search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kulasekaranpattinam"

    • முத்தாரம்மன் கமலவாகனத்தில் கஜலட்சுமி திருக்கோலத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
    • பக்தர்கள் வந்து செல்ல வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    உடன்குடி:

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்தசரா பெருந்திருவிழாவில் 8-ம் திருநாளான இன்று இரவு 10 மணிக்கு அன்னை முத்தாரம்மன் கமலவாகனத்தில் கஜலட்சுமி திருக்கோலத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். இன்று முன்னதாக காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அம்மனுக்குபல்வேறு சிறப்பு அபிசேகங்களும், மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை சமய சொற்பொழிவு, இன்னிசை போன்ற கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    கோவிலில் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் சங்கர், செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள் செய்து உள்ளனர்.மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பக்தர்கள் வந்து செல்ல வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. விரதம் இருந்து வந்த பக்தர்கள் தங்களுக்கு பிடித்தமான வேடங்களை அணிந்து ஊர் ஊராகச் சென்று அம்மன் பெயரில் காணிக்கைவசூல் செய்து வருகின்றனர். ஊர் பெயரை கொண்டு தசரா குழு அமைத்து நையாண்டி மேளம், தாரை தப்பட்டை, கரகம் காவடி, கோலாட்டம் மயிலாட்டம் என பல்வேறு கிராம தய கலைஞர்களுடன் இணைந்து ஊர் ஊராக சென்று கலை நிகழ்ச்சி நடத்தி அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வருகின்றனர்.

    • குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா அன்னை முத்தாரம்மன் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் பவனி வந்துபக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
    • அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிசேகங்களும் மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை சமய சொற்பொழிவு, இன்னிசை போன்ற கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    உடன்குடி:

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் 7-ம் திருநாளான இன்று இரவு 10 மணிக்கு அன்னை முத்தாரம்மன் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் பவனி வந்துபக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். நேற்றும் இன்றும் தசரா குழுவினர் நையாண்டி மேளம் மற்றும் பல்வேறு மேலத்துடன் வந்து காப்பு கட்டி செல்கின்றனர்.

    இதனால் கோவில் வளாகம் மற்றும் கடற்கரை வளாகம் கூட்டமாக நிரம்பி வழிகிறது. முன்னதாக காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிசேகங்களும் மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை சமய சொற்பொழிவு, இன்னிசை போன்ற கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. விரதம் இருந்து வந்த பக்தர்கள் தங்களுக்கு பிடித்தமான வேடங்களை அணிந்து ஊர் ஊராகச் சென்று அம்மன் பெயரில் காணிக்கைவசூல் செய்து வருகின்றனர்.

    • 6-ம் திருநாளான இன்று இரவு 10 மணிக்கு அன்னை முத்தாரம்மன் சிம்மவாகனத்தில் மகிஷாசூர மர்த்தினி திருக்கோலத்தில் பவனி வந்துபக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
    • பரதநாட்டிய குழுவினருக்கு கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

    உடன்குடி:

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருகோவில் தசரா பெருந்திருவிழாவில் 6-ம் திருநாளான இன்று இரவு 10 மணிக்கு அன்னை முத்தாரம்மன் சிம்மவாகனத்தில் மகிஷாசூர மர்த்தினி திருக்கோலத்தில் பவனி வந்துபக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

    நேற்று இரவு பரதநாட்டியம் நடைபெற்றது. இந்த பரதநாட்டிய குழுவினருக்கு கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். அருகில் பாரத திருமுருகன் திருச்சபை நிறுவனரும் சமய சொற்பொழிவாளருமான ஏ.வி.பி.மோகனசுந்தரம் உடன் இருந்தார்.

    இன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அம்மனுக்குபல்வேறு சிறப்பு அபிசேகங்களும் மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை சமய சொற்பொழிவு, இன்னிசை போன்ற கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    கோவிலில் திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தூத்துக்குடி இணை ஆணையர் அன்புமணி உதவிய ஆணையர் சங்கர் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பக்தர்கள் வந்து செல்ல வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. விரதம் இருந்து வந்த பக்தர்கள் தங்களுக்கு பிடித்தமான வேடங்களை அணிந்து ஊர் ஊராகச் சென்று அம்மன் பெயரில் காணிக்கைவசூல் செய்து வருகின்றனர். தற்போது குலசேகரன்பட்டினம். உடன்குடி, பகுதியில் தசரா திருவிழாவில் எழுச்சி அதிகமாகவே காணப்படுகிறது.

    • தசரா திருவிழாவில் 5-ம் திருநாளான இன்று இரவு 10 மணிக்கு அன்னை முத்தாரம்மன் காமதேனுவாகனத்தில் நவநீதகிஷ்ணர் திருக்கோலத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
    • காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிசேகங்களும் மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை சமய சொற்பொழிவு, இன்னிசை போன்ற கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    உடன்குடி:

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்தசரா திருவிழாவில் 5-ம் திருநாளான இன்று இரவு 10 மணிக்கு அன்னை முத்தாரம்மன் காமதேனுவாகனத்தில் நவநீதகிஷ்ணர் திருக்கோலத்தில் பவனி வந்துபக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

    நேற்று மாலை 5 மணிக்கு வீரபாகு வல்லவராயர் மற்றும் பாரத திருமுகன் திருச்சபைச் சேர்ந்த மோகனசுந்தரம் ஆகியோர்கள் சமய சொற்பொழிவு நடத்தினர். இன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிசேகங்களும் மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை சமய சொற்பொழிவு, இன்னிசை போன்ற கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தூத்துக்குடிஇணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் சங்கர், செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    • கிராமங்கள் தோறும் கடலில் புனித நீர் எடுத்து கொண்டு வந்து அதை தசரா குடிலில் வைப்பார்கள்.
    • தசரா குழுக்கள் வசூல் செய்த காணிக்கைகளை கோவில் உண்டியலில் கொண்டு சேர்ப்பார்கள்.

    உடன்குடி:

    குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கிராமங்கள் தோறும் தசரா குடில் என்ற தசரா பிறை அமைத்து, கடலில் புனித நீர் எடுத்து கொண்டு வந்து அதை தசரா குடிலில் வைப்பார்கள். ஊர் பெயரில் தசரா குழு அமைத்து வேடமணியும் பக்தர்கள் தங்களது ஊர்குடிசையில் தினசரி இரவு ஒன்றாக கூடி அன்னை முத்தாரம்மனை பற்றி பாடல்கள் பாடி சிறப்புவழிபாடு நடத்துவார்கள். இரவு வீட்டுக்குச் செல்லாமல் தசரா குடிசையில் தங்கி விடுவார்கள்.

    7-ம் திருநாள் அல்லது 8-ம் திருநாள் அன்று விதவிதமான வேடங்கள் அணிந்து, நையாண்டி மேளம், கரகம், குறவன் குறத்தி காவடி, தாரை, தப்பட்டை உட்பட பல்வேறு கலைஞர்களுடன் இணைந்து ஊர் ஊராக சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்திஅம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்வார்கள். 10-ம் திருநாளான அக்டோபர் 5-ந் தேதி இரவு தசரா குழுக்கள் வசூல் செய்த காணிக்கைகளை கோவில் உண்டியலில் கொண்டு சேர்ப்பார்கள். அதனால் ஏராளமான கிராமங்களில் தசரா குடில் அமைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.

    • குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் திருவிழா வருகின்ற 26-ந்தேதி (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி, வரும் அக்டோபர் மாதம் 5-ந் தேதி மகிசாசூரசம்காரம் நடைபெறுகிறது.
    • விரதம் இருந்து வந்த பக்தர்கள் தாங்கள் அணியும் வேடங்களுக்கான பொருட்களை வாங்குவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும்.

    இந்த ஆண்டு திருவிழா வருகின்ற 26-ந்தேதி (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி, வரும் அக்டோபர் மாதம் 5-ந்தேதி மகிசாசூரசம்காரம் நடைபெறுகிறது.

    இதையொட்டி சுவாமி வேடம் அணிபவர்கள் 61 நாள், 41 நாள், 31 நாள் என விரதமிருந்து வருகின்றனர் மற்ற பக்தர்கள் தங்களது வசதிக்கேற்ப விரதமிருந்து வருகின்றனர்.

    தற்போது விரதம் இருந்து வந்த பக்தர்கள் தாங்கள் அணியும் வேடங்களுக்கான பொருட்களை வாங்குவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இப்போது உடன்குடி குலசேகரன்பட்டினம் பகுதியில் வேடமணியும் பொருட்களை வாங்குவதில் பக்தர்கள் தீவிரமாக செயல்படுவதால் வேடத்திற்கு தேவையான பொருட்களை கூட்டம் கூட்டமாக வாங்குகின்றனர்.

    சிலர் தசரா குழுவுக்கு மொத்தமாக ஆர்டர் கொடுத்தும் பொருட்களை வாங்கி வருகின்றனர். இதனால் தற்போது உடன்குடி குலசேகரன்பட்டினம் பகுதியில் தசரா களை கட்ட தொடங்கி உள்ளது.

    • உட்கட்டமைப்பு பணிகள் குறித்து உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் ஆய்வு மேற்கொண்டார்.
    • கடந்த 2 வருடமாக கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    உடன்குடி:

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகிற 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த ஆண்டு சுமார் 30 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.பக்தர்கள் வாகனங்கள் நிறுத்தும் இடம் தற்போது தேர்வு செய்யப்பட்டு சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. குலசை கிராமத்தில் உள்ள ரோடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பாக கோவிலில் இருந்து பக்தர்கள் கடற்கரைக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது என பொது மக்கள் மற்றும் பக்தர்கள் புகார் தெரிவித்தனர். எனவே குலசை நகரில் தசரா திருவிழாவிற்கு முன்பாக செய்யப்பட வேண்டிய உட்கட்டமைப்பு பணிகள் குறித்து உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் ஆய்வு மேற்கொண்டார். இதில் கோவில் நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன், உடன்குடி டவுன் பஞ்சாயத்து துணைத் தலைவர் மால் ராஜேஷ், கவுன்சிலர் ஜான் பாஸ்கர், குலசை பஞ்சாயத்துதுணைத் தலைவர் கணேசன், தி.மு.க.வை சேர்ந்த பாய்ஸ், ஷேக் முகமது உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் நிருபர்களிடம் யூனியன் சேர்மன் பாலசிங் கூறியதாவது:-

    கடந்த 2 வருடமாக கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. எனவே இந்த ஆண்டு அதிக அளவு பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக சாலை, குடிநீர், கழிப்பிட வசதி, மருத்துவ வசதி, பஸ் வசதி, வாகனங்கள் நிறுத்தும் இடம் ஆகிய பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. கோவிலில் இருந்து கடற்கரைக்கு செல்லும் சாலை புதியதாக போட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது பக்தர்களின் வசதிக்காக தற்காலிக பேட்ஜ் ஒர்க் நடத்தப்படும் என தெரிவித்தார்.

    • முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் 307-வது பிறந்த நாளை முன்னிட்டு குலசேகரன்பட்டினத்தில் நேதாஜி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மின்னொளி கபடி போட்டி 2 நாட்கள் நடந்தது.
    • போட்டியில் நாணல்காடு அணி முதல் பரிசை பெற்றது

    உடன்குடி:

    முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் 307-வது பிறந்த நாளை முன்னிட்டு குலசேகரன்பட்டினத்தில் நேதாஜி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மின்னொளி கபடி போட்டி 2 நாட்கள் நடந்தது.

    போட்டியில் நாணல்காடு அணி முதல் பரிசை பெற்றது. 2 -வது பரிசை குலசேகரன்பட்டினம் நேதாஜி ஸ்போர்ட்ஸ் கிளப் பெற்றது, 3-வது பரிசை அகரம் அணி பெற்றது.

    4-வது பரிசு திருச்செந்தூர் அருண்பாண்டி அணியினருக்கு கிடைத்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை குலசேகரன்பட்டினம் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன், ஊராட்சி துணைத்தலைவர் கணேசன் , வள்ளி குமார், வழக்கறிஞர் முத்துக்குமார், அப்துல் ஹமீது, தொழிலதிபர் முத்துக்குமார், வழக்கறிஞர் ராமச்சந்திரன் ஆகியோர் வழங்கினர்.

    • உடன்குடி-குலசை ரோடு திருச்செந்தூர் - மணப்பாடு ரோடு ஆகியவை சந்திக்கும் 4 சந்திப்பு பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.
    • முறையான சந்திப்பு அறிவிப்பு இல்லாததினாலும், அதிக வேகமாக செல்லும் வாகனங்களாலும் தொடர் விபத்துகள் ஏற்படுகிறது

    உடன்குடி:

    உடன்குடி-குலசை ரோடு திருச்செந்தூர் - மணப்பாடு ரோடு ஆகியவை சந்திக்கும் 4 சந்திப்பு பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. முறையான சந்திப்பு அறிவிப்பு இல்லாததினாலும், அதிக வேகமாக செல்லும் வாகனங்களாலும் தொடர் விபத்துகள் ஏற்படுகிறது. கடந்த சில காலங்களில் 100-க்கு மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளது. மேலும் சிலர் அங்கு ஏற்பட்ட விபத்தில் பலியாகி உள்ளனர். ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகன விபத்துகளை தடுக்க வருகின்ற தசரா திருவிழாவிற்கு முன்பாக இந்த இடத்தில் நெடுஞ்சாலைத்துறை ரவுண்டானா அமைத்து விபத்துகள் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்று பக்தர்களும், வாகன ஓட்டிகளு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்த நிலையில் உடன்குடி கலீல் ரகுமான், ராஜா மற்றும் பல்வேறுசமூக நல அமைப்பினர் ரவுண்டானா அமைக்க மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பி உள்ளனர்.

    • குலசேகரன்பட்டினத்தில் நாளை முத்தாரம்மன் கோவில் புதிய மண்டப அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது.
    • அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்பு

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோவில் மைசூருக்கு அடுத்தப்படியாக தசரா திருவிழா விமரிசையாக நடைபெறும் கோவில் ஆகும்.

    இக்கோவிலில் பக்தர்கள் வசதிக்காக தண்டுபத்து சண்முக பெருமாள் நாடார்- பிச்சுமணி அம்மாள் அறக்கட்டளை சார்பில் அவரது மகன் ராமசாமி கோவில் முன்மண்டபம் நன்கொடையாக கட்டிக் கொடுக்கிறார்.

    இதற்கான அடிக்கல் நாட்டுவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு கோவில் வளாகத்தில் நடக்கிறது. விழாவில் தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழக மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள், தி.மு.க. பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

    தொடர்ந்து கோவிலில் நடைபெறும் பவுர்ணமி திருவிளக்கு பூஜையிலும் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். பக்தர்கள் அனைவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றுசெல்லு மாறு தண்டுபத்து ராமசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

    ×