமையில் பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி நடக்கிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை மசோதா, பாரதீய ஜனதாவுக்கு எதிராக சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதைப் பயன்படுத்தி காங்கிரஸ் ஆட்சிக்கு வர முயற்சிக்கிறது.

    ஒடிசாவில் முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதாதளம் கட்சி ஆட்சியை தக்க வைப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

    சிக்கிமில் முதல்-மந்திரி பவன்குமார் சாம்லிங் தலைமையிலான சிக்கிம் ஜனநாயக முன்னணி (எஸ்.டி.எப்.) ஆட்சி நடக்கிறது. அங்கு சிக்கிம் கிராந்திகரி மோர்ச்சா கட்சி ஆட்சியைப் பிடிக்க தீவிரமாக முயற்சிக்கிறது.

    91 பாராளுமன்ற தொகுதிகளிலும், 4 சட்டசபை தேர்தல்களிலும் அனல்பறக்கும் பிரசாரம் நேற்று மாலை ஓய்ந்தது.

    பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜனதா கட்சித்தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டவர்கள் பிரசாரம் செய்தனர். வேட்பாளர்கள் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர்.

    நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை இடைவெளியின்றி ஓட்டுப்பதிவு நடக்கிறது. வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்கு எந்திரங்களையும், ஒப்புகைச்சீட்டு வழங்கும் ‘விவிபாட்’ எந்திரங்களையும் எடுத்துச்செல்லும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

    விரும்பத்தகாத நிகழ்வுகள் எதுவும் நடந்து விடாதபடிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    ×