search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒரே நபர் 2 தொகுதிகளில் போட்டியிட தடை-  அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
    X

    ஒரே நபர் 2 தொகுதிகளில் போட்டியிட தடை- அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

    ஒரே நபர் 2 தொகுதிகளில் போட்டியிடுவதை தடை செய்ய வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. #SC
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் ஒரே நபர் 2 தொகுதிகளில் போட்டியிடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி பாஜக தலைவரும் வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாய், உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.  இவ்வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

    ஆனால் அஸ்வினி குமார் உபாத்யாயின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், அவரது வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டது.

    ஒரு நபர் 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிபெற்றால் அவர், அவற்றில் ஒரு தொகுதியில் இருந்து விலகவேண்டியுள்ளது. இதனால் அரசுக்கு வீண் செலவும், உழைப்பு வீணடிப்பும் ஏற்படுகிறது. வெற்றிபெற்ற ஒரு வேட்பாளர் ராஜினாமா செய்வது அவருக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு அநீதி அளிப்பதாகவும் உள்ளது என மனுதாரர் கூறியுள்ளார். #SC
    Next Story
    ×