search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lady"

    • ஜவுளி எடுப்பதற்காக ஆர்.எஸ்.புரம் டி.பி. ரோட்டில் உள்ள கடைக்கு சென்றார்.
    • பெண்ணிடம் செயினை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்

    கோவை

    கோவை பி.என்.புதூர் அருகே உள்ள கோகுலம் காலனியை சேர்ந்தவர் மகேஸ்வரன். இவரது மனைவி வானதி(54). சம்பவத்தன்று இவர் ஜவுளி எடுப்பதற்காக ஆர்.எஸ்.புரம் டி.பி. ரோட்டில் உள்ள கடைக்கு சென்றார். பின்னர் வாங்கிய துணிகளை காரில் வைப்பதற்காக கொண்டு சென்றார்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கண்இமைக்கும் நேரத்தில் வானதி கழுத்தில் அணிந்து 2½ பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர். இது குறித்து அவர் ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் செயினை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள் 

    • இவர்கள் 2 பேரும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
    • சமீபத்தில் விடுமுறைக்காக சொந்த ஊரான பெருமாள்புரத்துக்கு வந்திருந்தார்.

    நெல்லை:

    பாளை பெருமாள்புரம் பாரதிநகரை சேர்ந்தவர் அரவிந்தன். இவரது மனைவி காயத்ரி(வயது 37). என்ஜினீயரிங் பட்டதாரிகள்.

    இவர்கள் 2 பேரும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 9 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. அரவிந்தன் குடும்பத்துடன் வெளிநாட்டில் வசித்து வந்தார்.

    சமீபத்தில் விடுமுறைக்காக சொந்த ஊரான பெருமாள்புரத்துக்கு வந்திருந்தார். அவருடன் மனைவி மற்றும் மகனும் வந்திருந்தனர். காயத்ரி கடந்த சில நாட்களாகவே மன அமைதி இல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரது உறவினர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை காயத்ரி இறந்தார்.

    இதுதொடர்பாக பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காயத்ரியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாழப்பாடி அடுத்த வேப்பிலைப்பட்டி கிராமத்தில் தகாத உறவுக்கு அழைத்த மாமனாரை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம் அருகே உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அடுத்த வேப்பிலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரம்யா (வயது 25). இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன்(38), என்பவருக்கும் 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதியருக்கு 5 வயதில் ஒரு மகனும், 8 வயதில் ஒரு மகளும் உள்ளனர். வெங்கடேஸ்வரன் லாரி டிரைவராக உள்ளார்.

    கணவர் வேலைக்கு சென்று விட்ட நேரத்தில், மாமனார் பச்சமுத்து (67), தன்னை தகாத உறவுக்கு அழைத்ததாகவும், இதற்கு மாமியார் தனலட்சுமி உடந்தையாக இருப்பதாகவும், இளம்பெண் ரம்யா கடந்த 20-ந் தேதி வாழப்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான மாமனார் பச்சமுத்து மற்றும் மாமியார் தனலட்சுமி ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். இந்நிலையில், புகார் கொடுத்து ஒரு வாரம் கடந்த நிலையிலும், தன்னை மானபங்கம் செய்ய முயன்ற மாமனார், உடந்தையாக இருந்த மாமியார் மற்றும் இதனைத் தட்டிக் கேட்காத கணவர் ஆகிய மூவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து, இளம்பெண் ரம்யா, இன்று தனது குழந்தைகளுடன் வாழப்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையம் முன், கடலூர் சாலையில் உறவினர்களுடன் திடீரென அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ரம்யா மீது தண்ணீரை ஊற்றினர். புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதியளித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குன்னூரில் உள்ள ரயில்வே பணிமனையில் கடந்த 8 ஆண்டுகளாக கேரேஜ் பிரிவில் பணிபுரிந்து வந்தாா்.
    • ஒரு பெட்டியில் பிரேக்கை பயன்படுத்தும்போது மற்ற பெட்டிகளில் உள்ள பிரேக்ஸ் மேன்களுக்கு இவா்கள் சிக்னல் தருவாா்கள்.

    ஊட்டி:

    மேட்டுப்பாளையம், குன்னூா், ஊட்டி இடையே இயங்கும் நீலகிரி மலை ரயில் பல் சக்கரத்தின் உதவியுடன் நூறாண்டு காலமாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலை ரயிலில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூா் வரை 4 பயணிகள் பெட்டிகளும், குன்னூரில் இருந்து மேலும் ஒரு பெட்டியும் சோ்த்து 5 பெட்டிகளாக இயக்கப்படுகிறது.

    மலைப் பாதையில் மலை ரயில் இயங்க பிரேக்ஸ் மேன் என்னும் பணி மிக முக்கியமானது. இந்தப் பணிக்கு தைரியமும், நீண்ட கால பணி அனுபவமும் கொண்டவா்களே இது நாள் வரை பணி அமா்த்தப்பட்டு வந்தனா்.

    மலைப் பாதையில் ரயில் இயக்கப்படும்போது ஒவ்வொரு பெட்டிக்கும் பிரேக்ஸ் மேன் இருப்பாா்கள். இவா்கள் மலைப்பாதையில் ரயில் சென்றுகொண்டிருக்கும்போது தேவை ஏற்படும் இடங்களில் பிரேக்கை பயன்படுத்துவாா்கள்.

    ஒரு பெட்டியில் பிரேக்கை பயன்படுத்தும்போது மற்ற பெட்டிகளில் உள்ள பிரேக்ஸ் மேன்களுக்கு இவா்கள் சிக்னல் தருவாா்கள். அதற்கேற்றாற்போல மற்ற பிரேக்ஸ் மேன்களும் தயாராக இருப்பாா்கள்.

    இந்தப் பணியில் இதுவரை ஆண்கள் மட்டுமே பணிபுரிந்து வந்த நிலையில், முதல் முறையாக, குன்னூரைச் சோ்ந்த சிவஜோதி (45) என்ற பெண் பிரேக்ஸ் உமன் பணியில் அமா்த்தப்பட்டுள்ளாா்.

    இவா் குன்னூரில் உள்ள ரயில்வே பணிமனையில் கடந்த 8 ஆண்டுகளாக கேரேஜ் பிரிவில் பணிபுரிந்து வந்தாா். இந் நிலையில் கடந்த நான்கு நாள்களுக்கு முன் தெற்கு ரயில்வே இவரை பிரேக்ஸ் உமன் பணிக்கு ப் பதவி உயா்வு அளித்து உத்தரவிட்டது.

    இவா் இந்தப் பணி குறித்து ஏற்கெனவே ஆா்வமாக இருந்ததால் மேட்டுப்பாளையம், ஈரோடு உள்ளிட்ட இடங்களில் இவருக்கு ரயில்வே சாா்பில் முறையான பயிற்சி அளிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது, மேட்டுப்பாளையம், குன்னூா், உதகை இடையே இயக்கப்படும் மலை ரயிலில் இவா் பிரேக்ஸ் உமன் பணியைத் தொடங்கியுள்ளாா்.

    அடகு வைத்த நகையை மீட்டு தராததால் ஆத்திரம் அடைந்த தம்பதியினர் பெண்ணை தாக்கினர்.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் நேதாஜி நகரை சேர்ந்தவர் இளங்கோ. இவரது மனைவி சாந்தி (வயது42). இவர் வீட்டு வேலை செய்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கண்டாக்டர் தோட்டத்தை சேர்ந்த தேவி என்பவரிடம் தங்கநகையை கடனாக வாங்கி அடகு வைத்தார். ஆனால் அதன்பிறகு சாந்தி அந்த நகையை மீட்டுதரவில்லை. பலமுறை தேவி நகையை மீட்டு தர கேட்டும் சாந்தி காலம் கடத்தி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று சாந்தி கம்பன் கலையரங்கம் அருகே நடந்து வந்து கொண்டு இருந்தார். அப்போது தேவி மற்றும் அவரது கணவர் கர்ணன் ஆகியோர் சாந்தியிடம் நகையை மீட்டு தருவது தொடர்பாக கேட்டுள்ளனர். அப்போது சாந்தி 4 மாதம் அவகாசம் தரும்படி கேட்டுள்ளார். ஆனால் தேவியும், அவரது கணவர் கர்ணனும் நகையை உடனடியாக மீட்டு தரும்படி கேட்டனர். இதில் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த கர்ணன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அதன் கைப்பிடியால் சாந்தியின் முகத்தில் குத்தினார். இதில் சாந்திக்கு பற்கள் உடைந்து ரத்தம் கொட்டியது. இதைபார்த்ததும் கணவன்- மனைவி இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.

    புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற சாந்தி பின்னர் இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து கர்ணன் மற்றும் அவரது மனைவி தேவி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    விபத்தில் காயம் அடைந்த பெண்ணை தனது காரில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த கமல்ஹாசனை அந்த பகுதி மக்கள் பாராட்டினார்கள். #KamalHaasan
    விபத்தில் காயம் அடைந்த பெண்ணை தனது காரில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த கமல்ஹாசனை அந்த பகுதி மக்கள் பாராட்டினார்கள்.

    இது குறித்த விவரம் வருமாறு:-

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று மதியம் குளச்சலில் இருந்து கருங்கல் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். இந்தநிலையில் கருங்கல் அருகே ஆனக்குழியில் ஒரு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த 2 பெண்கள் மீது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது.



    இதில் கீழே விழுந்த ஒரு பெண்ணுக்கு படுகாயம் ஏற்பட்டது. அந்த பெண்ணை, அவருடன் ஸ்கூட்டரில் வந்த மற்றொரு பெண் தனது மடியில் தூக்கி வைத்துவிட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தை எதிர்பார்த்து காத்திருந்தார்.

    அந்த வழியாக சென்ற கமல்ஹாசன் இதனை பார்த்தார். உடனே, அவர் தனது காரில் இருந்து இறங்கி சென்று விபத்து குறித்து கேட்டறிந்தார். பின்னர் தனது காரிலேயே அந்த பெண்ணை ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். பின்னர் வேறொரு காரில் கமல்ஹாசன் ஏறி, தனது பயணத்தை தொடர்ந்தார்.

    விபத்தில் படுகாயம் அடைந்த பெண்ணை தனது காரில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த கமல்ஹாசனின் உதவியை அங்கு கூடியிருந்த மக்கள் பாராட்டினர்.  #KamalHaasan
    ×