search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாராயம் விற்பனை"

    • போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
    • 60 பிளாஸ்டிக் சாராய பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    சேலம்:

    தமிழக அரசு கள்ளச்சாராயத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் அதையும் மீறி மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயத்தை காய்ச்சி அருகில் உள்ள கிராமங்களில் சிலர் விற்பனை செய்து வருகிறார்கள்.

    சேலம் மாவட்டம் ஆத்தூர், கல்வராயன் மலை பகுதியில் போலீசார் கண்காணிப்பையும் மீறி கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது. இந்த கள்ளச்சாராயம் ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி மற்றும் மலை கிராமங்களில் விற்கப்பட்டு வருகிறது. அதனை போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஆத்தூரை அடுத்த நரசிங்கபுரம், செல்லியம்பாளையம் முனியப்பன் கோவில் பகுதியில் குடிநீர் போன்று ½ லிட்டர் அளவு கொண்ட குடிநீர் பாட்டில்களில் சாராயத்தை அடைத்து வைத்து விற்பனை செய்வதாக புகார்கள் வந்தது. மேலும் ஆத்தூர் டவுன் போலீசாருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    அதனை தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் ½ லிட்டர் தண்ணீர் பாட்டிலில் சாராயத்தை அடைத்து குடிநீர் போல விற்பனை செய்த செல்லியம்பாளையத்தை சேர்ந்த சதீஷ் (29) என்ற வாலிபர் போலீசாரிடம் சிக்கினார். அப்போது அவரிடம் இருந்து 60 பிளாஸ்டிக் சாராய பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், கடந்த 6 மாத காலமாக இதே போல விற்பனை செய்து செய்து வந்ததும், பொது மக்களுக்கு சந்தேகம் வராமல் இருக்க குடிநீர் பாட்டிலில் அடைத்து சாராயம் விற்பனை செய்ததாகவும், ½ லிட்டர் சாராயத்தை 100 ரூபாய்க்கு விற்பனை செய்ததும், இதை வாங்கியவர்கள் அந்த பகுதியில் நின்றே குடிநீர் போல சாராயத்தை குடித்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.

    • சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • தலா 5 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் புதுப்பாலப்பட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது புதுப்பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்த முருகன்(வயது30) என்பவர் அவரது வீட்டில் சாரயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதேபோன்று, அதேபகுதியை சேர்ந்த சக்திவேல்(24) என்பவர் வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். உடன் அவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து தலா 5 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • 10 லிட்டர் பறிமுதல் செய்தனர்
    • போலீசார் சோதனையில் சிக்கினார்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் திரியாலம் பகுதியில் சோதனையில் ஈடு பட்டனர்.

    அப்போது வீட்டின் பின்புறத்தில் சாராயத்தை மறைத்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த சின்ன சாமி (வயது 65) என்பவரை போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    மேலும் அவரிடம் இருந்து 10 லிட் டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • 70 லிட்டர் பறிமுதல்
    • போலீசார் வருவதை கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினார்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த சின்னப்புதூர் அருகே உள்ள எள்ளுபாறை மலை அடிவாரத்தில் நேற்று வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு சிலர் கலாச்சாராயம் நின்றுக்கொண்டு இருந்தனர்.

    போலீசார் வருவதை கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினார். போலீசார விரட்டி சென்றதில் ஒருவர் மட்டும் சிக்கிக்கொண்டார்.

    போலீசார் நடத்திய விசாரணையில் அவர் எள்ளுப்பாறை மலை கிராமத்தை சேர்ந்த சின்னப்பன் (45) என்பதும், இவர் கள்ள சாராயம் விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

    சின்னப்பனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 70 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    அதேபோல், பீஞ்சமந்தை அடுத்த குண்ராணி பகுதியில் சாராயம் விற்றுக் கொண்டிருந்த எள்ளுப்பாறை பகுதியை சோ்ந்த பிரபு (24) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 60 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைது செய்யப்பட்ட 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி , ஜெயிலில் அடைத்தனர்.

    • போலீசார் ரோந்து பணியில் சிக்கினார்
    • 104 லிட்டர் சாராயத்தை பறிமுதல்

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அடுத்த ஓங்கபாடி ஆற்றங்கரையில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து மற்றும் போலீசார் நேற்று அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்குள்ள ஆற்றங்கரை படுக்கையில் திருட்டுத்தனமாக கள்ளச்சாராயம் விற்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர்.

    அதில் அவர் வாழைப்பந்தல் கிராமத்தை சேர்ந்த அஜித் (வயது 23), என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து சுமார் 104 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
    • சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சப்- இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் சேஷசமுத்திரம் பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த ராமசாமி(47) தனது வீட்டின் அருகே சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து ராமசாமியைபோலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 13 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • கடந்த 2 ஆண்டில் இவர் மீது எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யவில்லை எனவும் கூறப்படுகிறது.
    • சாராயம் விற்பனை செய்தவர்கள் பல்வேறு நபர்களை கைது செய்து வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மொளசூர் கிராமத்தில் ஜெயலலிதா என்ற பெண் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக சாராயம் மற்றும் மது விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். அந்த பகுதியில் சாராயம், அந்நிய மதுபானங்கள் விற்கக் கூடாது என ஊராட்சி மன்ற தலைவர் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார். இதனால்கடந்த 2 ஆண்டுக்கு முன்பு ஊருக்கு கட்டுப்பட்டு சாராயம் விற்க மாட்டேன் என பொதுமக்கள் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிளியனூர் போலீஸ் நிலையத்திலும் ஜெயலலிதா எழுதி கொடுத்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 ஆண்டில் இவர் மீது எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யவில்லை எனவும் கூறப்படுகிறது.கடந்த வாரம் அதே பகுதியில் சாராயம் குடித்து கட்டிட தொழிலாளி ஒருவர் உயிரிழந்த நிலையில் உயர் அதிகாரிகளுக்கு கணக்கு காட்ட வேண்டும் என்பதற்காக போலீசார் சாராயம் விற்பனை செய்தவர்கள்மற்றும் பல்வேறு நபர்களை கைது செய்து வருகின்றனர்.

    இதையடுத்து ஜெயலலி தாவை இன்று காலை திடீரென போலீசார் கைது செய்ய வந்தனர். ஊராட்சி மன்ற தலைவரும் பொதுமக்களும் ஜெயலலிதா சாராயம் விற்பனை செய்து பல ஆண்டுகள் ஆகிறது. போலீஸ் நிலையத்திலும் ஊராட்சி மன்ற தலைவரிடமும் சாராயம் விற்க மாட்டேன் என எழுதிக் கொடுத்துள்ளார். இதனால் அவரை கைது செய்யக்கூடாது என 50-க்கும் மேற்பட்ட .பொது மக்கள் போலீசாரை மறித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். இதனால்,அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஜெயலலிதாவை விட்டால் தான் நாங்கள் இங்கிருந்து செல்வோம் என பொதுமக்கள் தெரிவித்ததன் பேரில் போலீசார் ஜெயலலிதாவை அங்கே விட்டு விட்டு சென்றனர்.

    • போலீசார் ரோந்து பணியில் சிக்கினர்
    • 85 லிட்டர் கள்ள சாராயத்தை அழித்தனர்

    ஜோலார்பேட்டை :

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது ஜோலார்பேட்டை புது ஓட்டல் தெரு பகுதியில் கள்ள சாராயம் விற்றுக் கொண்டிருந்த ரஞ்சித் (வயது 32), திலிப்குமார் (33), சந்தைக்கோடியூரை சேர்ந்த முருகன் (50), லட்சுமி நகரை சேர்ந்த ஜெயராஜ் (38) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 85 லிட்டர் கள்ள சாராயத்தை அழித்தனர்.

    மேலும் கைது செய்யப்பட்ட 4 பேரும் திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • சாராயம் விற்பனை தி.மு.க. பெண் கவுன்சிலர் கணவர் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர்
    • தனிப்படை போலீசார விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியர் குப்பத்தில் விஷ சாராயம் குடித்து 13 பேர்உயிரிழந்தனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாராயம் விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஏற்கனவே இந்த வழக்கில் தொடர்பு டையதாக கூறப்படும் திண்டிவனம் நகராட்சி 20-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ரம்யாவின் கணவர்பிரபல சாராய வியாபாரி மரூர் ராஜா கைது செய்யப்பட்டு குண்டத் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடை க்கப்பட்டுள்ளார். தி.மு.க. கவுன்சிலர் கணவர் பிரபல சாராய வியாபாரி மரூர் ராஜாவின் கூட்டாளிகளான கீழ்புத்தேரி பகுதியைச் சேர்ந்த இளய செல்வம் , ஜெயசீலன் ஆகிய 2 பேரை சுற்றி வளைத்து பிடித்த தனிப்படை போலீசார அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மரக்காணத்தில் சாராயம் விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.
    • புஷ்பா வைத்திருந்த 10 சாராய பாக்கெட் டுகளை பறிமுதல் செய்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம மரக்காணத்தில்கரி பாளையம் பகுதியில் வசிப்பவர் லோகநாதன். இவருடைய மனைவி புஷ்பா ( வயது 52). இவர் பல ஆண்டுகளாக அந்த பகுதியில் கள்ளச்சாராய விற்பது மரக்காணம் போலீசாருக்கு தெரிய வந்தது. அந்தத் தகவலின் பேரில் மரக்காணம் போலீசார் கரி பாளையம் பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். இதில் புஷ்பா தனது வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்து கொண்டிருக்கும் போது கையும் களவுமாக பிடித்து அவர் வைத்திருந்த 10 சாராய பாக்கெட் டுகளை பறிமுதல் செய்தனர். அவரை சாராய வழக்கில் கைது செய்து திண்டிவனம் சிறையில் அடைத்தனர்.

    • போலீசார் ரோந்து பணியில் சிக்கினார்
    • கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அருகே கள்ள சாராயம் விற்பனை செய்த பெண்ணை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி சப் இன்ஸ்பெக்டர் சுபாஷினி மற்றும் போலீசார் நேற்று நாட்டறம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    புதுப்பேட்டை அருகே கள்ளச்சாராயம் விற்பனை செய்து கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.

    சத்யா (வயது 60) என்பவர் தன் வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்தது தெரிய வந்தது.

    பின்னர் அவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • 65 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் மோட்டாம்பட்டி, பாச்சேரி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வீட்டின் அருகில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்ததாக மோட்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்த சாமிதுரை (வயது38), பாச்சேரியை சேர்ந்த சக்தி (29) ஆகிய 2 பேர் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 65 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    ×