search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "choosing"

    • குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் திருவிழா வருகின்ற 26-ந்தேதி (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி, வரும் அக்டோபர் மாதம் 5-ந் தேதி மகிசாசூரசம்காரம் நடைபெறுகிறது.
    • விரதம் இருந்து வந்த பக்தர்கள் தாங்கள் அணியும் வேடங்களுக்கான பொருட்களை வாங்குவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும்.

    இந்த ஆண்டு திருவிழா வருகின்ற 26-ந்தேதி (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி, வரும் அக்டோபர் மாதம் 5-ந்தேதி மகிசாசூரசம்காரம் நடைபெறுகிறது.

    இதையொட்டி சுவாமி வேடம் அணிபவர்கள் 61 நாள், 41 நாள், 31 நாள் என விரதமிருந்து வருகின்றனர் மற்ற பக்தர்கள் தங்களது வசதிக்கேற்ப விரதமிருந்து வருகின்றனர்.

    தற்போது விரதம் இருந்து வந்த பக்தர்கள் தாங்கள் அணியும் வேடங்களுக்கான பொருட்களை வாங்குவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இப்போது உடன்குடி குலசேகரன்பட்டினம் பகுதியில் வேடமணியும் பொருட்களை வாங்குவதில் பக்தர்கள் தீவிரமாக செயல்படுவதால் வேடத்திற்கு தேவையான பொருட்களை கூட்டம் கூட்டமாக வாங்குகின்றனர்.

    சிலர் தசரா குழுவுக்கு மொத்தமாக ஆர்டர் கொடுத்தும் பொருட்களை வாங்கி வருகின்றனர். இதனால் தற்போது உடன்குடி குலசேகரன்பட்டினம் பகுதியில் தசரா களை கட்ட தொடங்கி உள்ளது.

    ×