search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Liquor sale"

    • ேபாலீசார் மடக்கி பிடித்தனர்
    • ஜெயிலில் அடைப்பு

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த உமராபாத் போலீசார் நேற்று மாலை பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஈச்சம்பட்டு பகுதியில் சுடுகாட்டில் கருணாகரன் (வயது52) என்பவர் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார்.

    அதேபோன்று சின்னவரிகம் சுடுகாட்டில் கிருஷ்ணமூர்த்தி (65) என்பவர் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். தென்னம்பட்டி மோட்டூர் பகுதியை சேர்ந்த தசரதன் (40) ஏரிக்கரையில் சாராயம் விற்பனை செய்துக் கொண்டிருந்தார்.

    இவர்களை மடக்கி பிடித்த போலீசார் அவர்களிடம் இருந்து 220 சாராயத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 3 பேர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்து ஆம்பூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஆம்பூர் சிறையில் அடைத்தனர்.

    • போலீசாரின் ரோந்து பணியில் சிக்கினார்
    • ஜெயிலில் அடைப்பு

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ஈச்சம்பட்டு பகுதியில் நேற்று மாலை உமராபாத் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கதிரின் குட்டை அருகே ஈச்சம்பட்டு எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்த சித்ரா (வயது58) என்பவர் சாராய விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    மேலும் இது போன்ற நேற்று பல்வேறு கிராமங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சில சாராய வியாபாரிகள் தப்பி ஓட்டம் பிடித்தனர்.

    • கோழிப்பண்ணை அருகில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனைசெய்தார் .
    • போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 55 லிட்டர் சாராயத்தை கைப்பற்றினர்..

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமை யிலான போலீசார் சேஷசமுத்திரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுப ட்டனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த சின்னதுரை (32) என்பவர் அங்குள்ள ஒரு கோழிப்பண்ணை அருகில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனைசெய்தார் இதைபார்த்த போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 55 லிட்டர் சாராயத்தை கைப்பற்றினர். 

    • மது பாட்டில்கள் மூடி திறந்த நிலையில் விற்பனை செய்தது தெரியவந்தது.
    • சங்கர் (52) என்பவர் வீட்டில் 11 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டாலின் தலைமையிலான போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். இதில் செல்வம் (வயது57) என்பவர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம் உள்ள தனது வீட்டில் மது பாட்டில்கள் மூடி திறந்த நிலையில் விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 10 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதே போல் தியாகதுருகம் சந்தைமேடு பகுதியில் சங்கர் (52) என்பவர் வீட்டில் 11 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதன்படி செல்வம், சங்கர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

    • பொங்கல் பண்டிகையைெயாட்டி சேலம் மாவட்டத்தில் 2 நாட்களில் ரூ.15 கோடிக்கு மது விற்பனையானது.
    • வழக்கமாக மாவட்டத்தில் பொங்கல் விடுமுறை நாட்களில் ரூ.5 கோடி வரை விற்பனையாகும். ஆனால் இந்த முறை ரூ.15 கோடி வரை விற்பனையாகியுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையொட்டி கடந்த 14 மற்றும் 15-ந் தேதி ஆகிய 2 நாட்கள் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்து நின்று மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். மேலும் அதிக அளவில் மதுபாட்டில்களும் இருப்பு வைக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் நேற்று கடை விடுமுறை என்பதால் அதற்கு முன்பாக 2 நாட்கள் மது விற்பனை அதிக அளவில் இருந்தது. இதில் 14-ந் தேதி ரூ.5.5 கோடிக்கும், 15-ந் தேதி பொங்கல் பண்டிகை அன்று ரூ.10.25 கோடிக்கும் என ரூ.15 .25 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

    வழக்கமாக சேலம் மாவட்டத்தில் உள்ள 170-க்கும் மேற்பட்ட மது கடைகள் மூலம் நாள் ஒன்றுக்கு, ரூ.4 கோடி முதல் ரூ.5 கோடி வரை விற்பனை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • போலீசார் மாவட்டம் முழுவதும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • அரசு மதுபான பாட்டி களை பதுக்கி வைத்து விற்பனை செய்யும் போது கையும் களவுமாக கைது செய்யபட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு மோகன்ராஜ் உத்தரவின்படி பொங்கல் பண்டி கையை யொட்டி போலீசார் மாவட்டம் முழுவதும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி பண்டி கை நாட்களில் சட்ட விரோதமாக கஞ்சா, கள்ளச்சாராயம் கடத்தல் மற்றும் விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க 7 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்தும், 6 மதுவிலக்கு சிறப்பு போலீசார் தனிப்படை அமைத்தும் மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேரடி கட்டுப்பாட்டில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமை யில் தனிப்படை அமைத்து மாவட்டம் முழுவதும் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நைனார்பாளையம் டாஸ்மாக் கடை எதிரே செம்பாக் குறிச்சி கிரா மத்தைச் சேர்ந்த மணி கண்டன் (வயது 25). என்பவர் சட்டவிரோதமாக அரசு மதுபான பாட்டி களை பதுக்கி வைத்து விற்பனை செய்யும் போது கையும் களவுமாக கைது செய்யபட்டார். 

    அவரிடமிருந்து சுமார் 1032 அரசு மதுபான பாட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல் சின்னசேலம் போலீஸ் நிலைய எல்லைக் குட்பட்ட வினை தீர்த்தா புரம் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரிட மிருந்து 70 அரசு மதுபான பாட்டில்கள் கைப்பற்ற பட்டது. மாவட்டம் முழுவதும் போலீசார் அதிகாலை முதல் தீவிர மதுவிலக்கு சோத னையில் ஈடுபட்டு வரும் நிலையில், கரியா லூர் போலீஸ் நிலைய எல்லைக் குட்பட்ட அரண்மனை புதூர் தெற்கு ஓடையில் ஏழுமலை என்பவருக்கு சொந்தமான நிலத்தில் சுமார் 200 லிட்டர் பிடிக்ககூடிய 3 பிளாஸ்டிக் பேரல்களில் இருந்த 600 லிட்டர் கள்ளச்சாரய ஊரலை கண்டுபிடித்து சம்பவ இடத்திலேயே அழித்தனர். ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 27 பேர் மீது 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 14 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து இருசக்கர வாகனம், 1679 மதுபான பாட்டில்க ளும், 600 லிட்டர் கள்ளச்சா ராய ஊரலும் கைப்பற்றப் பட்டுள்ளது.

    • டாஸ்மாக் பாரில் மதுபானம் விற்கப்படுவதாக திண்டிவனம் இன்ஸ்பெக்டர் கலைச்செல்விக்கு ரகசிய தகவல் வந்தது.
    • அவரிடம் இருந்த 8 பீர் பாட்டில்கள்,10 குவாட்ட ர்பாட்டில்கள் ஆகியவைகள் பறிமுதல் செய்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மேம்பாலம் கீழ்பகுதியில் டாஸ்மாக் கடையில் இன்று காலை 5 மணி அளவில் டாஸ்மாக் பாரில் மதுபானம் விற்கப்படுவதாக திண்டிவனம் இன்ஸ்பெக்டர் கலைச்செல்விக்கு ரகசிய தகவல் வந்தது. அதனை தொடர்ந்து அதிரடியாக மதுபான பாரில் சோதனை செய்தபோது பாரில் மது பான ங்கள் விற்றது தெ ரிய வந்தது. இதையடுத்து டாஸ்மாக்கில் இருந்து மதுபா னங்கள் வாங்கி விற்ற கிடங்கல் -2 பகுதியைச் சேர்ந்த தட்சி ணாமூர்த்தி என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 8 பீர் பாட்டில்கள்,10 குவாட்ட ர்பாட்டில்கள் ஆகியவைகள் பறிமுதல் செய்தனர். 

    • ஜெயலட்சுமி வீட்டின் பின்புறம் அரசால் தடை செய்யப்பட்ட சாராய பாக்கெட்டுகளை அரசு அனுமதி இல்லாமல் விற்பனை செய்தது தெரிய வந்தது.
    • சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கடலூர்:

    புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் நேற்றுதீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பண்ருட்டி தாலுகா பெரியஎலந்தம்பட்டு புதுநகர் பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 70) என்பவர் வீட்டின் பின்புறம் அரசால் தடை செய்யப்பட்ட சாராய பாக்கெட்டுகளை அரசு அனுமதி இல்லாமல் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்து அவரிடம் இருந்து சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கலால் வரி செலுத்தாமல் தமிழகத்தில் 24 மணி நேரமும் தடையின்றி மது விற்பனை செய்யப்படுவதாக ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
    • இந்த 24x7 மது விற்பனையால் இளைய சமுதாயத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. ஆகவே இதனை சரிசெய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் டாஸ்மார்க் விற்பனை நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற கிளை பரிந்துரை செய்துள்ளது. டாஸ்மாக் மது விற்பனை நிலையங்களை பயன்படுத்தி இன்றைக்கு, ஊழலுக்கான யுக்தியை தி.மு.க. அரசு கையாண்டு வருகிறதோ என்கிற மிகப்பெரிய ஒரு கேள்விக்குறி எழுந்துள்ளது.

    மாநிலத்தில் பல மாவட்டங்களுக்கு பார்கள் ஒதுக்கீடு செய்வதற்கான டெண்டர் தொடர்பான, வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசார ணையில் உள்ளது. இதுவரை அதிகாரப்பூர்வமாக யாருக்கும் பார்கள் உரிமைகளை, அரசு இன்னும் வழங்கவில்லை என்கிற விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.

    சட்டவிரோதமாக பார்களில், மதுபானங்கள் அதிக விலைக்கு 24 மணி நேரமும் தடையின்றி விற்கப்பட்டு வருக்கின்றன. இதனால் அரசின் கஜானாவிற்கு செல்ல வேண்டிய வரிப்பணம், இந்த துறையின் அமைச்சருக்கு சொல்லுகிறதோ என்று தி.மு.க. கட்சிக்காரர்களே பேசிகொள்கிற ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது.

    மது உற்பத்தியாளர்கள் கலால் வரியை முறையாக செலுத்தாமல், மதுபானங்கள் சப்ளை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன என்பது அதிர்ச்சி தகவலாக இருக்கிறது.

    அதாவது ஹாலோகிராம் அச்சடிக்கப்படாததால், கலால் வரியை செலுத்தப் படாமல் அரசுக்கு கணக்கில் வராமல் மது பானங்கள் கடத்தப்படுகின்றன. கணக்கில் வராத இந்த மதுபானங்கள் சட்ட விரோதமாக நடத்தப்படும் பார்களை சென்றடைகிறது. இதன் மூலம் வரக்கூடிய பணம் முழுவதும் தனிப்பட்ட முறையில் ஆட்சி யாளர்களுக்கு செல்கிறது.

    இது அரசின் கஜானாவுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்துகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர், எடப்பாடி பழனிசாமி ஆதாரத்தோடு புள்ளிவிவரத்தோடு தெரிவித்துள்ளார்.

    மதுரை ஐகோர்ட்டு கிளையில் டாஸ்மாக் விற்பனை நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும், அரசு 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கப்படவில்லை என்று உறுதிப்படுத்த வேண்டும், அதேபோன்று நேரத்தையும் முறைப்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற கிளை கூறியுள்ளது.

    24x7 என்று மருத்துவத்திற்கு தான் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் மது விற்பனைக்கு 24x7 நாம் பார்த்ததில்லை இதை தமிழகத்தில் கண்டு இன்றைக்கு சிரிப்பாய் சிரிக்கிறது.

    • கல்லாநத்தம் கிராமத்தில் ராஜா என்பவர் அவரது வீட்டில் வைத்து சாராயம் விற்று வந்தது தெரியவந்தது.
    • வீட்டின் பின்புறம் சாராயம் விற்றுக் கொண்டிருந்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் சுற்றுவட்டார பகுதிகளில் சாராயம் விற்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் பாண்டியன் குப்பம் கல்லாநத்தம் தகரை, காட்டனத்தல், கிராமங்களில் சின்னசேலம் போலீசார், சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராசு தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொது கல்லாநத்தம் கிராமத்தில் ராஜா (வயது 37) என்பவர் அவரது வீட்டில் வைத்து சாராயம் விற்று வந்தது தெரியவந்தது.

    அவரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். ராஜா மீது வழக்கு பதிவு செய்து, கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். அதேபோல் காட்டனத்தல் கிராமத்தில் வெங்கடேசன் என்பவரின் மனைவி சிவகாமி (38) என்பவர் அவரது வீட்டின் பின்புறம் சாராயம் விற்றுக் கொண்டிருந்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • 55 மதுபாட்டில் பறிமுதல்
    • போலீசார் மடக்கிப் பிடித்தனர்

    ஆம்பூர்:

    ஆம்பூரை அடுத்த வடபுதுப் பட்டு பகுதியில் வெளிமாநில மதுவிற்ற அதே பகுதியை சேர்ந்த சரத்குமார் (வயது 30) என்பவரை தாலுகா போலீ சார் மடக்கிப் பிடித்தனர். அவரிடம் இருந்து 55 வெளி மாநில மதுபாட்டிலை பறிமு தல் செய்தனர். அதேபோல் நாயக்கனேரி மலையில் நடந்த சோதனை யில் வீட்டின் அருகே சாரா யம் விற்ற பெரியூரை சேர்ந்த சம்பத் (39) என்பவரை கைது செய்தனர்.

    மேலும் உமராபாத் போலீ சார் பாலூரில் சோதனை செய்த போது அங்கு சாரா யம் விற்ற பேரணாம்பட்டை அடுத்த பங்காளமேடு பகு தியை சேர்ந்த நவீன்குமார் (30), சின்னபள்ளி குப்பத்தை அடுத்தஈச்சம்பட்டு பகுதியை சேர்ந்த சேகர் மனைவி சித்ரா (60), மேல்ஈச்சம்பட்டு பகு தியை சேர்ந்த முருகவேல் (46), ஆம்பூரை அடுத்த கரும்பூர் னர். அருகே உள்ள குப்புராஜபா ளையத்தை சேர்ந்த பார்வதி (54) ஆகியோரை கைது செய்த னர்.

    நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தி னம் மற்றும் போலீசார் நேற்று நாட்டறம்பள்ளி மற்றும் அத னைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வெலக்கல் நத்தம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த கமல் (38), வெலக்கல்நத்தம் பகு தியை சேர்ந்த முனிசாமி மகன் முனியப்பன் (35), முத்த னப்பள்ளி பகுதியை சேர்ந்த பூபாலன் மகன் ஸ்ரீதர் (24) ஆகியோர் தங்கள் வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதனையடுத்து அவர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து தலா 10 லிட்டர் சாராயம் பறி முதல் செய்யப்பட்டது.

    ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங் கையர்க்கரசி, சப்-இன்ஸ் பெக்டர்கள் காதர்கான், சேதுக்கரசன் மற்றும் போலீ சார் நேற்று ஜோலார் பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதி களில் ரோந்து பணியில் ஈடு பட்டனர். அப்போது ஜோலார்பேட்டையை அடுத்த சின்னகம்மியம்பட்டு பகுதியில் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டி ருந்த சின்னகம்மியம்பட்டு பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (40) என்பவரை கைது செய்தனர்.

    இதேபோல் பாச்சல் பகுதி யைச் சேர்ந்த மதியழகன் மகன் ராஜன் (33), பால்னாங் குப்பம் பகுதியைச் சேர்ந்த புகழேந்தி (45) மற்றும் மேல் அச்சமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் (50) ஆகி யோரும் தங்களது வீட்டின் பின்புறம் மதுபாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந் தது. அதைத்தொடர்ந்து ராஜன் புகழேந்தி ஆகிய இரு வரையும் கைது செய்தனர். ஆனந்தனை தேடி வருகின்றனர்.

    • ராமசாமிபுரம் பகுதியில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
    • எட்வின், போலீசாரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின்பேரில் சங்கரன்கோவில் டி.எஸ்.பி. சுதீர், சட்டவிரோதமாக போதைப்பொருட்கள் விற்பவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றார்.

    இந்நிலையில் சங்கரன்கோவில் அருகே ராமசாமிபுரம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் சங்கரன்கோவில் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கற்பகராஜா மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    அப்போது அங்கு சட்ட விரோதமாக மது விற்று கொண்டிருந்த சங்குபுரம் பகுதியை சேர்ந்த அந்தோணிசாமி மகன் எட்வின் (வயது 20) என்பவரை சோதனை செய்த போது, அவர் போலீசாரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    ×