என் மலர்
செய்திகள்

X
தியேட்டர்களில் நாளை காலை, மதியம் திரைப்பட காட்சிகள் ரத்து
By
மாலை மலர்17 April 2019 3:36 PM IST (Updated: 17 April 2019 3:36 PM IST)

தமிழகத்தில் நாளை தேர்தல் நடைபெற உள்ளதால், தியேட்டர்களில் நாளை காலை மற்றும் மதியம் திரைப்பட காட்சிகள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #CinemaShowsCancel
தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.

இந்த தேர்தலில் மக்கள் பணிச்சுமையின்றி வாக்களிக்கும் வகையில், நாளை (ஏப்ரல் 19) அரசு விடுமுறை தினம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதேபோல் தனியார் நிறுவனங்கள் மற்றும் வேலை அளிப்பவர்கள் தங்களிடம் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களும் சிரமம் இன்றி வாக்களிக்க ஏதுவாக, அவர்களுக்கு நாளை சம்பளத்துடன் விடுப்பு அளிக்க வேண்டும் என தொழிலாளர் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், தேர்தலையொட்டி தமிழகம் முழுவதிலும் உள்ள தியேட்டர்களில் நாளை காலை மற்றும் மதியம் திரைப்படக் காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. இதற்கான அறிவிப்பை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது. #LokSabhaElections2019 #CinemaShowsCancel
Next Story
×
X