search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வழிப்பறியை தடுக்க  போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் - வியாபாரிகள் வலியுறுத்தல்
    X

    கோப்புபடம்

    வழிப்பறியை தடுக்க போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் - வியாபாரிகள் வலியுறுத்தல்

    • வியாபாரிகளிடம் அபராதம் விதிப்பதை வணிகவரித்துறை அதிகாரிகள் தவிர்க்க வேண்டும்
    • கஞ்சா, மது உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை முழுமையாக தடை செய்ய வேண்டும்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பூர் யூனியன் மில் ரோட்டில் நடைபெற்றது. கூட்டத்தில் சோதனை கொள்முதல் என்ற பெயரில் வியாபாரிகளிடம் அபராதம் விதிப்பதை வணிகவரித்துறை அதிகாரிகள் தவிர்க்க வேண்டும். ஒருங்கிணைந்த கோவை மண்டலத்தை தொழில் பாதுகாப்பு மண்டலமாக அரசு அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் கஞ்சா, மது உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை முழுமையாக தடை செய்ய வேண்டும். புகையிலை பொருட்கள் விற்பனையில் பழைய வழக்குகளை காட்டி வியாபாரிகளின் வங்கிக் கணக்குகளை முடக்குவதை நிறுத்த வேண்டும். சுதேசி வியாபாரத்தை ஊக்குவிக்க வேண்டும். கோவையில் இருந்து தூத்துக்குடிக்கு நேரடி ரெயில் இயக்கப்பட வேண்டும். வியாபார ரீதியாக பணப்புழக்கம் உள்ள திருப்பூரில் அடிக்கடி வழிப்பறி நடப்பதால் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


    Next Story
    ×