search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police patrolling"

    • வியாபாரிகளிடம் அபராதம் விதிப்பதை வணிகவரித்துறை அதிகாரிகள் தவிர்க்க வேண்டும்
    • கஞ்சா, மது உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை முழுமையாக தடை செய்ய வேண்டும்.

    திருப்பூர் : 

     தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பூர் யூனியன் மில் ரோட்டில் நடைபெற்றது. கூட்டத்தில் சோதனை கொள்முதல் என்ற பெயரில் வியாபாரிகளிடம் அபராதம் விதிப்பதை வணிகவரித்துறை அதிகாரிகள் தவிர்க்க வேண்டும். ஒருங்கிணைந்த கோவை மண்டலத்தை தொழில் பாதுகாப்பு மண்டலமாக அரசு அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் கஞ்சா, மது உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை முழுமையாக தடை செய்ய வேண்டும். புகையிலை பொருட்கள் விற்பனையில் பழைய வழக்குகளை காட்டி வியாபாரிகளின் வங்கிக் கணக்குகளை முடக்குவதை நிறுத்த வேண்டும். சுதேசி வியாபாரத்தை ஊக்குவிக்க வேண்டும். கோவையில் இருந்து தூத்துக்குடிக்கு நேரடி ரெயில் இயக்கப்பட வேண்டும். வியாபார ரீதியாக பணப்புழக்கம் உள்ள திருப்பூரில் அடிக்கடி வழிப்பறி நடப்பதால் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


    • போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.
    • தனித்தனியாக சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட் டம் சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது குளத்தூர் பகுதியை சேர்ந்த ஏழுமலை (வயது42), மூரார்பாளையத்தை சேர்ந்த கருப்பன் (50), விரியூரை சேர்ந்த ரமேஷ் (39) ஆகிய 3 பேரும் தனித்தனியாக சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 200 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

    • போலீசார் உலகுடையாம்பட்டு, குளத்தூர், விரியூர், ஊராங்காணி ஆகிய கிராமங்களில் ரோந்துபணி மேற்கொண்டனர்.
    • கைது செய்து, அவர்களிடமிருந்து 450 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் உலகுடையாம்பட்டு, குளத்தூர், விரியூர், ஊராங்காணி ஆகிய கிராமங்களில் ரோந்துபணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஏரிக்கரை, வயல்வெளி, வீடுகளின் பின்புறம் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்ததாக சிவபுரம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை (32), குளத்தூரை சேர்ந்த பட்டம்மாள் (50), விரியூரை சேர்ந்த ஜான் கென்னடி (36), குரும்பாலூர் கிராமத்தை சேர்ந்த சரவணன் (22), ஊராங்காணி கிராமத்தை சேர்ந்த வேலு (50) ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 450 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர்.

    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.
    • 110 மது பாட்டி ல்கள், 2 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே மொளச்சூர் பகுதியில் உள்ள ஏரி, குளங்களில் அருகே புதுவையில் இருந்து மது பாட்டில்கள் வாங்கி வந்து பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்வதாக கிளியனூர் இன்ஸ்பெக்டர் பாலமுரளிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் கிளியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.

    அப்போது மொளச்சூர் ஏரிக்கரை ஓரமாக 2 நபர்கள் மது பாட்டில் விற்பதை பார்த்த னர். உடனே போலீசார் அவர்களை சுற்றி வளைத்து மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த யுவராஜ் (வயது 23) பெரியசாமி (25) என்பது தெரியவந்தது. உடனே 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 110 மது பாட்டி ல்கள், 2 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

    • இந்த வாகனத்தில் ஆம்புலன்ஸ்சில் உள்ள அனைத்து முதலுதவி சிகிச்சை பொருட்களும் வைக்கப்பட்டுள்ளது
    • பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக குன்னூரில் இருந்து சிம்ஸ் பார்க் வரை சோதனை ஓட்டம் நடந்தது.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டத்தில் முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்க காவல்துறையினர் துரித ரோந்து பணிக்கு பயன்படுத்த ஹில் காப் என்ற இருசக்கர வாகனத்தை கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஊட்டி நகர் பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஸ் ராவத் அறிமுகப்படுத்தி வைத்தார்.

    ஹில் காப் இரு சக்கர வாகனம் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளுக்கு மொத்தம் 9 வாகனங்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளது.அதன் தொடர்ச்சியாக குன்னூர் பகுதியில் காவல்துறையினர் துரித ரோந்து பணிக்கு பயன்படுத்தும் ஹில் காப் என்று கூறப்படும் இருசக்கர வாகனத்தை ஏ.டி.எஸ்.பி மோகன் நவாஸ் தொடங்கி வைத்தார்.

    இந்த வாகனம் மூலமாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக குன்னூரில் இருந்து சிம்ஸ் பார்க் வரை சோதனை ஓட்டம் நடந்தது.

    இதுகுறித்து ஏ.டி.எஸ்.பி மோகன் நவாஸ் கூறியதாவது:-

    மலை மாவட்டங்களில் இந்த வாகனத்தை அறிமுகப்படுத்தியதால் சுற்றுலா பயணிகளுக்கு ஏற்படும் சாலை போக்குவரத்து இடையூறு குறைந்துள்ளது.

    இந்த வாகனத்தில் ஆம்புலன்ஸ்சில் உள்ள அனைத்து முதலுதவி சிகிச்சை பொருட்களும் வைக்கப்பட்டுள்ளது இதை பெண் காவலர்களும் சிறப்பாக இயக்கி வருகிறார்கள். இதில் போலீசாரிடம் உள்ள காமிரா அவர்களை சுற்றி நடக்கும் அனைத்து விஷயங்களையும் படம் பிடித்து காட்டக் கூடியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×